ச. காந்திராஜன்

ச. காந்திராஜன் (S. Gandhirajan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1989, 1991, மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் திண்டுக்கல் மாவட்டத்தின் (முன்னர் பழனி நாடாளுமன்றத்தின் கீழும் இருந்த இச்சட்டமன்றத் தொகுதி தற்போது கரூர் நாடாளுமன்றத்தின் கீழ் உள்ளது)[1] வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி தேர்தலில் போட்டியிட்ட இவர், 1991 மற்றும் 2021 தேர்தல்களில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1993 முதல் 1996வரை சட்டப் பேரவை துணை சபாநாயகராகவும் பணியாற்றியுள்ளார்.[2]

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் 2009ஆம் ஆண்டில் சேர்ந்தார்.[3][4] 2021ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத்திற்கு நடைபெற்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[5]

போட்டியிட்ட தேர்தல் விவரம்தொகு

தேர்தல் தொகுதி கட்சி முடிவு வாக்கு விகிதம் 2வது இடம் பெற்றவர் கட்சி வாக்கு விகிதம்
1986 வேடசந்தூர் அதிமுக (ஜெ) தோல்வி 29.02 பி. முத்துசாமி திமுக 29.72[6]
1991 வேடசந்தூர் அதிமுக வெற்றி 76.47 பி. முத்துசாமி திமுக 22.43[7][8]
1996 வேடசந்தூர் அதிமுக தோல்வி 28.92 எஸ். வி. கிருஷ்ணன் திமுக 43.98[9]
2021 வேடசந்தூர் திமுக வெற்றி 49.97 வி. பி. பி. பரமசிவன் அதிமுக 41.73[10]


Referencesதொகு

  1. "Tamil Nadu – 150 – Vedasandur Assembly Constituency". Election Commission of India. 15 March 2011 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Details of terms of successive legislative assemblies constituted under the constitution of India". Tamil Nadu Legislative Assembly. 15 March 2011 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Will Congress beat AIADMK?". The Hindu. 6 May 2006. 29 June 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 14 March 2011 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Details of terms of successive legislative assemblies constituted under the constitution of India". Tamil Nadu Legislative Assembly. 3 மார்ச் 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 15 March 2011 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Gandhirajan S(DMK):Constituency- VEDASANDUR(DINDIGUL) - Affidavit Information of Candidate:". myneta.info. 2022-01-30 அன்று பார்க்கப்பட்டது.
  6. "1989 TN Legislative Assembly Election Results". 23 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
  7. "1991 TN Legislative Assembly Members" (PDF). 23 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
  8. "1991 TN Legislative Assembly Election Result". 23 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
  9. "1996 TN Legislative Assembly Election Result". 23 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
  10. "2021 TN Legislative Assembly Election Result". 23 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._காந்திராஜன்&oldid=3552508" இருந்து மீள்விக்கப்பட்டது