கென்சியூ மொழி
கென்சியூ மொழி (ஆங்கிலம்: Kensiu Language; மலாய்: Bahasa Kensiu) என்பது ஆசுத்ரோ-ஆசிய மொழிக் குடும்பத்தின், அசிலியான் மொழிகள்; ஜெகாய மொழிகள் எனும் 2 துணைக் குடும்பங்களைச் சார்ந்த ஒரு மொழியாகும்.[3]
கென்சியூ மொழி Kensiu Language Bahasa Kensiu | |
---|---|
Kenseu, Kensieu, Kensiw, Kense | |
Orang Bukit, Orang Liar | |
நாடு(கள்) | மலேசியா கெடா தாய்லாந்து |
பிராந்தியம் | கெடா பாலிங் மாவட்டம் யாலா மாநிலம், தாய்லாந்து |
இனம் | மானிக் மக்கள் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 259 (2015)[1] |
அவுஸ்திரேலிய
| |
பேச்சு வழக்கு | இஜோ (இஜோக்), ஜரூம், ஜெகர் (தஞ்சோங் தெமோங்கோ சகாய்), கெடா (குவேடா), பிளஸ், உலு செலாமா, கென்சியூ பத்து, கென்சியூ சியோங், கெந்தாக் நக்கில் |
இலத்தீன், தாய்லாந்து எழுத்து | |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | kns |
மொழிக் குறிப்பு | kens1248[2] |
தீபகற்ப மலேசியாவின் பேராக், கெடா, பாலிங் மாவட்டம்; மற்றும் தாய்லாந்தின் யாலா மாவட்டம் ஆகிய பகுதிகளில் காணப்படும் நெகிரிட்டோ மக்கள் குழுவைச் சார்ந்த பழங்குடி மக்களில் 300 பேர் பேசும் மொழியாகும். தாய்லாந்தில் மானிக் மக்களின் முதன்மைமொழியாக அறியப்படுகிறது.[4]
பொது
தொகுதாய்லாந்தில் மானிக் மக்கள் மற்றும் மலேசியாவின் செமாங் மக்கள் தான் மலாய் தீபகற்பத்தில் நுழைந்த முதல் நவீன மனிதர்கள் என்று கூறப்படுகிறது. நெகிரிட்டோவிற்குப் பிறகு, புலம்பெயர்ந்தோரின் அடுத்த அலை மோன் கெமர் மொழிகளைப் பேசுபவர்கள் ஆகும். இவர்கள் பெரும்பாலும் தென்மேற்கு சீனாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள்.[5]
ஆயிரக்கணக்கான ஆண்டுகளில், நெகிரிட்டோ மக்கள் அவர்களின் அசல் மொழிகளை இழந்து விட்டனர். இன்று அவர்களின் அண்டை நாடுகளின் மோன் கெமர் மொழிகளை ஏற்றுக்கொண்டுள்ளனர்.[6][7]
புவியியல் பரவல்
தொகுதாய்லாந்து
தொகுஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர், தெற்கு தாய்லாந்து மற்றும் வடக்கு மலேசியாவில் உள்ள மலைக்காட்டுப் பகுதிகளில் மானிக் மக்கள் குடியேறினர். இதன் வழி அவர்கள் தீபகற்ப மலேசியாவின் அசல் குடிமக்களாகக் கருதப் படுகிறார்கள். தாய்லாந்தில், அவர்கள் பொதுவாக சக்காய், கோன் பா அல்லது என்கோக் பா வன மக்கள் என்று அழைக்கப் படுகிறார்கள்.[5]
தெற்கு தாய்லாந்தில் உள்ள மானிக் மக்கள், நராத்திவாட் மாநிலம், யாலா மாநிலம் ஆகிய மாநிலங்களிலும்; பன்டாட் மலைத் தொடரைச் சார்ந்த திராங் மாநிலம், பாத்தாலுங் மாநிலம் ஆகிய மாநிலங்களின் வாழ்கின்றனர்.[5]
மலேசியா
தொகுமலேசியாவில், மானிக் மக்கள் வடக்கு கெடாவிற்கும் தாய்லாந்தின் எல்லைகளுக்கும் இடையில் அமைந்துள்ள பகுதிகளில் காணப்படுகின்றனர். இருப்பினும், அவர்கள் 1965-ஆம் ஆண்டு முதல் கெடாவின் பாலிங் அருகே உள்ள கிராமங்களில் குடியேறி வருகின்றனர்.[8]
