சௌகதா இராய்
சௌகதா இராய் (Saugata Roy; பிறப்பு ஆகத்து 6,1946) என்பவர் திரிணாமுல் காங்கிரசு கட்சியினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினரும் ஆவார். மக்களவையில் ராய், டம் டம் மக்களவைத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். மன்மோகன் சிங் ஆட்சியில் நகர்ப்புற மேம்பாட்டுக்கான மத்திய இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.[2]
சௌகதா இராய் | |
---|---|
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 16 மே 2009 | |
முன்னையவர் | அமிதவ நந்தி |
தொகுதி | டம் டம் |
பதவியில் 1977–1980 | |
முன்னையவர் | முகமது இசுமாயில் |
தொகுதி | பராக்பூர் |
அமைச்சர்-வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் | |
பதவியில் 22 மே 2009 – 22 செப்டம்பர் 2012 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
அமைச்சர் | ஜெயபால் ரெட்டி கமல் நாத் |
முன்னையவர் | அஜய் மக்கான் |
பின்னவர் | தீபா தாஸ்முன்சி |
பெட்ரோலியத் துறை அமைச்சர் | |
பதவியில் 1979–1980 | |
பிரதமர் | சரண் சிங் |
சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2006–2009 | |
முன்னையவர் | பூபேந்திரநாத் சேத்தி |
பின்னவர் | கோபால் சேத்தி |
தொகுதி | பாங்கான் தெற்கு |
பதவியில் 1987–2001 | |
முன்னையவர் | அனுப் குமார் சந்திரா |
பின்னவர் | தபாசு பால் |
தொகுதி | அலிப்பூர் |
பதவியில் 2001–2006 | |
முன்னையவர் | சித்தி கோசுவாமி |
பின்னவர் | சித்தி கோசுவாமி |
தொகுதி | தக்கூரிய |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 6 ஆகத்து 1946 சில்லாங், அசாம், இந்தியா (தற்பொழுது: மேகாலயா) |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு (2001–முதல்) |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு (2001 வரை) |
துணைவர் | டாலி ராய் |
உறவினர் | ததகதா ராய் (brother) |
வாழிடம்(s) | 162/டி 593, ஏரித் தோட்டம், கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா-700045 |
முன்னாள் கல்லூரி | கொல்கத்தா பல்கலைக்கழகம் (முதுநிலை அறிவியல், இளங்கலைச் சட்டம்) |
தொழில் | கல்விக்கூடம் |
As of 11 செப்டம்பர், 2009 மூலம்: [[1]] |
அரசியல் வாழ்க்கை
தொகுமேற்கு வங்கத்தைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியும், திரிணாமுல் காங்கிரசின் மூத்த தலைவருமான ராய், டம் டம் மக்களவைத் தொகுதியிலிருந்து முதன் முதலாக 15ஆவது மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இதே தொகுதியிலிருந்து 16ஆவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு முன்பு 1977இல் பராக்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். சரண் சிங் அமைச்சரவையில் மத்தியப் பெட்ரோலியத்துறை இணை அமைச்சராகவும், 2009 முதல் 2012 வரை மன்மோகன் சிங் அமைச்சரவையில் நகர்ப்புற மேம்பாட்டுக்கான மத்திய இணை அமைச்சராகவும் இருந்தார். அலிபூர் (3 முறை தாகுரியா மற்றும் பங்காவன் தொகுதிகள்) தொகுதிகளிலிருந்து ஐந்து முறை மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[3]
சர்ச்சைகள்
தொகுஉரோசு பள்ளத்தாக்கு பான்சி நிறுவன ஊழலில் ஈடுபட்டதாகத் தன் மீது பொய்யாகக் குற்றம் சாட்டியதற்காக, சனவரி 11,2017 அன்று, பாரதிய ஜனதா கட்சி மக்களவை உறுப்பினர் பாபுல் சுப்ரியோ, ராய், தபசு பால் மற்றும் மகுவா மொய்த்ரா ஆகியோருக்கு எதிராகப் புகார் அளித்தார்.[4]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுதேசிய அறிவியல் திறமை தேடல் அறிஞரும், கொல்கத்தாவின் தூய லாரன்சு உயர்நிலைப் பள்ளி, ஜோகேஷ் சந்திர சவுத்ரி சட்டக் கல்லூரி மற்றும் கொல்கத்தாவின் மாநிலக் கல்லூரியின் முன்னாள் மாணவருமான இவர் இயற்பியலில் முதுநிலைப் பட்டம் பெற்றுள்ளார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டமும் பெற்றுள்ளார். இவர் அசுதோசு கல்லூரி இயற்பியல் துறையில் ஓய்வு பெற்ற பேராசிரியராகவும் உள்ளார். இவர் டோலி ராயை மணந்தார். இவரது சகோதரர் ததகதா ராய் பாரதிய ஜனதா கட்சியினைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார்.
பதவிகள் வகித்தவர்
தொகு- உறுப்பினர், பொதுத்துறை நிறுவனங்களின் குழு (14 ஆகத்து 2014-30 ஏப்ரல் 2016)
- உறுப்பினர், விதிகள் குழு (1 செப்டம்பர் 2014)
- உறுப்பினர், நிதித்துறை நிலைக் குழு (1 செப்டம்பர் 2014)
- உறுப்பினர், ஆலோசனைக் குழு, பாதுகாப்பு அமைச்சகம் (1 செப்டம்பர் 2014)
- உறுப்பினர், இலாப அலுவலகத்திற்கான கூட்டுக் குழு (11 டிசம்பர் 2014)
- உறுப்பினர், நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு தொடர்பான கூட்டுக் குழு (29 ஏப்ரல் 2015)
- பொதுச் செயலாளர், மேற்கு வங்க மாநில சத்ரா பரிசத் (1967-1969)
- பொதுச் செயலாளர், மேற்கு வங்கப் பிரதேசக் காங்கிரசு குழு (1973-1977)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Roy, Prof Saugata". Lok Sabha Members – 15th Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 2009-09-11.
- ↑ "Team Manmohun". NDTV. பார்க்கப்பட்ட நாள் 2009-06-20.
- ↑ "Thumbnail sketches of ministers of state". new Kerala.com. பார்க்கப்பட்ட நாள் 2009-06-20.
- ↑ "Rose valley chit fund case: Babul Supriyo sends defamation notices to TMC leaders for linking him to scam". The Indian Express (in ஆங்கிலம்). 2017-01-11. பார்க்கப்பட்ட நாள் 2022-04-04.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Saugata Roy தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.