ஜேம்ஸ் மில்

யேம்சு மில் (James Mill, பிறப்பு: ஜேம்சு மில்னி (James Milne,[1] 6 ஏப்ரல் 1773 – 23 சூன் 1836[2]) என்பவர் இசுக்கொட்லாந்தைச் சேர்ந்த வரலாற்றாளரும், பொருளியலாளரும், அரசியல் கோட்பாட்டாளரும், மெய்யியலாளரும் ஆவார். இவர் ரிக்கார்டியன் பொருளியல் பள்ளியின் நிறுவனர்களில் ஒருவராகக் கணிக்கப்படுகிறார்.[3] இவரது மகன் யோன் மில் ஒரு குறிப்பிடத்தக்க தாராளமய, பயனெறிமுறைக் கோட்பாட்டு மெய்யியலாளர் ஆவார்.

ஜேம்சு மில்
முழுப் பெயர்ஜேம்சு மில்
பிறப்புஜேம்ஸ் மில்னி[1]
ஏப்ரல் 6, 1773(1773-04-06)
ஆங்கசு, இசுக்கொட்லாந்து
இறப்பு23 சூன் 1836(1836-06-23) (அகவை 63)
கென்சிங்டன், இலண்டன்
காலம்19-ஆம் நூற்றாண்டு மெய்யியல்
பகுதிமேற்குலக மெய்யியல்
வாழ்க்கை
துணைவர்(கள்)
ஆரியட் பரோ
சிந்தனை மரபுகள்பயனெறிமுறைக் கோட்பாடு
தாராளமயம்
ரிக்கார்டியன் பொருளியல்
முக்கிய ஆர்வங்கள்உளவியல்
நன்னெறி
பொருளியல்

யேம்சு மில் இந்தியாவுக்கு எப்போதும் சென்றிருக்கவில்லை, ஆனாலும், 1818 ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவின் வரலாறு என்ற ஆவணத்தை எழுதி வெளியிட்டுப் பெரும் புகழ் தேடினார்.[4] இவரே முதன் முதலில் இந்திய வரலாற்றை இந்து, முசுலிம், பிரித்தானியா என மூன்று பகுதிகளாகப் பிரித்தார்.[2]

எடின்பரோ பல்கலைக்கழகத்தில் பயின்று அறிவொளி இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட இவர் தாராளமனப் போக்குடையவராகவும், பயன்பாட்டுக் கோட்பாட்டளராகவும் திகழ்ந்தார். இந்தியாவின் தலைமை ஆளுநர் வில்லியம் பென்டிங்கு பிரபு கொண்டு வந்த 1833 பட்டயச் சட்டத்துக்கான ஆவணத்தை இவர் எழுதினார்.

குறிப்புகள்தொகு

  1. 1.0 1.1 Ball, Terence (19 June 2014). "James Mill". Stanford Encyclopedia of Philosophy. Stanford University. அணுகப்பட்டது 4 April 2018. 
  2. 2.0 2.1 Chisholm 1911, பக். 453.
  3. John Maynard Keynes. "The General Theory". The General Theory of Employment, Interest and Money. http://www.marxists.org/reference/subject/economics/keynes/general-theory/ch01.htm. பார்த்த நாள்: 4 April 2018. 
  4. Mill, James (1817), The History of British India (1 ed.), London: Baldwin, Cradock, and Joy, 11 December 2012 அன்று பார்க்கப்பட்டது

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_மில்&oldid=2895693" இருந்து மீள்விக்கப்பட்டது