மானிக் மக்கள் தெற்கு கெடாவில் காணப்படுவதாகவும் செய்திகள் உள்ளன. 1969-ஆம் ஆண்டில், கெடாவில் மட்டும் 98 மானிக் மக்கள் வாழ்வதாகத் தெரிய வருகிறது. தற்போது தாய்லாந்தில் மொத்தம் 200 மானிக் மக்களும் மலேசியாவில் சுமார் 2500 பேரும் உள்ளனர். மானிக் மக்கள் பின்பற்றி வரும் நாடோடி வாழ்க்கை முறையின் காரணமாக அவர்களின் எண்ணிக்கையை மிகச் சரியாக கண்டறிய முடியவில்லை.[5]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Kensiu". Ethnologue (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-07-25.
- ↑ Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Kensiu". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
- ↑ "Language previously unknown to linguists discovered in Southeast Asia". ScienceDaily. 6 February 2018. பார்க்கப்பட்ட நாள் 10 February 2018.
- ↑ Bishop, Nancy (1996). "A Preliminary Description of Kensiu (Maniq) Phonology" (in en). Mon–Khmer Studies Journal 25: 227–253. http://sealang.net/archives/mks/pdf/25:227-253.pdf.
- ↑ 5.0 5.1 5.2 5.3 Bishop, Nancy M.; Peterson, Mary M. (2002). "The Kensiu (Maniq) People" (PDF). In TU-SIL-LRDP Committee (ed.). Minority Language Orthography in Thailand: Five Case Studies (in ஆங்கிலம்). Bangkok: TU-SIL-LRDP Committee. pp. 53–68. Archived from the original (PDF) on 2022-02-13. பார்க்கப்பட்ட நாள் 2010-11-17.
- ↑ "The Negrito of Thailand: The Mani" (in ஆங்கிலம்). Archived from the original on 2013-05-20 – via andaman.org.
- ↑ Phaiboon, Duangchand (2006). "Glossary of Aslian Languages: The Northern Aslian Languages of Southern Thailand" (in en). Mon-Khmer Studies 36: 207–224. http://sealang.net/sala/archives/pdf8/phaiboon2006glossary.pdf.
- ↑ "Did you know Kensiu is endangered?". Endangered Languages (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 14 September 2024.
மேலும் படிக்க
தொகு- Bishop, Nancy (1996b). "Who's Who in Kensiw? Terms of Reference and Address in Kensiw" (in en). Mon–Khmer Studies 26: 245–253. http://sealang.net/sala/archives/pdf8/bishop1996who.pdf.
- Miyake, Marc (2014). "Kensiu". amritas.com (in ஆங்கிலம்).
- Wnuk, Ewelina (2016). Semantic Specificity of Perception Verbs in Maniq (Doctor's thesis) (in ஆங்கிலம்). Radboud Universiteit Nijmegen – via pure.mpg.de.
வெளி இணைப்புகள்
தொகுசொற்கள் மற்றும் சொல் பட்டியல்கள்
- SEAlang Mon–Khmer Languages Project
- Health Glossary List (from the Rosetta Project)
- Kensiu Swadesh List
- http://projekt.ht.lu.se/rwaai RWAAI (Repository and Workspace for Austroasiatic Intangible Heritage)
- http://hdl.handle.net/10050/00-0000-0000-0003-D444-6@view Kensiu in RWAAI Digital Archive