ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா

(ஜே. ஆர். ஜயவர்தனா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா (செப்டம்பர் 17 1906 - நவம்பர் 1 1996), இலங்கையின் இரண்டாவது சனாதிபதியும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதலாவது சனாதிபதியுமாவார். இவர் பெயரின் சுருக்கமான ஜே.ஆர். என பிரபலமாக அறியப்பட்டார். இவர் சனாதிபதிப் பதவியை ஏற்கும் முன் அரசில் பல பதவிகளை வகித்தார். இவர் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தியதோடு அதன் தலைவராகவும் செயலாற்றினார்.

ஜே. ஆர். ஜயவர்தனா
இலங்கையின் 2வது சனாதிபதி
பதவியில்
பெப்ரவரி 4 1978 – ஜனவரி 1 1989
முன்னையவர்வில்லியம் கொபல்லாவ
பின்னவர்ரணசிங்க பிரேமதாசா
இலங்கையின் 10வது பிரதமர்
பதவியில்
23 ஜூலை 1977 – பெப்ரவரி 4, 1978
குடியரசுத் தலைவர்வில்லியம் கொபல்லாவ
முன்னையவர்சிறிமாவோ பண்டாரநாயக்கா
பின்னவர்ரணசிங்க பிரேமதாசா
அணிசேரா நாடுகளின் 6வது தலைமைச் செயலாளர்
பதவியில்
பெப்ரவரி 4, 1978 – செப்டம்பர் 9, 1979
முன்னையவர்வில்லியம் கொபல்லாவ
பின்னவர்பிடல் காஸ்ட்ரோ
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசெப்டம்பர் 17 1906
இலங்கை
இறப்புநவம்பர் 1 1996
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி
துணைவர்எலேனா பண்டார ருபசிங்கே ஜயவர்தனா

இளமைக் காலம்

தொகு

இவர் இலங்கையின் சட்டத்துறையில் பிரபலமாக விளங்கிய குடும்பமொன்றில் பிறந்தார். இலங்கையின் தலைமை நீதிபதியாக இருந்த கௌரவ நீதியரசர் இயுஜீன் வில்பிரெட் ஜயவர்தனாவுக்கும், இலங்கையின் செல்வந்த வணிகர்களுள் ஒருவரின் மகளான அக்னசு டொன் பிலிப் விஜயவர்தனாவுக்கும் பிறந்த 11 பிள்ளைகளுள் இவரே முதலாமவர். இராணியின் வழக்கறிஞர் (QC) ஹெக்டர் வில்பிரெட் ஜயவர்தனா, மருத்துவர் ரொலி ஜயவர்தனா ஆகியோர் இவரது தம்பியர்கள். கர்னல் தியடோர் ஜயவர்தனா, நீதியரசர் வலன்டைன் ஜயவர்தனா ஆகியோர் இவரது தந்தையின் உடன்பிறந்தோர். பத்திரிகைத் துறையில் பிரபலமான டி. ஆர். விஜேவர்தனா இவரது மாமா. ஓர் ஆங்கிலேய செவிலித் தாயால் வளர்க்கப்பட்ட இவர்[1] கொழும்பில் உள்ள பிசப்கல்லூரியில் ஆரம்பக் கல்வியைக் கற்றார். பின் ராயல் கல்லூரியில் இடைநிலைக் கல்வியைப் பயின்றார். பின் ராயல் கல்லூரி சங்கத்தில் செயலாளராகப் பணிபுரிந்தார்.[2][3]

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
அரசு பதவிகள்
முன்னர் இலங்கை சனாதிபதி
1978–1989
பின்னர்
முன்னர் இலங்கை பிரதமர்
1977–1978
பின்னர்
அரசியல் பதவிகள்
முன்னர் அணிசேரா நாடுகள் அமைப்பின் தலைமைச் செயலாளர்
1978–1979
பின்னர்