டிரீம் தியேட்டர்


டிரீம் தியேட்டர் என்பது ஜான் பெட்ரூசி, ஜான் மியுங் மற்றும் மைக் போர்ட்னே ஆகியோர் மாசசூசெட்ஸ் பெர்க்லீ இசைக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது, தங்களின் படிப்பை கைவிடுவதற்கு முன்பாக 1985 ஆம் ஆண்டில் உருவாக்கிய அமெரிக்க பிராக்ரஸிவ் மெட்டல் இசைக்குழுவாகும். இந்த இசைக்குழுவைச் சேர்ந்தவர்கள் மாறியபடி இருந்தார்கள் என்றாலும், ஜேம்ஸ் லேப்ரி மற்றும் ஜோர்டன் ரூடஸ் உள்ளிட்ட சிலர் இன்றளவும் அந்த இசைக்குழுவிலேயே பணியாற்றி வருகின்றனர்.

Dream Theater
From left to right: John Myung, Jordan Rudess, Mike Portnoy, James LaBrie and John Petrucci performing live in Rio de Janeiro, Brazil in 2008
பின்னணித் தகவல்கள்
பிற பெயர்கள்Majesty (1985-1989)
பிறப்பிடம்Long Island, New York, United States
இசை வடிவங்கள்Progressive metal, progressive rock, heavy metal
இசைத்துறையில்1985-Present
வெளியீட்டு நிறுவனங்கள்Roadrunner, Elektra, EastWest, Atco, Mechanic
இணைந்த செயற்பாடுகள்Liquid Tension Experiment, Explorers Club, MullMuzzler, Nightmare Cinema, OSI, Platypus, The Jelly Jam, Transatlantic, True Symphonic Rockestra, Chroma Key, Avenged Sevenfold, Queensryche
இணையதளம்www.dreamtheater.net
உறுப்பினர்கள்James Labrie
John Myung
John Petrucci
Mike Portnoy
Jordan Rudess
முன்னாள் உறுப்பினர்கள்Chris Collins
Charlie Dominici
Kevin Moore
Derek Sherinian

டிரீம் தியேட்டர் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்ற பிராக்ரஸிவ் மெட்டல் இசைக்குழுவாகும். இந்த இசைக்குழு பல மிகப்பெரிய வெற்றிப் படைப்புகளை (1992 ஆம் ஆண்டில் வெளிவந்த ஃபுல் மி அண்டர் என்ற இசைத் தொகுப்பு எம்டிவி இன் மிகப்பெரிய ஆதரவைப் பெற்றது) அளித்திருக்கிறது.[சான்று தேவை].

இந்த இசைக்குழு தனது வாத்தியக் கலைஞர்களின் திறமையின் காரணமாக சிறப்பான முறையில் அறியப்படுகிறது என்பதுடன், அந்த வாத்தியக் கலைஞர்கள் இசையக் குறித்த செய்திகளை வெளியிடும் பத்திரிகைகளிடமிருந்து பல்வேறு விருதுகளை வென்றுள்ளனர். டிரீம் தியேட்டரின் உறுப்பினர்கள் மற்ற இசைக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளனர். எரிக் ஜான்சன் மற்றும் ராபர்ட் பிரிப் ஆகியோரைத் தொடர்ந்து, கித்தார் இசைக்கலைஞரான ஜான் பெர்ரூசி ஆண்டுதோறும் நடைபெறும் ஜி3 சுற்றுப் பயணத்தில் மூன்றாவது இசைக் கலைஞராக இந்த இசைக்குழுவில் ஆறு முறை சேர்த்துக்கொள்ளப்பட்டார். டிரம்மரான மைக் போர்ட்னாய் மாடர்ன் டிரம்மர் பத்திரிகையிடமிருந்து 23 விருதுகளை வென்றுள்ளார் என்பதோடு ராக் டிரம்மர் புகழ்கூடத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்ட இரண்டாவது இளம் வயதுக்காரராகவும் (37வது வயதில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்) இருக்கிறார்.

அந்த இசைக்குழுவின் வெளியீடுகளுள் ஒன்றான இமேஜெஸ் அன்ட் வோர்ட்ஸ் (1992 ஆம் ஆண்டில் வெளிவந்தது) என்ற இசைத்தொகுப்பு அதிக விற்பனையைப் பெற்றது என்பதுடன், பில்போர்ட் 200 அட்டவணையில் 61 ஆம் இடத்தைப் பிடித்தது.[1] 1994 ஆம் ஆண்டில் வெளிவந்த அவேக் மற்றும் 2002 ஆம் ஆண்டில் வெளிவந்த சிக்ஸ் டிகிரி ஆப் இன்னர் டர்புலென்ஸ் ஆகிய இரண்டு இசைத் தொகுப்புகளும் பில்போர்ட் அட்டவணையில் முறையே 32 மற்றும் 46வது இடங்களைப் பிடித்ததுடன், நேர்மறையான விமர்சனங்களையும் பெற்றன. எண்டர்டெயின்மெண்ட் வீக்லி என்ற பத்திரிகை வழக்கமாக மிகப்புகழ் பெற்ற இசைக்கே முக்கியத்துவம் அளிக்கும் என்றபோதிலும், சிக்ஸ் டிகிரி ஆஃப் இன்னர் டர்புலென்ஸ் என்ற இசைத்தொகுப்பு வெளியிடப்பட்ட முதல் வாரத்தில், அப்பத்திரிக்கையில் வரும் இசைப் பிரிவில் டிரீம் தியேட்டர் சிறப்பிக்கப்பட்டிருந்தது. 2007 ஆம் ஆண்டில், சிஸ்டமேடிக் கேயாஸ் என்ற இசைத்தொகுப்பு அமெரிக்க பில்போர்ட் 200 பட்டியலில் 19வது இடத்தைப் பிடித்தது.[1] டிரீம் தியேட்டர் 2 மில்லியனுக்கும் அதிகமான இசைத்தொகுப்புகளை அமெரிக்காவில் விற்பனை செய்துள்ளது என்பதுடன்,[2] உலகம் முழுவதிலும் எட்டு மில்லியனுக்கும் அதிகமான இசைத்தொகுப்புகளை விற்று சாதனை படைத்துள்ளது.[சான்று தேவை] அந்த இசைக்குழுவின் பத்தாவது இசைத்தொகுப்பான பிளாக் கிளௌட்ஸ் & சில்வர் லைனிங்ஸ் 2009 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த இசைத்தொகுப்பு அமெரிக்க பில்போர்ட் 200 அட்டவணையில் ஆறாம் இடத்தையும், யூரோசார்ட் ஹாட் 100 அட்டவணையில் முதல் இடத்தையும் பெற்றதுடன், அட்டவணைகளில் பல முறை பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றது.

வரலாறு தொகு

உருவாக்கம் மற்றும் தொடக்க ஆண்டுகள் (1985–1987) தொகு

கித்தார் இசைக்கலைஞரான ஜான் பெட்ரூசி, அடித்தொனி பாடகரான ஜான் மியுங் மற்றும் டிரம்மரான மைக் போர்ட்னாய் ஆகியோர் பெர்க்லீ இசைக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது, ஓய்வு நேரங்களில் ஒரு இசைக்குழுவை உருவாக்கத் திட்டமிட்டதுடன், 1985 ஆம் ஆண்டில் டிரீம் தியேட்டரை உருவாக்கினர். பெர்க்லீயில் இம்மூவரும் ரஷ் மற்றும் அயர்ன் மெய்டென் போன்ற பாடல்களை ஒத்திகை அறையில் பாடத் தொடங்கினர்.

மியுங், பெட்ரூசி மற்றும் போர்ட்னாய் போன்றோர்கள் தாங்கள் உருவாக்கிய புதிய இசைக்குழுவிற்கு மெஜெஸ்டி என்று பெயரிட்டனர். பெர்க்லி நிகழ் மையத்தில் ரஷ் இசைநிகழ்ச்சியை காண்பதற்கான அனுமதிச்சீட்டுகளுக்காக இம்மூவரும் அங்கு ஒலித்த பாடலை கேட்டுக்கொண்டே வரிசையில் காத்திருந்தனர். அங்கு ஒலித்த "பேஸ்டிலே டே" (கேரஸ் ஆப் ஸ்டீல் என்ற இசைத்தொகுப்பில் இருந்து) என்ற பாடலின் முடிவில் போர்ட்னாய் "மெஜெஸ்டிக்" என்று சத்தமாகக் கத்தினார். அதன் பின்னர் அவர்கள் தங்கள் இசைக்குழுவிற்கு மெஜெஸ்டி என்ற பெயரை வைக்க முடிவு செய்தனர்.[3]

இம்மூவரும் பின்னர் தங்கள் குழுவிற்குத் தேவைப்படுபவர்களைத் தேர்ந்தெடுத்தனர். பெட்ரூசி உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது, அங்கிருந்த இசைக்குழுவில் தன்னுடன் பணியாற்றிய கெவின் மோரை கீபோர்ட் வாசி்க்கும்படி கேட்டுக்கொண்டார். பெட்ரூசியின் நண்பரும், கிவீன்சிரிக் என்ற இசைக்குழுவைச் சேர்ந்தவருமான கிரிஸ் காலின்ஸ் என்பவர் "கிவின் ஆப் தி ரெய்க்" என்ற பாடலை சிறப்பாக பாடுவதைக் கண்ட மெஜெஸ்டிக் குழு உறுப்பினர்கள் அவரைத் தங்கள் இசைக்குழுவின் முன்னணிப் பாடகராக நியமித்தனர்[4]. அந்தச் சமயத்தில் போர்ட்னாய், பெட்ரூசி மற்றும் மியுங் ஆகியோரின் கணக்கிலடங்கா நிகழ்ச்சித் திட்டங்கள் அவர்களை இசையில் கவனம் செலுத்தத் தூண்டியதுடன், அவர்களின் படிப்பைக் கைவிடும் நிலைக்கு இட்டுச்சென்றது. அவர்களும் தாங்கள் கல்லூரியில் நிறைய கற்றுக்கொண்டதாக நினைக்கவில்லை. இசையில் கவனம் செலுத்துவதற்காக, சன்னி ஃப்ரெடோனியா கல்லூரியில் இருந்து மூர் என்பவர் வெளியேறினார்.

1986 ஆம் ஆண்டின் தொடக்க மாதங்களில், நியூயார்க் நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்த அவர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர். அந்தச் சமயத்தில், தி மெஜஸ்டி டெமோஸ் என்று பெயரிடப்பட்ட மாதிரி நிகழ்ச்சிகளின் தொகுப்பை இந்த இசைக்குழு பதிவுசெய்தது. 1,000 ஒலி நாடாக்கள் ஆறு மாதங்களுக்குள் விற்கப்பட்டதுடன், அந்த இசைக்குழு சம்பந்தப்பட்ட காட்சிகளின் பதிவுகளை உள்ளடக்கிய ஒலி நாடாக்கள் மிகவும் பிரபலமடைந்தன. மெஜெஸ்டி டெமோஸ் என்ற இசைத்தொகுப்பின் ஒலி நாடாக்கள் இன்றளவும் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இருந்தபோதும் அந்த இசைத்தொகுப்பு மைக் போர்ட்னாயின் ஓயிட்ஸ்ஜாம் ரெக்கார்ட்ஸ் மூலம் வட்டுக்களாக வெளியிடப்பட்டன.

