சோனம் மாலிக்கு

இந்திய மல்யுத்த வீராங்கனை

சோனம் மாலிக்கு (Sonam Malik) இந்தியாவிலுள்ள அரியானா மாநிலத்தின் சோனிபத்தை சேர்ந்த இந்திய பெண் மல்யுத்த வீராங்கனை ஆவார். இவர் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தையும், உலக மல்யுத்த சாம்பியன் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களையும் வென்றுள்ளார். சோனம் உலகப் படைப்பயிற்சி மல்யுத்த வெற்றியாளர் போட்டிகளில் இதுவரை இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். இவர் டோக்கியோ 2020 கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக மல்யுத்தப் போட்டியில் பங்கேற்றார். பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 2023 ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இந்திய மல்யுத்த அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஆசிய விளையாட்டு போட்டியில் 62 கிலோ எடைப் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார்.

சோனம் மாலிக்கு
Sonam Malik
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்பு15 ஏப்ரல் 2002
மதினா கிராமம், சோனிபத், அரியானா
விளையாட்டு
விளையாட்டுமல்யுத்தம்
பதக்கத் தகவல்கள்
மகளிர் மல்யுத்தம்
நாடு  இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2022 ஹாங்சோ 62 கிலோ
ஆசிய சாம்பியன் போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2022 அசுத்தனா 62 கிலோ
உலக இளையோர் விளையாட்டுப் போட்டிகள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2022 சோபியா 62 கிலோ

தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பின்னணி தொகு

சோனம் மாலிக்கு 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 அன்று அரியானாவின் சோனிபட்டு நகரத்திற்கு அருகிலுள்ள மதீனா என்ற கிராமத்தில் பிறந்தார்.[1] இவரது தந்தையும் ஒரு உறவினரும் மல்யுத்த வீரர்களாவர். இவர்கள் மாலிக் மல்யுத்த விளையாட்டை தேர்ந்தெடுக்க காரணமாக இருந்தனர். இவர் தனது கிராமத்தில் உள்ள நேதாச்சி சுபாசு சந்திரபோசு விளையாட்டு வளாகத்தில் பயிற்சியாளர் அச்மீர் மாலிக்கிடம் பயிற்சிக்காகச் சேர்ந்தார். தொடக்கத்தில் விளையாட்டு வளாகத்தில் வசதிகள் போதுமானதாக இல்லை என்பதால் பயிற்சிப் பள்ளி வீரர்கள் தரையில் பயிற்சி பெற்றனர். மழை நாட்களில் மைதானம் சேறும் சகதியுமாக மாறும், இதனால் வீரர்கள் சாலைகளில் பயிற்சி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.[2]

சோனம் மாலிக் தற்போது தனது இளங்கலை கலைப் பட்டப்படிப்பைத் படித்து வருகிறார்.[3]

விளையாட்டு வாழ்க்கை தொகு

சோனம் மாலிக் 2016 இல் நடந்த தேசிய பள்ளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் மல்யுத்தத்தில் தங்கப் பதக்கம் வென்றார். 2017 ஆம் ஆண்டில், படைப்பயிற்சியாளர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டியில் ஒரு வெள்ளி பதக்கம் வென்றார். இவர் மேலும் உலக பள்ளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம், படைப்பயிற்சியாளர்களுக்கான ஆசிய மல்யுத்த விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் மற்றும் படைப்பயிற்சி உலக மல்யுத்த விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் என பல பதகங்களை வென்றுள்ளார். 2017 இல் ஒரு மல்யுத்த போட்டியில் மாலிக்கின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இவர் ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் சிகிச்சையில்  தொடர்ந்தது இருந்து வந்தார். 2018 ஆம் ஆண்டிலும் படைப் பயிற்சியாளர் ஆசிய மல்யுத்த விளையாட்டுப் போட்டியிலும் மற்றும் படைப்பயிற்சியாளர் உலக மல்யுத்த விளையாட்டுப் போட்டியிலும் வெண்கலப் பதக்கங்களை வென்றார். 2019 ஆம் ஆண்டு படைப்பயிற்சியாளர் உலக மல்யுத்த விளையாட்டுப் போட்டியில் சோனம் மாலிக் மீண்டும் தங்கப்பதக்கம் வென்றார். [3]

