டாக்டர். அம்பேத்கர் நகர்
டாக்டர். அம்பேத்கர் நகர் (Dr. Ambedkar Nagar - commonly known as Mhow), பொதுவாக மாவ் நகரம் என அழைக்கப்படும் இந்நகரம், இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்நகரம் இந்தூர் நகரத்திற்கு தென்மேற்கே 23 கிமீ தொலைவில், பழைய மும்பை - ஆக்ரா நெடுஞ்சாலை எண் 3-இல் அமைந்துள்ளது. இவ்வூரில் அம்பேத்கர் பிறந்ததால், அவரின் நினவை போற்றும் வகையில், மாவ் நகரத்தின் பெயரை, 2003-இல் மத்தியப் பிரதேச அரசு டாக்டர். அம்பேத்கர் நகரம் என மாற்றியது. [3] இந்நகரத்தின் நிர்வாகத்தை இந்திய இராணுவத்தின் குடும்பத்தினர்கள் கொண்ட பாசறை மன்றக் குழு மேற்கொள்கிறது.
டாக்டர். அம்பேத்கர் நகர்
மாவ் இராணுவப் பாசறை நகரம் | |
---|---|
இராணுவப் பாசறை நகரம் | |
மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்தூர் மாவட்டத்தில் மாவ் நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 22°33′N 75°46′E / 22.55°N 75.76°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
மாவட்டம் | இந்தூர் |
பெயர்ச்சூட்டு | அம்பேத்கர் |
ஏற்றம் | 556 m (1,824 ft) |
மக்கள்தொகை (2011[1]) | |
• மொத்தம் | 85,023 |
மொழி | |
• அலுவல் மொழி | இந்தி[2] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 453441 |
தொலைபேசி குறியீடு | 07324 |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, டாக்ட. அம்பேத்கர் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 81,702 ஆகும். அதில் ஆண்கள் 43,888 மற்றும் 37,814 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 862 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 9308 (11.39%) ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 85.78% ஆக உள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 66.54%, இசுலாமியர் 29.41%, சமணர்கள் 0.45%, பௌத்தர்கள் 0.54%, கிறித்தவர்கள் 1.55%, சீக்கியர்கள் 1.32% மற்றும் பிறர் 0.19% ஆகவுள்ளனர். [4]
இராணுவப் பாசறைகளும், இராணுவப் பயிற்சி கல்லூரிகளும்
தொகு1818 முதல் இந்நகரத்தில் பிரித்தானிய இந்தியாவின் இராணுவப் பாசறை உள்ளது. தற்போது இந்நகரத்தில் இந்தியத் தரைப்படையின் மூன்று இராணுவப் பயிற்சி நிலையங்கள் உள்ளது. அவைகள்: 1 மாவ் இராணுவப் பொதுப் பள்ளி, 2 இராணுவப் போர்க் கல்லூரி, 3 இராணுவத் தகவல் தொடர்பு பொறியியல் கல்லூரி.
புகழ் பெற்றவர்கள்
தொகுபல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள்
தொகு- டாக்டர். அம்பேத்கர் சமுக அறிவியல் பல்கலைக்கழகம்
- கால்நடை மருத்துவக் கல்லூரி
மேற்கோள்கள்
தொகு- ↑ [1]
- ↑ "52nd REPORT OF THE COMMISSIONER FOR LINGUISTIC MINORITIES IN INDIA" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 21 July 2019.
- ↑ "Mhow town renamed as Dr Ambedkar Nagar". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (Bhopal). 28 June 2003 இம் மூலத்தில் இருந்து 23 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121023043527/http://articles.timesofindia.indiatimes.com/2003-06-28/india/27179994_1_bhopal-notification-madhya-pradesh-government.
- ↑ Mhow Cantt Population Census 2011
வெளி இணைப்புகள்
தொகு- "Mhow". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.
- Mhow cantonment
- Mhow Ki Khabrein - A blog dedicated to Mhow