போலந்து படையெடுப்பு

(ஜெர்மனியின் போலந்தியப் படையெடுப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இரண்டாம் உலகப் போரில் போலந்து படையெடுப்பு (Invasion of Poland) அல்லது செப்டெம்பர் போர்த்தொடர் (September Campaign), என்பது நாசி ஜெர்மனி போலந்து மீது படையெடுத்துக் கைப்பற்றிய நிகழ்வைக் குறிக்கும். செப்டம்பர் 1, 1939 இல் தொடங்கிய இப்படையெடுப்பே ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் துவங்கியதைக் குறிக்கிறது. இது ஐரோப்பிய ஐரோப்பிய களத்தின் ஒரு பகுதியாகும். இது போலந்தில் 1939 பாதுகாவல் போர், (போலியம்: Kampania wrześniowa or Wojna obronna 1939 roku) ஜெர்மனியில் போலந்துப் போர்த்தொடர் (இடாய்ச்சு: Polenfeldzug) என்றும் அழைக்கப்படுகிறது.

போலந்து படையெடுப்பு
இரண்டாம் உலகப் போரின் ஐரோப்பிய களத்தின் பகுதி

ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின் துவக்கம்
நாள் 1 செப்டம்பர் – 6 அக்டோபர் 1939
இடம் போலந்து
தெளிவான ஜெர்மானிய, சோவியத் வெற்றி. இரண்டாம் உலகப் போரின் துவக்கம்
நிலப்பகுதி
மாற்றங்கள்
போலந்து ஜெர்மனி, சோவியத் ஒன்றியம், லித்துவேனியா மற்றும் ஸ்லோவாக்கியா ஆக்கிவற்றுக்கிடையே பிரித்துக் கொள்ளப்பட்டது.
பிரிவினர்
 Germany
சிலோவாக்கியா ஸ்லோவாக்கியா

சோவியத் ஒன்றியம் சோவியத் ஒன்றியம் (17 செப்டம்பர் முதல்)

போலந்து போலந்து
தளபதிகள், தலைவர்கள்
நாட்சி ஜெர்மனி ஃபெடோர் வான் போக்
(ஆர்மி குரூப் வடக்கு)

நாட்சி ஜெர்மனி கெர்ட் வான் ரன்ஸ்டெட்
(ஆர்மி குரூப் தெற்கு)

சிலோவாக்கியா பெர்டினாண்ட் காட்லோஸ்
(களப்படை பெர்னோலாக்)


சோவியத் ஒன்றியம் கிளிமெண்ட் வோரோஷிலோவ்
(பெலாருசிய முனை)

சோவியத் ஒன்றியம் மிக்காய்ல் கொவாலேவ்
(பெலாருசிய முனை)

சோவியத் ஒன்றியம் செம்வோன் டிமஷெங்கோ
(உக்ரைனிய முனை)

போலந்து எட்வர்ட் ரைட்ஸ்-ஸ்மிக்லி
பலம்
ஜெர்மனி:
60 டிவிசன்கள்,
6 பிரிகேட்கள்,
9,000 பீரங்கிகள்,[1]
2,750 டாங்குகள்,
2,315 வானூர்திகள்[2]
ஸ்லொவாக்கியா:
3 டிவிசன்கள்

17 செப்டம்பர் முதல்:
சோவியத் ஒன்றியம்:
33+ டிவிசன்கள்,
11+ பிரிகேட்கள்,
4,959 பீரங்கிகள்,
4,736 டாங்குகள்,
3,300 வானூர்திகள்


மொத்தம்:
1,500,000 ஜெர்மானியர்கள்,[1]
466,516 சோவியத்துகள்,[3]
51,306 ஸ்லொவாக்கியர்கள்
ஒட்டு மொத்தம்: 2,000,000+

போலந்து:
39 டிவிசன்கள்[4]
16 பிரிகேட்கள்,[4]
4,300 பீரங்கிகள்,[4]
880 டாங்குகள்,
400 வானூர்திகள்[1]
மொத்தம்: 950,000[Note 1]
இழப்புகள்
ஜெர்மனி:[Note 2]
16,343 மாண்டவர்,
3,500 காணாமல் போனவர்,[11]
30,300 காயமடைந்தவர்
சுலொவாக்கியா:
37 மாண்டவர்,
11 காணாமல் போனவர்,
114 காயமடைந்தவர்[12]

