ஜெகந்நாத் பகாடியா

ஜெகந்நாத் பகாடியா (15 சனவரி 1932-19 மே 2021) ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவரும் ஆவார். இவர் இராசத்தானின் முன்னாள் முதலமைச்சராகவும், அரியானாவின் ஆளுநராகவும், பீகார் ஆளுநராகவும் இருந்துள்ளார். இவர் 19 மே 2021 அன்று கோவிட்-19 பெருந்தொற்றால் இறந்தார்.[1][2]

ஜெகந்நாத் பகாடியா
அரியானா ஆளுநர்
பதவியில்
27 சூலை 2009 – 26 சூலை 2014
முன்னையவர்ஏ. ஆர். கிட்வாய்
பின்னவர்காப்தன் சிங் சோலங்கி
பீகார் ஆளுநர்களின் பட்டியல்
பதவியில்
3 மார்ச்சு 1989 – 2 பிப்ரவரி 1990
முன்னையவர்ஆர். டி. பிரதான்
பின்னவர்முகமது யூனுஸ் சலீம்
9வது இராஜஸ்தான் முதலமைச்சர்
பதவியில்
6 சூன் 1980 – 13 சூலை 1981
முன்னையவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
பின்னவர்சிவ சரண் மாத்தூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1932-01-15)15 சனவரி 1932
பரத்பூர் மாவட்டம், பரத்பூர் சமஸ்தானம், இந்தியா
இறப்பு19 மே 2021(2021-05-19) (அகவை 89)
குருகிராம், அரியானா, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சாந்தி பகாடியா
மூலம்: [1]

இளமையும் கல்வியும்

தொகு

பகாடியா இராசத்தான் மாநிலத்தின் இன்றைய பரத்பூர் மாவட்டத்தின் புசாவர் நகரில் ஒரு தலித் குடும்பத்தில் 1932 சனவரி 15 அன்று நதீலால் பகாடியா மற்றும் சந்தா தேவிக்கு மகனாகப் பிறந்தார்.[3][4] முதுகலை மற்றும் இளநிலைச் சட்டப் படிப்பினை முறையே எம். எஸ். ஜே. கல்லூரி, பரத்பூர், மகாராஜா கல்லூரி, ஜெய்ப்பூர் மற்றும் இராசத்தான் பல்கலைக்கழகச் சட்டக் கல்லூரிகளில் முடித்துள்ளார்.[5] இவர் அம்பேத்காரைப் பின்பற்றுபவர் ஆவார்.[6]

அரசியல்

தொகு

இராசத்தான் முதல்வராக

தொகு

1980 சூன் 6 முதல் 1981 சூலை 14 வரை இராசத்தான் மாநில முதலமைச்சராக இருந்தார். இராசத்தான் மாநில முதல்வராகப் பதவி வகித்த முதல் தலித் ஆவார்.[4][1] பகாடியா 1998 முதல் 2008 வரை மற்றும் 1980 முதல் 1990 வரை இராசத்தான் சட்டமன்றத்தில் உறுப்பினராகப் பணியாற்றினார்.[7]

மக்களவை உறுப்பினராக

தொகு

பகாடியா 2ஆவது மக்களவையில் சவாய் மாதோபூர் மக்களவைத் தொகுதி மற்றும் 4ஆவது, 5ஆவது மற்றும் 7ஆவது மக்களவைகளில் இராசத்தானின் பயானா மக்களவைத் தொகுதியிலிருந்து உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.[8] இவரது மனைவி சாந்தி பகாடியா மக்களவை உறுப்பினராக இருந்தார்.

ஆளுநராக

தொகு

பகாடியா 3 மார்ச் 1989 முதல் 2 பிப்ரவரி 1990 வரை பீகார் ஆளுநராகவும் இருந்துள்ளார்.[9] பின்னர், இவர் சூலை 27,2009 முதல் சூலை 26,2014 வரை அரியானா ஆளுநராகப் பணியாற்றினார்.[10]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Jagannath Pahadia, first Dalit CM of Rajasthan, dies of Covid". The Times of India. 20 May 2021. பார்க்கப்பட்ட நாள் 20 May 2021.
  2. "Former Rajasthan CM Jagannath Pahadia dies of COVID-19". The Hindu. 19 May 2021. பார்க்கப்பட்ட நாள் 19 May 2021.
  3. "Status quo for Dalits: caste shame for Rajasthan". Hindustan Times (in ஆங்கிலம்). 2013-11-20. பார்க்கப்பட்ட நாள் 2020-09-16.
  4. 4.0 4.1 "जगन्नाथ पहाड़िया: राजस्थान के पहले दलित मुख्यमंत्री जो बस 13 महीने सीएम रह सके". LallanTop - News with most viral and Social Sharing Indian content on the web in Hindi (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2020-09-16.
  5. Bohra, Sanjay (2020-01-24). "Rajasthan Congress govt lets Vasundhara Raje keep bungalow but moves to evict its own ex-CM". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-16.
  6. "बाबा साहब भीमराव अम्बेडकर के संदेश को आत्मसात करें: पहाड़िया". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2021-05-22.
  7. Iqbal, Mohammed (19 May 2021). "Former Rajasthan CM Jagannath Pahadia dies of COVID-19 - The Hindu". The Hindu. https://www.thehindu.com/news/national/other-states/former-rajasthan-cm-jagannath-pahadia-dies-of-covid-19/article34601213.ece. 
  8. "The Tribune, Chandigarh, India - Haryana". www.tribuneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2020-09-16.
  9. "राजस्थान का रण: 'लोग इस जहर को पीकर मर रहे थे, इसलिए मैंने राजस्थान में शराब पर रोक लगवाई'". Patrika News (in hindi). 8 October 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-09-16.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  10. "Pahadia to be sworn in as Haryana governor on Monday". Hindustan Times (in ஆங்கிலம்). 2009-07-26. பார்க்கப்பட்ட நாள் 2020-09-16.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெகந்நாத்_பகாடியா&oldid=4083557" இலிருந்து மீள்விக்கப்பட்டது