ஜார்ஜ் வாஷிங்டன் பாலம்
ஜார்ஜ் வாஷிங்டன்பாலம் ; அமெரிக்காவின் இரட்டை தளங்கள் உள்ள தொங்கு பாலம் ஆகும். ஹட்சன் நதி முழுவதிலும் அகலமாகப் பரவியுள்ள இப்பாலம், நியூயார்க்கு நகரத்தை மன்ஹாட்டன் அருகிலுள்ள வாஷிங்டன் ஹைட்ஸ்நகரத்துடனும், நியூ செர்சியில் உள்ள போர்ட் லீ பெருநகரத்துடனும் இணைக்கிறது.. இந்த பாலத்திற்கு அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியான ஜார்ஜ் வாஷிங்டனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஜார்ஜ் வாஷிங்டன் பாலம் உலகின் மிகவும் பரபரப்பான மோட்டார் வாகனப் பாலமாகும்,[1][2] 2016 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ஓராண்டுக்கு 103 மில்லியன் வாகனங்கள் இப்பாலத்தைக் கடந்து செல்கின்றன. இந்தப் பாலம் நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி துறைமுக ஆணையம் மற்றும் துறைமுகத்தின் உள்கட்டமைப்பை இயக்கும் இரு மாநில அரசின் முகவான்மை நிறுவனம் ஆகியவற்றுக்குச் சொந்தமானது. ஜார்ஜ் வாஷிங்டன் பாலம் கி.வி பாலம், கி டபிள்யூ. பி, கி.வி. அல்லது ஜார்ஜ் பாலம் என்றே அறியப்படுகிறது. கட்டுமானத்தின் போது போர்ட் லீ பாலம் அல்லது ஹட்சன் நதி பாலம் என்று அழைக்கபப்ட்டது.
1906 ஆம் ஆண்டில் ஹட்சன் ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் குறித்த யோசனை முதலில் முன்மொழியப்பட்டது, ஆனால் 1925 ஆம் ஆண்டு வரை நியூயார்க் மற்றும் நியூஜெர்சி மாநில சட்டமன்றங்கள் அத்தகைய பாலத்தைத் திட்டமிடுவதற்கும் நிர்மாணிப்பதற்கும் அனுமதிக்கவில்லை . ஜார்ஜ் வாஷிங்டன் பாலத்தின் கட்டுமானம் அக்டோபர் 1927 இல் தொடங்கியது; அக்டோபர் 24, 1931 அன்று இந்த பாலம் சடங்கு முறையில் நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டது, மறுநாள் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. ஜார்ஜ் வாஷிங்டன் பாலத்தின் திறப்பு நியூ ஜெர்சியிலுள்ள பெர்கன் கவுண்டியின் வளர்ச்சிக்குப் பங்களித்தது, இந்த நகரில் தான் போர்ட் லீ அமைந்துள்ளது. இப்பாலத்தின் மேல் தளம் 1946 இல் ஆறு முதல் எட்டு பாதைகள் வரை அகலப்படுத்தப்பட்டது. ஆறு வழிச்சாலையின் கீழ் தளம் 1958 முதல் 1962 வரை தற்போதுள்ள இடைவெளியின் கீழ் கட்டப்பட்டது.
ஜார்ஜ் வாஷிங்டன் பாலம் நியூயார்க்கு பெரு நகரப் பகுதிக்குள்ஒரு முக்கியமான பயண வழியாகும். இந்தப் பாலம் ஒவ்வொரு திசைக்கும் நான்கு பாதைகள் கொண்ட ஒரு மேல் தளத்தையும், ஒவ்வொரு திசையிலும் மூன்று பாதைகளைக் கொண்ட ஒரு கீழ் தளத்தையும் கொண்டுள்ளது, மொத்தம் 14 வழித்தடங்கள் பயணத்திற்காய் கொண்டுள்ளது. பாலத்தின் வேக வரம்பு 45 mph (72 km/h) ஆகும். பாலத்தின் மேல் தளத்தில் பாதசாரிகள் மற்றும் சைக்கிள் போக்குவரத்தும் உள்ளது. இன்டர்ஸ்டேட் 95 (I-95) மற்றும் யு.எஸ். பாதை 1/9 (யுஎஸ் 1/9, யு.எஸ் <span typeof="mw:Entity" id="mwRg"> </span> 1 மற்றும் அமெரிக்க 9 ) ஆகிய பாதைகள் இப்பாலம் வழியாக ஆற்றைக் கடக்கின்றன. யு.எஸ்46, என்பது முற்றிலும் நியூஜெர்சிக்குள் அமைந்துள்ளது, இது நியூயார்க்குடனான மாநில எல்லையில் உள்ள பாலத்தின் குறுக்கே பாதியிலேயே முடிவடைகிறது. நியூயார்க் நகரில் அதன் கிழக்கு முனையத்தில், டிரான்ஸ்-மன்ஹாட்டன் அதிவேக நெடுஞ்சாலை வரை தொடர்கிறது ( I-95 இன் ஒரு பகுதி, கிராஸ் பிராங்க்ஸ் அதிவேக நெடுஞ்சாலையுடன் இணைகிறது ).
ஜார்ஜ் வாஷிங்டன் பாலம் 4,760 அடிகள் (1,450 m) நீளம் மற்றும் 3,500 அடிகள் (1,100 m) அகலம் கொண்டது . இது திறக்கப்பட்ட நேரத்தில் உலகின் மிக நீளமான அகன்ற பாலமாக இருந்தது. 1937 இல் கோல்டன் கேட் பாலம் திறக்கும் வரை இந்தப் பாலமே இப்பெயரைக் கொண்டிருந்தது.