சோவியத் ஒன்றியம்:[Note 3]
1,475 மாண்டவர்/காணவில்லை,
2,383 காயமடைந்தவர்[3]


'மொத்த இழக்ப்புகள்:59,000

Poland:[Note 4]

66,000 மாண்டவர்,
133,700 காயமடைந்தவர்,
694,000 போர்க்கைதிகள்
904,000 மொத்த இழப்புகள்

பின்னணி

தொகு

கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள போலந்தின் மேற்கில் ஜெர்மனியும் கிழக்கில் சோவியத் ஒன்றியமும் அமைந்திருந்தன. 1933 இல் இட்லரின் நாசிக் கட்சி ஜெர்மனியில் ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் கொள்கைகளான ஜெர்மானியர்களுக்கு வாழிடம் (Lebensraum), பரந்த ஜெர்மனி (Großdeutschland) ஆகியவற்றை நிறைவேற்ற ஜெர்மனியின் எல்லைகளை விரிவாக்கி அதனைச் சுற்றியுள்ள நாடுகளைக் கைப்பாவைகளாக ஆக்க முனைந்தது. இதற்காக ஜெர்மனியின் கிழக்கெல்லையில் இருந்த போலந்துடன் இட்லர் நட்புறவினை வளர்க்க முயன்றார். ஆனால் ஜெர்மனியின் ஆதிக்கத்தைக் கண்டு அஞ்சிய போலியர்கள் பிரிட்டன், பிரான்சு போன்ற நேச நாடுகள் அணியில் இணைந்தனர். மேலும் வெர்சாய் ஒப்பந்ததின் காரணமாக ஜெர்மனியின் ஒரு பகுதியான கிழக்கு பிரசியா ஜெர்மனியிலிருந்து துண்டிக்கப்பட்டது. அதனை அடைய “போலந்திய வழி” (polish corridor) என்றழைக்கப்பட்ட பகுதியைக் கடந்து செல்ல வேண்டும். இது போலந்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. இடாய்ச்சு மொழி பேசுவோர் 95% சதவிகிதம் வசிக்கும் டான்சிக் நகரமும் ஜெர்மனியிடமிருந்து பிடுங்கப்பட்டு போலந்திய கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. தங்கள் நாடு துண்டாக்கப்பட்டதை ஜெர்மானியர்கள் விரும்பவில்லை. மீண்டும் கிழக்குப் பிரசியா ஜெர்மனியின் நிலத்தொடர்ச்சியாக அமைய வேண்டுமெனவும் டான்சிக் ஜெர்மனி வசமாகவும் விரும்பினர். இக்காரணங்களால் ஜெர்மனிக்கும் போலந்துக்குமிடையே பகை மூண்டிருந்தது.

பிரிட்டனும் பிரான்சும், ஜெர்மனிக்கு எதிராக போலந்துக்கு உதவுவதாக உறுதியளித்திருந்தன. ஜெர்மனி போலந்தின் மீது படையெடுத்தால் ஜெர்மனியின் மேற்கு எல்லையில் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டிருந்தன. 1939 இல் போலந்து-ஜெர்மனி பேச்சு வார்த்தைகள் முறிந்து போர் மூளுவது உறுதியானது. ஆகஸ்ட் 23, 1939 இல் நாசி ஜெர்மனி மற்ற நாடுகள் எதிர்பாராத விதமாக சோவியத் ஒன்றியத்துடன் ஒரு கூட்டுறவு உடன்படிக்கை செய்து கொண்டது. மோலடோவ்-ரிப்பன்டிராப் ஒப்பந்தம் என அழைக்கப்பட்ட இவ்வொப்பந்ததின் படி போலந்தைக் கைப்பற்றி இரு நாடுகளும் அதனை தங்களிடையே பிரித்துக் கொள்ள ஏற்பாடாயிற்று. பிரிட்டனும் பிரான்சும் ஜெர்மனியைத் தாக்கினால் அதன் உதவிக்கு வருவதாகவும் சோவியத் ஒன்றியம் ஒப்புதல் அளித்தது. இதன் பின் போர் மூளக் காரணிகளை உருவாக்க ஜெர்மானிய நாசப் படைகள் போலந்தில் தாக்குதல்களைத் தொடங்கினர். செப்டம்பர் 1, 1939 அன்று ஜெர்மானியப் படைகள் போலந்து எல்லையைக் கடந்து தங்கள் படையெடுப்பைத் துவங்கின.

