டபிள்யூடி1190எஃப்
டபிள்யூடி1190எஃப் (WT1190F, UDA34A3 அல்லது UW8551D) என்பது விண்வெளிக் கழிவு என நம்பப்படும் புவியின் ஒரு தற்காலிக செயற்கைக் கோள் ஆகும்.[3] இவ்வான்பொருள் புவியின் வளிமண்டலத்துள் 2015 நவம்பர் 13 06:18:34.3 (±1.3 செக்) ஒசநே அளவில் நுழைந்தது.[4]
இலங்கையின் வளிமண்டலத்துள் WT1190F |
|
கண்டுபிடிப்பு
| |
---|---|
கண்டுபிடித்தவர்(கள்) | லெமன் குன்று ஆய்வு (ஜி96), கட்டலினா ஸ்கை ஆய்வு (703) |
கண்டுபிடிப்பு நாள் | 2013/02/18 2013/11/29 2015/10/03 2015/11/13 |
பெயர்க்குறிப்பினை
| |
சிறு கோள் பகுப்பு |
தூரத்து செயற்கைக் கோள் (டிச 2012 இற்கு முன்னர் முதல் நவ 2015) |
காலகட்டம்2015-Oct-03 (யூநா 2457298.5) | |
சுற்றுப்பாதை அண்மை முனைப்புள்ளி | 21,221.83 கிமீ (0.055 சந்திர தூரம், 3.33 பிஆ) |
சுற்றுப்பாதை சேய்மை முனைப்புள்ளி | 655,370.89 கிமீ (1.704 சதூ, 102.75 புஆ) |
அரைப்பேரச்சு | 338,296.36 கிமீ (0.880 சதூ, 53.04 புஆ) |
மையத்தொலைத்தகவு | 0.9372685 |
சுற்றுப்பாதை வேகம் | 22.66 நாட்கள் |
சராசரி பிறழ்வு | 6.19095° |
சாய்வு | 3.19670° |
Longitude of ascending node | 311.55613° |
Time of periastron | 2015/10/02 14:39:00 |
Argument of perihelion | 314.04406° |
இது எதன் துணைக்கோள் | புவி |
சிறப்பியல்பு
| |
பரிமாணங்கள் | 0.7-3.3 மீ |
அடர்த்தி | ~0.1 கி/செமீ³[2] |
தோற்ற ஒளிர்மை | ~16-23 |
விண்மீன் ஒளிர்மை | 31.3 |
இது முதன் முதலில் 2013 பெப்ரவரி 18 இல் கண்டுபிடிக்கப்பட்டது.[2][5] இது பின்னர் காணாமல் போய், மீண்டும் 2013 நவம்பர் 29 இல் தோன்றியது. பின்னர் 2015 அக்டோபர் 3 அன்று காணப்பட்டது. ஆரம்பக்கட்டக் கணக்கீட்டின் படி, இது புவியை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது.[1]
டபிள்யூடி1190எஃப் எனும் இப்பொருள் 2013 ஆம் ஆண்டு முதல் பூமியை ஒரு தற்காலிகச் செயற்கைக்கோளாகச் சுற்றி வருகிறது. இது எந்தவொரு தெரிந்த செயற்கைக்கோளாகவும் அடையாளம் காணப்படாவிடினும், இதன் கணக்கிடப்பட்ட அடர்த்தி 0.1 கி/செமீ³ என்ற பெறுமதி ஒரு இயற்கைப் பொருளின் அடர்த்தியை விட மிகக் குறைவானதாக உள்ளது. இதனால், ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் இது ஒரு எரிபொருள் தொட்டி போன்ற ஒன்றாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தது.[2][5]
பல்வேறு அவதானிப்புகளை அடுத்து, இப்பொருள் 2015 நவம்பர் 13 கிட்டத்தட்ட 06:20 ஒசநே (11:50 உள்ளூர் நேரம்) அளவில் இலங்கையின் தெற்குப் பகுதியில் புவியை மோதும் என ஐரோப்பிய வானியலாளர்கள் கணித்தனர்.[2][5] இலங்கையில் உள்ள ஆர்தர் சி. கிளார்க் நிலையம் இப்பொருள் அம்பாந்தோட்டையில் இருந்து தெற்கே 100 கிமீ தொலையில் உள்ள கடற்பகுதியில் மோதும் என எதிர்வு கூறியது.[6] இப்பொருள் மிகச் சிறியதாக இருப்பதால், புவியில் மோத முன்னரே இதன் பெரும்பாலான பகுதியோ அல்லது முழுவதுமோ வளிமண்டலப் பகுதியில் எரிந்து விடும், ஆனாலும் இது ஒரு பிரகாசமான எரிகோளமாக வானில் தெரியும் எனக் கூறப்பட்டது..[2][5]
