செமாய் மொழி

தீபகற்ப மலேசியாவில் பழங்குடியினர் மொழி

செமாய் மொழி (ஆங்கிலம்: Semai Language; மலாய்: Bahasa Semai;) என்பது ஆசுத்ரோ-ஆசிய மொழிக் குடும்பத்தின் மோன்-குமேர் மொழிகள்; அசிலியான் மொழிகள்; செனோய மொழிகள் துணைக் குடும்பங்களைச் சார்ந்த ஒரு மொழியாகும். அழிந்து போகாத சில அசிலியான் மொழிகள் இதுவும் ஒன்றாகும்.[3]

செமாய் மொழி
Semai Language
engrok Semai
நாடு(கள்)தீபகற்ப மலேசியா
பிராந்தியம் பேராக், பகாங்
இனம்செமாய் மக்கள்[1]
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
60,438  (2020)
ஆஸ்திரோனீசிய
இலத்தீன் எழுத்துகள்
மொழிக் குறியீடுகள்
ISO 639-3sea
மொழிக் குறிப்புsema1266[2]

தீபகற்ப மலேசியாவின் பேராக், பகாங் மாநிலங்களில் இந்த மொழி பரவலாகப் பேசப்படுகிறது. மேலும், மலேசியாவின் பேராக், பகாங் மாநிலங்களில் உள்ள 17 தொடக்க நிலைப்பள்ளிகளிலும் இந்த மொழி பயிற்றுவிக்கப்படுகிறது.

பேராக் மாநிலத்தின் தாப்பா நகரில் செரி தாப்பா உயர்நிலப்பள்ளியிலும் (Sekolah Menengah Kebangsaan Sri Tapah) செமாய் மொழி பயிற்றுவிக்கப்படுகிறது.[4]

பொது

தொகு
 
செமாய் மொழி விக்கிப்பீடியாவை மேம்படுத்தும் பட்டறை 11 சூலை 2023 அன்று பேராக் ஈப்போவில் நடைபெற்றது.

செமாய் மொழி எழுத்து முறை கொண்ட மொழி அல்ல. எழுத்து மொழியாக இல்லாததாலும், செமாய் மக்கள் அனைவரும் செமாய் மொழியைப் பேசாததாலும்; எதிர்க்காலத்தில் அந்த மொழி அழிவை எதிர்கொள்ளலாம் என்றும் அறியப்படுகிறது.

பொருளாதார வளர்ச்சி, கல்வி வளர்ச்சி மற்றும் நகரமயமாக்கலின் வளர்ச்சி போன்ற பல அம்சங்களில் செமாய் மக்களின் வாழ்க்கை முறைகளும் அணுகுமுறைகளும் பாதிப்பு அடைந்துள்ளன. அதனால் அவர்களின் சொந்த மொழியும் பாதிப்பு அடைந்துள்ளது. பள்ளிகளில், செமாய் இளைய தலைமுறையினர் மலேசிய மொழி மற்றும் ஆங்கிலம் போன்ற பெரும்பான்மை மொழிகளைக் கற்றுக்கொள்கிறார்கள்.[5]

செமாய் மொழி முக்கிய மொழி அல்ல என செமாய் மக்களில் சிலர் கருதுகிறார்கள். அத்துடன் இன்றைய செமாய் இளைஞர்களில் சிலர், தங்களின் தாய்மொழியில் பேசுவதைத் தாழ்வாகவும் நினைக்கிறார்கள்.

ஊடகம்

தொகு

அஸ்லி (Asli) (2017), டேவிட் லீவ் என்பவர் இயக்கிய திரைப்படம். செமாய் பெண்மணி ஒருவர், தன் கலாசாரப் பாரம்பரியத்தைக் கண்டறியும் பாதையில் பயணிப்பதை விவரிக்கும் திரைப்படம்.

உரையாடல்களில் 50 விழுக்காடு, செமாய் மொழியைப் பயன்படுத்திய முதல் மலேசியத் திரைப்படமாகும். [6][7]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Basic Data / Statistics". JAKOA. பார்க்கப்பட்ட நாள் 2022-10-30.
  2. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Semai". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
  3. "Semai language". www.britannica.com (in ஆங்கிலம்). 13 August 2024. பார்க்கப்பட்ட நாள் 8 September 2024.
  4. "Did you know Semai is vulnerable?". Endangered Languages (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 8 September 2024.
  5. "Language maintenance and shift in one Semai community in Peninsular Malaysia - ProQuest". www.proquest.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 8 September 2024.
  6. "Asli". Cinema Online (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 3 February 2021.
  7. Loh, Ivan (19 October 2017). "Semai Dialogue a First in Local Film". The Star. பார்க்கப்பட்ட நாள் 3 February 2021.

மேலும் படிக்க

தொகு
  • Diffloth, Gerard. 1976a. Minor-Syllable Vocalism in Senoic Languages. In Philip N. Lenner, Laurence C. Thompson, and Stanley Starosta (eds.), Austroasiatic Studies, Part I, 229–247. Honolulu: The University of Hawaii Press.
  • Diffloth, Gerard. 1976b. Expressives in Semai. In Philip N. Lenner, Laurence C. Thompson, and Stanley Starosta (eds.), Austroasiatic Studies, Part I, 249–264. Honolulu: The University of Hawaii Press.
  • Hendricks, Sean. 2001. Bare-Consonant Reduplication Without Prosodic Templates: Expressive Reduplication in Semai. Journal of East Asian Linguistics 10: 287–306.
  • Phillips, Timothy C. 2013. Linguistic Comparison of Semai Dialects. SIL Electronic Survey Reports 2013-010: 1–111.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=செமாய்_மொழி&oldid=4087249" இலிருந்து மீள்விக்கப்பட்டது