ஜமுனா பருவா

ஜமுனா பருவா (Jamuna Barua)(10 அக்டோபர் 1919 - 24 நவம்பர் 2005) ஒரு இந்தியாவைச் சேர்ந்த ஒரு முன்னணி நடிகையாவார்.

ஜமுனா பருவா
ஜிந்தகி என்ற படத்தில் ஜமுனா பருவா
பிறப்புஜமுனா குப்தா
(1919-10-10)10 அக்டோபர் 1919
ஆக்ரா, ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு24 நவம்பர் 2005(2005-11-24) (அகவை 86)
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
செயற்பாட்டுக்
காலம்
1934–1953
வாழ்க்கைத்
துணை
பிரமாதேஷ் பருவா

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

இந்தியாவின் ஆக்ரா அருகே ஒரு கிராமத்தில் வசிக்கும் புரான் குப்தாவின் ஆறு மகள்களில் நான்காவது குழந்தையாக ஜமுனா பிறந்தார். இவரது ஒவ்வொரு சகோதரிகளுக்கும் கங்கா, ஜமுனா, பாகீரதி போன்ற இந்திய நதிகளின் பெயரிடப்பட்டது. முதலில் அசாமின் கோல்பாரா மாவட்டத்தின் (பிரிக்கப்படாத) கௌரிபூரைச் சேர்ந்த இவர், இந்தியாவின் முன்னணித் திரைப்படமான நகரமான கொல்கத்தாவில் வசிக்க வந்தார். இவர் பழம்பெரும் நடிகரும் இயக்குனருமான பிரமாதேஷ் பருவா என்பவரைத் திமணம் செய்து கொண்டார் .1936 ஆம் ஆண்டில் தனது கணவரின் புகழ்பெற்ற இயக்கத்தில் வெளிவந்த "தேவதாஸ்" [1] என்றத் திரைப்படத்தில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் படத்தில் 'பாரு என்கிற பார்வதி' என்ற முக்கிய வேடத்தில் தோன்றினார். இவர் அசாமி, பெங்காலி மற்றும் இந்தி மொழிகளில்]] மறக்கமுடியாத பல திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக அமிரி, முக்தி, ஆதிகர், சேஷ் உத்தர் போன்றவை. 1950இல் இவரது கணவர் பருவா இறந்த பிறகு இவர் நடிப்பதை நிறுத்திவிட்டர். [2]

திரைப்பட வாழ்க்கை தொகு

பருவாவின் 1936 இந்தி பதிப்பான தேவதாஸில் குந்தன் லால் சைகல் மற்றும் ஜமுனா

ஜமுனா 1930களில் திரைப்படங்களில் அறிமுகமானார். பருவா இயக்கிய "ரூபலேகா" (பெங்காலி) படத்தின் இந்தி பதிப்பான மொஹாபத் கி கசாட்டி (1934) என்ற படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்தார். [3] அசாமின் கௌரிபூரைச் சேர்ந்த ஜமீந்தாரான பருவா ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து கொண்ட போதிலும் இவருடனும் ஒரு காதல் தொடங்கியது. நடிகையாக, பருவாவின் அடுத்த முயற்சியான தேவதாஸில் (1935) பார்வதியாக நடித்தார். இந்தி பதிப்பிலும் ஜமுனா "பார்வதி" என்ற அதே பாத்திரத்தில் நடித்தார். மேலும் ஒரு நடிகையாக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

 
தேவதாஸ் படத்தில் பிரமாதேஷ் பருவாவும் ஜமுனாவும் (1935)

பருவாவின் அடுத்தடுத்த படங்களான கிருஹதாகா (1936), மாயா (1936), ஆதிகர் (1939), உத்தராயண் (1941), ஷேஷ் உத்தர் (1942), சந்தர் கலங்கா (1944) போன்ற ஒவ்வொரு படத்தின் அந்தந்த இந்திப் பதிப்புகளிலும் இவர் தொடர்ந்து நடித்தார். 1940ஆம் ஆண்டில் மதிப்புமிக்க "நியூ தியேட்டர் நிறுவனத்தை விட்டு வெளியேறிய பருவா, தனது படங்களை இயக்குவதோடு தயாரிப்பையும் கொண்டிருந்தார். அதன்பிறகு அமீரி, பெஹ்சன், ஈரான் கி ஏக் ராத் போன்ற பல இந்தித் திரைப்படங்களிலும் இவர் நடித்தார். இருப்பினும் இந்த படங்கள் பருவாவிற்கோ அல்லது ஜமுனாவிற்கோ கௌரவத்தை சேர்க்கவில்லை. வங்காள படங்களான இவர், தெபார் (1943), நிலங்குரியா (1943) போன்ற படங்களில் வெளி இயக்குநர்களது படத்தில் நடித்தார். அதில் இவர் பருவாவின் செல்வாக்கு இல்லாமல் தன்னை நிரூபித்தார். இவரது கடைசி படம் மலாஞ்சா (1953) பருவாவின் இயக்கத்திற்கு வெளியே இருந்தது. அதன் இந்தி பதிப்பான புல்வாரி (1953) என்ற படத்திலும் நடித்தார்.

குடும்பம் தொகு

1951இல் இவருக்கு 48 வயதாக இருந்தபோது தனது கணவரின் மரணம் இவரது வாழ்க்கையை முழுவதுமாக மாற்றியது. இவருக்கு தேவ் குமார், இரஜத், பிரசுன் என்ற மூன்று மகன்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் அப்போது சிறுவர்களாக இருந்தனர். பருவாவின் குடும்பம் இவர்களுக்கு உரிய பூர்வீகச் சொத்துகளை வழங்க மறுத்தனர். இதனால் இவர் செல்வாக்குமிக்க அரச குடும்பத்துடன் சட்டப் போரை நடத்த வேண்டியிருந்தது. பின்னர் இவர்களுக்கு வீட்டின் உரிமையும் பரந்த நிலமும், சிற்தளவில் தொகையும் கிடைத்தது. இவரது வாழ்க்கையின் பிற்பகுதியில், கணவர் பி.சி.பருவாவின் நூற்றாண்டு ஆண்டைக் கொண்டாடுவதற்காக இவர் பல விழாக்களில் கலந்து கொண்டார், மேலும் இந்திய திரையரங்கங்களில் முதல் "பார்வதி"யாக இந்திய அரசு மற்றும் அசாம் மாநில அரசு சார்பாக பாராட்டுக்களைப் பெற்றார்.

பிற்கால வாழ்வு தொகு

இவருடைய கடைசி நாட்களில் சில காலம் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். முதுமை தொடர்பான நோய் காரணமாக, இவர் தெற்கு கொல்கத்தாவிலுள்ள தனது இல்லத்தில் இறந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Looking back at Bollywood in Posters". Rediff.com. 2010-06-01. பார்க்கப்பட்ட நாள் 2017-06-15.
  2. "IndiaGlitz - Original Paro of 'Devdas' passes away - Bollywood Movie News". Indiaglitz.com. Archived from the original on 2008-01-15. பார்க்கப்பட்ட நாள் 2009-02-18.
  3. "Roop Lekha (1934)". chiloka.com. பார்க்கப்பட்ட நாள் 1 February 2015.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜமுனா_பருவா&oldid=3687422" இலிருந்து மீள்விக்கப்பட்டது