ஜெகாய் மக்கள்
ஜெகாய் மக்கள் அல்லது ஜகாய் மக்கள் (ஆங்கிலம்: Jahai people அல்லது Jehai people; மலாய்: Orang Jahai; Suku Jahai) என்பவர்கள் தீபகற்ப மலேசியாவின் பேராக், கிளாந்தான் மாநிலங்களில்; மற்றும் தாய்லாந்தின் சில பகுதிகளில் காணப்படும் செமாங் மக்கள் குழுவைச் சார்ந்த பழங்குடி மக்கள் ஆவார்கள்.
பேராக், அரச பெலும் தேசியப் பூங்காவில் உள்ள ஒரு ஜெகாய் குடும்பம் | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
மலாய் தீபகற்பம்: | |
மலேசியா பேராக் கிளாந்தான் | 2,326 (2010)[1] |
தாய்லாந்து | 200[2] |
மொழி(கள்) | |
ஜெகாய் மொழி, மலாய் மொழி | |
சமயங்கள் | |
பழங்குடியினர் மதம், கிறிஸ்தவம், இசுலாம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
செமாங், பாத்தேக் மக்கள், லானோ மக்கள், நெகிரிட்டோ மக்கள், மானிக் மக்கள் |
இவர்கள் கருமை நிறத் தோல் கொண்டவர்கள்; பெரும்பாலும் சுருள் முடிகள்; மற்றும் ஆசிய முகப் பண்புகளைக் கொண்டுள்ளனர்.[3] வேட்டையாடுதல் இவர்களின் பாரம்பரியத் தொழில்; மற்றும் எப்போதாவது பயிரிடுதல் தொழிலிலும் ஈடுபடுகிறார்கள்.[4]
பொது
தொகுஜெகாய் மக்களின் வாழ்வியல்ச் செயல்பாடுகளைக் கண்காணிக்க இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி இருப்பதாக ஜெகாய் மக்கள் நம்புகிறார்கள். அந்தச் சக்தியை காரே (Karei) என்று அழைக்கிறார்கள். அதுவே தங்களின் மத அமைப்பின் தலைமைத்துவம் என்றும் நம்புகிறார்கள்.
காரே சக்தியின் கவனத்தை எதிர்மறையான முறையில் ஈர்ப்பதைத் தவிர்ப்பதற்காக, சில விதிமுறைகளையும் பின்பற்றுகிறார்கள். பல்வேறு நாற்றங்கள் அல்லது நறுமணங்கள் மூலமாக காரே சக்தியைப் பயமுறுத்தலாம் அல்லது தங்களின் பக்கம் ஈர்க்கலாம் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.[5] இதே நம்பிக்கையை தாய்லாந்தின் மானிக் மக்களும் பின்பற்றுகின்றனர்.[6]
தனிமை வாழ்க்கை
தொகுபாரம்பரியமாக நாடோடிகளாக வாழும் ஜெகாய் மக்கள், பேராக் மாநிலத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒரு பகுதியாக விளங்கும் தெமங்கோர் அரச பெலும் தேசியப் பூங்கா (Royal Belum State Park) பகுதிகளில் வாழ்கின்றனர். அவர்கள் தனிமையில் வாழ்வதையே விரும்புகின்றனர். மேலும் இவர்களின் குடியிருப்புகளில் சாலைகள், பள்ளிகள், உடல்நலச் சேவைகள் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்புகள் போன்றவை பெரும்பாலும் இல்லை.[7]
கெஜார் ஆற்றங்கரையில் (Kejar River) உள்ள கிராமங்களில் உள்ள ஜெகாய் மக்களின் இறப்பு விழுக்காடு குழந்தைகளில் 50% வரை அதிகமாக இருந்தது. இது ஒரு மர்ம நோயான செரவான் நோய் என அறியப்படுகிறது. இந்த நோயினால் அங்குள்ள மக்கள் தொகை 600-இல் இருந்து 400 ஆகக் குறைந்தது.[8][9]
மக்கள் தொகை
தொகுதீபகற்ப மலேசியாவில் ஜெகாய் மக்களின் மக்கள் தொகை விவரங்கள்:-
ஆண்டு | 1960[10] | 1965[10] | 1969[10] | 1974[10] | 1980[10] | 1993[11] | 1996[10] | 2000[12] | 2003[12] | 2004[13] | 2010[1] |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மக்கள் தொகை |
621 | 546 | 702 | 769 | 740 | 1,049 | 1,049 | 1,244 | 1,843 | 1,843 | 2,326 |
காட்சியகம்
தொகுமேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Kirk Endicott (2015). Malaysia's Original People: Past, Present and Future of the Orang Asli. NUS Press. p. 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-99-716-9861-4.
- ↑ "Jehai in Thailand". Joshua Project. பார்க்கப்பட்ட நாள் 2017-07-11.
- ↑ Helen Oon (2008). Malaysia. New Holland Publishers. pp. 55–56. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-18-453-7971-1.
- ↑ Douglas Richardson (2017). International Encyclopedia of Geography, 15 Volume Set: People, the Earth, Environment and Technology. John Wiley & Sons. p. 2240. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-04-706-5963-2.
- ↑ Catherine Diederich (2015). Sensory Adjectives in the Discourse of Food: A frame-semantic approach to language and perception. John Benjamins Publishing Company. p. 23. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-272-6880-8.
- ↑ Ed Yong (6 November 2015). "Why Do Most Languages Have So Few Words for Smells?". The Atlantic. பார்க்கப்பட்ட நாள் 2017-07-11.
- ↑ "Proceedings of the 2nd International Conference on Human Capital and Knowledge Management" (PDF). ICHCKM. 2015. p. 168. Archived from the original (PDF) on 2017-12-16. பார்க்கப்பட்ட நாள் 2017-07-11.
- ↑ Shanjeev Reddy (16 February 2016). "The Curse of Serawan". R.AGE. http://rage.com.my/dead-and-forgotten/.
- ↑ "Situation of the right to health of indigenous peoples in Asia". Asia Indigenous Peoples Pact. 1 March 2016. பார்க்கப்பட்ட நாள் 2017-07-11.
- ↑ 10.0 10.1 10.2 10.3 10.4 10.5 Nobuta Toshihiro (2009). "Living On The Periphery: Development and Islamization Among Orang Asli in Malaysia" (PDF). Center for Orang Asli Concerns. பார்க்கப்பட்ட நாள் 2018-01-19.
- ↑ Colin Nicholas (2000). The Orang Asli and the Contest for Resources. Indigenous Politics, Development and Identity in Peninsular Malaysia (PDF). Center for Orang Asli Concerns & International Work Group for Indigenous Affairs. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-87-90730-15-4. பார்க்கப்பட்ட நாள் 2018-01-19.
- ↑ 12.0 12.1 "Basic Data / Statistics". Center for Orang Asli Concerns. Archived from the original on 2020-10-29. பார்க்கப்பட்ட நாள் 2018-01-19.
- ↑ Alberto Gomes (2004). Modernity and Malaysia: Settling the Menraq Forest Nomads. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-11-341-0076-7.
வெளி இணைப்புகள்
தொகு- http://projekt.ht.lu.se/rwaai RWAAI (Repository and Workspace for Austroasiatic Intangible Heritage)