தெமியார் மொழி
தெமியார் மொழி (ஆங்கிலம்: Temiar Language; மலாய்: Bahasa Temiar) என்பது ஆசுத்ரோ-ஆசிய மொழிக் குடும்பத்தின்], அசிலியான் மொழிகள்; செனோய மொழிகள் எனும் 2 துணைக் குடும்பங்களைச் சார்ந்த ஒரு மொழியாகும்.
தெமியார் மொழி Temiar Language Bahasa Temiar | |
---|---|
Orang Asli | |
நாடு(கள்) | மலேசியா |
பிராந்தியம் | பேராக், கிளாந்தான், பகாங், சிலாங்கூர், நெகிரி செம்பிலான் |
இனம் | 24,900 (2008) |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 30,000 (2020)e25 |
அவுஸ்திரேலிய
| |
இலத்தீன்; ரூமி | |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | tea |
மொழிக் குறிப்பு | temi1246[1] |
இந்த மொழி மோன்-கெமர் மொழியின் (Mon–Khmer Language) வழித்தோன்றல் மொழிகளில் ஒன்றாகும்.[2]
தெமியார் மொழி, செனோய மொழிகளின் குடும்பத்தைச் சேர்ந்த மொழி. தெமியார் மக்களின் (Temiar people) முதனமை மொழியாகப் பேசப்படுகிறது. தெமியார் மக்களில் பலர், தித்திவாங்சா மலைத்தொடர் மழைக்காடுகளின் விளிம்புகளில் வாழ்கின்றனர். இந்த மக்களில் பலர் கேமரன் மலை அடிவாரங்களில் அதிகமாக வாழ்கின்றனர்; சிலர் சிம்மோர், கம்பார்; தாப்பா, பீடோர் நகரங்களிலும் வாழ்கின்றனர்.
பொது
தொகுசொற்பிறப்பியல் ரீதியாக, தெமியார் என்ற சொல்லுக்கு விளிம்பு அல்லது அடிவாரம் என்று பொருள். இதன் வழி தெமியார் மக்கள் காடுகளின் விளிம்பில் வாழும் மக்கள் என்று விவரிக்கும் ஒரு தன்மை பிரதிபலிக்கப்படுகிறது.[3]
தெமியார் மொழி, மலேசியா, பேராக், கிளாந்தான், பகாங், சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களில் 30,000 மக்களால் பேசப்படுகிறது. தெமியார் மக்கள் மிக அதிகமாக பேராக் மாநிலத்தில் வாழ்கிறார்கள்.[4]
மலேசியப் பழங்குடியினர் இனங்களில் உள்ள அனைவராலும் இந்த மொழிதான் முதல் மொழியாகப் பயன்படுத்தப்படுகிறது.[5]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Temiar". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
- ↑ Benjamin, Geoffrey (November 2013). "Aesthetic elements in Temiar grammar". In Williams, Jeffrey P (ed.). The Aesthetics of Grammar: Sound and Meaning in the Languages of Mainland Southeast Asia. pp. 36–60. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1017/CBO9781139030489.004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781139030489. பார்க்கப்பட்ட நாள் 2019-10-14.
- ↑ Benjamin, Geoffrey (2012). "The Peculiar History of the Ethnonym "Temiar"". Journal of Social Issues in Southeast Asia 27 (2): 205–233. doi:10.1355/sj27-2a.
- ↑ "The Peculiar History of the Ethnonym "Temiar"". Nanyang Technological University. பார்க்கப்பட்ட நாள் 12 September 2024.
- ↑ "The language is used as a first language by all in the ethnic community". Ethnologue. பார்க்கப்பட்ட நாள் 12 September 2024.
மேலும் படிக்க
தொகு- Benjamin, Geoffrey. 2011. "Deponent verbs and middle-voice nouns in Temiar." In: Sophana Srichampa & Paul Sidwell (eds), Austroasiatic Studies: Papers from ICAAL4 (=Mon-Khmer Studies, Special Issue no. 2), Canberra: Pacific Linguistics E-8, pp. 11–37. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780858836419 (electronic document)
- Benjamin, Geoffrey. 2012. "The Temiar causative (and related features) பரணிடப்பட்டது 2022-01-30 at the வந்தவழி இயந்திரம்." Mon-Khmer Studies 41: 32–45.
பன்னாட்டுத் தர தொடர் எண் 0147-5207 (online).
- Benjamin, Geoffrey. 2014. "Aesthetic elements in Temiar grammar." In: Jeffrey Williams (ed.), The Aesthetics of Grammar: Sound and Meaning in the Languages of Mainland Southeast Asia, Cambridge: Cambridge University Press, pp. 36–60. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781107007123 (print, hard cover), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781107496309 (eBook, 2013). எஆசு:10.1017/CBO9781139030489.004
வெளி இணைப்புகள்
தொகு- http://projekt.ht.lu.se/rwaai RWAAI (Repository and Workspace for Austroasiatic Intangible Heritage)
- http://hdl.handle.net/10050/00-0000-0000-0003-D44A-D@view Temiar in RWAAI Digital Archive