சண்டையின் போக்கு

தொகு
 
படையெடுப்புக்கு முன் படைநிலைகள்

படையெடுப்புக்கான ஜெர்மானியத் திட்டம் வெள்ளைத் திட்டம் (case white, Fall Weiss) என்று குறிப்பெயரிடப்பட்டிருந்தது. இதன் முக்கியக் கூறுகள்

  • போலிய படைகளை எதிர்பாராத வண்ணம் போர் சாற்றல் நடைபெறும் முன்னரே படையெடுப்பு துவங்க வேண்டும்
  • வடக்கு, மேற்கு, தெற்கு என மூன்று திசைகளில் இருந்து படையெடுப்பு நிகழும். மேற்கிலிருந்து நிகழும் தாக்குதலே முதன்மையானது.
  • கவச படைகளைக் கொண்டு போலிய பாதுகாவல் கோடுகளை உடைத்து ஊடுருவி போலந்துக்குள் வேகமாக முன்னேறவேண்டும். கிடுக்கியின் பிடிகள் போன்று முன்னேறும் படைகள் மூன்று திசைகளில் இருந்து போலந்துத் தலைநகர் வார்சாவை நெருக்க வேண்டும்
  • போலியப் படைகளின் பெரும்பகுதியை விஸ்துலா ஆற்றுக்கு மேற்கே சுற்றி வளைத்து விடவேண்டும்

ஜெர்மானியப் படையெடுப்பு

தொகு
 
செப்டம்பர் 14 அன்று களநிலவரம்

செப்டம்பர் 1, 1939 அதிகாலை 4.40 மணியளவில் ஜெர்மானிய வான்படை லுஃப்ட்வாஃபே போல்ந்து நகர் வைலூனை குண்டு வீசி அழித்ததுடன் படையெடுப்பு ஆரம்பமாகியது. இதற்கு முன்னர் ஜெர்மானிய நாசபடைகளும் சிறப்புப் படைகளும் பரப்புரைக்காக, போலந்து தான் ஜெர்மனியை முதலில் தாக்கியது என்ற பிம்பத்தை உருவாக்க சில நாச வேலைகளில் ஈடுபட்டனர். மூன்று பெரும் பிரிவுகளாக ஜெர்மானியப் படைகள் போலந்துக்குள் முன்னேறத் தொடங்கின. செப்டம்பர் 3ம் தேதி பிரிட்டனும் பிரான்சும் ஜெர்மனி மீது போர் சாற்றின. முதல் வாரத்தில் ஜெர்மானியப் படைகள் போலியப் பாதுகாவல் நிலைகளைத் தகர்த்து விரைந்து முன்னேறின. எண்ணிக்கையிலும், உத்திகளிலும் போலிய வான்படையோடு ஒப்பிடுகையில் பெரும்பல்ம் கொண்டிருந்த லுஃப்ட்வாஃபே போலிய வான்படையை முறியடித்ததோடு இடைவிடாது போலந்து நகரங்களின் மீது குண்டு வீசியது. செப்டம்பர் 6ம் தேதி போலந்து அரசு வார்சாவை விட்டு வெளியேறி லப்லின் நகருக்கு இடம் பெயர்ந்தது. தங்கள் பாதுகாவல் உத்தி தோற்றதை உணர்ந்த போலந்து தளபதிகள் விஸ்துலா ஆற்றுக்குக் கிழக்கே பின்வாங்க முடிவு செய்தனர். ஆனால் செப்டம்பர் 19ம் தேதி வாக்கில் போலந்துப் படைகளின் பெரும் பகுதி ஜெர்மானியர்களால் சுற்றி வளைக்கப்பட்டு விட்டது.