சில மாதங்கள் கூட்டாக இசை நிகழ்ச்சிகளை நடத்திய பின்னர், 1986 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், கிறிஸ் காலின்ஸ் இசைக்குழுவிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு மாற்றாக இன்னொருவரை நியமிக்க ஓராண்டிற்கும் மேலாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் வயதானவரும், அந்தக் குழுவில் இருந்தவர்களைக் காட்டிலும் மிகவும் அனுபவம் வாய்ந்தவருமான சார்லி டாமினிஸி என்பவர் முன்னணிப் பாடகராக நியமிக்கப்பட்டார். டாமினிஸி மெஜெஸ்டிக் இசைக்குழுவுடன் இணைந்த பிறகு, அவர்கள் நியூயார்க் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமான இசை நிகழ்ச்சிகளை நடத்தியதுடன், குறி்ப்பிடும்படியான அனுபவத்தையும் பெற்றனர்.

டாமினிஸியை நியமித்த சிறிது காலத்திற்குப் பிறகு, லாஸ் வெகாஸ் இசைக்குழு தங்களது குழுவிற்கு மெஜெஸ்டிக்[5] என்று பெயரிட்டதுடன், தங்களது பெயரைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதற்காக வழக்கு தொடுக்கப்போவதாக இந்தக் இசைக்குழுவை மிரட்டியது. ஆகவே இந்த இசைக்குழு புதிய பெயரைத் தேர்ந்தெடுக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டது. கிளாசர், மேகஸ் மற்றும் எம்1 ஆகியோரின் பரிந்துரைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன,[6] அதே சமயம் போர்ட்னாயின் தந்தை கலிபோர்னியாவின், மான்டெரெரியில் உள்ள டிரீம் தியேட்டர் என்ற திரையரங்கின் பெயரைப் பரிந்துரை செய்தார் என்பதுடன், அவரின் பரிந்துரை ஏற்கப்பட்டது.

வென் டிரீம் அன்ட் டே யுனைட் (1988–1990) தொகு

டிரீம் தியேட்டர் என்ற புதிய பெயருடன் அந்த இசைக்குழு நியூயார்க் மற்றும் அதன் அருகாமையில் உள்ள மாநிலங்களில் அதிக இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்ததுடன், அதிக பாடல்களை இயற்றுவதில் கவனம் செலுத்தி வந்தது. அந்த இசைக்குழு எம்சிஏ இன் பிரிவான மெக்கானிக் ரெக்கார்ட்ஸின் கவனத்தை ஈர்த்தது. 1988[6] ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி, டிரீம் தியேட்டர் மெக்கானிக் உடன் தனது முதல் ஒலிப்பதிவிற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதுடன், தனது முதல் இசைத்தொகுப்பை ஒலிப்பதிவு செய்தது. அந்த இசைக்குழு கிளாட்வின், பெனிசுலாவானியாவில் உள்ள காஜெம் விக்டரி பதிவகத்தில் அந்த இசைத்தொகுப்பை ஒலிப்பதிவு செய்தது. இசைத்தொகுப்பிற்குத் தேவைப்படும் அடிப்படை ஒலித்தடத்தை ஒலிப்பதிவு செய்ய ஏறத்தாழ 10 நாட்கள் ஆனது என்பதுடன், இசைத்தொகுப்பை முழுவதும் ஒலிப்பதிவு செய்ய மூன்று வாரங்கள் ஆனது.

அந்த இசைக்குழு எதிர்பார்த்ததற்கும் குறைவான ஆரவாரத்துடன் வென் டிரீம் அன்ட் டே யுனைட் 1989 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பாக டிரீம் தியேட்டருக்கு நிதியுதவியை வழங்குவதாக உறுதியளித்த மெக்கானிக் அதை நிறைவேற்றத் தவறியது, ஆகவே அந்த இசைக்குழு நியூயார்க் நகரத்தில் இசை நிகழ்ச்சியை நடத்த முடியாத நிலைக்கு ஆளானது. அந்த இசைத்தொகுப்பை விளம்பரப்படுத்துவதற்கான சுற்றுப்பயணம் ஐந்து இசை நிகழ்ச்சிகளை உள்ளடக்கியது என்பதுடன், அவையனைத்தும் உள்ளூரிலேயே செய்து முடிக்கப்பட்டன. முதல் நிகழ்ச்சி நியூயார்க்கில் உள்ள பே ஷோரில் நடந்தது, தொடக்க நிகழ்ச்சியில் பாரம்பரிய ராக் மூவரான ஜீப்ரா கலந்துகொண்டது.[7]

நான்காம் இசை நிகழ்ச்சிக்குப் பிறகு, பல்வேறு கருத்து வேறுபாடுகளின் காரணமாக டாமினிஸி அந்த இசைக்குழுவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர், நியூயார்க்கில் உள்ள கிக் மற்றும் ரிட்ஸ் ஆகிய இடங்களில் தங்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சியை நடத்துமாறு மேரிலன் இசைக்குழு டிரீம் தியேட்டரை கேட்டுக்கொண்டது, ஆகவே கடைசி முறையாக பாடுவதற்கு டாமினிஸிக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது.[7] டிரீம் தியேட்டர் தங்களுடைய வயலின் இசைக்கலைஞரை இதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பாக மாற்றியது.

இமேஜஸ் அன்ட் வேர்ட்ஸ் மற்றும் அவேக் (1991–1994) தொகு

டாமினிஸியின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து, மெக்கானிக் உடனான ஒப்பந்தத்தை டிரீம் தியேட்டர் கைவிட்டதுடன், புதிய பாடகரைத் தேடுவது மற்றும் அடுத்த இசைத்தொகுப்பிற்குத் தேவைப்படும் பாடல்களை எழுதுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது. 200க்கும் மேற்பட்ட புதிய பாடகர்கள் அவர்களின் தேர்வுக்குழு பட்டியலில் இடம் பெற்றிருந்தனர் என்பதுடன், ஃபேட்ஸ் வார்னிங்ஸ் இசைக்குழுவின் முன்னணிப் பாடகர் ஜான் ஆர்க் என்பவரும் அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்தார். பின்னர் அவர்கள் அனைவரும் நிராகரிக்கப்பட்டனர். 1990 ஆம் ஆண்டின் மத்தியில், நியூயார்க்கில் உள்ள கிக்கில், ஸ்டீவ் ஸ்டோன் என்பவர் டிரீம் தியேட்டர் இசைக்குழுவின் புதிய பாடகராக அறிமுகப்படுத்தப்பட்டார். அவர் போதுமான திறமையின்மையின் காரணமாக வெளியேற்றப்படுவதற்கு முன்பாக, அந்த இசைக்குழுவுடன் இணைந்து மூன்று பாடல்களை மட்டுமே பாடினார்.[8] அந்த நிகழ்வுகளின் ஐந்து மாதங்களுக்கு முன்பாக டிரீம் தியேட்டர் அனைத்து இசைக்கருவிகளையும் பயன்படுத்தி மற்றொரு இசை நிகழ்ச்சியை நடத்தியது (ஓயிட்ஸ்ஜாம் என்ற பெயரில்). 1991 ஆம் ஆண்டு வரை, அந்த இசைக்குழு புதிய பாடகரைத் தேர்ந்தெடுப்பது மற்றும் கூடுதலான பாடல்களை எழுதுவது போன்றவற்றில் கவனம் செலுத்தி வந்தது.[7] அந்தச் சமயத்தில் எழுதப்பட்ட பெரும்பாலான பாடல்கள் 1992 ஆம் ஆண்டில் இமேஜெஸ் அன்ட் வோர்ட்ஸ் என்ற இசைத்தொகுப்பை உருவாக்க காரணமாக அமைந்தது.

1991 ஆம் ஆண்டு சனவரியில், கிளாம் மெட்டல் மற்றும் வின்டர் ரோஸ் இசைக்குழுக்களைச் சேர்ந்த கெவின் ஜேம்ஸ் லேப்ரி என்பவர் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக கனடாவிலிருந்து நியூயார்க்கிற்கு வந்தார். லேப்ரி மூன்று பாடல்களைப் பாடினார், அதைக் கேட்ட டிரீம் தியேட்டர் அவரை தங்கள் இசைக்குழுவின் புதிய பாடகராகத் தேர்வு செய்தது. டிரீம் தியேட்டர் இசைக்குழுவில் கெவின் என்ற ஒருவர் ஏற்கனவே இருப்பதன் காரணமாக, லேப்ரி அந்த இசைக்குழுவில் சேர்ந்தவுடன் தனது பெயரின் முதல் வார்த்தையை நீக்க முடிவு செய்தார். லேப்ரியைத் தேர்வு செய்வதற்கு முன்பு, புதிய பாடல்களை எழுதிக் கொண்டிருந்த சமயத்தில், டிரீம் தியேட்டர் பல்வேறு நேரடி இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தது (பெரும்பாலனவை நியூயார்க்கின் என்ஒய்சி பகுதியில் நடத்தப்பட்டன). மூன்று பாடல்களை ஒத்திகை பார்த்த ("தி அட்கோ டெமோஸ்" என்ற பெயரில் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு டிரீம் தியேட்டர் ரசிகர் சங்கங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது) பிறகு, ஏழு இசைத்தொகுப்புகளை உருவாக்குவதற்கு எலெக்ட்ரா பதிவகத்தின் பிரிவுகளான டெர்க் சுல்மான் மற்றும் அட்கோ பதிவகம் (தற்போது ஈஸ்ட்வெஸ்ட் என்றழைக்கப்படுகிறது) ஆகியவை டிரீம் தியேட்டருடன் ஒப்பந்தம் செய்துகொண்டன.

அவர்களுடனான ஒப்பந்தத்தின் கீழ், 1992 ஆம் ஆண்டு இமேஜஸ் அன்ட் வேர்ட்ஸ் என்ற இசைத்தொகுப்பு முதன் முறையாகப் பதிவு செய்யப்பட்டது. "அனதர் டே" என்ற பாடலின் வட்டுக்கள் மற்றும் நிகழ்படக் காட்சிகள் வெளியிடப்பட்டன, ஆனால் இரண்டும் வணிகரீதியாகப் போதுமான வரவேற்பைப் பெறவில்லை. டிரீம் தியேட்டரின் பெயர் மற்றும் முத்திரையைப் பயன்படுத்தாமல் வெளியிடப்பட்ட "புல் மி அன்டர்" என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வானொலியில் பல முறை ஒலிபரப்பப்பட்டது. இந்த வரவேற்பைத் தொடர்ந்து, அட்கோ "புல் மி அன்டர்" பாடலின் நிகழ்படக் காட்சிகள் வெளியிடப்பட்டது என்பதுடன், அந்தப் பாடல் எம்டிவியில் பல முறை திரையிடப்பட்டது. இதே போன்று "டேக் தி டைம்" என்ற பாடலின் நிகழ்படக் காட்சிகள் வெளியிட்டது, ஆனால் இது "புல் மி அன்டர்" பாடலைப் போன்று மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லை.