ஜார்ஜ் வாஷிங்டன் பாலம், தலைமை கட்டடப் பொறியாளர் ஒத்மார் அம்மான், வடிவமைப்பு பொறியாளர் ஆல்ஸ்டன் டானா, மற்றும் உதவி தலைமை பொறியாளர் எட்வர்ட் டபிள்யூ. ஸ்டீர்ன்ஸ்,[3] :163 இவர்களுடன் காஸ் கில்பர்ட் என்ற கட்டிடக் கலைஞரின் ஆலோசனையின் பேரிலும் வடிவமைக்கபப்ட்டது . :43, 163 இது நியூ ஜெர்சியிலுள்ள ஃபோர்ட் லீயை வாஷிங்டன் ஹைட்ஸ், மன்ஹாட்டன், நியூயார்க்குடன் இணைக்கிறது.[4]
தளங்கள்
தொகுஇந்த பாலம் 14 வழித்தடங்களை கொண்டு செல்கிறது, ஒவ்வொரு திசையிலும் ஏழு.[4] எனவே, ஜார்ஜ் வாஷிங்டன் பாலத்தில் வேறு எந்த தொங்கு பாலத்தையும் விட அதிகமான வாகன பாதைகள் உள்ளன, மேலும் இது உலகின் பரபரப்பான வாகனப் பாலமாகும். :41 [1][2] பாலத்தின் பதினான்கு பாதைகள் இரண்டு நிலைகளில் ஒரே மாதிரியாகப் பிரிக்கப்பட்டுள்ளன: மேல் மட்டத்தில் எட்டு வழித்தடங்களும், கீழ் மட்டத்தில் ஆறு பாதைகளும் உள்ளன. மேல் நிலை 1931 இல் திறக்கப்பட்டது, இது 90 அடிகள் (27 m) அகலம் கொண்டது.[5] , மேல் மட்டத்தில் முதலில் ஆறு பாதைகள் இருந்தன1946 ஆம் ஆண்டில் மேலும் இரண்டு பாதைகள் சேர்க்கப்பட்டன.[6] கீழ் நிலை பாலத்திற்கான அசல் திட்டங்களின் ஒரு பகுதியாக இருந்தபோதிலும், அது 1962 வரை திறக்கப்படவில்லை. மேல் மட்டத்தில் 14 அடிகள் (4.3 m) செங்குத்து இசைவைக் கொண்டுள்ளது , மற்றும் அனைத்து சுமையுந்துகள் மற்றும் பிற கனரக வாகனங்கள் மேல் தளத்தைப் பயன்படுத்த வேண்டும் . கீழ் தளம் 13.6 அடிகள் (4.1 m) இசைவு கொண்டதாள் கீழ் தளத்த்டில் சுமையுந்துகள் தடை செய்யப்பட்டுள்ளன . இரு நிலைகளிலும் உள்ள அனைத்து பாதைகளும் 8 அடிகள் 6 அங்குலங்கள் (2.59 m) அகலம் கொண்டவை.[7][8] அபாயகரமான பொருட்களை (HAZMAT கள்) கொண்டு செல்லும் வாகனங்கள் அதன் மூடப்பட்ட தன்மை காரணமாக கீழ் மட்டத்தில் தடைசெய்யப்பட்டுள்ளன. துறைமுக அதிகாரசபையின் "சிவப்பு புத்தகத்தில்" கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள கடுமையான வழிகாட்டுதல்களுக்கு இணங்க, அபாயகரமான பொருள்களைக் கொண்டு செல்லும் வாகனங்கள் மேல் மட்டத்தைப் பயன்படுத்தலாம்.[9]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Collins, Beth (December 2, 2011). "10 record-breaking bridges". CNN. பார்க்கப்பட்ட நாள் November 13, 2018.
- ↑ 2.0 2.1 Maag, Christopher (May 9, 2019). "How crews will re-suspend the GWB while 280,000 cars drive beneath them daily". North Jersey Media Group. பார்க்கப்பட்ட நாள் May 10, 2019.
High above the Hudson, engineers are working to rehang the world's busiest bridge — while it remains in service.
- ↑ Six Bridges: The Legacy of Othmar H. Ammann. பார்க்கப்பட்ட நாள் September 18, 2018.
- ↑ 4.0 4.1 "George Washington Bridge 80th Anniversary". The Port Authority of NY & NJ. October 25, 2011. Archived from the original on ஜூன் 18, 2018. பார்க்கப்பட்ட நாள் June 18, 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Facts & Info - George Washington Bridge". Port Authority of New York and New Jersey. Archived from the original on மார்ச் 1, 2019. பார்க்கப்பட்ட நாள் February 27, 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "History - George Washington Bridge". Port Authority of New York and New Jersey. பார்க்கப்பட்ட நாள் March 6, 2010.
- ↑ "Traffic Restrictions - George Washington Bridge". The Port Authority of NY & NJ. பார்க்கப்பட்ட நாள் June 18, 2018.
- ↑ "New York City Truck Route Map: Reverse Side" (PDF). nyc.gov. New York City Department of Transportation. June 8, 2015. Archived from the original (PDF) on பிப்ரவரி 27, 2017. பார்க்கப்பட்ட நாள் September 12, 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ For the Red Book itself, see: "HAZARDOUS MATERIALS: Transportation Regulations at Tunnel and Bridge Facilities" (PDF). The Port Authority of NY & NJ. Archived from the original (PDF) on ஜூன் 10, 2019. பார்க்கப்பட்ட நாள் June 18, 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)