ஜகில்லோனியன் பல்கலைக்கழகம்
ஜகில்லோனியன் பல்கலைக்கழகம், போலந்தின் கிராக்கோ நகரில் உள்ளது. இது ஒரு பொதுத் துறை ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் ஆகும். முற்காலத்தில் கிராக்கோ பல்கலைக்கழகம், கிராக்கோ அகாடமி, போன்ற பெயர்களாலும் அழைக்கப்பட்டது. போலந்தின் பழைமையான பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்று.
Uniwersytet Jagielloński | |
இலத்தீன்: Universitas Jagellonica Cracoviensis | |
குறிக்கோளுரை | Plus ratio quam vis |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | செயலுக்கு காரணமே முன்னிற்கட்டும் |
வகை | பொதுத் துறை |
உருவாக்கம் | 1364 |
தலைமை ஆசிரியர் | பேரா. வோய்சிக் நோவாக், எம்.டி, பி.எச்.டி |
மாணவர்கள் | 51,601 (2011) |
பட்ட மாணவர்கள் | 46,012 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 2,648 |
2,941 | |
அமைவிடம் | , |
வளாகம் | நகர்ப்புற வளாகம் |
சேர்ப்பு | ஐரோப்பிய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு, கோய்ம்பிரா குழுமம், ஐரோபாயம், |
இணையதளம் | http://www.uj.edu.pl/ |
நூலகங்கள்
தொகுஇந்த பல்கலைக்கழகத்தின் முதன்மை நூலகமாக ஜகில்லோனியன் நூலகம் உள்ளது. இது 65 லட்சம் நூல்களைக் கொண்டுள்ளது. போலந்தின் பெரிய நூலகம் என்பது குறிப்பிடத்தக்க செய்தி. [1] இங்கு மைய காலத்து சுவடிகள் உள்ளன. [2]
துறைகள்
தொகுஇந்த பல்கலைக்கழகம் பதினைந்து துறைகளைக் கொண்டுள்ளது.
- சட்டம்
- மருத்துவம்
- மருத்துவ ஆய்வு, மருந்தகவியல்
- உடல் நலம்
- மெய்யியல்
- வரலாறு
- மொழியறிவியல்
- போலந்து மொழி, இலக்கியம்
- இயற்பியல், வானியல், கணினியியல்
- கணிதமும் கணினியியலும்
- வேதியியல்
- உயிரியலும் புவி அறிவியலும்
- மேலாண்மை
- அரசறிவியல்
- உயிர்வேதியியல், உயிரியற்பியல், உயிர்தொழில்நுட்பம்
- கால்நடை மருத்துவம்
குறிப்பிடத்தக்க நபர்கள்
தொகு- நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் 1473–1543; வானியலாளர்
- திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் 1920–2005; கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர், திருத்தந்தை
- விஸ்லவா சிம்போர்ஸ்கா 1923–2012; கவிஞர்; 1996 இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்.
சான்றுகள்
தொகு- ↑ Bętkowska, Teresa (18 May 2008). "Jagiellonian University: Cracow's Alma Mater". Warsaw Voice இம் மூலத்தில் இருந்து 2011-06-13 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20110613151435/http://www.warsawvoice.pl/view/18320. பார்த்த நாள்: 2010-09-28.
- ↑ "BJ: Medieval manuscripts". Bj.uj.edu.pl. Archived from the original on 2011-05-14. பார்க்கப்பட்ட நாள் 2010-09-28.