சோனாலி போஸ்

சோனாலி போஸ் (Shonali Bose பிறப்பு 3 ஜூன் 1965) ஓர் இந்திய திரைப்பட இயக்குனர், எழுத்தாளர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். 2005 ஆம் ஆண்டில் திரைப்படத்தில் அறிமுகமான இவர், அதன் பிறகு தேசிய திரைப்பட விருது, பிரிட்ஜ்ஸ்டோன் கதை விருது மற்றும் சன்டான்ஸ் மஹிந்திரா குளோபல் திரைப்பட தயாரிப்பாளர் விருது போன்ற பல பாராட்டுகளைப் பெற்றார்.

போஸ் தனது முதல் திரைப்படமான 2005 ஆம் ஆண்டில் சுயசரிதை நாடகமான அமு மூலம் அறிமுகமானார். இந்தத் திரைப்படம் மூலம் பரவலான பாராட்டினைப் பெற்றார், இது அதே பெயரில் வெளியான இவரது புதினத்தினை அடிப்படையாகக் கொண்டது. இது 1984 ஆம் ஆண்டு டெல்லியில் சீக்கியர்கள் மீதான தாக்குதல்களை விவரிக்கும் படம், விமர்சன ரீதியான பாராட்டையும் ஆங்கிலத்தில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதையும் பெற்றது. பின்னர் 2012 ஆம் ஆண்டு போர் படமான சிட்டகாங்கின் உதவி இயக்குனராகவும் இணை எழுத்தாளரகவும் பணியாற்றினார்.

மார்கடிட்டா வித் அ ஸ்ட்ரா (2015) மற்றும் 2019ஆம் அண்டில் வெளியான தெ ஸ்கை இஸ் பிங்க் ஆகிய நாடகங்கள் வணிக ரீதியிலும் விமர்சன ரீதியிலும் பரவலான பாராட்டினைப் பெற்றுத் தந்தது.

போஸ் ஒரு வள்ளல் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு உதவி செய்து வருகிறார். இவர் திரைப்படத் தயாரிப்பாளர் பெடாபிரதா பெயினை மணந்தார், ஆனால் தங்களது மகனின் மரணத்தைத் தொடர்ந்து இவர்கள் பிரிந்தனர்.

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

சோனாலி போஸ் மேற்கு வங்கத்தின் கல்கத்தாவில் 3 ஜூன் 1965 இல் பிறந்தார், மேலும் அவரது இளம் வயது வாழ்க்கையின் பெரும்பகுதியை மும்பை மற்றும் புது தில்லியில் கழித்தார். டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டமும், நியூயார்க்கின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார். டெல்லி பல்கலைக்கழகத்தில் மிராண்டா ஹவுஸில் இருந்த காலத்தில் இருந்து அவர் ஒரு சமூக செயற்பாடாளராக இருந்தார். போஸ் பள்ளி மற்றும் கல்லூரி காலங்கள் முழுவதும் ஒரு நடிகராக நாடகங்களில் ஈடுபட்டார். "சமூக மற்றும் அரசியல் மாற்றம் பற்றிய கருத்துக்களைத் தெரிவிக்க திரைப்படம் வழிவகை செய்கிறது" என்று கூறுகிறார்.[1]

தொழில் வாழ்க்கை தொகு

அமு நடத்திய முதற்கட்ட தொழில் மற்றும் திருப்புமுனை (1999-2010) தொகு

போஸ் தேசிய வழக்கறிஞர்கள் சங்கத்தின் அமைப்பாளராக சுமார் ஒரு வருடம் பணியாற்றினார். யுசிஎல்ஏ ஸ்கூல் ஆஃப் தியேட்டர், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியில் எம்எஃப்ஏ இயக்கும் திட்டத்தில் சேருவதற்கு முன்பு அவர் மன்ஹாட்டனில் தொலைக்காட்சியில் பணியாற்றினார். அவரது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில், தி ஜெண்டர்மே இஸ் ஹியர் அண்ட் மற்றும் அண்டாகுமெண்டட் போன்ற குறும்படங்களையும், லிஃப்டிங் தி வெய்ல் என்ற ஆவணப்படத்தையும் இயக்கியிருந்தார். இது பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டன.

போஸ் 2005 ஆம் ஆண்டு அமு மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் திரைக்கதையையும் எழுதியிருந்தார்.[2][3] இந்த படம் இந்தியாவில் ஜனவரியில் வெளியாகி விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களின் நேர்மறையான விமர்சனத்தைப் பெற்றது. பெர்லின் மற்றும் டொராண்டோவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாக்களில் அமு திரையிடப்பட்டது. போஸ் இந்த படத்திற்காக பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை வென்றார், இதில் ஃபிப்ரெஸ்கி (FIPRESCI) விமர்சகர்கள் விருது, ஆங்கிலத்தில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது மற்றும் சிறந்த அறிமுக இயக்குனருக்கான கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் விருது ஆகிய விருதினைப் பெற்றார். [4] போஸ் அமு என்ற புதினத்தினை எழுதினார். இது இந்தத் திரைப்படத்தின் திரைக்கதையினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. திரைப்படமும், புதினமும் ஒரே சமயத்தில் வெளியாகியது.[5][6]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

அவள் பெடாப்ரதா பெயின் என்பவரை திருமணம் செய்தார், பின்னர் இந்தத் தம்பதியினர் பிரிந்தனர்.[7] தம்பதியரின் மகன் இஷான் போஸ்-பெய்ன் 13 செப்டம்பர் 2010 அன்று 16 ஆம் வயதில் இறந்தார்.[8] போஸ் இருபால்சேர்க்கையினராக அடையாளம் காட்டப்படுகிறார்.[9]

சான்றுகள் தொகு

  1. "Shonali Bose: Activism, with a Film". The Vilcek Foundation. பார்க்கப்பட்ட நாள் 2019-02-17.
  2. "'Amu', a film by Shonali Bose". Institute of Race Relations. Archived from the original on 15 November 2009. பார்க்கப்பட்ட நாள் 3 July 2011.
  3. "Amu (2005) – Release Info". IMDB. பார்க்கப்பட்ட நாள் 3 July 2011.
  4. "FIPRESCI – festival awards 2005". FIPRESCI. Archived from the original on 5 June 2011. பார்க்கப்பட்ட நாள் 3 July 2011.
  5. Bose, Shonali (2004). Amu : a novel. New Delhi: Penguin Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-14-303232-1. 
  6. "Indo-American Arts council, Inc". Indo-American Arts council. Archived from the original on 17 ஆகஸ்ட் 2011. பார்க்கப்பட்ட நாள் 3 July 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. IIT Foundation (22 July 2007). "IIT Foundation [ "AMU", an award winning film by a KGP Alumnus — Releasing in San Francisco ]". Iitfoundation.org. பார்க்கப்பட்ட நாள் 8 October 2012.
  8. "NRIs lose case against US firm on son's death". News18. 3 September 2012. பார்க்கப்பட்ட நாள் 2020-05-04.
  9. "Bisexual director Shonali Bose on her revolutionary queer film "Margarita, with a Straw" – AfterEllen" (in en-US). AfterEllen. 2016-03-10. http://www.afterellen.com/movies/478147-bisexual-director-shonali-bose-revolutionary-queer-film-margarita-straw. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோனாலி_போஸ்&oldid=3930340" இலிருந்து மீள்விக்கப்பட்டது