ஜார்ஜ் புஷ் கண்டமிடை வானூர்தி நிலையம்

ஜார்ஜ் புஷ் கண்டமிடை வானூர்தி நிலையம் , (George Bush Intercontinental Airport, (ஐஏடிஏ: IAHஐசிஏஓ: KIAHஎப்ஏஏ LID: IAH))[2] ஐக்கிய அமெரிக்க நாட்டின் நான்காவது மக்கள்தொகை மிக்க நகரமான ஹியூஸ்டனுக்கும் ஐந்தாவது பெரிய பெருநகரப் பகுதியான ஹியூஸ்டன்-த வுட்லாந்து-சுகர்லாந்துக்கும் சேவை புரிகின்ற வானூர்தி நிலையம் ஆகும். ஹியூஸ்டன் மையப்பகுதியிலிருந்து சுமார் 23 மைல்கள் (37 km) வடக்கே[2] அமைந்துள்ள ஜார்ஜ் புஷ் கண்டமிடை வானூர்தி நிலையத்திலிருந்து உள்ளூர் சேரிடங்களுக்கும் பன்னாட்டு சேரிடங்களுக்கும் வானூர்திகள் இயக்கப்படுகின்றன. இந்த வானூர்தி நிலையம் ஐக்கிய அமெரிக்காவின் 41வது குடியரசுத் தலைவராக இருந்த ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.[3] ஜார்ஜ் புஷ் கண்டமிடை வானூர்தி நிலையத்தை 2011இல் 40,187,442 பயணிகள் பயன்படுத்தி உள்ளனர்;[1] வட அமெரிக்காவில் பத்தாவது பயணிகள் போக்குவரத்து மிகுந்த நிலையமாக உள்ளன.

ஜார்ஜ் புஷ் கண்டமிடை வானூர்தி நிலையம்

ஹூஸ்டன்-இன்டர்கான்டினென்டல்
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொதுத்துறை
உரிமையாளர்ஹியூஸ்டன் நகரம்
இயக்குனர்ஹூஸ்டன் வானூர்தி நிலைய அமைப்பு
சேவை புரிவதுஹியூஸ்டன்–த வுட்லாந்து-சுகர்லாந்து
அமைவிடம்ஹியூஸ்டன், டெக்சஸ், அமெரிக்க ஐக்கிய நாடு
மையம்யுனைட்டெட் ஏர்லைன்ஸ்
உயரம் AMSL97 ft / 30 m
இணையத்தளம்www.fly2houston.com
நிலப்படங்கள்
எப்ஏஏ நிலைய வரைபடம்
எப்ஏஏ நிலைய வரைபடம்
IAH is located in Texas
IAH
IAH
டெக்சசில் அமைவிடம்
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
15L/33R 12,001 3,658 பைஞ்சுதை
15R/33L 9,999 3,048 பைஞ்சுதை
9/27 10,000 3,048 பைஞ்சுதை
8L/26R 9,000 2,743 பைஞ்சுதை
8R/26L 9,402 2,866 பைஞ்சுதை
புள்ளிவிவரங்கள் (2011)
பயணிகள்40187442
வானூர்தி இயக்கங்கள்528722
மூலங்கள்:[1]

காட்சிக்கூடம்

தொகு

மேற்சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "HAS Traffic Statistics Summaries", Calendar Year 2011 Traffic Summary, HAS, 3/2, pp. 1, 4, archived from the original on 2012-08-09, பார்க்கப்பட்ட நாள் 2013-05-05 {{citation}}: Check date values in: |date= and |year= / |date= mismatch (help)
  2. 2.0 2.1 NJN. "Houston Airport System". Fly2Houston. Archived from the original on 2013-10-12. பார்க்கப்பட்ட நாள் 2013-04-28.
  3. "[Intercontinental Airport]," Houston Airport System

வெளி இணைப்புகள்

தொகு