ஜனார்த்தனன் (நடிகர்)

இந்திய நடிகர்

ஜனார்த்தனன் பிள்ளை (பிறப்பு 5 மே 1946), என்பவர் ஒரு இந்திய நடிகர் ஆவார். இந்திய விமானப்படையின் முன்னாள் பணியாளர் ஆவார். மலையாள திரைத்துறையில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் உள்ளார்.

ஜனார்த்தனன் பிள்ளை
பிறப்புஜனார்த்தனன் பிள்ளை
5 மே 1946 (1946-05-05) (அகவை 78)[1]
வைக்கம், கோட்டயம் மாவட்டம், திருவிதாங்கூர், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
தேசியம்இந்தியன்
பணிநடிகர்
திரைப்படத் தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1965-present
பெற்றோர்கொல்லரக்காட்டு வீட்டில் கே.கோபால பிள்ளை (தந்தை)
கௌரி அம்மா (தாய்)
வாழ்க்கைத்
துணை
விஜயலட்சுமி
பிள்ளைகள்ராமரஞ்சினி
லக்ஷ்மி
இராணுவப் பணி
சார்பு இந்தியா
சேவை/கிளை இந்திய வான்படை

பிறப்பு மற்றும் குடும்பம்

தொகு

ஜனார்த்தனன் பிள்ளை 1946 ஆம் ஆண்டு மே 5 ஆம் தேதி வைக்கம் அருகே உள்ள உல்லால கிராமத்தில் கொல்லரக்காட்டு வீட்டில் பரவூர் கே.கோபால பிள்ளை மற்றும் கௌரி அம்மா ஆகியோருக்கு இளைய மகனாகப் பிறந்தார். அவருக்கு நான்கு சகோதரர்கள் மற்றும் மூன்று சகோதரிகள் உள்ளனர்.[2]

ஜனார்த்தனன், விஜயலட்சுமி என்பவரை மணந்தார். அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ரெமா ரஞ்சினி மற்றும் லக்ஷ்மி என இருவர் உள்ளனர்.

அவர் தனது ஆரம்பக் கல்வியை வெச்சூரில் உள்ள என்எஸ்எஸ் உயர்நிலைப் பள்ளியிலும், பல்கலைக்கழகத்திற்கு முந்தைய கல்வியை சங்கனாச்சேரியில் உள்ள என்எஸ்எஸ் இந்துக் கல்லூரியிலும் பயின்றார்.‌இந்திய விமானப்படையில் சிறிது காலம் பணியாற்றினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1967ல், தனுவாச்சபுரம் வேலுத்தம்பி நினைவு என்எஸ்எஸ் கல்லூரியில் பி.காம் சேர்ந்தார்.

திரை வாழ்க்கை

தொகு

அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கிய பிரதிசாந்தி என்ற குடும்பக் கட்டுப்பாடு ஆவணப்படத்தில் அறிமுகமானார். 1972 இல் ஆதியதே கத என்ற திரைப்படத்தில் நடித்தார்.

ஆதாரங்கள்

தொகு
  1. "CINIDIARY - A Complete Online Malayalam Cinema News Portal". Archived from the original on 2013-10-02. பார்க்கப்பட்ட நாள் 2023-05-15.
  2. "Life of Captain". mangalamvarika.com. Archived from the original on 10 September 2015. பார்க்கப்பட்ட நாள் 9 September 2015.{{cite web}}: CS1 maint: unfit URL (link)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜனார்த்தனன்_(நடிகர்)&oldid=3732278" இலிருந்து மீள்விக்கப்பட்டது