அமெரிக்கா மற்றும் ஜப்பான் முழுவதும் "புல் மி அன்டர்" பாடல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, இதன் காரணமாக இமேஜஸ் அன்ட் வேர்ட்ஸ் இசைத்தொகுப்பு அமெரிக்காவில் பொன்னிறச் சான்றிதழையும், ஜப்பானில் பிளாட்டினத்தினாலான சான்றிதழையும் பெற்றது. 1993 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் போது, லண்டனில் உள்ள புகழ்பெற்ற மார்க்யூ கிளப்பில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த இசை நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டு பின்னர் லைஃவ் அட் தி மார்க்யூ என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இது டிரீம் தியேட்டரின் முதல் நேரடியான இசை நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் ஜப்பானிய இசை நிகழ்ச்சிகள் (ஆவணப்படத்தைப் போன்று மேடைக்குப் பின்னால் நடைபெற்ற நிகழ்வுகளை உள்ளடக்கியது) அடங்கிய நிகழ்படத் தொகுப்புகள் இமேஜஸ் அன்ட் வேர்ட்ஸ்: லைவ் இன் டோக்கியோ என்ற பெயரில் பின்னர் வெளியிடப்பட்டது.

புதிய இசையை உருவாக்குவதில் உள்ள ஆர்வத்தால் டிரீம் தியேட்டர் 1994 ஆம் ஆண்டில் மீண்டும் இந்த பாடல் பதிவகத்தில் அடியெடுத்து வைத்தனர். அவேக் டிரீம் தியேட்டரின் மூன்றாவது இசைத்தொகுப்பு என்பதுடன், 1994 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அந்த இசைத்தொகுப்பு வெளிவந்த பின்னர், இசைச் சுற்றுப் பயணத்தில் மீதமிருக்கும் இசைத்தொகுப்பை செய்துமுடிக்க தனக்கு விருப்பம் இல்லை எனவும், அதே சமயம் தன்னுடைய இசை ஆர்வத்தில் கவனம் செலுத்துவதற்காக, டிரீம் தியேட்டரிலிருந்து விலகப்போவதாகவும் மூர் அறிவித்தார்.[9] இதன் காரணமாக, இசைச் சுற்றுப்பயணம் தொடங்குவதற்கு முன்பாக, புதிய கீபோர்ட் இசைக் கலைஞரை தேர்ந்தெடுப்பது அந்த இசைக்குழுவிற்கு மிகவும் சிரமமாக இருந்தது. இசைத்தொகுப்பு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடம் அவேக் நல்ல வரவேற்பைப் பெற்றது. பல பாடல்களின் உட்பொருள் முரண்பாடுகளைக் கொண்டிருந்த காரணத்தினால், இந்த இசைத்தொகுப்பு டிரீம் தியேட்டரின் சோகமான இசைத்தொகுப்பு என்று பலராலும் கருதப்படுகிறது. உதாரணமாக, "தி மிரார்" என்ற பாடல் மதுவை மையப்படுத்தும் விதத்தில் இருக்கும், மேலும் அந்தச் சமயத்தில் போர்ட்னாய் மதுப் பழக்கத்திலிருந்து மீண்டு வந்தார்.

ஸ்டிராடோவேரியஸ் இசைக்குழுவின் உறுப்பினரான ஜென்ஸ் ஜோஹன்சன் என்பவர் புதிய கீபோர்ட் இசைக் கலைஞருக்கான தேர்வுப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார், இருந்தபோதும் டிரீம் தியேட்டர் இசைக்குழு உறுப்பினர்கள் ஜோர்டன் ரட்டெஸ் என்பவரை புதிய கீபோர்ட் இசைக் கலைஞராகத் தேர்வு செய்ய விரும்பினர். போர்ட்னாய் மற்றும் பெட்ரூசி இருவரும் கீபோர்ட் பத்திரிகையில் ரட்டெஸைக் குறித்த கட்டுரையைக் கண்டனர், மேலும் அவர் "திறமையான இசைக் கலைஞர்" என்று அந்தப் பத்திரிகையின் வாசகர்களால் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. போர்ட்னாய் மற்றும் பெட்ரூசி இருவரும் கலிபோர்னியாவின், பர்பேங்கில் உள்ள கான்க்ரீட் பவுண்டேஷன் ஃபோரமில் ஒத்திகை நடத்த ரட்டெஸை அழைத்தனர்.[7] அவர் ஒத்திகை நிகழ்ச்சியில் சிறப்பான முறையில் தனது திறமையை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக அவர் நிரந்தர கீபோர்ட் இசைக் கலைஞராக டிரீம் தியேட்டர் இசைக்குழுவில் பணியாற்றுமாறு அனைவராலும் கேட்டுக்கொள்ளப்பட்டார். இருந்தபோதும் டிக்ஸி டிரெக்ஸ் இசைக்குழுவுடன் இசைச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தான் முடிவு செய்திருந்ததாக ரட்டெஸ் டிரீம் தியேட்டர் உறுப்பினர்களிடம் தெரிவித்தார், இதற்காக அவருக்குப் பிரத்தியேக அனுமதி வழங்கப்பட்டது. ஏமாற்றமடைந்த டிரீம் தியேட்டர் அவேக் சுற்றுப்பயணத்திற்காக, அலீஸ் கூப்பர் மற்றும் கிஸ் ஆகியோருடன் இணைந்து பணியாற்றிய தங்களுடைய முன்னாள் மாணவரான டெரக் ஷெரினியனை பணிக்கு அமர்த்தினர். இசைச் சுற்றுப்பயணத்தின் இறுதியில், டிரீம் தியேட்டர் இசைக்குழு ஷெரினியனை முழுநேர கீபோர்ட் இசைக் கலைஞராக நியமிக்க முடிவு செய்தது.[3]

எ சேஞ் ஆப் சீசன்ஸ் மற்றும் ஃபாலிங் இன்டூ இன்ஃப்பினிட்டி (1995–1998) தொகு

புதிய இசைக் கலைஞரைத் தேர்ந்தெடுத்த பிறகு, டிரீம் தியேட்டர் உடனடியாகப் புதிய வேலைகளில் ஈடுபடவில்லை. உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் ஒன்றிணைந்து ஓயிட்ஸ்ஜாமில் மின்னஞ்சல்களை அனுப்பினர் (டிரீம் தியேட்டர் மற்றும் ரசிகர்களுக்கு இடையேயான பெரும்பாலான உரையாடல்கள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்பட்டது) என்பதுடன், "எ சேஞ் ஆப் சீசன்ஸ்" பாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிடுமாறு டிரீம் தியேட்டரை வற்புறுத்தினர். இமேஜஸ் அன்ட் வேர்ட்ஸ் என்ற இசைத்தொகுப்பில் சேர்ப்பதற்காக அந்தப் பாடல் 1989 ஆம் ஆண்டு எழுதப்பட்டதுடன், 17 நிமிடங்கள் ஓடக்கூடிய பாடலாகும். இருந்தபோதும், அந்த இசைக்குழு நேரடி நிகழ்ச்சியில் அந்தப் பாடலை அரங்கேற்றம் செய்தது, மேலும் அந்தப் பாடல் 1995 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

ரசிகர்களின் கோரிக்கை வெற்றிகரமாக நிறைவற்றப்பட்டது. அந்த இசைக்குழு 1995 ஆம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள பியர்டிராக்ஸ் இசைப் பதிவகத்தில் 23 நிமிடங்கள் வரை நீடிக்கும் பாடலை ஒலிப்பதிவு செய்தது, அத்துடன் ஷெரினியன் அந்தப் பாடலை ஒலிப்பதிவு செய்வதற்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்தார். "எ சேஞ் ஆப் சீசன்" பாடலை விளம்பரப்படுத்துவதற்கு, அந்த இசைக்குழு அப்பாடலை இபியில் வெளியிட்டது, அதே சமயம் முக்கிய பாடல்கள் அனைத்தும் ரசிகர் சங்கங்களுக்கு முன்பாக நேரடியாக ஒலிப்பதிவு செய்யப்பட்டன.

எ சேஞ் ஆப் சீசன் பாடலை விளம்பரப்படுத்துவதற்குப் போதுமான இசை நிகழ்ச்சிகளை நடத்திய பிறகு, டிரீம் தியேட்டர் இசைக்குழு சில மாதங்கள் ஓய்வு எடுத்துக்கொண்டது. மேலும் அந்த இசைக்குழு முந்தைய ஆண்டுகளில் ஒலிப்பதிவு செய்த அரிதான ஒலித்தடங்களை வட்டுக்களில் பதிவு செய்து, தங்களின் ரசிகர் சங்க அமைப்புகளின் வழியாக கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியிட்டது. அந்த இசைக்குழுவினர் 2005 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு கிறிஸ்துமஸ் தினத்தன்றும் புதிய வட்டுக்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.[10] மேலும் ஓய்வு நேரங்களின் போது, இசைக்குழுவைச் சேர்ந்த ஒவ்வொரு உறுப்பினர்களும் புதிய பாடல்களை எழுதுவதில் ஆர்வம் காட்டினர்.

அதே சமயம், ஈஸ்ட்வெஸ்டில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன என்பதோடு லேபிளிற்குள்ளான டிரீம் தியேட்டரின் தொடர்பு நீக்கப்பட்டது. டிரீம் தியேட்டருடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்காத ஈஸ்ட்வெஸ்டின் புதிய குழு அதன் முன்னாள் உறுப்பினர்களிடம் நல்ல உறவுமுறையைக் கொண்டிருந்தது, மேலும் அந்த புதிய குழு எளிதாகப் புரிந்துகொள்ளும்படியான இசைத்தொகுப்பை உருவாக்கும்படி டிரீம் தியேட்டரை நிர்பந்தித்தது. 1997 ஆம் ஆண்டின் மத்தியில், டிரீம் தியேட்டர் தங்களின் அடுத்த இசைத்தொகுப்பை இசைப்பதிவு செய்தது. முக்கிய பாடல்களை இயற்றுவதற்கு அந்த இசைக்குழு நிர்பந்திக்கப்பட்டது, அதே சமயம் "யூ ஆர் மீ" என்ற பாடல் வரிகளைச் செம்மையாக்குவதற்கு எழுத்தாளரும்/தயாரிப்பாளருமான டெஸ்மாண்ட் சைல்ட் என்பவரை ஈஸ்ட்வெஸ்ட் நிறுவனம் பணியில் அமர்த்தியது. அந்தப் பாடலுக்கான இசையை உருவாக்கும் பணியை டிரீம் தியேட்டர் இசைக்குழு போதுமான அளவில் செய்து முடித்தது, மேலும் பழைய அனுபவங்களை நினைவூட்டும் அந்தப் பாடல் இசைத்தொகுப்பில் "யூ நாட் மீ" என்ற பெயரில் சேர்க்கப்பட்டது. குழந்தைகள் அந்த இசைத்தொகுப்பில் சிறப்பிக்கப்பட்டிருந்தனர், மேலும் அந்த இசைத்தொகுப்பு எளிமையாகவும், குழந்தைகள் புரிந்துகொள்ளும்படியும் இருந்தது.

