தென்மேற்கு சீனா
தென்மேற்கு சீனா (Southwestern China, சீனம்: 西南; பின்யின்: Xīnán) என்பது சீனாவின் தென்பகுதி நிலங்களைக் குறிக்கிறது. இப்பகுதியான் மேற்குப்புறத்தில் கடலோர மலைகள் (东南丘陵) சூழ்ந்து உள்ளன. மறுபுறம் திபெத்திய பீடபூமி உள்ளது. இவ்வாறு வேறுபட்ட நிலப்பகுதிகளால் கரடுமுரடாகவும், வேறுபட்டும் உள்ள நிலப்பகுதிகளைக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, இந்நிலத்தின் கிழக்குப்புறம் சுண்ணாம்புக் கரடாலான யுன்னான்-குய்சோ உயர்நிலம் உள்ளது. இந்நிலத்தின் பெரும்பகுதி யாங்சி ஆறு ஓடி, மூன்று ஆழ்பள்ளத்தாக்குகளை, இதன் வடகிழக்கு பகுதியில் உருவாக்கியுள்ளது.[3] இப்பகுதிகளில் சிலவற்றை 230 பொது ஊழி காலத்தில் சின் அரசமரபு பேரரசர் சின் சி ஹுவாங் இணைத்துக் கொண்டார்.[4]
தென்மேற்கு சீனா | |
---|---|
சீன அரசு வரையறுத்த தென்மேற்கு எல்லைப்பகுதிகள்( சோங்கிங், சிச்சுவான், குயிசூ, யுன்னான், திபெத்து) (சிவப்பு):சீனக்கட்டுக்குள்ளான பகுதிகள் ;(இளஞ்சிவப்பு): இந்திய-சீன எல்லைப் பிணக்குகள் | |
நாடு | சீனா |
பரப்பளவு | |
• மொத்தம் | 23,65,900 km2 (9,13,500 sq mi) |
மக்கள்தொகை | 19,29,79,243 |
• அடர்த்தி | 82/km2 (210/sq mi) |
GDP | 2022[2] |
- மொத்தம் | ¥13.713 trillion $2.039 trillion |
- Per Capita | ¥71,060 $10,565 |
இவ்வாறு வேறுபட்ட நிலப்பகுதிகளில் வாழும் மக்களிடையேயும், வேறுபடும் தனித்துவ சமூக பழக்க வழக்கங்கள் காணப்படுகின்றன.[5] 1970 பிறகு இங்குள்ள கிராம மக்களிடம் வேகமான வளர்ச்சி காணப்படுகிறது. இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் முற்பகுதிகளில், சீன நாட்டின் சீனாவின் இனவழிச் சிறுபான்மையினர் 50% வாழ்கின்றனர்.[5] இப்பகுதி மக்கள் தனித்துவமான தென்மேற்குமாண்டரின் மொழி என்பதைப் பேசுகின்றனர்.[6]
இவற்றையும் காணவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "ஏழாம் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதன்மைத் தரவு". சீன புள்ளியியல் முகமை. Archived from the original on May 11, 2021.
- ↑ GDP-2022 is a preliminary data China NBS. "Home - Regional - Quarterly by Province". செய்திக் குறிப்பு.
- ↑ Atlas of China. Beijing, China: SinoMaps Press. 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9787503141782.
- ↑ Singh, Swaran (2016). "China Engages Its Southwest Frontier". The new great game : China and South and Central Asia in the era of reform. Thomas Fingar. Stanford, California: Stanford University Press. p. 167. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8047-9764-1. இணையக் கணினி நூலக மைய எண் 939553543.
- ↑ 5.0 5.1 China's Southwest (3rd ed.). Lonely Planet. 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1741041859.
- ↑ Chinese Academy of Social Sciences (2012). Zhōngguó yǔyán dìtú jí (dì 2 bǎn): Hànyǔ fāngyán juǎn 中国语言地图集(第2版):汉语方言卷 [Language Atlas of China (2nd edition): Chinese dialect volume] (in சீனம்). Beijing: The Commercial Press. p. 3.