சோவியத் படையெடுப்பு

தொகு
 
சோவியத் படையெடுப்பின் போது கள நிலவரம்

மோலட்டோவ்-ரிப்பன்டிராப் ஒப்பந்தத்தின் படி செப்டம்பர் 17ம் தேதி சோவியத் ஒன்றியம் கிழக்கிலிருந்து போலந்தைத் தாக்கியது. ஜெர்மானியத் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பின்வாங்கிக் கொண்டிருந்த போலந்துப் படைகளை இந்த இரண்டாம் முனைத் தாக்குதல் முற்றிலுமாக நிலை குலையச் செய்தது. அடுத்த சில நாட்களில் போலந்துப் படைப்பிரிவுகளும் நகரங்களும் ஒவ்வொன்றாக சோவியத் மற்றும் ஜெர்மானியப் படைகளிடம் சரணடைந்தன. ஆங்காங்கே எதிர்த்துப் போரிட்ட போலந்துப் பாதுகாவல் நிலைகளும் விரைவில் கைப்பற்றப்பட்டன. செப்டம்பர் 28ம் தேதி கிழக்கிலிருந்து முன்னேறி வந்த சோவியத் படைகள் மேற்கிலிருந்து முன்னேறி வந்த ஜெர்மானியப் படைகளை விஸ்துலா ஆற்றினருகே சந்தித்தன. அதே நாள் வார்சா நகரம் சரணடைந்தது. ஆங்காங்கே எஞ்சியிருந்த போலந்துப் படைகள் அக்டோபர் 6ம் தேதிக்குள் முறியடிக்கப்பட்டு போலந்து படையெடுப்பு முடிவுக்கு வந்தது.

விளைவுகள்

தொகு

ஒரே மாதத்தில் போலந்து வீழ்ந்ததும், சோவியத் ஒன்றியம் நாசி ஜெர்மனியுடன் கூட்டு சேர்ந்ததும் மேற்கத்திய நேச நாடுகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கின. போலந்தால சில மாதங்கள் தாக்குப்பிடிக்க இயலும் என்று நம்பியிருந்த நேச நாட்டுப் படைகள் போலந்துக்கு உறுதியளித்திருந்த படி ஜெர்மனியின் மேற்கு எல்லையில் தாக்கத் தயாராக இல்லை. அதற்கான மன உறுதியும் அந்நாடுகளின் அரசுகள் கொண்டிருக்கவில்லை. ஜெர்மனியின் போலந்துத் தாக்குதல் துவங்கியவுடன் நேச நாட்டுப் படைகள் ஜெர்மனியின் மேற்கெல்லையில் சார்லாந்தைத் தாக்கினாலும் அதனைப் பாதியிலேயே கைவிட்டு விட்டன. நேச நாடுகளின் இந்த மந்த நிலைப்பாடு ஜெர்மனிக்கு தைரியமூட்டியதுடன் பிரிட்டனையும் பிரான்சையும் எளிதில் வென்று விடலாம் என்று நம்பிக்கையும் அளித்தது.

ஜெர்மானியப் படையெடுப்பு போர் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. போர் வரலாற்றில் மின்னலடித் தாக்குதல் உத்திகள் பெருமளவில் கவச படைகளைக் கொண்டு நிகழ்த்தப்பட்டது இதுவே முதல் முறை. குண்டுவீசி வானூர்திகள், கவச தாக்குதல்கள், ஊடுருவி சுற்றி வளைத்தல் அகியவற்றை வெற்றிகரமாக பெருமளவில் நடத்தி ஒரு மாத காலத்தில் போலந்தை வீழ்த்தியது உலகெங்கும் பெரும் அதிர்ச்சியையும் வியப்பினையும் ஏற்படுத்தியது. இப்படையெடுப்பு ஒட்டுமொத்தப் போர்க் கோட்பாட்டின் ஒரு நடைமுறைப் படுத்துதலாக அமைந்தது. எனவே இதில் அதிக எண்ணிக்கையில் குடிமக்களுக்கு உயிர்ச்சேதம் ஏற்பட்டது. படையெடுப்பில் 65,000 போலிய வீரர்கள் கொல்லப்பட்டனர்; சுமார் 6,94,000 பேர் போர்க் கைதிகளாயினர். ஜெர்மானியத் தரப்பில் சுமார் 16,000 கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர். சோவியத் தரப்பில் சுமார் 1500 பேர் கொல்லப்பட்டனர்.