டிரீம் தியேட்டர் இசைக்குழு 20 நிமிட நேரம் நீடிக்கும் "மெட்ரோபோலிஸ் பார்ட் 1: தி மிராக்கிள் அன்ட் தி ஸ்லீப்பர்" என்ற பாடலை உள்ளடக்கிய இமேஜஸ் அன்ட் வேர்ட்ஸ் என்ற இசைத்தொகுப்பை இரண்டு வட்டுக்களாக வெளியிட்டது. அந்த இசைத்தொகுப்பு இரண்டு வட்டுக்களாக வெளிவருவதை அந்த நிறுவனம் விரும்பவில்லை, மேலும் 140-நிமிட நேர ஒலிப்பதிவைக் கொண்ட அந்த வட்டுக்களை பொது மக்கள் விரும்பமாட்டார்கள் என்று அந்த நிறுவனம் கருதியது. ஜேம்ஸ் லேப்ரியும் அந்த இசைத்தொகுப்பை ஒரே வட்டில் வெளியிடுவதையே விரும்பினார்.[11] ஓயிட்ஸ்ஜாம் ரெக்கார்ட்ஸ் அதிக அறிமுகமில்லாத பாடல்களைப் பின்னர் ஃபாலிங் இன்டூ இன்ஃப்பினிட்டி இசைத்தொகுப்பின் அறிமுக விழாவில் வெளியிட்டது[12].

பின்னர் திட்டமிட்டபடி ஃபாலிங் இன்டூ இன்ஃப்பினிட்டி இசைத்தொகுப்பு சிறந்த முறையில் வெளியிடப்பட்டது என்பதுடன், அந்த இசைத்தொகுப்பு டிரீம் தியேட்டரின் முந்தைய பாடல்களை நன்கு அறிந்திருந்த ரசிகர்களிடம் மாறுபட்ட விமர்சனங்களைப் பெற்றது. அந்த இசைத்தொகுப்பு நவீனமயமாக இருந்தது என்பதுடன், "ஹாலோ இயர்ஸ்" மற்றும் "யூ நாட் மீ" போன்ற ஒலித்தடங்கள் புதிய விடியலைப் போல இருந்தது. மேலும் அவைகள் டிரீம் தியேட்டரின் முக்கிய பாடல்களாகக் கருதப்பட்டன. மொத்தத்தில் அந்த இசைத்தொகுப்பு விமர்சகர்களின் வரவேற்பைப் பெறவில்லை என்பதுடன், வணிகரீதியாக ஏமாற்றத்தை அளித்தது. அந்தச் சமயத்தில் போர்ட்னாய் இதைப் பற்றி வெளிப்படையாக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார், மேலும் தான் நம்பிக்கையின்மையின் காரணமாக அந்தச் சமயத்தில் இசைக்குழுவைக் கலைத்து விட எண்ணியதாக 2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற பைவ் இயர்ஸ் இன் அ லைவ் டைம் என்ற நிகழ்பட வெளியீட்டு விழாவில் போர்ட்னாய் தெரிவித்தார்.

டூரிங் இன்டூ இன்ஃப்பினிட்டி என்ற ஐரோப்பிய இசைச் சுற்றுப் பயணத்தின் போது, இசைத்தொகுப்பிற்காக இரண்டு நேரடியான இசை நிகழ்ச்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டன என்பதுடன், அந்த இசைத்தொகுப்பு பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து நாடுகளில் ஒன்ஸ் இன் எ லைவ் டைம் என்று பெயரிடப்பட்டது. பைவ் இயர்ஸ் இன் அ லைவ் டைம் நிகழ்படம் வெளியிடப்பட்ட சமயத்தில் அந்த இசைத்தொகுப்பும் வெளியிடப்பட்டது. ஃபாலிங் இன்டூ இன்ஃப்பினிட்டி என்ற இசைத்தொகுப்பை விளம்பரப்படுத்தும் சுற்றுப்பயணத்தின் போது, கெவின் மூர் அந்த இசைக்குழுவிலிருந்து வெளியேறிய பிறகு, அந்த இசைக்குழுவில் நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளையும் இந்த நிகழ்படம் விவரிக்கிறது.

சீன்ஸ் ஃப்ரம் மெமரி மற்றும் மெட்ரோபோலிஸ் 2000 (1999–2001) தொகு

1997 ஆம் ஆண்டு, மேக்னா கார்டா இசைப்பதிவகத்தைச் சேர்ந்த மைக் வார்னே ஒரு இசைத்தொகுப்பை உருவாக்குவதற்கு வருமாறு போர்ட்னாய்க்கும் அவரது 'சிறந்த இசைக்குழுவிற்கும்' அழைப்பு விடுத்தார். மேலும் சிறிய இசை நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருந்த டிரீம் தியேட்டர் உறுப்பினர்களுக்கு இது முதல் மிகப்பெரிய இசை நிகழ்ச்சியாக அமைந்தது.[13] போர்ட்னாய் டிரம்ஸ் வாசிப்பவராகவும், பெட்ரூசி கித்தார் இசைக்கலைஞராகவும், டோனி லெவின் அடித்தொனி பாடகராகவும், மற்றும் டிக்ஸி டிரெக்ஸிற்குப் பதிலாக ஜோர்டன் ரட்டெஸ் கீபோர்ட் இசைக் கலைஞராகவும் செயல்பட்டனர். ஒரு புதிய இசைத்தொகுப்பை உருவாக்குவதற்கு அந்த இசைக்குழு லிக்யூட் டென்ஷன் எக்ஸ்பிரிமென்ட் என்ற பெயரில் செயல்பட்டதுடன், ரட்டெஸை மீண்டும் டிரீம் தியேட்டரில் சேர்ப்பதற்காக அந்த இசைக்குழு உறுப்பினர்கள் போர்ட்னாய் மற்றும் பெட்ரூசி ஆகியோருக்கு இடையில் பாலமாகச் செயல்பட்டனர். 1999 ஆம் ஆண்டு, ஷெரினியனுக்கு மாற்றாக ரட்டெஸ் டிரீம் தியேட்டரின் மூன்றாவது முழுநேர கீபோர்ட் வாசிக்கும் இசைக் கலைஞராக சேர்த்துக்கொள்ளப்பட்டார்.[3]

டிரீம் தியேட்டர் இசைக்குழு மற்றொரு புதிய உறுப்பினருடன் பியர்டிராக்ஸ் இசைப்பதிவகத்தில் தங்களின் அடுத்த இசைத்தொகுப்பை ஒலிப்பதிவு செய்யத் தொடங்கியது. போர்ட்னாயின் இறுதிக் கோரிக்கையினால் இந்த முத்திரையானது இசைக்குழுவிற்கு முழுமையான படைப்பாக்க கட்டுப்பாட்டை வழங்கியது. ஃபாலிங் இன்டூ இன்ஃப்பினிட்டி இசைத்தொகுப்பை எழுதும்போது இயற்றப்பட்ட "மெட்ரோபோலிஸ் பார்ட் 1" என்ற பாடலை (ஆனால் இந்தப் பாடல் இசைத்தொகுப்பில் சேர்க்கப்படவில்லை) மறுபதிப்பு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 20-நிமிடங்கள் வரை நீடிக்கும் அந்தப் பாடலை இசைத்தொகுப்பின் மையக் கருத்தாக மாற்றுவதற்கு அந்த இசைக்குழுவினர் முடிவு செய்தனர். மேலும் மறு பிறப்பு, கொலை மற்றும் நம்பிக்கைத் துரோகம் போன்ற பல நிகழ்வுகளை உள்ளடக்கிய காட்சிகளும் இசைத்தொகுப்பில் சேர்க்கப்பட்டன. ரசிகர்களின் மத்தியில் குழப்பம் ஏற்படுத்துவதைத் தடுப்பதற்கு, அந்த இசைத்தொகுப்பு மிகவும் ரகசியமாக ஒளிப்பதிவு செய்யப்பட்டது. இசைக்குழுவின் விருப்பங்கள் மற்றும் அறிவிக்கப்பட்ட வெளியீட்டுத் தேதி போன்றவற்றிற்கு எதிராக ரசிகர்கள் தனிப்பட்ட முறையில் சட்டவிரோதமாக பாடல்கள் மற்றும் ஒலித்தடங்களை வெளியிட்டனர். 1999 ஆம் ஆண்டில் மெட்ரோ போலிஸ் பார்ட் 2: சீன்ஸ் பிரம் எ மெமரி வெளியிடப்பட்டது என்பதுடன், மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அந்த இசைத்தொகுப்பு அமெரிக்க இசைத்தொகுப்பு அட்டவணையில் 73 ஆம் இடத்தைப் பிடித்திருந்த போதிலும், டிரீம் தியேட்டரின் மிகச் சிறந்த படைப்பாக ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் கருதப்பட்டது.[1]

அந்த இசைத்தொகுப்பு டேவிட் போட்ரில் என்பவரால் சிறிது மாற்றம் செய்யப்பட்டது, ஆனால் அவரின் சில மாற்றங்களே இசைத்தொகுப்பில் இறுதியாக சேர்த்துக்கொள்ளப்பட்டது. அந்த இசைத்தொகுப்பின் பெரும்பாலானவை கெவின் சிர்லே என்பவரால் கலப்பிசை செய்யப்பட்டது. அந்த இசைத்தொகுப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ள பிற பகுதிகள் அனைத்தும் சட்ட விரோதமாக டிரீம் தியேட்டரின் "தி மேக்கிங் ஆப் சீன்ஸ் பிரம் எ மெமரி" என்ற ஒலித்துடன் வெளியிடப்பட்டது.

அந்த இசைத்தொகுப்பை ஒலிப்பதிவு செய்வதற்காக, டிரீம் தியேட்டர் இசைக்குழு ஒரு வருடத்திற்கும் மேலாக உலகம் முழுவதும் இசைச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டது, இது அந்த இசைக்குழுவின் சாதனைகளுள் ஒன்றாகும். டிரீம் தியேட்டரின் இசை நிகழ்ச்சிகள் அனைத்தும் அந்த இசைத்தொகுப்பின் சிறப்பை வெளிப்படுத்தும்படியாக இருந்தது. சீன்ஸ் பிரம் எ மெமரி என்ற இசைத்தொகுப்பைக் குறித்த இசை நிகழ்ச்சியை டிரீம் தியேட்டர் இசைக்குழு நடத்தியது என்பதுடன், மேடையின் பின்புறச் சுவரில் நிகழ்படத் திரையினைப் பொருத்தி அதன் மூலமாக அந்த இசைத்தொகுப்பை விவரிக்கும் காட்சிகளைத் அக்குழுவினர் திரையிட்டுக் காண்பித்தனர். அந்த இசைத்தொகுப்பை முழுமையாக விவரிப்பதற்காக, இசைக்குழுவினர் டிரீம் தியேட்டரின் இரண்டாம் கட்டப் பாடல்களை பாடிக் காண்பித்தனர் என்பதுடன், டிரீம் தியேட்டரின் பழைய இசைகளை முன் ஆயத்தமின்றி இசைத்துக் காட்டினர். நியூயார்க் நகரத்தில் உள்ள ரோஸ்லேண்ட் பேல்ரூம் இசைக் கூடத்தில் கூடுதலான ஒரு இசை நிகழ்ச்சியை நடத்துவதற்காக நடிகர்கள் வரவழைக்கப்பட்டு, அந்த இசைத்தொகுப்பின் திரைக்கதையில் வரும் கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். கோஸ்பெல் கோயெர் சிறந்த முறையில் நிகழ்ச்சியை நடத்த உதவினார்.

