இந்தோர் மாவட்டம்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம்
(இந்தூர் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்தோர் மாவட்டம் (Indore District) (இந்தி: इन्दौर जिला) மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஐம்பத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நகரம் இந்தோர் ஆகும். இம்மாவட்டம் இந்தோர் கோட்டத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்ட்டத்தின் பகுதிகள் 1948 வரை இந்தூர் அரசு ஆண்டது.

இந்தோர் மாவட்டம்
इन्दौर जिला
இந்தோர்மாவட்டத்தின் இடஅமைவு மத்தியப் பிரதேசம்
மாநிலம்மத்தியப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்இந்தூர் கோட்டம்
தலைமையகம்இந்தூர்
பரப்பு3,898 km2 (1,505 sq mi)
மக்கட்தொகை3,276,697 (2011)
மக்கள்தொகை அடர்த்தி841/km2 (2,180/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை74.09%
படிப்பறிவு80.87%
வட்டங்கள்4
மக்களவைத்தொகுதிகள்இந்தோர் மற்றும் தார் நாடாளுமன்ற தொகுதிகள்
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை9
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

மத்தியப் பிரதேசத்தின் ஐம்பத்தி ஒன்று மாவட்டங்களில் அதிக மக்கள் தொகை மாவட்டமாக இந்தோர் மாவட்டம் விளங்குகிறது.[1]

இம்மாவட்டத்தின் டாக்டர். அம்பேத்கர் (பழைய பெயர்:மாவ்) நகரத்தில் மாவ் இராணுவப் பொதுப் பள்ளி, இராணுவப் போர்க் கல்லூரி மற்றும் இராணுவத் தகவல் தொடர்பு பொறியியல் கல்லூரி உள்ளது.

மாவட்ட எல்லைகள்

தொகு

இந்தோர் மாவட்டத்தின் வடக்கில் உஜ்ஜைன் மாவட்டம், கிழக்கில் தேவாஸ் மாவட்டம், தெற்கில் கார்கோன் மாவட்டம், மேற்கில் தார் மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது.

ஆறுகள்

தொகு

இந்தோர் மாவட்டத்தில் சம்பல் ஆறு, சிப்பிரா ஆறு, காம்பீர் ஆறு மற்றும் கான் ஆறுகள் பாய்கிறது.

நகரங்களும் ஊர்களும்

தொகு

இந்தோர் நகரம் இம்மாவட்டத்தின் பெரிய நகரமாகும். மகௌ நகரம் இந்திய இராணுவப் படையினரின் நகரமாக உள்ளது. தேபல்பூர், சன்வெர் மற்றும் ஹதோத் பிற நகரங்களாகும்.

மாவட்ட நிர்வாகம்

தொகு

இந்தோர் மாவட்டம் தேபால்பூர், சன்வெர், இந்தூர் மற்றும் மகௌ என நான்கு வருவாய் வட்டங்களை கொண்டுள்ளது.

மேலும் 335 பஞ்சாயத்து கிராமங்களும், 649 கிராமங்களும், நான்கு ஊராட்சி ஒன்றியங்களும் கொண்டுள்ளது.

அரசியல்

தொகு

இந்தோர் மாவட்டத்தில் இந்தோர் 1, இந்தோர் 2, இந்தோர் 3, இந்தோர் 4, இந்தோர் 5, அம்பேத்கர் நகர் - மகௌ, ரௌ மற்றும் சன்வெர் என ஒன்பது சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.[2] அம்பேத்கர் நகர் - மகௌ சட்டமன்ற தொகுதி, தார் நாடாளுமன்ற தொகுதியின் கீழும், மற்ற எட்டு தொகுதிகள் இந்தோர் நாடாளுமன்ற தொகுதியின் கீழும் வருகிறது. 2014-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில், இந்தோர் நாடாளுமன்ற தொகுதியில், சுமித்ரா மகஜன் வெற்றி பெற்று பதினாறாவது மக்களவையின் தலைவராக உள்ளார்.

மக்கள் தொகையியல்

தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 3,276,697 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 25.91% மக்களும்; நகரப்புறங்களில் 74.09% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 32.88% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1,699,627 ஆண்களும் மற்றும் 1,577,070 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 928 பெண்கள் வீதம் உள்ளனர். 3,898 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 841 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 80.87% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 87.25% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 74.02% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 421,380 ஆக உள்ளது. [3]

சமயம்

தொகு

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 2,728,225 (83.26 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 415,142 (12.67 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 18,523 (0.57 %) ஆகவும், , சீக்கிய சமய மக்கள் தொகை 25,696 (0.78 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 71,667 (2.19 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 11,496 (0.35 %) ஆகவும், பிற சமய மக்களின் தொகை 720 (0.02 %) ஆகவும், மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 5,228 (0.16 %) ஆகவும் உள்ளது.

மொழிகள்

தொகு

மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

தட்பவெப்ப நிலைத் தகவல், இந்தோர்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 27.5
(81.5)
28.8
(83.8)
38.3
(100.9)
42.7
(108.9)
46.4
(115.5)
36.2
(97.2)
30.3
(86.5)
28.2
(82.8)
30.9
(87.6)
32.4
(90.3)
22.7
(72.9)
16.9
(62.4)
31.78
(89.2)
தாழ் சராசரி °C (°F) 5.8
(42.4)
9.4
(48.9)
16.2
(61.2)
21.2
(70.2)
24.4
(75.9)
24.1
(75.4)
22.6
(72.7)
21.9
(71.4)
21.1
(70)
18.1
(64.6)
11.9
(53.4)
6.6
(43.9)
16.94
(62.5)
பொழிவு mm (inches) 4
(0.16)
3
(0.12)
1
(0.04)
3
(0.12)
11
(0.43)
136
(5.35)
279
(10.98)
360
(14.17)
185
(7.28)
52
(2.05)
21
(0.83)
7
(0.28)
1,062
(41.81)
சராசரி பொழிவு நாட்கள் 0.8 0.8 0.3 0.3 1.8 8.6 15.9 18.3 8.6 3.1 1.4 0.6 60.5
சூரியஒளி நேரம் 288.3 274.4 288.3 306.0 325.5 210.0 105.4 80.6 180.0 269.7 273.0 282.1 2,883.3
ஆதாரம்: HKO

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  2. "District Assembly list". Chief Electoral Officer, Madhya Pradesh website. பார்க்கப்பட்ட நாள் 18 April 2010.
  3. Indore District : Census 2011 data

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தோர்_மாவட்டம்&oldid=3528757" இலிருந்து மீள்விக்கப்பட்டது