ஜுயோங் கணவாய்
ஜுயோங் கணவாய் (Juyong Pass) என்பது சீன மக்கள் குடியரசின் தலைநகரமான பெய்ஜிங் நகராட்சியின் சாங்பிங் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கணவாயாகும். இது மத்திய பெய்ஜிங்கிலிருந்து 50 கிலோமீட்டர் (31 மைல்) தொலைவில் உள்ளது. இந்தக் கணவாயைக் சீனப் பெருஞ் சுவர் கடந்து செல்கிறது. மேலும், இங்கே 1342 ஆம் ஆண்டில் மேக நடைபாதை என்ற ஒரு கட்டமைப்பு ஒன்று இங்கு கட்டப்பட்டது.
மலைக் கணவாய்
தொகுநிலவியல்
தொகுஇந்தக் கணவாய் நீளமுள்ள குவாங்கோ பள்ளத்தாக்கில் இருந்து 18 கிலோமீட்டர் (11 மைல்) தூரத்தில் உள்ளது. இந்த கணவாய் சீனப் பெருஞ்சுவரின் மூன்று பெரிய மலைப்பாதைகளில் ஒன்றாகும். ஜியாயு கணவாய், என்பதும், சான்ஹாய் கணவாய் என்பதும் மற்ற இரண்டுமாகும். இந்தக் கணவாயில் இரண்டு 'துணைப் பாதைகள்' அமைந்து உள்ளன. ஒன்று பள்ளத்தாக்கின் தெற்கிலும் மற்றொன்று வடக்கிலும் இருக்கிறது. தெற்கிலிருப்பது "நான் (கணவாய்)" என்றும், வடக்கிலிருப்பது "படாலிங்" என்றும் அழைக்கப்படுகிறது.
வரலாறு
தொகுமுன்னர் சீனாவை ஆண்ட அரச வம்சங்களின் காலத்தில் இந்தக் கணவாய்க்கு பல பெயர்கள் இருந்தன. இருப்பினும், "ஜுயோங்குவான்" என்ற பெயர் மூன்று அரச வம்சங்களால் பயன்படுத்தப்பட்டது. சின் வம்சத்தில் பேரரசர் சின் சி ஹூவாங் என்பவர் பெருஞ்சுவரைக் கட்ட ஆரம்பிக்கும் போது இந்தக் கணவாய் முதன்முதலில் பயன்பாட்டுக்கு வந்தது. தெற்கு மற்றும் வடக்கு வம்ச சகாப்தத்தில் இது பெருஞ்சுவருடன் இணைக்கப்பட்டது.
தற்போதைய கணவாய் பாதை மிங் வம்சத்தில் கட்டப்பட்டது. பின்னர் பல புதுப்பிப்புகளைப் பெற்றது. இது சீனாவின் வடக்கு எல்லைக்கு அருகிலுள்ள உள் நிலத்தையும் பகுதியையும் இணைக்கும் மிக முக்கியமான மூலோபாய இடமாகும். பண்டைய நகரமான பெய்ஜிங்கைப் பாதுகாக்கவும் இது பயன்படுத்தப்பட்டது.
மேகத் தளம்
தொகுஇந்தக் கணவாய்க்கும் குவாங்கோ பள்ளத்தாக்கின் நடுவிலும், மேக நடைபாதை என்ற கட்டமைப்பின் நுழைவாயில் உள்ளது. இது "குறுக்கு சாலை கோபுரம்" என்றும் அழைக்கப்படுகிறது. இது 1342 ஆம் ஆண்டில் யுவான் வம்சத்தின் போது கட்டப்பட்டது. மேலும் 9.5 மீட்டர் (31 அடி) உயரத்துடன் வெள்ளை பளிங்குகளால் ஆனது. மேடையில் முதலில் மூன்று வெள்ளை பகோடாக்கள் இருந்தன. இது "கடக்கும் சாலை கோபுரம்" என்ற பெயரைக் கொடுத்தது. அவை ஒவ்வொன்றும் பிற்காக யுவான் மற்றும் ஆரம்பகால மிங் வம்சங்களுக்கு இடையிலான இடைக்கால காலத்தில் அழிக்கப்பட்டன. ஆரம்பகால மிங் வம்சத்தில், பௌத்த தையான் கோயில் மண்டபம் ஒன்று இங்கு கட்டப்பட்டது. இது 1702 இல் சிங் வம்சத்தின் போது அழிக்கப்பட்டது.
நடைமேடை
தொகுஇதன் மேற்புறத்தில் கல் பலுக்கல் மற்றும் ஒரு கண்காணிப்பு இடுகை போன்ற கூறுகள் உள்ளன. அவை அசல் யுவான் பாணியில் உள்ளன. மேடையில் பௌத்த உருவங்கள் மற்றும் சின்னங்களின் சிற்பங்களும், ஆறு மொழிகள் மற்றும் எழுத்துகளில் எழுதப்பட்ட புத்த நூல்களும் உள்ளன:
- ரஞ்சனா எழுத்துமுறை, திபெத்திய எழுத்துமுறை, பாக்ஸ்-பா எழுத்துமுறை, பழைய உய்குர் எழுத்துகள், டங்குட் எழுத்துமுறை மற்றும் சீன எழுத்துக்களில் சமசுகிருதம்
- திபெத்திய எழுத்துமுறையில் திபெத்திய மொழி
- பாக்ஸ்-பா திபெத்திய எழுத்துமுறையில் மங்கோலிய மொழி
- பழைய உய்குர் எழுத்துமுறையில் பழைய உய்குர் மொழி
- டங்குட் எழுத்துமுறையில் டங்குட் மொழி
- சீன எழுத்துக்களில் சீன மொழி
முகப்பு
தொகுஇதன் தளத்தின் நடுவில் ஒரு வளைந்த முகப்பு உள்ளது - அங்கு மக்கள், வண்டிகள், குதிரை வீரர்கள் மற்றும் பல்லக்குகள் கடந்து செல்லலாம். மக்கள் மற்றும் விலங்குகளின் பல படங்கள் வளைந்த வாயில் சுரங்கத்தின் உள்ளேயும் முகப்பைச் சுற்றிலும் செதுக்கப்பட்டன.