டிரீம் தியேட்டர் இசைக்குழுவின் முதல் டிவிடி வெளியீட்டிற்காக, வட அமெரிக்கச் சுற்றுப்பயணத்தின் போது நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சி ஒளிப்பதிவு செய்யப்பட்டது. பல தொழில்நுட்ப பிரச்சினைகளுக்குப் பின்னர், அந்த டிவிடி மெட்ரோபோலிஸ் 2000 என்ற பெயரில் 2001 ஆம் ஆண்டிற்கு முன்பாக வெளியிடப்பட்டது. அதன் பின்னர், இந்த இசை நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய நான்கு-மணி நேரம் வரை ஓடும் ஒலிநாடாக்கள் (அவற்றுள் பெரும்பாலானவை டிவிடியின் இடப் பற்றாக்குறை காரணமாக நீக்கம் செய்யப்பட்டது) வெளியிடப்படும் என்று அந்த இசைக்குழு அறிவித்தது.

லைவ் சீன்ஸ் ஃப்ரம் நியூயார்க் என்று தலைப்பிடப்பட்ட இந்த இசைநிகழ்ச்சியின் சிடி பதிப்பிற்கு அட்டையில் சித்தரிக்கப்பட்டிருந்த டிரீம் தியேட்டரின் முந்தையகால இலச்சினை (இமேஜஸ் அண்ட் வேர்ட்ஸ் இசைத்தொகுப்பு வெளிவந்த காலகட்டத்தில் கிறிஸ்துவின் புனித இதயத்தை மாதிரியாகக் கொண்டிருந்த எரியும் இதயம் இடம்பெற்றிருந்தது) இதயத்திற்கு பதிலாக ஆப்பிளைக் ("பிக் ஆப்பிளில்" உள்ளது போன்று) காட்டும்படி மேம்படுத்தப்பட்டிருந்தது, அத்துடன் நியூயார்க் ஸ்கை லைனில் அதில் எரியும் தீத்தணலுக்கு மேலாக உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரம் சேர்க்கப்பட்டிருந்தது. ஒரு எதிர்பாராத யதார்த்த நிகழ்வில் இந்த இசைத்தொகுப்பு தாக்குதல் நடைபெற்ற செப்டம்பர் 11 ஆம் தேதியில் வெளியிடப்பட்டது. இந்த இசைத்தொகுப்பு இசைக்குழுவினரால் விரைவாக திரும்பப் பெறப்பட்டு பின்னாளில் திருத்தப்பட்ட கலைவேலைப்பாட்டோடு மறுவெளியீடு செய்யப்பட்டது.[14]

சிக்ஸ் டிகிரிஸ் ஆஃப் இன்னர் டர்புலன்ஸ் (2002) தொகு

டிரீம் தியேட்டர் மீண்டும் தங்களுடைய ஆறாவது இசைப்பதிவக இசைத்தொகுப்பை பதிவுசெய்ய பியர்டிராக்ஸ் ஸ்டியோஸிற்கு வந்தது. அவர்களுடைய இரட்டை இசைத்தொகுப்பை வெளியிடுவதற்கு முதலாவதாக ஈஸ்ட்வெஸ்ட்டிற்கு விண்ணப்பித்த நான்கு வருடங்களுக்கு பின்னர் அவர்களுக்கு சிக்ஸ் டிகிரிஸ் ஆஃப் இன்னர் டர்புலன்ஸ் இசைத்தொகுப்பிற்கு அனுமதி கிடைத்தது. முதல் வட்டு 7-13 நிமிடங்கள் நீள்கின்ற ஐந்து இசைத்தடங்களைக் கொண்டிருந்தது, இரண்டாவது வட்டு முற்றிலுமாக 42-நிமிட தலைப்பு இசைத்தடத்திற்கென்று அர்ப்பணிக்கப்பட்டது. இது இன்றளவும் டிரீம் தியேட்டர் படைப்புகளில் மிக நீளமான பாடலாக இருந்து வருகிறது. சிக்ஸ் டிகிரிஸ் ஆஃப் இன்னர் டர்புலன்ஸில் "தொடக்க வாத்திய இசையாக" இருக்க வேண்டும் என்று ரூட்ஸ் எழுதியபோது இந்த வகைப்பாடு தோன்றியது, மேலும் இந்த இசைக்குழு அதற்குள்ளே இருக்கும் சில மெல்லிசைகளுக்கு ஏற்ப அத்தியாங்களை விரிவுபடுத்தியது.[3]

சிக்ஸ் டிகிரிஸ் ஆஃப் இன்னர் டர்புலன்ஸ் விமர்சகர்களாலும் பத்திரிக்கையாளர்களாலும் பாராட்டப்பட்டது. அவேக் இசைத்தொகுப்பைச் சேர்ந்த இப்பாடல் டிரீம் தியேட்டருக்கு மிகப்பெரிய பெயரைப் பெற்றுத்தந்தது என்பதுடன் பில்போர்ட் அட்டவணையில் 46 ஆம்[1] இடத்தைப் பெற்றது, அத்துடன் இது பில்போர்டின் இணையதள அட்டவணையில் முதலாவது இடத்தைப் பிடித்தது.[15] அடுத்து வந்த ஒன்றரை வருடங்களுக்கு அவர்கள் மீண்டும் ஒருமுறை உலக சுற்றுப்பயணம் மேற்கொண்டனர், அத்துடன் அவர்கள் மெட்டாலிக்காவின் மாஸ்டர் ஆஃப் பப்பட்ஸ் மற்றும் அயர்ன் மெய்டனின் தி நம்பர் ஆஃப் தி பீஸ்ட் ஆகியவற்றை இசைத்திருக்கும் தேர்ந்த சிறப்பு "இசைத்தொகுப்பு மறுபதிவுகளை" (மறுபதிவு பாடல்களை கீழே பார்க்கவும்) உள்ளிட்டிருந்தனர்.

டிரெய்ன் ஆஃப் தாட் மற்றும் புடாகனில் நேரடி நிகழ்ச்சி (2003–2004) தொகு

2003 ஆம் ஆண்டு டிரீம் தியேட்டர் உறுப்பினர்கள் மற்றொரு இசைத்தொகுப்பை எழுதி பதிவுசெய்ய இசைப்பதிவகத்திற்கு வந்தனர். இந்த இசைப்பதிவகத்தில் சீன்ஸ் ஃப்ரம் எ மெமரி இசைத்தொகுப்பை பதிவுசெய்வதற்கு முன்பாக அதை எழுதுவதற்கு மட்டும் இந்த இசைக்குழு மூன்று வாரங்களை எடுத்துக்கொண்டது. இந்த இசைத்தொகுப்பை பதிவு செய்வதற்கு மத்தியில் குயின்ஸ்ரிஷே மற்றும் ஃபேட்ஸ் வார்னிங் உள்ளிட்ட மெட்டல் இசைக்குழுக்களுடன் இந்த இசைக்குழு வட அமெரிக்காவில் ஒரு சிறப்பு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டது. டிரீம் தியேட்டரின் மேம்பாட்டு அம்சங்களில் குறிப்பிடப்பட்டிருந்தபடி "எஸ்கேப் ஃப்ரம் தி ஸ்டுடியோ அமெரிக்கன் சுற்றுப்பயணத்தில்" குயின்ஸ்ரிஷே இடம்பெற்றிருந்தது என்பதுடன் டிரீம் தியேட்டர் துணைக் குழுவாக ஃபேட்ஸ் வார்னிங் உடன் இணைந்து நிகழ்ச்சிகளை நடத்தியது. ஒவ்வொரு நிகழ்ச்சியின் இறுதியிலும் டிரீம் தியேட்டர் மற்றும் குயின்ஸ்ரிஷே ஆகிய இரண்டும் இணைந்து அடுத்தடுத்து மறுபடைப்பு பாடல்களை மேடைகளில் நிகழ்த்தினர்.

இந்த சுற்றுப்பயணத்தின் நிறைவாக டிரீம் தியேட்டர் டிரெயின் ஆஃப் தாட் என்ற தங்களுடைய ஏழாவது ஆல்பத்தை பதிவுசெய்ய இசைப் பதிவகத்திற்கு வந்தது. அவர்கள் பாடல் சார்ந்த இசைத்தொகுப்பை எழுதுவதிலேயே பெரும் கவனம் செலுத்தினர், இவை முந்தைய இசைநிகழ்ச்சி சுற்றுப்பயணங்களில் மாஸ்டர் ஆஃப் பப்பட்ஸ் மற்றும் நம்பர் ஆஃப் தி பீஸ்ட் ஆகியவற்றினால் உருவான மனநிலையை தூண்டுதலாகக் கொண்டிருந்தனர். அதன் காரணமாக, அந்த இசைத்தொகுப்பின் மிகவும் முற்போக்கான மெட்டல் ஒலி டிரெயின் ஆஃப் தாட்டில் ஊர்ந்து செல்வதுபோல் காணப்பட்டது.[16] இந்த ஆல்பம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத்தந்தது, ஆனால் இது யெஸ் அல்லது கிங் கிரிம்ஸன் போன்ற பாரம்பரிய முன்னேற்ற ராக் இசைக்கு முன்னுரிமையளிக்கும் டிரீம் தியேட்டரின் ரசிகர்கள்[யார்?] பெரும்பாலானோருக்கு ஏமாற்றத்தையே அளித்தது. இருப்பினும் டிரீம் தியேட்டர் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருந்தது.[3]

அதற்கடுத்த வந்த மற்றொரு உலக சுற்றுபயணத்தின்போது டிரீம் தியேட்டர் யெஸ் உடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியது. ஒரு மிதமான வட அமெரிக்க சுற்றுப்பயணம் இரண்டு இசைக்குழுக்களால் நிறைவுசெய்யப்பட்டிருந்தது. அதன் பின்னர் டிரீம் தியேட்டர் தங்களுடைய "அன் ஈவ்னிங் வித் டிரீம் தியேட்டர்" என்றழைக்கப்படும் நிகழ்ச்சிகளுக்காக சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்தது.

மற்றொரு நேரடி சிடி/டிவிடி கலவையை வெளியிடுவதே அவர்களுடைய அடுத்த நடவடிக்கையாக இருந்தது. இந்த முறை அவர்களுடைய உலக சுற்றுப்பயணத்தில் டிரெயின் ஆஃப் தாட் என்ற இசைத்தொகுப்பு ஜப்பானின் டோக்கியோவில் உள்ள புகழ்பெற்ற நிப்பான் புடோகன் மையத்தில் பதிவு செய்யப்பட்டது. லைவ் அட் புடோகன் 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி வெளியிடப்பட்டது, இதன் காரணமாக டிரீம் தியேட்டர் உறுப்பினர்கள் நேரடி நிகழ்ச்சி நடத்துவதில் சிறந்தவர்கள் என்ற புகழைப் பெற்றனர்.

