செனோய் மக்கள்

இந்தியாவின் ஒடிசாவில் உள்ள சிங்கோயில் இருந்து வந்த இனக்குழு

செனோய் அல்லது செனோய் மக்கள் (ஆங்கிலம்: Senoi; Senoi People; Sengoi; Sng'oi); மலாய்: Orang Senoi) என்பவர்கள் மலேசியப் பழங்குடியினரின் முப்பெரும் பிரிவுகளில் ஒரு பிரிவினர் ஆகும். இவர்கள் தீபகற்ப மலேசியாவின் மத்திய பகுதியான பகாங், சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களில் வாழ்கின்றனர்.[3]

செனோய் மக்கள்
Senoi People Orang Senoi
Sengoi / Sng'oi / Mai Darat
தெற்கு பேராக்கில் செனோய் மக்கள், 1906.
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 மலேசியா
தீபகற்ப மலேசியா[1]
மொழி(கள்)
செனோய மொழிகள் செமாய் மொழி தெமியார் மொழி; தெற்கு அசிலியான் மொழிகள்; செமாக் பெரி மொழி, மா மெரி மொழி, செமலாய் மொழி, தெமோக் மொழி, செக் ஓங் மொழி, ஜகுட் மொழி, மலாய் மொழி, ஆங்கிலம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
ஒராங் அஸ்லி செமாங் மக்கள் லானோ மக்கள், ஜெகாய் மக்கள், பாத்தேக் மக்கள், மலாய மூதாதையர் செமலாய் மக்கள், தெமோக் மக்கள்[2]

மலேசியப் பழங்குடியினர் மக்களில், அதிக எண்ணிக்கையிலான இவர்கள் மற்றும் மலாய் தீபகற்பம் முழுவதும் பரவலாகக் காணப் படுகின்றனர். ஆசுத்ரோ-ஆசிய மொழிகள் குடும்பத்தின் அசுலியான் மொழிகளில் உள்ள மொழிகளில், பல மொழிகளை செனோய் மக்கள் பேசுகிறார்கள்.

மலேசியப் பழங்குடியினர் தகுதி

தொகு

மலேசிய அரசாங்கம், தீபகற்ப மலேசியாவின் பூர்வீகப் பழங்குடியினரை ஓராங் அஸ்லி (Orang Asli) என்று வகைப்படுத்துகிறது. மலேசிய பழங்குடியினர் மேம்பாட்டு துறையின் (மலாய்: Jabatan Kemajuan Orang Asli (JAKOA); ஆங்கிலம்: Department of Orang Asli Development); கீழ் சிறப்புரிமை பெற்ற 18 பழங்குடி இனக்குழுவினர் உள்ளனர். மொழி, கலாசார அடிப்படையில் அவர்களை மூன்று பெரும் பிரிவுகளாக மலேசிய அரசாங்கம் பிரித்துள்ளது.[4][5]

  1. செமாங் மக்கள் (Semang) அல்லது (Negrito)
  2. செனோய் மக்கள் (Senoi) அல்லது (Sakai)
  3. மலாய மூதாதையர் (Proto-Malay) அல்லது (Aboriginal Malay)

மூன்று இனக் குழுப் பிரிவுகள்

தொகு

மலேசியப் பழங்குடியினரின் மூன்று இனக் குழுப் பிரிவுகள், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரித்தானிய மலாயா காலனித்துவவாதிகளால் உருவாக்கப்பட்டது. மொழி, தோற்றம், உடல் பண்புகள்; மற்றும் அவர்களின் பாரம்பரிய பொருளாதாரக் கட்டமைப்பு போன்றவற்றில் மூன்று இனக் குழுக்களும் வேறுபடுகின்றன.

  • நெகிரிடோ எனும் செமாங் மக்கள் குள்ளமானவர்கள்; கருமைத் தோற்றம்; சுருள் முடிகொண்டவர்கள். இவர்கள் மிகவும் பழைமையான இனமாகக் கருதப்பட்டனர்.
  • செனோய் மக்கள் உயரமானவர்கள்; இலகுவான தோல்; அலை அலையான கருப்பு முடி கொண்டவர்கள்.
  • மலாய மூதாதையர் எனும் பழங்குடி மக்கள் உயரமானவர்கள்; அழகான தோல்; நேரான முடி கொண்டவர்கள்.

மக்கள் தொகை

தொகு

தீபகற்ப மலேசியாவில் மாநில வாரியாக செனோய் மக்களின் பரம்பல் (மலேசிய பழங்குடியினர் மேம்பாட்டு துறை, 1996 மக்கள் தொகை கணக்கெடுப்பு):-[6][7])

பேராக் கிளாந்தான் திராங்கானு பகாங் சிலாங்கூர் நெகிரி செம்பிலான் மலாக்கா ஜொகூர் மொத்தம்
செமாய் மக்கள் 16,299 91 9,040 619 26,049
தெமியார் மக்கள் 8,779 5,994 116 227 6 15,122
ஜாகுட் மக்கள் 3,150 38 5 3,193
செக் ஓங் மக்கள் 4 381 12 6 403
மா மெரி மக்கள் 2,162 12 7 4 2,185
செமாக் பெரி மக்கள் 451 2,037 2,488
செமலாய் மக்கள் 2,491 135 1,460 6 11 4,103
மொத்தம் 25,082 6,085 451 17,215 3,193 1,483 13 21 53,543

மேற்கோள்கள்

தொகு
  1. "POPULATION STATISTICS"
  2. Kirk Endicott (2015). Malaysia's Original People: Past, Present and Future of the Orang Asli. NUS Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-99-716-9861-4.
  3. Salma Nasution Khoo & Abdur-Razzaq Lubis (2005). Kinta Valley: Pioneering Malaysia's Modern Development. Areca Books. p. 355. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-98-342-1130-1.
  4. "Suku Kaum". Laman Web Rasmi Jabatan Kemajuan Orang Asli. பார்க்கப்பட்ட நாள் 2022-07-23.
  5. Alan G. Fix (2015). Kirk Endicott (ed.). 'Do They Represent a "Relict Population" Surviving from the Initial Dispersal of Modern Humans from Africa?' from Malaysia's "Original People". NUS Press. pp. 101–122. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-99-716-9861-4.
  6. Nobuta Toshihiro (2009). Living On The Periphery: Development and Islamization Among the Orang Asli in Malaysia (PDF). Center for Orang Asli Concerns, Subang Jaya, Malaysia, 2009. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-983-43248-4-1. பார்க்கப்பட்ட நாள் 2020-08-04.
  7. Tarmiji Masron, Fujimaki Masami & Norhasimah Ismail (October 2013). "Orang Asli in Peninsular Malaysia: Population, Spatial Distribution and Socio-Economic Condition" (PDF). Journal of Ritsumeikan Social Sciences and Humanities Vol.6. பார்க்கப்பட்ட நாள் 2020-09-07.

நூல்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Senoi people
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செனோய்_மக்கள்&oldid=4090274" இலிருந்து மீள்விக்கப்பட்டது