டபிள்யூடி1190எஃப் விண்பொருள் புவியின் வளிமண்டபத்துள் செக்கனுக்கு 11 கிமீ வேகத்தில் நுழைந்தது.[7] இவ்விண்பொருளில் இருந்து எஞ்சிய சிதிலங்கள் அனைத்தும் இலங்கையின் காலி நகருக்கு 100 கிமீ தூரத்தில் இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.[8] பன்னாட்டு வானியல் மையம் மற்றும் ஐக்கிய அரபு அமீரக விண்வெளி நிறுவனம் இரண்டும் கூட்டாக கல்ஃப்ஸ்ட்ரீம் 450 ஜெட் வானூர்தி மூலம் இவ்விண்பொருளின் வருகையை வானில் இருந்து அவதானித்தன.[9] பன்னாட்டு வானியலாளர்கள் அடங்கிய வானக அவதானிப்புக் குழு டபிள்யூடி1190எஃப் விண்பொருள் புவியின் வளிமண்டலத்துள் நுழையும் காட்சியை வெற்றிகரமாகக் காணொளி மூலம் பதிவாக்கியது.[4][10]
நாள் | vmag | தூரம் (கிமீ) |
வேகம் பூமி சார்பாக (கிமீ/செ)[12] |
---|---|---|---|
05 | 20.8 | 602399 | 0.2 |
08 | 20.5 | 524608 | 0.5 |
10 | 20.0 | 420800 | 0.8 |
11 | 19.6 | 345999 | 1.0 |
12 | 19.0 | 246196 | 1.4 |
13 | 17.1 | 89914 | 2.8 |
மோதுகை | ~ -3 | 0 | 11.3 |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Gray, Bill. "Pseudo-MPC for UDA34A3 = UW8551D = WT1190F". Project Pluto. பார்க்கப்பட்ட நாள் 23 October 2015.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 "WT1190F comes back: ESA NEOCC watching rare reentry". Minor Planet Mailing List. பார்க்கப்பட்ட நாள் 24 October 2015.
- ↑ Watson, Traci (23 October 2015). "Incoming space junk a —scientific opportunity". Nature News. http://www.nature.com/news/incoming-space-junk-a-scientific-opportunity-1.18642. பார்த்த நாள்: 2015-10-29.
- ↑ 4.0 4.1 "Rapid Response to the next TC3 Consortium". SETI Institute. பார்க்கப்பட்ட நாள் 2015-11-10.
- ↑ 5.0 5.1 5.2 5.3 Wood, Chris (2015-10-23). "ESA to study rare rocket body reentry to improve predictive models". Gizmag.com. http://www.gizmag.com/esa-rocket-reentry-observations/40021/. பார்த்த நாள்: 2015-10-27.
- ↑ "Space junk could fall 100km south H'tota". டெய்லிமிரர். 29 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 29 அக்டோபர் 2015.
- ↑ "ESA SPONSORS WT1190F OBSERVATIONS". esa blog. 30 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-11-10.
- ↑ "Reentry data will help improve prediction models". European Space Agency. Archived from the original on 2015-11-02. பார்க்கப்பட்ட நாள் 2015-11-02.
- ↑ Al-Ashi, Sameh (4 நவம்பர் 2015). "UAE sponsors airborne campaign to observe November 13 entry of space debris WT1190F". IAC. பார்க்கப்பட்ட நாள் 8 நவம்பர் 2015.
- ↑ King, Bob (13 நவம்பர் 2015). "Spectacular Breakup of WT1190F Seen by Airborne Astronomers". Universe Today. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2015.
- ↑ The Distant Artificial Satellites Observation Page
- ↑ Ephemeris (VmagOb value "Table setting #22")