ஆக்டாவேரியம் மற்றும் ஸ்கோர் (2005–2006) தொகு

 
2005 ஆம் ஆண்டு பாரிஸில் இசை நிகழ்ச்சியை நடத்திய பிறகு டிரீம் தியேட்டர்.இடமிருந்து வலமாக: போர்ட்னாய், பெட்ரூசி, லேப்ரி, மியூங், ரட்டெஸ்

தங்களுடைய டிரெயின் ஆஃப் தாட் இசைத்தொகுப்பிற்கான சுற்றுப்பயணத்தை முடிக்கையில் டிரீம் தியேட்டர் தங்களுடைய எட்டாவது இசைத்தொகுப்பை பதிவுசெய்ய நியூயார்க் நகரத்தில் உள்ள தி ஹிட் ஃபேக்டரி என்ற இசைப்பதிவகத்திற்கு வந்தனர். மூடப்படும் நிலையில் இருந்த அந்தப் புகழ்பெற்ற பதிவகத்தில் பாடல் பதிவு செய்த கடைசி இசைக்குழு அவர்கள்தான் என்பதோடு அவர்கள் தங்களுடைய இறுதிக் கட்டத்தை நிறைவுசெய்த பின்னர் அந்தப் பதிவகத்தின் விளக்குகள் நிரந்தரமாக அணைக்கப்பட்டுவிட்டன.[17]

ஆக்டாவேரியம் இசைத்தொகுப்பு 2005 ஆம் ஆண்டு ஜுன் 7 ஆம் தேதி வெளியிடப்பட்டதோடு இசைக்குழுவின் ஒலியை மேலும் ஒரு புதிய திசைக்கு எடுத்துச்சென்றது. போர்ட்னேயின் "டுவெல் ஸ்டெப்" சகாப்தத்தின் ("தி ரூட் ஆஃப் ஆல் ஈவிள்ஸ்", 12-அடியில் உள்ள 6-7 அடிகள்) தொடர்ச்சியாக உள்ள இதன் எட்டு பாடல்கள் மற்றும் 24 நிமிட நேரம் வரும் "எ சேன்ஞ் ஆஃப் சீஸன்" என்ற பாடலும் இதில் இடம்பெற்றிருந்தன. ஆக்டாவேரியம் ரசிகர்களிடமிருந்து மாறுபட்ட விமர்சனங்களைப் பெற்றதோடு விவாதத்திற்குரியதாகவும் ஆனது. ஆக்டாவேரியம் அவர்களின் எலக்ட்ரா ரெகார்ட்ஸ் உடனான ஏழு இசைத்தொகுப்புகள் ஒப்பந்தத்தில் கடைசியானதாகும், இது அந்த நிறுவனம் ஈஸ்ட்வெஸ்ட் ரெகார்ட்ஸ் நிறுவனத்தை வாங்கியதால் உரிமையாகப் பெறப்பட்ட ஒப்பந்தமாகும்.

டிரீம் தியேட்டர் தங்கள் இசைக்குழுவின் 20 ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாட ஜிகான்டூர் உட்பட பல இடங்களுக்கும் 2005 மற்றும் 2006 ஆண்டுகள் முழுவதிலும் விரிவான அளவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. டல்லாஸில் 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த இசைக்குழு "செமட்ரி கேட்ஸ்" பாடலை மீண்டும் ஒருமுறை பாடியதன் மூலம் பெண்டராவின் காலம்சென்ற கித்தார் இசைக்கலைஞரான டிம்பேக் டேரலுக்கு அஞ்சலி செலுத்தியது. அதற்கும் மேல் எதிர்பாராத தோற்றமாக அந்தப் பாடலின் ஒரு பகுதியைப் பாட இந்த இசைக்குழுவினருடன் சக இசைக்கலைஞர்களான ரஸல் ஆலன் (சிம்பனி எக்ஸ்), பர்டன் சி. பெல் (ஃபியர் ஃபேக்டரி) மற்றும் டேவ் முஸ்டைன் (மெகாடேத்) ஆகியோர் தோன்றினர்.

பின்னர் ஜிகான்டூரிலிருந்து புறப்பட்ட டிரீம் தியேட்டர் தங்களுடைய சொந்த இசைநிகழ்ச்சிகளுக்கான தொடரை தொடங்கினர். ரசிகர் வட்டங்களுக்காக சில நிகழ்ச்சிகள் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. 20 ஆம் ஆண்டுவிழா சுற்றுப்பயணம் 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி நியூயார்க் நகரத்திலுள்ள ரேடியோ சிட்டி மியூசிக் ஹாலில் நடந்த நிகழ்ச்சியோடு முடிவுற்றது. இந்த நிகழ்ச்சி குறைந்த அளவிற்கான மேம்பாட்டையே பெற்றிருந்தாலும் அடுத்த நாளிலேயே நுழைவுக்கட்டணங்கள் விற்கப்பட்டன. ஸ்கோர் எனப்பட்ட சிடி/டிவிடிக்காக பதிவுசெய்யப்பட்டு ரைனோ ரெக்கார்ட்ஸ் மூலம் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த நிகழ்ச்சிப்பதிவானது இந்த இசைக்குழுவினால் முதன் முதலாக ஒரு ஆர்க்கெஸ்ட்ராவை ("தி ஆக்டாவேரியம் ஆர்க்கெஸ்ட்ரா") பயன்படுத்திய இசை நிகழ்ச்சியாக அமைந்தது.

சிஸ்டமேட்டிக் கேயாஸ் , கிரேட்டஸ்ட் ஹிட் மற்றும் கேயாஸ் இன் மோஷன் (2007-2008) தொகு

டிரீம் தியேட்டரின் அடுத்த இசைத்தொகுப்பான சிஸ்டமேடிக் கேயாஸ் 2007 ஆம் ஆண்டு ஜுன் 5 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த இசைப்பதிவு அட்லாண்டிக் ரெகார்ட்ஸின் துணை நிறுவனமான ரோட்ரன்னர் ரெகார்ட்ஸின் புதிய முத்திரையில் வெளியிடப்பட்ட முதல் இசைத் தொகுப்பாகும். ரோட்ரன்னர் இந்த இசைத்தொகுப்பிற்கான மேம்படுத்தலை அதிகரித்தனர், இதன் காரணாக சிஸ்டமேடிக் கேயாஸ் பில்போர்ட் 200 அட்டவணையில் 19வது இடத்தைப் பிடித்தது. இது ஜுலை 14 ஆம் தேதி "கான்ஸ்டண்ட் மோஷனிற்கான" ஒளிப்பட வெளியீட்டையும் கண்டது. இதுவே 1997 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இந்த இசைக்குழுவின் முதல் இசை ஒளிப்பட வெளியீடாக அமைந்தது. அவர்களுடைய முதல் இருபது ஆண்டுகளை விவரமாக அளிக்கும் லிஃப்டிங் ஷேடோஸ் என்று தலைப்பிடப்பட்ட புத்தகம் 2007 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது, இதனுடைய புதுப்பித்த விரிவான வெளியீடு 2009 ஆம் ஆண்டில்[18] வெளியிடப்பட்டது என்பதுடன் சிஸ்டமேடிக் கேயாஸ் எட்டு இசைத்தடங்களைக் கொண்டிருந்தது ஆனால் ஏழு பாடல்களை மட்டுமே உள்ளி்ட்டிருந்தது. இந்த இசைத்தொகுப்பு "இன் தி பிரசன்ஸ் ஆஃப் எனிமிஸ்" என்று பெயரிடப்பட்டு 1 முதல் 8 வரையிலான இசைத்தடங்களை உள்ளிட்டிருந்தது. இதில் போர்ட்னே ஏஏ சாகாவை "ரெபன்டன்ஸ்" என்ற முதல் பாடலைப் பாடியிருந்தார், அத்துடன் "பிராபட்ஸ் ஆஃப் வார்" என்ற பாடல் அரசியல் தன்மையைக் கொண்டிருந்தது.

2007/2008 கேயாஸ் இன் மோஷன் உலக சுற்றுப்பயணம் இத்தாலியில் இருந்து தொடங்கியது. டிரீம் தியேட்டர் 2007 ஆம் ஆண்டு ஜுன் 3 ஆம் தேதி காட்ஸ் ஆஃப் மெட்டல் இசைநிகழ்ச்சியில் பங்கேற்றது.[19] 2007 ஆம் ஆண்டு ஜுன் 17 ஆம் தேதி நெதர்லாந்தில் நடைபெற்ற ஃபீல்ட்ஸ் ஆஃப் ராக் திருவிழாவிலும் டிரீம் தியேட்டர் பங்கேற்றது.[20] அவர்கள் இங்கிலாந்தின் டவுன்லோட் திருவிழா மற்றும் பிரென்ச்சு திருவிழாவான ஹெல்ஃபெஸ்ட் சம்மர் ஓபன் ஏர் போன்றவற்றில் மெகாடேத், கோர்ன், மாஸ்டாடோன் மற்றும் ஸ்லேயர் ஆகியோரோடு பல்வேறு ஐரோப்பிய திருவிழாக்களில் பங்கேற்றனர்.

டிரீம் தியேட்டர் கலிபோர்னியா சாண்டியாகோவில் ஜுலை 24 ஆம் தேதி நடைபெற்ற வட அமெரிக்க சுற்றுப்பயணத்திற்கு திரும்பினர் என்பதோடு பென்சில்வேனியாவில் உள்ள பிலடெல்பியாவில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி இசைநிகழ்ச்சியை நடத்தினர். அவர்கள் ரிடம்ஷன் மற்றும் இண்டூ எடர்னிட்டி ஆகியவற்றை நிகழ்த்தினர். "கேயாஸ் இன் மோஷன்" சுற்றுப்பயணம் மீதமிருந்த அந்த ஆண்டில் தொடர்ந்து நடந்தது என்பதுடன் 2008 ஆம் ஆண்டில் ஆசியா, தென் அமெரிக்கா மற்றும் முதல்முறையாக ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நடத்தப்பட்டது.[21]

2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி கிரேட்டஸ்ட் ஹிட் (...அண்ட் 21 அதர் பிரட்டி கூல் சாங்ஸ்) என்று தலைப்பிடப்பட்ட இசைத்தொகுப்பு இரண்டு வட்டுக்களாக இந்த இசைக்குழுவால் வெளியிடப்பட்டது. இந்தத் தலைப்பு இந்த இசைக்குழுவின் ஒரே வானொலி வெற்றிப்படைப்பான "புல் மி அண்டர்" என்ற பாடலை வேடிக்கையாகக் குறிப்பிடுவதாக இருந்தது. இது அவர்களுடைய இரண்டாவது இசைத்தொகுப்பான இமேஜஸ் அண்ட் வேர்ட்ஸின் மூன்று மறுபடைப்பாக்க பாடல்களையும், முன்னதாக வெளியிடப்பட்ட ஐந்த தொகுப்பு பதிப்புக்களையும், பி-சைட் என்ற சிங்கிளைச் சேர்ந்த ஒரு இசைத்தடத்தையும் உள்ளிட்டிருந்தது. பெரும்பாலான கிரேட்டஸ்ட் ஹிட்ஸ் தொகுப்புக்களைப் போல் அல்லாமல் டிரீம் தியேட்டர் இந்த இசைத்தொகுப்பில் முனைப்போடு ஈடுபட்டு, தங்களுடைய இசை வாழ்க்கையில் தாங்கள் சிறந்தது என்று கருதுவதை பட்டியலிட முனைந்தனர்.

