மென்டிரிக் மக்கள்

மலேசியாவின் பழங்குடி இனக்குழு

மென்டிரிக் அல்லது மென்டிரிக் மக்கள் (ஆங்கிலம்: Mendriq people; மலாய்: Orang Mendriq) என்பவர்கள் செமாங் மக்கள் இனக்குழுவில் நெகிரிட்டோ மக்கள் என மலேசிய அரசாங்கத்தால் வகைப்படுத்தப்பட்ட குழுவினர் ஆவார்கள். இவர்களில் பெரும்பாலோர் தீபகற்ப மலேசியாவின் கிளாந்தான் மாநிலத்தில் வாழ்கின்றனர். இவர்களின் எண்ணிக்கை 380 ஆகும்.[1]

மென்டிரிக் மக்கள்
Mendriq people Orang Mendriq
Minriq Orang Asli
கிளாந்தான் குவா மூசாங் பகுதியில் அரசாங்கத்தின் மீள்குடியேற்றத் திட்டப் பள்ளியில் மென்டிரிக் பிள்ளைகள்
மொத்த மக்கள்தொகை
380 (2024)[1]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 மலேசியா
கிளாந்தான்
குவா மூசாங் மாவட்டம்
மொழி(கள்)
மென்டிரிக் மொழி மலாய் மொழி
சமயங்கள்
பாரம்பரிய சமயம்[2]
தொடர்புள்ள இனக்குழுக்கள்
நெகிரிட்டோ மக்கள் பப்புவா நியூ கினி பழங்குடிகள்

கிளாந்தான் மாநிலத்தில் மூன்று பகுதிகளில் மட்டுமே இவர்களைக் காண முடியும். கிளாந்தான் குவா மூசாங் மாவட்டத்தில் உள்ள கம்போங் கோலா லா கிராமம்; கோலா கிராய் கம்போங் பாசிர் லிங்கி கிராமம்; மற்றும் கம்போங் சுங்கை தாக்கோ கிராமம்; ஆகிய கிராமங்களில் மட்டுமே இவர்களைக் காண முடிகிறது. பெரும்பாலோர், ஏறக்குறைய 300 பேர், கம்போங் கோலா லா கிராமத்தில் வசிக்கின்றனர்.[3][4]

பொது

தொகு
 
மென்டிரிக் மக்களின் குடிசை
 
மென்டிரிக் குடிசையின் உட்பகுதி
 
மலேசிய அரசு கட்டிக் கொடுத்த வீட்டின் முன் ஒரு மென்டிரிக் பெண்மணி
 
மலேசிய அரசு மென்டிரிக் மக்களுக்கு அறிமுகம் செய்துள்ள வேளாண் திட்டம்

மலாய் தீபகற்பத்தில் குடியேறிய முதல் இனக் குழுக்களில் மென்டிரிக் குழுவினரும் ஒரு குழுவினர் என நம்பப்படுகிறது. நெகிரிட்டோவைப் போலவே, இவர்கள் பெரும்பாலும் கருமையான சருமம் மற்றும் கருமை முடி உடையவர்கள்; இவர்களின் உடல் அமைப்புகள் பப்புவா நியூ கினி அல்லது கிழக்கு ஆப்பிரிக்க மக்களை ஒத்திருக்கும். இவர்கள் பொதுவாக மற்ற மலேசியர்களை விட உயரம் குறைவானவர்கள்.

மென்டிரிக் மக்கள் நாடோடிகளாக வாழ்ந்தனர். ஆனாலும் மீள்குடியேற்றத் திட்டங்களால் பலர் கிளாந்தான் குவா மூசாங் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓராங் அஸ்லி குடியிருப்புகளில் நிரந்தரமாகக் குடியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அரசாங்கத்தின் மீள்குடியேற்றத் திட்டங்கள்

தொகு

கடந்த காலத்தில், காட்டின் பருவகால பழ அறுவடையைப் பயன்படுத்திக் கொண்டனர். அதற்காக ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு இடம்பெயர்ந்தனர். பழங்களைச் சேகரிப்பதைத் தவிர, அவர்களின் உணவுக்காகக் காட்டு விலங்குகளையும் வேட்டையாடினர்; மற்றும் மருத்துவப் பயன்பாட்டிற்காக வனப் பொருட்களையும் சேகரித்தனர்.

