ஜம்மு காஷ்மீர் தொகுதிகள் மறுவரையறை அறிக்கை

2019 ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட புதிய ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதிகான சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் அதன் எல்லைகளை வரையறை செய்வதற்கு இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதியரசர் ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில், இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா மற்றும் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் தேர்தல் ஆணையாளர் கே. கே சர்மா ஆகிய இரண்டு உறுப்பினர்கள் கொண்ட ஆணையம் 6 மார்ச் 2020 அன்று அமைக்கப்பட்டது.

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதிகள் மறுவறை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆணையம் தனது அறிக்கை 5 மே 2022 அன்று இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் வழங்கியது. தேர்தல் ஆணையம் அதனை பரிசீலனை செய்து, ஜம்மு காஷ்மீரின் தொகுதிகளை மறுவரையறை செய்த அறிக்கையை ஏற்றுக் கொண்டது. [1][2]

மொத்த சட்டமன்றத் தொகுதிகள்

தொகு

தொகுதிகள் மறுவரையறை செய்வதற்கு முன்னர் முன்னதாக, ஜம்மு காஷ்மீரில் 111 இடங்கள் சட்டப்பேரவை தொகுதிகள் இருந்தன. அதில் காஷ்மீர் பகுதிக்கு 46, ஜம்மு பகுதிக்கு 37 மற்றும் லடாக் பகுதிக்கு 4 சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. இது தவிர 24 தொகுதிகள் பாகிஸ்தானால் நிர்வகிக்கப்படும் காஷ்மீரில் இருந்தது. லடாக் தனி ஒன்றியப் பகுதியாகப் பிரித்த பிறகு, ஜம்மு காஷ்மீர் பகுதியில் 107 சட்டமன்றத் தொகுதிகள் மட்டுமே எஞ்சியிருந்தது.

ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தில், இந்த இடங்கள் 114 ஆக அதிகரிக்கப்பட்டது. இதில் 90 இடங்கள் ஜம்மு காஷ்மீருக்கும், 24 இடங்கள் பாகிஸ்தானால் நிர்வகிக்கப்படும் காஷ்மீருக்கும் ஒதுக்கப்பட்டது.

மே 2022-இல் தொகுதிகள் மறுவரையறை செய்த பின்னர், [[ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)|ஜம்மு காஷ்மீர் ஒன்றியப்] பகுதியில் மொத்தம் 90 சட்டமன்றத் தொகுதிகளும், 5 நாடாளுமன்றத் தொகுதிகளும் கொண்டிருக்கும். அதில் காஷ்மீர் பிரதேசம் 47 சட்டமன்றத் தொகுதிகளையும், ஜம்மு பிரதேசம் 43 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டிருக்கும். சட்டப்பேரவைத் தொகுதி ஒரே மாவட்டத்திற்குள் இருக்குமாறு தொகுதிகள் வரையறை செய்யப்பட்டுள்ளது.

தனித் தொகுதிகள்

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்திற்கு முதன் முறையாக பட்டியல் சமூகத்தினருக்கு 7 தனித் தொகுதிகளும், பட்டியல் பழங்குடியினருக்கு 9 தனித் தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் பழங்குடி மக்களுக்கு சட்டமன்றத்தில் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

புதிய சட்டமன்றத் தொகுதிகள்

தொகு

ஜம்மு பிரதேசத்தில் ரஜௌரி மாவட்டம், கிஷ்துவார் மாவட்டம், தோடா மாவட்டம், உதம்பூர் மாவட்டம், கதுவா மாவட்டம் மற்றும் சம்பா மாவட்டப் பகுதிகளைக் கொண்டு புதிய 6 புதிய சட்டமன்றத் தொகுதிகள் நிறுவப்படுகிறது. காஷ்மீர் பிரதேசத்தில் குப்வாரா மாவட்டப் பகுதியைக் கொண்ட புதிய சட்டமன்றத் தொகுதி நிறுவப்படுகிறது.

நாடாளுமன்றத் தொகுதிகள்

தொகு

18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு நாடாளுமன்றத் தொகுதி வீதம், புதிய ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதி மொத்தம் 5 நாடாளுமன்றத் தொகுதிகள் கொண்டிருக்கும். அவைகள் பாரமுல்லா, ஸ்ரீநகர், அனந்த்நாக்-ரஜோரி, உதம்பூர் மற்றும் ஜம்மு நாடாளுமன்றத் தொகுதிகள் ஆகும்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு