ஜம்பை சிற்றூர்

ஜம்பை (Jambai) என்பது தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின், திருக்கோயிலூர் வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இந்த ஊரின் பரப்பளவு ஒரு சதுர கிலோமீட்டர் ஆகும். இந்த ஊரில் உள்ள பெரும்பாலான மக்கள் வேளாண்மை மற்றும் கைத்தறி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 2011 ஆண்டைய மக்கள் கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 2,000 பேர் வாழ்கின்றனர்.[1]

ஜம்பை
ஜம்பை சிற்றூர் is located in இந்தியா
ஜம்பை சிற்றூர்
தமிழ்நாடு, இந்தியாவில் இருப்பிடம்
ஜம்பை சிற்றூர் is located in தமிழ் நாடு
ஜம்பை சிற்றூர்
ஜம்பை சிற்றூர் (தமிழ் நாடு)
அமைவிடம்தமிழ்நாடு கள்ளக்குறிச்சி
ஆள்கூற்றுகள்12°00′52″N 79°03′16″E / 12.014472°N 79.054527°E / 12.014472; 79.054527

சொற்பிறப்பு

தொகு

ஜம்பை என்ற பெயரானது இந்த ஊரில் உள்ள சோழர்கால கோயிலான ஜம்புநாதேசுவரர் என்ற சிவன் கோயில் பெயரில் இருந்து வந்ததிருக்கலாம். இந்தக் கோயிலில் உள்ள முதலாம் பராந்தக சோழன் காலத்திய கல்வெட்டில் இந்த ஊர் அக்காலத்தில் வள்ளியூர் என்று அழைக்கப்பட்டது தெரியவருகிறது. எனவே, "ஜம்பை" என்ற பெயரானது இந்த ஊருக்கு பிற்காலத்தில் வந்த பெயராக இருக்கலாம்.

இடம்

தொகு

ஜம்பை ஊரானது தென்பெண்ணை ஆற்றின் வடக்கு கரையில் அமைந்துள்ளது. இது திருக்கோயிலூருக்கு வடமேற்கில் 19 கி.மீ (12 மைல்) தொலைவிலும், திருவண்ணாமலைக்கு தெற்கில் 25 கி.மீ (16 மைல்) தொலைவிலும் உள்ளது.

ஊர் குறித்து

தொகு

ஜம்பை சிற்றூரானது 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையும் பாரம்பரியம் உள்ள ஊராகும். ஜம்பையில் சைவம், சைனம், பௌத்தம், சாக்தம் ஆகிய சமயங்கள் செழித்திருந்தன. நெல்வயல்களின் நடுவில் கோட்டைப் பகுதியில் இருந்த கி.பி. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அழகிய புத்தர் கற்சிலையானது 2006 ஆம் ஆண்டு திருடப்பட்டது. ஊரில் இரண்டு சிவன் கோயில்களும், ஒரு சப்தமதர் கோவிலும், மலைமீது ஒரு அய்யனார் கோயில் மற்றும் கிராமத்தின் வட கிழக்கு மூலையில் மற்றொரு அய்யனார் கோயில் போன்றவை உள்ளன. பள்ளிசந்தலுக்குச் செல்லும் வழியில் ஒரு குன்றில் சைன தீர்த்தங்கரரின் நிவாரண சிற்பம் காணப்படுகிறது. இந்த சிற்றூருக்கு சிறப்பு சேர்ப்பவை இங்குள்ள ஜம்புநாதேசுவரர் கோயில் என்ற சிவன் கோயில் மற்றும் ஜம்பை மலையில் உள்ள கி.மு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந் தமிழ்ப் பிராமி கல்வெட்டுகள், சைனத் துறவிகள் வசிப்பிடம், குகைகள், சமணப் படுக்கைகள் போன்றவை ஆகும்.