கிரேட்டஸ்ட் ஹிட் வெளியீட்டிற்குப் பின்னர் மைக் போர்ட்னே பிராக்ரஸிவ் நேஷன் 2008 எனப்பட்ட புதிய சுற்றுப்பயணத்தைத் திட்டமிட்டார். முந்தைய டிரீம் தியேட்டர் சுற்றுப்பயணங்களைப் போல் அல்லாமல், அவர்கள் கடந்த காலத்தில் வருகைபுரியாத நகரங்களிலோ (அதாவது கனடாவில் உள்ள வான்கூவர் போன்ற நகரங்களில்) அல்லது அவர்கள் பல வருடங்களாக நிகழ்ச்சி நடத்தாத நகரங்களிலோ இசை நிகழ்ச்சிகளை நடத்தினர். இந்த சுற்றுப்பயணம் இமேஜஸ் அண்ட் வேர்ட்ஸ் வெளியீட்டிற்குப் பின்னர் முதலாவதாகக் குறிப்பிடப்பட்டது, இங்கே அந்தக் குழுவினர் சிறிய மைதானங்களிலும் மண்டபங்களிலும் நிகழ்ச்சியை நடத்தினர்.

இந்த சுற்றுப்பயணத்திற்குப் பின்னர், இந்த இசைக்குழு கேயாஸ் இன் மோஷன் 2007–2008 என்ற டிவிடி தொகுப்பை வெளியிட்டது. இது சிஸ்டமேடிக் கேயாஸ் என்ற அவர்களுடைய 9வது இசைத்தொகுப்பிற்கு ஆதரவாக நடத்திய சுற்றுப்பயணத்தைச் சேர்ந்த பாடல்களின் தொகுப்பாகும். இரண்டு தொகுப்பு டிவிடிக்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இதில் ஒன்று வழக்கமான இரண்டு வட்டு தொகுப்பாக இருக்க மற்றொன்று டிவிடிக்களுடன் இணைந்து வெளிவந்த மூன்று சிடிக்களைக் கொண்ட சிறப்பு பதிப்பாக இருந்தது. இது 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

பிளாக் கிளவுட்ஸ் & சில்வர் லைனிங்ஸ் மற்றும் காட் ஆஃப் வார்: பிளட் & மெட்டல் இபி (2008–தற்போதுவரை) தொகு

புதிய இசைத்தொகுப்பு இசைப்பதிவகத்தில் ஒளிப்பதிவு செய்யப்படும் என 2008 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி மைக் போர்ட்னாய் அறிவித்தார். 2008 ஆம் ஆண்டு, அக்டோபர் 7 ஆம் தேதி, டிரீம் தியேட்டர் தனது 10வது இசைத்தொகுப்பை உருவாக்குவதற்கான வேலையைத் தொடங்கியது. அந்த புதிய இசைத்தொகுப்பிற்கு பிளாக் கிளௌட்ஸ் & சில்வர் லைனிங்ஸ் என்று பெயரிடப்பட்டு 2009 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி வெளியிடப்பட்டது.[22] அந்த இசைத்தொகுப்பு வினைல் எல்பி இசைப் பதிவகத்தின் கீழ் தரமான வட்டுக்களாக வெளியிடப்பட்டது, மேலும் முழு இசைத்தொகுப்பை உள்ளடக்கிய வட்டு, வாத்தியங்களின் கலவைகளை உள்ளடக்கிய வட்டு மற்றும் ஆறு முக்கிய பாடல்களைக் கொண்ட வட்டு ஆகிய மூன்று-சிறப்பு வட்டுக்களாக அந்த இசைத்தொகுப்பு வெளியிடப்பட்டது.

மே முதலாம் தேதி, மைக் போர்ட்னாய் தங்களுடைய புதிய இசைத்தொகுப்பு வானொலியில் ஒலிபரப்பப்பட்டது குறித்து மெட்டல் ஹேமரிடம் பின்வருமாறு தனது கருத்தைத் தெரிவித்தார், 'தி ஷேட்டர்ட் ஃபோர்ட்னெஸ்' என்ற இந்த இசைத்தொகுப்பின் கடைசிப் பாடல் குடிப்பழக்கத்திலிருந்து மீளுவதற்கான 12 வழிமுறைகளை விவரிக்கிறது, மேலும் இந்த இசைத்தொகுப்பை உருவாக்கும் போது தனது தந்தை இறந்துவிட்டதாகவும் அவரைப் பற்றி விவரிக்கும் விதமாக 'தி பெஸ்ட் ஆப் டைம்ஸ்' என்ற பாடல் உருவாக்கப்பட்டதாகவும் போர்ட்னாய் தெரிவித்தார், அதே சமயம் இந்த இசைத்தொகுப்பை உருவாக்கும்போது "தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்".[23] அந்த இசைக்குழு ஐரோப்பாவில் முதன் முதலில் இசை நிகழ்ச்சியை நடத்திய பின்னர், தேசிய அளவிலான இரண்டாவது சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளப்போவதாக அறிவித்தது. சப்பா பிளேய்ஸ் சப்பா மற்றும் ஸ்கேல் தி சம்மிட் ஆகிய இசைக்குழுக்கள் வட அமெரிக்காவில் இசை நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருந்த சமயத்தில், பிகெல்ஃப் இசைக்குழு வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டது. அதே சமயம் டிரீம் தியேட்டர் ஐரோப்பாவில் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஆபெத் மற்றும் அன்எக்ஸ்பெக்ட் ஆகிய இசைக்குழுக்கள் தங்களது ஆதரவதைத் தெரிவித்தன.

வட அமெரிக்காவில் மேற்கொள்ளவிருக்கும் 2009 தேசிய சுற்றுப்பயணத்தில் இசைக்குழுவில் சில மாற்றங்களைச் செய்யப்போவதாக 2009 ஆம் ஆண்டு, ஜூன் 22 ஆம் தேதி மைக் போர்ட்னாய் அறிவித்தார். பொருளாதார நெருக்கடியின் காரணமாக, பெயின் ஆப் சால்வேஷன் மற்றும் பியர்ட்ஃபிஷ் ஆகிய இசைக்குழுக்கள் இசைச் சுற்றுப்பயணத்தின் போது டிரீம் தியேட்டர் மற்றும் சப்பா பிளேய்ஸ் சப்பா ஆகிய இசைக்குழுக்களுடன் பங்கேற்க முடியவில்லை. வட அமெரிக்காவி்ல் மேற்கொள்ளப்பட்ட 2009 தேசிய சுற்றுப்பயணத்தின் போது, பங்கேற்காத இசைக்குழுவை மறக்கும் வகையில் பிகெல்ஃப் மற்றும் ஸ்கேல் ஆப் சம்மிட் ஆகிய இசைக்குழுக்களின் இசை நிகழ்ச்சி அமைந்திருந்ததாக போர்ட்னாய் மேலும் தெரிவித்தார். இந்தச் சுற்றுப்பயணத்தில் டிரீம் தியேட்டர் இசைக்குழு சிக்ஸ் டிகிரி ஆப் இன்னர் டர்பலென்ஸ் இசைத்தொகுப்பைச் சேர்ந்த "சாலிட்டரி ஷெல்" என்ற பாடலை 13 நிமிடங்கள் வரை நீடிக்கும்படியாக மாற்றியமைத்தது. இதே போன்று, கேயாஸ் அன்ட் மோஷன் டிவிடியை விளம்பரப்படுத்தும் சுற்றுப் பயணத்தின் போது, அந்த இசைக்குழு "சரௌன்டட்" பாடலை மறுபதிவு செய்தது. மேலும், டொராண்டோவில் நடைபெற்ற அவர்களுடைய நிகழ்ச்சியில், "தி கேமரா ஐ" என்ற பாடல் ரசிகர்களின் விருப்பப் பாடலாக அமைந்தது. இது இந்த நிகழ்ச்சியில் இசைக்குழுவினர் பாடிய ரஷ் பாடலின் மூன்றாவது மறுபடைப்பாக அமைந்தது.[24]

2009 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி பிளாக் கிளௌட்ஸ் & சில்வர் லைனிங்ஸ் இசைத்தொகுப்பு பில்போர்டின் முதல் 200 இசைத்தொகுப்பு அட்டவணையில் ஆறாம் இடத்தைப் பிடித்தது என்பதுடன், வெளியிடப்பட்ட முதல் வாரத்தின் முடிவில் 40,285 வட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டன[25]. வரும் புத்தாண்டிற்குப் பிறகு, காட் ஆப் வார் III என்ற பிஎஸ்3 நிகழ்பட விளையாட்டிற்குத் தேவைப்படும் ஒலித்தடத்தை வடிவமைப்பதற்கான, அனைத்து நடவடிக்கைகளையும் டிரீம் தியேட்டர் சிறப்பான முறையில் மேற்கொள்ளும் என மைக் போர்ட்னாய் 2009 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி தெரிவித்தார். "ரா டாக்" என்று பெயரிடப்பட்ட ("வார் ஆப் காட்" என்பதன் தலைகீழ் வார்த்தையாகும்) அந்த ஒலித்தடம் ரோட் ரன்னர் இசைப் பதிவகத்திற்கு 2010 ஆம் ஆண்டு சனவரி 8 ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. மற்றொரு நிறுவனத்திற்காக எழுதி, இசைப்பதிவு செய்த டிரீம் தியேட்டரின் இந்த முதல் ஒலித்தடம் மிகவும் குறிப்படத்தக்க வரவேற்பைப் பெற்றது.[26]

2009 ஆம் ஆண்டு டிசம்பரில், பிளாக் கிளௌட்ஸ் & சில்வர் லைனிங்ஸ் இசைத்தொகுப்பை விளம்பரப்படுத்தும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வந்தததன் காரணமாக, பெயின் ஆப் சால்வேஷன் இசைக்குழு டிரீம் தியேட்டர் இசைக்குழுவுடன் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டது.[27] 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், டிரீம் தியேட்டர் இசைக்குழுவினர் பிகெல்ஃப் இசைக்குழுவினருடன் இணைந்து தென் ஆப்ரிக்கச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டனர்.

இசைப்பதிவை மேற்கொள்வதற்காக, தி ரெவ் என்ற டிரம்ஸ் இசைக் கலைஞருக்குப் பதிலாக டிரீம் தியேட்டரின் டிரம்ஸ் இசைக் கலைஞர் மைக் போர்ட்னாயை நாங்கள் அழைத்து வந்தோம் என்று அவென்ஜ்ட் செவன்ஃபோல்ட் இசைக்குழு 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 ஆம் தேதி தெரிவித்தது.

அமெரிக்கா மற்றும் கனடாவில் கோடைக்கால இசைச் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் அயர்ன் மெய்டன் இசைக்குழுவிற்கு தாங்கள் ஆதரவளிப்பதாக டிரீம் தியேட்டர் இசைக்குழு 2010 ஆம் ஆண்டு மார்ச் 4 ஆம் தேதி அறிவித்தது.[28]

இலச்சினையும் படமும் தொகு

இந்த இசைக்குழு தங்களுடைய பெயரை மாற்றிக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்பட்டாலும், டிரீம் தியேட்டர் தங்களுடைய இலச்சினையையும் (இது ராஜ முத்திரை எனப்படுகிறது) அவர்களுடைய பெருபான்மையான இசைத்தொகுப்பின் முன் அட்டையில் காணப்படும் வார்த்தைக் குறியை மட்டுமே பயன்படுத்தி வந்தனர். இந்த ராஜ முத்திரை ஸ்காட்லாந்து ராணியான மேரியின் முத்திரையிலிருந்து [29][30] பெறப்பட்டிருக்கிறது. இதனை வென் டிரீம் அண்ட் டே யுனைட் என்ற இசைத்தொகுப்பிற்கான கலைப்படைப்பின் பயன்பாட்டிற்காக சார்லி டாமினின்சி என்பவரால் மீண்டும் உருவாக்கப்பட்டது.[31] இது தலைப்பெழுத்து பை (Phi), தலைப்பெழுத்து ம்யு (Mu), மற்றும் தலைப்பெழுத்து லம்டா (Lambda) ஆகியவற்றால் உருவானது.

