ஜாலியா கைபர்தா
ஜாலியா கைபர்தா (Jalia Kaibarta) (அல்லது ஜாலியா கைபர்த்யா ) என்பது தாழ்த்தப்பட்ட மக்கள், மீனவர்களை உள்ளடக்கிய ஒரு சமூகமாகும். பின்னர் சமசுகிருதமயமாக்கம் மூலம் அவர்கள் பெரும்பான்மை இந்துக்களுக்குள் மரியாதைக்குரிய சாதி அடையாளங்களைப் பெற்றனர். இவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள், அசாம், மேற்கு வங்காளம், ஒடிசா , கிழக்கு பீகார் மற்றும் வங்காளதேசம், நேபாளம், பூட்டான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். கைபர்தாக்கள் ஆரம்பத்தில் ஹாலியா மற்றும் ஜாலியா கைபர்தா என இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்ட ஒரே பழங்குடியினராகக் கருதப்பட்டனர்.இவர்களுக்குள் ஹாலியா கைபர்தா பிந்தையவர்களை விட உயர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.[1] ஜாலியா கைபர்தாக்கள், கைபர்தா/ஜாலியா என்ற பெயரில் ஒரு பட்டியலிடப்பட்ட சாதியாக வகைப்படுத்தப்படுகிறார்கள். அசாமில் உள்ள 16 பட்டியலினத்தவர்களில் இரண்டாவது பெரிய சமூகமாகும். கரமூர் சத்ராதிகாரின் செல்வாக்கின் கீழ் பலர் தங்கள் பாரம்பரிய மீன்பிடித் தொழிலைக் கைவிட்டு தங்களைப் பிரித்துக்கொண்டனர். [2]
கிழக்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒரு மீனவர், 1860கள் | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
அசாம் | 5,81,559 (அண். 2001) |
மொழி(கள்) | |
அசாமிய மொழி • வங்காள மொழி • ஒடியா மொழி | |
சமயங்கள் | |
இந்து சமயம் • பௌத்தம் |
பிரம்ம வைவர்த்த புராணத்தில், ஒரு கைபர்தா ஒரு சத்திரிய தந்தைக்கும் வைசிய தாய்க்கும் பிறந்ததாகக் கூறப்படுகிறது. மற்றவர்கள் கைபர்தா என்பது பௌத்த ஜாதகக் கதைகளில் கூறப்படும் மீனவ வகுப்பைக் குறிக்கும் கேவட்டாவின் இந்துமயமாக்கப்பட்ட வார்த்தையாகக் கருதுகின்றனர். [3] [3]
முதல் அபகத்தக் கையெழுத்துப் பிரதி, சர்யாபத் வடிவில், திபெத்திய மொழியில் லூய்-பா என அழைக்கப்படும் ஒரு பௌத்தத் பிக்குவால் எழுதப்பட்டது. அவர் இடைக்கால காமரூபத்தின் மீனவர் சமூகத்தைச் சேர்ந்த மச்சேயந்திரநாதருடன் அடையாளம் காணப்பட்டார். இது பின்னர் கைபர்தாக்களாக மாறியது. [4] [5]
இடைக்கால ஒடிய கவிஞரும் வைணவ துறவியுமான அச்யுதானந்த தாசர் இந்த சமூகத்தின் தோற்றம், வளர்ச்சி, செயல்பாடுகள் மற்றும் பாத்திரங்களை விவரிக்கும் "கைபர்த கீதை" என்ற நூலை எழுயுள்ளார். [6]
குறிப்பிடத்தக்கவர்கள்
தொகு- பூபேன் அசாரிகா, இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், கவிஞர், நடிகர் மற்றும் அசாமைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர், தாதாசாகெப் பால்கே விருது மற்றும் பாரத ரத்னா விருதுகள் பெற்றவர்.[7]
- ஜெயந்தா அசாரிகா, இசையமைப்பாளர், அசாமைச் சேர்ந்த பின்னணிப் பாடகர்.[7]
இதனையும் பார்க்கவும்
தொகுசான்றுகள்
தொகு- ↑ "In Lower Assam the Keots are divided into two main endogamous groups, halova and jalova Keots, or agriculturalists and fishermen, the former being held superior than the latter"(Cantile 1980)
- ↑ (Cantile 1980)
- ↑ 3.0 3.1 Dutta 1985, ப. 35.
- ↑ Dasgupta, Shashibhushan (1946). Obscure Religious Cults, Calcutta University Press, Calcutta, p. 384-385, Internet Archive copy; third edition: Firma KLM Private Limited, Calcutta 1960, Internet Archive copy; fifth edition: Firma KLM Private Limited, Calcutta 1995, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7102-020-8
- ↑ Ayyappapanicker, K. & Akademi, Sahitya (1997). Medieval Indian literature: an anthology, Volume 3. Sahitya Akademi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-260-0365-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-260-0365-5, (accessed: Friday March 5, 2010)
- ↑ "The Kaibartas of Odisha". Odisha News, Odisha Latest news, Odisha Daily - OrissaPOST (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-04-22. பார்க்கப்பட்ட நாள் 2022-11-17.
- ↑ 7.0 7.1 "Revolutionary Artist Dr. Bhupen Hazarika: Voicing the Silence of the Subaltern". Asian Journal of Humanities and Social Sciences: 9. https://ajhss.org/pdfs/Vol2Issue4/6.pdf.
குறிப்புகள்
தொகு- Dutta, Shristidhar (1985). The Mataks and their Kingdom. Allahabad: Chugh publication.
- Cantile, Audrey (1980). CASTE AND SECT IN AN ASSAMESE VILLAGE (Ph.D.). University of London.