ஜம்புநாதேசுவரர் கோயில்

தொகு
 
ஜம்புநாதேசுவரர் கோயில்

இக்கோயில் தமிழில் தான்தோன்றீஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இந்த சிவன் கோயிலானது 10 ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது. கோவில் சுவர்களில் சோழர்களின் தமிழ் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் நிறைந்துள்ளன. இந்தப் பகுதியானது 10 ஆம் நூற்றாண்டின் நடுவில் இராஷ்டிரகூடர்களின் ஆட்சியின்கீழ் வந்துள்ளது. இப்பகுதியில் உள்ள முருகன். ஜோஸ்டதேவி, காலபைரவர், துர்கை போன்ற சிலைகள் இராட்டிரக்கூடக் கலைப் படைப்புகளாகும். இந்த பழமையான கோயில் மிகவும் சேதமடைந்ததுள்ளதால், ஜம்பாயின் உள்ளூர் மக்களால் புனரமைக்கப்பட்டுவருகிறது.[2]

ஜம்பைமலை

தொகு
 
கி.மு. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி கல்வெட்டு

கிராமத்தின் வடகிழக்கில் ஜம்பைமலை என்ற இரு பாறைக் குன்றுகள் அமைந்துள்ளன. இந்த இரண்டிற்கும் நடுவில் இருக்கும் சிறிய நிலப்பரப்பில்,பெருங்கற்காலத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்தற்கான சான்றுகள் காணப்படுகின்றன. இரண்டு குன்றுகளில் தெற்கில் காணப்படும் குன்றிற்கு, தாசிமடம் என்று பெயர். இங்கு கி மு ஒன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி கல்வெட்டு கண்டறியப்பட்டது. இந்தக் கல்வெட்டு (தமிழ்: ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பாழி).[3] என படிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் ஸத்திய புத்திரன் அதியன் நெடுமான் அஞ்சி என்பவர் தானமாகக் கொடுத்தே பாளி என்பதாகும். இந்தக் கல்வெட்டானது சிறியதாக ஒற்றைவரியில் இருந்தாலும், தென்னிந்திய வரலாற்றின் பல்வேறு அம்சங்களில் ஒளியைப் பாய்ச்சக்கூடியதாக உள்ளது. அசோகனின் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு கல்வெட்டொன்றில், சேர, சோழ, பாண்டியர்களுடன் "சதிய புத்தோ" எனக் குறிப்பிடப்பட்டுள்ள அரசகுலம் எது என்பது குறித்து நிலவிய விவாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்ததுள்ளது இதன் சிறப்பு ஆகும்.[4] இந்த குகைக்கு எதிரில் இருக்கும் வேரொரு குகையில் நான்கு சமணர் படுக்கைகள் காணப்படுவதானது, இப்பகுதி சைன சமய மையமாக இருந்ததை உறுதிப்படுத்துகின்றது.[5] மலையின் மேற்கில் 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இராஷ்ட்ரகூடர் கலைப்படைப்பான ஜேஷ்ட தேவி (மூதேவி என்ற பெயரும் உண்டு) சிலையும், அருகில் இராஷ்ட்ரகூடர் மன்னன் கன்னரத் தேவன் என்னும் மூன்றாம் கிருஷ்ணனின் தமிழ் கல்வெட்டும் காணப்படுகிறது. இந்தக் கல்வெட்டுக்கு தெற்கே பாசனப் பயன்பாட்டுக்காக ஒரு ஏரி கட்டப்பட்டுள்ளது.[6]

படவரிசை

தொகு

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.indiamapped.com/tamil-nadu/viluppuram/tirukkoyilur/jambai/
  2. K. Selvaraj, "Jambai oru aayvu", State Department of Archeology, Chennai
  3. K. Selvaraj, "Jambai oru aayvu", State Department of Archeology, Chennai
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-02-07. பார்க்கப்பட்ட நாள் 2018-05-29.
  5. D. Ramesh, "Nadunaattu Samanakovilkal" (2nd ed.) Tamilventhan Pathippagam, Ulundurpettai (2005)
  6. K. Selvaraj, "Jambai oru aayvu", State Department of Archeology, Chennai
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜம்பை_சிற்றூர்&oldid=3744900" இலிருந்து மீள்விக்கப்பட்டது