2020 இல் சோனம், 2016 ரியோ ஒலிம்பிக்கு விளையாட்டுகளில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்சி மாலிக்கை இரண்டு முறை தோற்கடித்தார். இவற்றில் முதலாவது வெற்றி சனவரி மாதம் ஆசிய வெற்றியாளர் போட்டியிலும் பின்னர் பிப்ரவரியில் நடைபெற்ற ஆசிய ஒலிம்பிக் தகுதிப் போட்டியில் இரண்டாவது வெற்றியும் இவருக்குக் கிடைத்தன.[4][5]

ஒலிம்பிக் கோல்ட் குவெசுட்டு அமைப்பு சோனம் மாலிக்கிற்கு ஆதரவு கொடுத்துள்ளது. இவ்வமைப்பு இந்திய விளையாட்டு வீரர்களுக்கு ஒலிம்பிக் பதக்கங்களை வெல்ல உதவும் லாப நோக்கற்ற வேலையை செய்கிறது. [6]

சோனம் பல்கேரியாவின் சோபியாவில் நடைபெற்ற 2022 உலக இளையோருக்கான மல்யுத்த சாம்பியன் போட்டி நிகழ்வில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[7] செர்பியா பெல்கிறேடில் நடைபெற்ற 2022 உலக மல்யுத்த சாம்பியன் போட்டிகளில் 62 கிலோ பிரிவில் அவர் போட்டியிட்டார். இவர் 2023 ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இந்திய மல்யுத்த அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஆசிய விளையாட்டு போட்டியில் 62 கிலோ எடைப் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார்.[8]

சாதனைகள் தொகு

  1. 2016 தேசிய பள்ளிகளுக்கிடையிலான மல்யுத்தப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.
  2. 2017 ஆம் ஆண்டு கிரீசு நாட்டின் ஏதென்சு நகரில் நடைபெற்ற உலக இளையோர் மல்யுத்தப் போட்டியில் சோனம் தங்கப் பதக்கம் வென்றார்.[9]
  3. 2017 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் ஆக்ராவில் நடைபெற்ற உலக பள்ளிகளுக்கு எதிரான மல்யுத்தப் போட்டியில் சோனம் தங்கப் பதக்கம் வென்றார். இதைதவிர 2017 ஆம் ஆண்டில் தேசிய இளையோர் மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம், ஆசிய இளையோர் மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் ஆகியவற்றையும் வென்றுள்ளார்.[10]
  4. 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக மற்றும் ஆசிய இளையோர் மல்யுத்தப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
  5. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்திந்திய பல்கலைக்கழகங்க இடையிலாலான போட்டியில் தங்கமும், ஆசிய இளையோர் போட்டியில் வெண்கலமும், உலக இளையோர் போட்டியில் தங்கமும் வென்றார்.
  6. 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 62 கிலோ எடைப் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார்.

மேற்கோள்கள் தொகு

  1. "பிபிசி தமிழ்".
  2. "सोनम मलिक: ओलंपिक मेडल जीतने का सपना देखने वाली पहलवान" (in hi). BBC News हिंदी. https://www.bbc.com/hindi/sport-55696313. 
  3. 3.0 3.1 "Sonam Malik". WrestlingTV (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-17.
  4. "Sonam Malik stuns Sakshi Maliik in trials". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-17.
  5. "Wrestlers Anshu Malik, Sonam Malik qualify for Tokyo Olympics; door shut on Sakshi Malik". The Times of India. 10 April 2021. https://timesofindia.indiatimes.com/sports/more-sports/wrestling/anshu-malik-sonam-malik-win-tokyo-olympics-quota-in-wrestling/articleshow/82003434.cms. 
  6. "Sushil Sir inspires me to work harder: Sonam Malik". The Bridge. 2019-08-06. பார்க்கப்பட்ட நாள் 2021-02-17.
  7. "Sonam Malik profile page". uww.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-22.
  8. Desk, TOI Sports (6 Oct 2023). "Asian Games: Sonam Malik wins bronze in women's 62kg wrestling". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 6 Oct 2023.
  9. "Sonam Malik Clinches Gold At World Cadet Wrestling Championship - SheThePeople TV" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-16.
  10. "Sonam Malik wrestled with paralysis to see out her destiny". Olympic Channel. பார்க்கப்பட்ட நாள் 2021-02-16.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோனம்_மாலிக்கு&oldid=3904393" இலிருந்து மீள்விக்கப்பட்டது