ஜெலாதெக் எல்ஆர்டி நிலையம்

ஜெலாதெக் எல்ஆர்டி நிலையம் அல்லது ஜெலாதெக் இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Jelatek LRT Station; மலாய்: Stesen LRT Jelatek; சீனம்: 遮拉迪) என்பது மலேசியா, கோலாலம்பூர், செத்தியா வங்சா பகுதியில் கிளானா ஜெயா வழித்தடத்தில் அமைந்துள்ள ஓர் இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும். இந்த வழித்தடம் முன்பு புத்ரா வழித்தடம் என்று அழைக்கப்பட்டது.[2]

 KJ6 
ஜெலாதெக்
Rapid_KL_Logo

Jelatek LRT Station
ஜெலாதெக் எல்ஆர்டி நிலையம்
பொது தகவல்கள்
வேறு பெயர்கள்Stesen LRT Jelatek
遮拉迪
அமைவிடம்ஜெலாதெக் சாலை AU1, தாமான் கெராமாட் 54200
கோலாலம்பூர்
 மலேசியா
ஆள்கூறுகள்3°10′32.57″N 101°44′09.09″E / 3.1757139°N 101.7358583°E / 3.1757139; 101.7358583
உரிமம் பிரசரானா மலேசியா
இயக்குபவர்Rapid_KL_Logo ரேபிட் ரெயில்[1]
தடங்கள்  கிளானா ஜெயா 
நடைமேடை2 பக்க மேடைகள்
இருப்புப் பாதைகள்2
இணைப்புக்கள்பேருந்து போக்குவரத்து ரேபிட் பேருந்து: T224 
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைஉயர்த்தப்பட்ட நிலையம்
தரிப்பிடம்சீருந்து 292 - கட்டணம்
துவிச்சக்கர வண்டி வசதிகள்விசையுந்து 20 - இலவசம்
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல்
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு KJ6 
வரலாறு
திறக்கப்பட்டது1 சூன் 1999 (எல்ஆர்டி)
சேவைகள்
முந்தைய நிலையம்   செத்தியா வங்சா   அடுத்த நிலையம்
செத்தியாவங்சா எல்ஆர்டி
கோம்பாக் எல்ஆர்டி
 

கிளானா ஜெயா
 
டத்தோ கெராமாட் எல்ஆர்டி
புத்ரா அயிட்ஸ்

இந்த நிலையம் சூன் 1, 1999 அன்று திறக்கப்பட்டது; மற்றும் அருகில் உள்ள ஜெலாதெக் குடியிருப்பின் பெயரில் இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டது. இந்த நிலையம் ஜெலாதெக் சாலையின் மேற்குப் பகுதியில் கம்போங் டத்தோ கிராமாட் மற்றும் கிழக்குப் பகுதியில் தாமான் கிராமாட் ஆகிய வீடுமனைத் திட்டங்களுக்கு இடையே அமைந்துள்ளது.

பொது

தொகு

மஸ்ஜித் ஜமெயிக் எல்ஆர்டி நிலையம் தொடங்கி புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம் வரையிலான 12 இலகு விரைவுப் போக்குவரத்து நிலையங்களை உள்ளடக்கிய இரண்டாவது கட்டமைப்புப் பிரிவின் ஒரு பகுதியாக 1 சூன் 1999 அன்று இந்த நிலையம் திறக்கப்பட்டது.

அமைவு

தொகு

இந்த நிலையம் இரண்டு அடுக்குகளைக் கொண்ட நிலையமாகும். தொடருந்துகள் வழியாக ஏறி இறங்கும் இடம் தரையிலிருந்து மேலே உள்ளது. இந்த நிலையத்தில் கிளானா ஜெயா வழித்தடத்தின் சேவைகளுக்கான மையத் தளமும் உள்ளது.[3]

ஓர் உயரமான நிலைய அமைப்பைக் கொண்ட ஜெலாதெக் நிலையம் இரண்டு அடுக்கு நிலைகளைக் கொண்டுள்ளது; அதாவது இரண்டு அடுக்குத் தளங்களைக் கொண்டது. கீழ் அடுக்கில், சாலை மட்டத்தில் பயணிகளின் அணுகல் தளம் உள்ளது; மற்றும் மேல் உயர் அடுக்கு நிலைகளில் கடப்புச் சீட்டு, சிற்றுண்ண்டிச் சாலைகள் உள்ளன.

மாற்றுத் திறனாளிகளுக்கான சேவை

தொகு

அனைத்து அடுக்குகளிலும் படிக்கட்டுகள், மின்படிக்கட்டுகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சுமை தூக்கிகள் உள்ளன. அத்துடன் இரு திசைகளின் வழியாகப் பயணிக்கும் தொடருந்துகளுக்கு என தனிப்பட்ட ஒரு தீவு நடைமேடையையும் இந்த நிலையம் பயன்படுத்துகிறது.

நவீன முறையிலான மழை வெயில் தடுப்பு கூரைகளால் இந்த நிலையம் கட்டப்பட்டு உள்ளது.

பேருந்து சேவைகள்

தொகு
பேருந்து எண் வழி இணைப்பு
 220   T224 
 KJ6   KJ7  லெபோ அம்பாங்  T100 ,  T103 ,  T104 ,  T107 ,  T120 ,  T121 ,  T152 ,  T180 

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "ABOUT RAPID RAIL". பார்க்கப்பட்ட நாள் May 8, 2020.
  2. "Jelatek LRT station is an elevated rapid transit station in northern Kuala Lumpur, Malaysia, forming part of the Kelana Jaya Line". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 3 November 2024.
  3. "Rapid KL's LRT operation is run by Rapid Rail Sdn Bhd, which is responsible for overseeing the urban rail lines of Ampang Line and Sri Petaling Line, Kelana Jaya Line, other than the Monorail Line services". MyRapid. பார்க்கப்பட்ட நாள் 3 November 2024.

வெளி இணைப்புகள்

தொகு