செக் ஓங் மக்கள்

மலேசியாவின் பழங்குடி மக்கள்

செக் ஓங் அல்லது செக் ஓங் மக்கள் (ஆங்கிலம்: Cheq Wong people; மலாய்: Orang Cheq Wong) என்பவர்கள் தீபகற்ப மலேசியாவின் ஒராங் அஸ்லி இனக்குழுவைச் சேர்ந்தவர்கள்; பகாங் மாநிலத்தை மையமாகக் கொண்ட செனோய் மக்கள் ஆவார்கள்.

செக் ஓங் மக்கள்
Cheq Wong people
Orang Cheq Wong
Cheqwong / Chewong / Che' Wong / Ceq Wong
Si Wong / Siwong / Siwang / Beri / Chuba / Cewong
பகாங் குராவ் வனவிலங்கு காப்பகத்தில் குழந்தையுடன் ஒரு செக் ஓங் மனிதர்.
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 மலேசியா:
பகாங்818 (2010)[1]
மொழி(கள்)
செக் ஓங் மொழி, மலாய் மொழி
சமயங்கள்
ஆன்மவாதம்,இசுலாம், கிறிஸ்தவம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
ஜெகாய மொழிகள் பேசுவோர்
மலேசியப் பழங்குடியினர்
செனோய் மக்கள்
தீபகற்ப மலேசியாவில் செக் வோங் மக்கள் வசிக்கும் இடத்தை பச்சை நிறம் குறிக்கிறது.

செனோய் மக்களின் உடல் தோற்றத்தைக் கொண்டிருந்தாலும், அவர்கள் பேசும் செக் ஓங் மொழி என்பது வடக்கு அசிலியான் மொழிகளுடன் நெருங்கிய தொடர்புடையது.[2]

பொது

தொகு

செக் ஓங் மொழி என்பது வடக்கு அசிலியான் மொழிகளின் ஒரு பகுதியாகும்.[3] செக் ஓங் மக்களும்; கென்சியூ பழங்குடி மக்களும் தொலை தூரங்களில் வாழ்ந்தாலும், கென்சியூ மொழியில் இருந்து 4% சொற்கள், செக் ஓங் மொழிக்குள் கடன் வாங்கப்படு உள்ளன.[4]

செக் ஓங் மக்களில் பலர், தித்திவாங்சா மலைத்தொடர் மழைக்காடுகளின் விளிம்புகளில் வாழ்கின்றனர். இருப்பினும் இந்த மக்களில் பலர் பகாங் ரவுப் மாவட்டத்தில் அதிகமாக வாழ்கின்றனர்.

குடியிருப்புப் பகுதிகள் பாதிப்பு

தொகு

செக் ஓங் மக்கள் முன்பு தீபகற்ப மலேசியா, பகாங் மாநிலத்தின், இரண்டு பகுதிகளில் மட்டுமே காணப்பட்டனர். அதாவது குராவ் வனவிலங்கு காப்பகம்; மற்றும் பகாங்கில் உள்ள ரவுப் மாவட்டம்.[5] இருப்பினும் தற்போது தெமர்லோ மற்றும் பகாங்கில் உள்ள ஜெராண்டுட் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளிலும் காணப் படுகின்றனர்.[6][7]

அண்மைய மேம்பாட்டுத் திட்டங்களினால், செக் ஓங் மக்களின் குடியிருப்புப் பகுதிகள் பாதிப்பு அடைந்துள்ளன. காட்டு மரம் வெட்டுதல், சாலைகள் அமைத்தல் மற்றும் சுற்றுலாவுக்கான கோலா கண்டா யானைகள் பாதுகாப்பு மையம் போன்ற செயல்பாடுகளினால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.[1] இந்தச் செயல்பாடுகளினால், செக் ஓங் மக்களின் சில குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளப் பெருக்குகள் ஏற்படுகின்றன; ஆறுகளும் மாசுபடுவதற்கு வழிவகுக்கின்றன.[8]

செக் ஓங் மக்கள் தொகை

தொகு

மலேசியாவில் செக் ஓங் மக்கள் தொகை (2010):-

ஆண்டு 1960[9] 1965[9] 1969[9] 1974[9] 1980[9] 1982[5] 1996[9] 2000 2003 2004[10] 2010[1]
மக்கள் தொகை 182 268 272 215 203 250 403 234 664 564 818

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Kirk Endicott (2015). Malaysia's Original People: Past, Present and Future of the Orang Asli. NUS Press. p. 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-99-716-9861-4.
  2. Signe Howell (1984). Society and Cosmos: Chewong of Peninsular Malaysia. Oxford University Press. p. 6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 01-958-2543-8.
  3. Đăng Liêm Nguyêñ (1974). South-East Asian Linguistic Studies, Volume 2. Department of Linguistics, Research School of Pacific Studies, Australian National University. p. 82. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 08-588-3143-0.
  4. Signe Howell (1984). Society and Cosmos: Chewong of Peninsular Malaysia. Oxford University Press. p. 8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 01-958-2543-8.
  5. 5.0 5.1 Signe Howell (1982). Chewong Myths and Legends. Council of the M.B.R.A.S. p. xiii.
  6. Tarmiji Masron, Fujimaki Masami & Norhasimah Ismail (October 2013). "Orang Asli in Peninsular Malaysia: Population, Spatial Distribution and Socio-Economic Condition" (PDF). Journal of Ritsumeikan Social Sciences and Humanities Vol.6. பார்க்கப்பட்ட நாள் 2017-11-20.
  7. Project, Joshua. "Che Wong, Siwang in Malaysia". joshuaproject.net (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 12 September 2024.
  8. "High time to say 'tidak boleh'". The Star. 13 May 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-11-20.
  9. 9.0 9.1 9.2 9.3 9.4 9.5 Nobuta Toshihiro (2009). "Living On The Periphery: Development and Islamization Among Orang Asli in Malaysia" (PDF). Center for Orang Asli Concerns. பார்க்கப்பட்ட நாள் 2017-10-27.
  10. Alberto Gomes (2004). Modernity and Malaysia: Settling the Menraq Forest Nomads. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 11-341-0076-0.

சான்று நூல்கள்

தொகு

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=செக்_ஓங்_மக்கள்&oldid=4090658" இலிருந்து மீள்விக்கப்பட்டது