ஜோ டி குரூஸ்
ஜோ டி குருஸ் (Joe D Cruz), பிறப்பு: 17 மே 1963) தமிழ் நெய்தல்குடிகளின் வாழ்வை இலக்கியத்தில் பதிவுசெய்த குறிப்பிடத்தக்க எழுத்தாளர் ஆவார். திருநெல்வேலி மாவட்டம் கடற்கரை கிராமமான உவரியில் பிறந்தவர். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சரக்குக் கப்பல் நிறுவனங்களில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தலைமைப் பொறுப்பில் பணியாற்றியுள்ளார்.[1] தற்போது சென்னை இராயபுரத்தில் வணிகக் கப்பல்களுக்கான ஆலோசனை நிறுவனம் ஒன்றையும் நடத்திவருகிறார். இவரது இரு புதினங்களும் மீன்பிடி தொழில் புரியும் பரதவர் வாழ்க்கையைக் களமாகக் கொண்டவை. [சான்று தேவை]
ஜோ டி குருஸ்
| |
---|---|
பிறப்பு | 1963 நாகர்கோவில், தமிழ்நாடு |
தொழில் | புதின, சிறுகதை எழுத்தாளர், இலக்கியத் திறனாய்வாளர், கட்டுரையாளர் |
மொழி | தமிழ், மலையாளம் |
தேசியம் | இந்தியர் |
காலம் | 2004–இன்று |
வகை | பாரம்பரிய மீனவர்கள், கப்பல் போக்குவரத்து, திரைப்படம் |
கருப்பொருள் | நெய்தல், இலக்கியம், வரலாறு, புதினம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | ஆழிசூழ் உலகு(புதினம்) |
துணைவர் | சசிகலா |
பிள்ளைகள் | அந்தோனி டி குருஸ், ஹேமா டி குருஸ் |
இளமைக் காலம்
தொகுதிருநெல்வேலி மாவட்டம் உவரி கிராமத்தில் பிறந்து வளர்ந்த திருநெல்வேலி புனித சவேரியார் பள்ளியில் உயர்கல்வியை முடித்தார்.[2] இடையன்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் விஞ்ஞான பாடம் படித்த இவர், சென்னை லயோலா கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலையும், திருச்சி வளனார் கல்லூரியில் ஆய்வறிஞர் பட்டமும் பெற்றவர்.
படைப்புகள்
தொகு- புலம்பல்கள் (கவிதை) -2004 தமிழ்
- ஆழி சூழ் உலகு (நாவல்) -2004 தமிழ்
- விடியாத பொழுதுகள் (ஆவணப்படம்) 2008 தமிழ்
- கொற்கை (நாவல்)2009 |கொற்கை தமிழ்
- ஆழி சூழ் உலகு (நாவல்) தமிழ்
- TOWARDS DAWN (ஆவணப்படம்) 2009 தமிழ்
- எனது சனமே (ஆவணப்படம்) 2010 தமிழ்
- அஸ்தினாபுரம் (நாவல்) 2016 தமிழ்
- வேர்பிடித்த விளைநிலங்கள் (தன்வரலாறு)2017 தமிழ்
- இனையம் துறைமுகம் (ஆவணப்படம்) 2018 தமிழ்
- கவனம் ஈர்க்கும் கடலோரம் (கட்டுரைகள்) -2019 தமிழ்
விருதுகள்
தொகு- இவரது கொற்கை என்ற புதினத்திற்காக 2013ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது.[3]
- இவர் எழுதிய "ஆழி சூழ் உலகு" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. இவை தவிர, கனடா இலக்கியத் தோட்ட விருது-2006, சுஜாதா-உயிர்மை விருது-2011 (கொற்கை), லூர்தம்மாள் சைமன் இலக்கிய விருது-2013, இலயோலா இலக்கிய விருது -2014. இலக்கிய வீதி அன்னம் விருது- 2014, உஸ்தாத் பிஸ்மில்லாகான் விருது-2015, திருவள்ளுவர் இலக்கிய விருது-2015 ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார்.
திரைப்படங்கள்
தொகுதிரைப்படத்துறையிலும் பணியாற்றியுள்ளார். 2013ம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் பரத் பாலா இயக்கிய மரியான் திரைப்படத்துக்கு வசனம் எழுதியுள்ளார் [4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Kolappan, B. (30 October 2017). "Joe D'Cruz appointed to Shipping Board". பார்க்கப்பட்ட நாள் 7 April 2020 – via www.thehindu.com.
- ↑ "என் ஊர்!". ஆனந்த விகடன். 28 March 2012. பார்க்கப்பட்ட நாள் 19 December 2013.
- ↑ "'கொற்கை' நாவலுக்காக ஜோ.டி. குரூஸுக்கு சாகித்ய அகாடமி விருது". செய்திகள்.காம். 19 திசம்பர் 2013. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 19 திசம்பர் 2013.
- ↑ "'மரியான்' திரைப்படத்துக்கு ஜோ.டி. குருஸ் வசனம்". Tamil Heritage Trust. 10 சனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 10 சனவரி 2014.