கைப்பற்றப்பட்ட போலந்தை ஜெர்மனியும் சோவியத் ஒன்றியமும் தங்களுக்குள் பிரித்துக் கொண்டன. படையெடுப்பில் பங்கேற்றதற்குப் பிரதியாக ஸ்லோவாக்கியா மற்றும் லித்துவேனியா அகிய நாடுகளுக்கு சில போலந்துப் பகுதிகள் வழங்கப்பட்டன. அடுத்த ஆறு ஆண்டுகள் போலந்து ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் இருந்தது. அப்போது போலிய யூதர்கள் லட்சக்கணக்கானோர் நாசிக்களால் கொல்லப்பட்டனர். ஜெர்மனியின் போலந்துப் படையெடுப்பே இரண்டாம் உலகப் போரின் முதல் நிகழ்வாகக் கருதப்படுகிறது.

குறிப்புகள்

தொகு
  1. Various sources contradict each other so the figures quoted above should only be taken as a rough indication of the strength estimate. The most common range differences and their brackets are: German personnel 1,500,000 (official figure of the Polish Ministry of Foreign Affairs) – or 1,800,000. Polish tanks: 100–880, 100 is the number of modern tanks, while the 880 number includes older tanks from the WWI era and tankettes.[5][6]
  2. The discrepancy in German casualties can be attributed to the fact that some German statistics still listed soldiers as missing decades after the war. Today the most common and accepted numbers are: 8,082 to 16,343 KIA, 320 to 5,029 MIA, 27,280 to 34,136 WIA.[7] For comparison, in his 1939 speech following the Polish Campaign Adolf Hitler presented these German figures: 10,576 KIA, 30,222 WIA, and 3,400 MIA.[8] According to early Allied estimates, including those of the Polish government-in-exile, the number of German KIA casualties was 90,000 and WIA casualties was 200,000[8][9] Equipment losses are given as 832 German tanks [10] of with approximately 236[10] to 341 as irrecoverable losses and approximately 319 other armored vehicles as irrecoverable losses (including 165 Panzer Spahwagen – of them 101 as irrecoverable losses)[10] 522–561 German planes (including 246–285 destroyed and 276 damaged), 1 German minelayer (M-85) and 1 German torpedo ship ("Tiger")
  3. Soviet official losses - figures provided by Krivosheev - are currently estimated at 1,475 KIA or MIA presumed dead (Ukrainian Front – 972, Belorussian Front – 503), and 2,383 WIA (Ukrainian Front – 1,741, Belorussian Front – 642). The Soviets lost approximately 150 tanks in combat of which 43 as irrecoverable losses, while hundreds more suffered technical failures.[3] However, Russian historian Igor Bunich estimates Soviet manpower losses at 5,327 KIA or MIA without a trace and WIA.
  4. Various sources contradict each other so the figures quoted above should only be taken as a rough indication of losses. The most common range brackets for casualties are: Poland: 63,000 to 66,300 KIA, 134,000 WIA.[7] The often cited figure of 420,000 Polish prisoners of war represents only those captured by the Germans, as Soviets captured about 250,000 Polish POWs themselves, making the total number of Polish POWs about 660,000–690,000. In terms of equipment the Polish Navy lost 1 destroyer (ORP Wicher), 1 minelayer (ORP Gryf) and several support craft. Equipment loses included 132 Polish tanks and armored cars 327 Polish planes (118 fighters))[10]
  1. 1.0 1.1 1.2 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; polishgovernment என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. ER Hooton, p. 85
  3. 3.0 3.1 3.2 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Krivosheev என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. 4.0 4.1 4.2 (உருசிய மொழியில்) Переслегин. Вторая мировая: война между реальностями.— М.:Яуза, Эксмо, 2006, с.22; Р. Э. Дюпюи, Т. Н. Дюпюи. Всемирная история войн.—С-П,М: АСТ, кн.4, с.93.
  5. Internetowa encyklopedia PWN, article on 'Kampania Wrześniowa 1939'
  6. Website of the Polish Ministry of Foreign Affairs – the Poles on the Front Lines
  7. 7.0 7.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; ReferenceB என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  8. 8.0 8.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Polish War, German Losses என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  9. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Nazi Loss in Poland Placed at 290,000 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  10. 10.0 10.1 10.2 10.3 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; ReferenceC என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  11. The encyclopedia of modern war By Roger Parkinson Taylor & Francis, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8128-1898-9. Page 133.
  12. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Axis Slovakia: Hitler's Slavic Wedge, 1938-1945 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=போலந்து_படையெடுப்பு&oldid=3622558" இலிருந்து மீள்விக்கப்பட்டது