ஜோகுலம்பா மாவட்டம்

தெலங்கானாவின் 31 மாவட்டங்களின் வரைபடம்
ஜோகுலம்பா மாவட்டத்தின் கட்வால் வருவாய் வட்டம்

ஜோகுலம்பா மாவட்டம் (Jogulamba district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கட்வால் நகரம் ஆகும்.[2]

மகபூப்நகர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு, ஜோகுலம்பா மாவட்டம் அக்டோபர், 2016-இல் புதிதாக நிறுவப்பட்டது.

மக்கள் தொகையியல்தொகு

2,928 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது ஜோகுலம்பா மாவட்டம். [3]ஜோகுலம்பா மாவட்டத்தின் வாகனத் தகடு எண் TS–33 ஆகும். [4] 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஜோகுலம்பா மாவட்ட மக்கள் தொகை 6,64,971 ஆகும்.[3]

மாவட்ட நிர்வாகம்தொகு

ஜோகுலம்பா மாவட்டம், கட்வால் என்ற ஒரு வருவாய் கோட்டத்தையும், 12 வருவாய் வட்டங்களையும் கொண்டுள்ளது. [2] புதிதாக நிறுவப்பட்ட ஜோகுலம்பா மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியராக ரஜத் குமார் சைனி பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.[5]

வருவாய் வட்டங்கள்தொகு

ஜோகுலம்பா மாவட்டத்தின் 12 வருவாய் வட்டங்களின் விவரம்:[6]

  1. கட்வால்
  2. தரூர்
  3. காட்டூ
  4. இதிக்யாலா
  5. உண்டவெல்லி*
  6. மணப்பபாடு
  7. லீஜா
  8. ஆலம்பூர்
  9. வட்டேப்பள்ளி
  10. ரஜொலி*
  11. கல்லூர் திம்மனன்தோட்டி*
  12. மல்டக்கல்

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Names of 6 new districts changed" (in en-IN). The Hindu. 22 October 2016. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-telangana/names-of-6-new-districts-changed/article9253888.ece. பார்த்த நாள்: 4 November 2016. 
  2. 2.0 2.1 "Jogulamba district". பார்த்த நாள் 11 October 2016.
  3. 3.0 3.1 "New districts". Andhra Jyothy.com. 8 October 2016. http://www.andhrajyothy.com/artical?SID=320397. பார்த்த நாள்: 8 October 2016. 
  4. "Telangana New Districts Names 2016 Pdf TS 31 Districts List". Timesalert.com. 11 October 2016. https://timesalert.com/telangana-new-districts-list/21462/. பார்த்த நாள்: 11 October 2016. 
  5. "K Chandrasekhar Rao appoints collectors for new districts". Deccan Chronicle. 11 October 2016. http://www.deccanchronicle.com/nation/current-affairs/111016/k-chandrasekhar-rao-appoints-collectors-for-new-districts.html. பார்த்த நாள்: 13 October 2016. 
  6. [1]

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோகுலம்பா_மாவட்டம்&oldid=2643307" இருந்து மீள்விக்கப்பட்டது