ஜான் குவின்சி ஆடம்ஸ்
சான் குவின்சி ஆடமுசு (சோன் குயின்சி அடமுசு, John Quincy Adams) (சூலை 11, 1767 – பெப்ரவரி 23, 1848) அவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் ஆறாவது குடியரசுத் தலைவராக (மார்ச்சு 4, 1825 – மார்ச்சு 4, 1829) இருந்தார். இவர் பெடரல் கட்சி, டெமாக்ரட்டிக்-ரிப்பப்ளிக்கன் கட்சி, நேசனல் ரிப்பப்ளிக்கன், பின்னர் விகு கட்சி ஆகிய தொடர்புகள் கொண்டிருந்தார். இவர் முன்னாள் ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகிய சான் ஆடமுசின் மகன் ஆவார். கல்வி வளர்ச்சிக்கும் நாட்டை மேம்படுத்துவதற்கும் பல கருத்துக்களை முன்வைத்தார் ஆனால் காங்கிரசின் ஒப்புதல் பெறமுடியாமல் இருந்தார். வெளியுறவுக் கொள்கைகளில் மன்ரோ கொள்கையை வளர்த்தெடுப்பதில் அக்கரை காட்டினார். அடிமைகள் முறையை எதிர்த்தார். உள்நாட்டுப் போர் மூண்டால் போர்க்கால வல் ஆணைகளைப் பயன்படுத்தி் அடிமைமுறைய ஒழிக்க முடியும் என கூறிவந்தார். ஆபிரகாம் லிங்கன் அவர்கள் இதே முறையில் 1863ல் ஈடெழுச்சி அறிவிப்பு (Emancipation Proclamation of 1863.) செய்து அடிமை முறையை ஒழித்தார்.[1][2][3]
சான் குவின்சி ஆடமுசு | |
---|---|
![]() | |
ஐக்கிய அமெரிக்காவின் 6 வது குடியரசுத் தலைவர் | |
பதவியில் மார்ச் 4, 1825 – மார்ச் 4, 1829 | |
துணை அதிபர் | ஜான் கல்லூன் |
முன்னையவர் | ஜேம்ஸ் மன்ரோ |
பின்னவர் | ஆன்ட்ரூ ஜாக்சன் |
8 ஆவது நாட்டுச் செயலாளர் | |
பதவியில் மார்ச் 5, 1817 – மார்ச் 3, 1825 | |
குடியரசுத் தலைவர் | ஜேம்ஸ் மன்ரோ |
முன்னையவர் | ஜேம்ஸ் மன்ரோ |
பின்னவர் | ஹென்றி கிளே |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஜூலை 11, 1767 பிரெய்ன்ட்ரீ, மாசாச்சுசெட்ஸ் |
இறப்பு | பெப்ரவரி 23, 1848, அகவை 80 வாஷிங்டன் டிசி. |
அரசியல் கட்சி | டெமாக்ரட்டிக்-ர்ப்பளிக்கன், நேஷனல் ரிப்பளிக்கன் கட்சி (ஐக்கிய அமெரிக்கா), விகு கட்சி (ஐக்கிய அமெரிக்கா) |
துணைவர் | [லூயிசா காத்தரீன் ஜான்சன் ஆடம்ஸ் |
சமயம் | யூனிட்டேரியன் |
கையெழுத்து | ![]() |
மேற்கோள்கள்
தொகு- ↑ Wead, Doug (2005). The Raising of a President. New York: Atria Books. p. 59. ISBN 978-0-7434-9726-8.
- ↑ "APS Member History". search.amphilsoc.org. Retrieved April 5, 2021.
- ↑ Rettig, Polly M. (April 3, 1978). [[[:வார்ப்புரு:NRHP url/core]] "John Quincy Adams Birthplace"]. National Park Service. Retrieved November 1, 2011.
{{cite web}}
: Check|url=
value (help)