அரசாங்கத்தின் மீள்குடியேற்றத் திட்டங்கள், மென்டிரிக் மக்களின் அடையாளத்தையும்; வரலாற்றையும்; மற்றும் அவர்களின் பொருளாதார பாதுகாப்பையும் பறித்துவிட்டன. பாரம்பரிய வனப் பகுதிகளை இழந்த மென்டிரிக் மக்கள் வறுமைக் கோட்டில் சிக்கிக் கொண்டனர்.

உடலுழைப்பு வேலைகள்

தொகு

தற்போது, ​​உடனடியாகப் பணயுதவி செய்யும் வணிகப் பயிர்களைப் பயிரிடுகின்றனர். ஆனால் விளைபொருட்களின் போட்டி விலைகளின் காரணமாக, உணவு மற்றும் இதர தேவைகளுக்குப் போதுமான பணம் சம்பாதிக்க முடியாமல் தவிக்கின்றனர். இவர்கள் மீள்குடியேற்றக் குடிருப்புக்களில் குடியேறுவதை எதிர்க்கின்றனர்.[1]

பெரும்பாலான மென்டிரிக் மக்கள் மற்ற வேலைகளுக்குத் தேவையான கல்வி மற்றும் திறன்களைக் கொண்டிருக்கவில்லை. அதனால் பெரும்பாலும் உடலுழைப்பு வேலைகளில் ஈடுபடுகிறார்கள். அத்துடன், உணவுப் பொருட்கள் கிடைக்காத போதெல்லாம், உடலுழைப்பு வேலைகளை நிறுத்திவிட்டு, வனப்பகுதிக்குள் தீவனம் தேடவும், வனப் பொருட்களைச் சேகரிக்கவும் போய்விடுகிறார்கள்.

மென்டிரிக் பூஜா பந்தாங் டசங்கு

தொகு

மென்டிரிக் மக்கள் அனைவருமே ஆன்மவாதிகள். காட்டின் இயற்கைச் சக்திகளுக்கு தங்களை உட்படுத்திக் கொள்கிறார்கள். இறந்த மூதாதையர்கள் மற்றும் வேட்டையாடப்பட்ட விலங்குகளின் ஆவிகள் அவர்களைத் துன்புறுத்தும் என பயப்படுகிறார்கள்.

ஒவ்வொரு சனவரி மாதமும் மென்டிரிக் பூஜா பந்தாங் (Puja Pantang) என்ற மர்மமான சடங்கை நடத்துகிறார்கள். மூன்று நாள் சடங்கின் போது தினசரி வழக்கமான நடவடிக்கைகளை நிறுத்தி விடுகிறார்கள்.

அந்தக் காலக் கட்டத்தில் வெளியாட்கள் எவரும் மென்டிரிக் குடியிருப்புகளுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவது இல்லை. இதன் விளைவாக, இந்தச் சடங்கின் துல்லியமான தன்மைகள் வெளியுலக மக்களுக்குத் தெரியவில்லை.[1]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Project, Joshua. "Mendriq in Malaysia". joshuaproject.net (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 14 September 2024.
  2. "PeopleGroups.org - Mendriq of Malaysia". peoplegroups.org. பார்க்கப்பட்ட நாள் 14 September 2024.
  3. "- Mendriq Orang Asli Language Facing Extinction. The Mendriq can only be found in three areas in Kelantan – Kampung Kuala Lah in Gua Musang, and Kg Pasir Linggi and Sungai Tako in Kuala Krai – with the majority of them (380) living in Kg Kuala Lah". bextra (in ஆங்கிலம்). 26 June 2023. பார்க்கப்பட்ட நாள் 14 September 2024.
  4. "Efforts underway to save Mendriq language from extinction | New Straits Times". NST Online (in ஆங்கிலம்). 12 December 2023. பார்க்கப்பட்ட நாள் 14 September 2024.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mendriq people
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மென்டிரிக்_மக்கள்&oldid=4090659" இலிருந்து மீள்விக்கப்பட்டது