நேரடி நிகழ்ச்சிகள் தொகு

அவர்களுடைய இசை வாழ்க்கையில் டிரீம் தியேட்டரின் நேரடி நிகழ்ச்சிகள் படிப்படியாக பெரியதாகவும், நீளமானதாகவும், மிகவும் வேறுபட்டதாகவும் ஆனது. இதற்கான தெளிவான உதாரணம் சுழற்சிமுறை பட்டியல் தொகுப்பு கொள்கையே ஆகும். அதாவது, ஒவ்வொரு சுற்றுப்பயணத்தின் ஒவ்வொரு இரவும் அதனுடைய தனித்தன்மையை உறுதிப்படுத்துகின்ற நிகழ்ச்சிகளை நடத்த போர்ட்னேயால் திட்டமிடப்பட்டதே ஆகும். டிரீம் தியேட்டரை ஒரு பகுதிக்குள்ளாக பார்ப்பவர்கள் ஒரே பாடல் இரண்டுமுறை நிகழ்த்தப்பட்டதைக் காணமாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்த முந்தைய நகரங்களில் நடத்தப்பட்ட தொகுப்புப் பட்டியல்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன. ஒரு குறிப்பிட்ட நகரத்தில் அந்த இசைக்குழு நடத்திய தொகுப்புப் பட்டியல்கூட இந்த இசைக்குழுவின் சுற்றுப்பயணத்தை தொடர்ச்சியாக பார்த்துவரும் ரசிகர்களின் நலனுக்காக கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.[32]

 
2008 ஆம் ஆண்டு அர்ஜென்டினாவின் பியூனெஸ் ஆரெஸ் என்ற இடத்தில் ரட்டெஸ் மற்றும் பெட்ரூசி நடத்திய இசை நிகழ்ச்சி.

இதை சாத்தியமாக்குவதற்கு, அந்த இரவில் எந்த நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும் என்று போர்ட்னே தீர்மானிப்பதைப் பொறுத்து எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அந்த இசைக்குழு தங்களுடைய பட்டியலில் இருக்கும் பெரும்பான்மையான பாடலைப் பாடத் தயாராகும். தனிப்பட்ட பாடல்களைப் பொறுத்து முன் தீர்மானிக்கப்பட்ட ஒளியமைப்பை அமைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயமும் இந்த இசைக்குழுவிற்கு ஏற்பட்டது.

டிரீம் தியேட்டரின் சில குறிப்பிடத்தகுந்த சுற்றுப்பயண கூட்டாளிகள் டீப் பர்பிள், எமர்ஸன், லேக் & பால்மர், ஐயர்ன் மெய்டன், ஜோ சாட்ரியானி, கிங்ஸ் X, மேரிலியன், மெகாடேத், இன் ஃபிளேம்ஸ், பெய்ன் ஆஃப் சால்வேஷன், போர்குபயன் டிரீ, ஓபத், குயின்ஸ்ரிஷே, ரிவர்சைட், ஸ்போக்ஸ் பியர்ட், ஃபியர் ஃபேகடரி, என்சாண்ட், சிம்பனி X, மற்றும் யெஸ் ஆகியோரை உள்ளிட்டிருக்கிறது. 2005 ஆம் ஆண்டில், ஜிகான்டூர் திருவிழாவிற்காக மெகாடேத் உடன் இணைந்து வட அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட டிரீம் தியேட்டர் மேடையில் மெகாடேத் மற்றும் அயர்ன் மெய்டன் ஆகியோரோடு இணைந்து நிகழ்ச்சிகளை நடத்தியது.

சிக்ஸ் டிகிரிஸ் ஆஃப் இன்னர் டர்புலன்ஸ் முதலாக இந்த இசைக்குழுவின் முழு உலக சுற்றுப்பயணங்கள் "ஈவ்னிங் வித்..." சுற்றுப்பயணங்கள் என்றே அழைக்கப்பட்டன. இதில் இந்த இசைக்குழு ஒரு இடைவேளையுடனும், தொடக்க நிகழ்ச்சி இல்லாமலும் குறைந்தது மூன்று மணிநேரங்களுக்கு நிகழ்ச்சிகளை நடத்தினர். லைவ் சீன்ஸ் ஃப்ரம் நியூயார்க் கிற்காக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி ஏறத்தாழ நான்கு மணிநேரங்களுக்கு நீடித்தது என்பதோடு இந்த நிகழ்ச்சிக்கு முன்பாக போர்ட்னே சாப்பிட்ட உணவு அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தவே அவர் ஏறத்தாழ மருத்துமனையில் சேர்க்கப்படும் நிலைக்கு ஆளானார்.[33][34]

இந்த டிரீம் தியேட்டர் நிகழ்ச்சியில் குறிப்பிடத்தக்க அளவிற்கான நகைச்சுவை, இயல்பான தன்மை மற்றும் மேம்படுத்தல் ஆகியவை இணைந்திருந்தன. "எ சேன்ஞ் ஆஃப் சீசன்ஸின்" மத்தியில் மேஜர் லீக் பேஸ்பால் மற்றும் தி சிம்ஸன்ஸ் போன்றவற்றிற்கான கருக்கள் குறிப்பிடப்படுவது முற்றிலும் பொதுவானது. ரூட்ஸ் தொடர்ந்து பாடலிலும் மற்றவற்றிலும் தன்னுடைய தனிப்பட்ட பிரிவை மேம்படுத்தியபடியே இருந்தார் என்பதுடன், லிக்விட் டென்ஷன் எக்ஸ்பிரிமெண்ட்டிலிருந்து "வென் தி வாட்டர் பிரேக்ஸின்" ரேக்டைம் பிரிவை இசைத்தார். ஒன்ஸ் இன் எ லைவ்டைம் இல் சேர்த்துக்கொள்ளப்பட்ட பாடல்களுள் லின்லிர்ட் ஸ்கைனிர்டின் "ஃப்ரீ பேர்ட்" மற்றும் ரிம்ஸ்கி-கோர்ஸகோவின் "ஃபிளைட் ஆஃப் தி பம்ளிபீ" போன்ற பாடல்களும் உள்ளிடப்பட்டிருந்தன. பிற குறிப்புகள் ஜிகான்டூரில் "எண்ட்லஸ் சாக்ரிஃபைஸின்போது" "மேரி ஹேட் எ லிட்டில் லேம்ப்" என்ற கேலியோப்பின் தாக்கத்தினால் உருவான "அண்டர் எ கிளாஸ் மூன்" பாடல் வரிகளைச் சேர்நதவை. புயனஸ் அயர்ஸில் "த்ரோ ஹர் ஐஸ்" இன் தனிப்பாடல் அறிமுகத்தில் பெட்ரூசியால் இசைக்கப்பட்ட முக்கிய மெல்லிசைப் பாடலான "டோண்ட் கிரை ஃபார் மி", மற்றும் இஸ்தான்புல்லில் நடந்த நிகழ்ச்சியைச் சேர்ந்த துருக்கிய அணிவகுப்பு மற்றும் தாய்லாந்து பேங்காக்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரஷ்ஷின் "எ பாஸேஜ் டு பேங்காக்" ஆகியவை உள்ளிடப்பட்டிருந்தன. மிகச் சமீபத்திய "இருபதாவது ஆண்டுவிழா உலக சுற்றுப்பயணத்தில்" "எண்ட்லஸ் சேக்ரிஃபைஸின்" இடைவெளியில் ரூட்ஸ் "டிவிங்கிள், டிவிங்கிள், லிட்டில் ஸ்டார்" பாடலைப் பாடினார் என்பதுடன், இஸ்ரேலில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது இசைக்குழுவில் மீதமுள்ளவர்களுடன் இணைந்துகொண்டு "ஹவா-நகிலா" பாடலையும் அவர் தொடங்கினார்.

அவ்வப்போது பார்வையாளர்கள் பகுதியில் உள்ள ஒருவர் மேடையில் பாட தற்போக்காக தேர்வுசெய்யப்படுவர். இதற்கான ஒரு உதாரணத்தை லைவ் அட் புடோகான் டிவிடியில் உள்ள போர்ட்னேயின் தனி டிரம்ஸ் இசையின்போது காணலாம். இந்த இசைக்குழுவில் உள்ள உறுப்பினர்கள் யாருக்கேனும் பிறந்தநாள் எனும்போது "ஹைப்பி பர்த்டே" பாடலின் மேம்பட்ட வடிவமும் இசைக்கப்பட்டது, இது வழக்கமாக பிறந்தநாள் கேக்கை பிறந்தநாள் கொண்டாடுபவர் மீது விட்டெறிவதோடு முடிவுறும்.

டிரீம் தியேட்டரின் முன்னூகிக்க முடியாத நிகழ்ச்சியானது இந்த இசைக்குழுவோடு டெரக் ஷெரினியன் இருந்தபோதுதான் ஏற்பட்டது. தேர்ந்தெடுத்த நிகழ்ச்சிகளில் குழு உறுப்பினர்கள் அனைவரும் வாத்தியங்களை மாற்றிக்கொண்டு நைட்மேர் சினிமா என்று கற்பனையாக உருவாக்கப்பட்ட இசைக்குழுவாக பாடலை மீண்டும் பாடுவர். அவர்கள் வழக்கமாக டீப் பர்பிளின் "பர்ஃபெக்ட் ஸ்ட்ரேன்சர்ஸ்" பாடலின் மறுபடைப்பைப் பாடுவர், ஒருமுறை அவர்கள் ஓஸி ஆஸ்பர்னின் "சூசைட்ஸ் சொல்யூஷனைப்" பாடினர். சில நிகழ்ச்சிகளில் ஷெரினியன், பெட்ரூசி மற்றும் போர்ட்னே ஆகியோர் "நிக்கி லெமன்ஸ் அண்ட் தி மைக்ரேன் பிரதர்ஸ்" என்ற பெயரில் மேடையில் ஒன்றாகத் தோன்றுவர். ஷெரினியன் ஃபெதர் போ மற்றும் நாவல்டி குளிர்கண்ணாடிகளை அணிந்து பெட்ரூசி மற்றும் போர்ட்னே பின்னணியில் இருக்க "ஐ டோண்ட் லைக் யு" என்ற பாப்-பன்க் பாடலைப் பாடுவார். கேயாஸ் இன் மோஷன் சுற்றுப்பயணத்தில், "டிரையல் ஆஃப் டியர்ஸிற்கு" முன்பான சில நிகழ்ச்சிகளில் போர்ட்னேயும் பெட்ரூசியும் தங்கள் நிலைகளை மாற்றிக்கொண்டு வான் ஹேலனின் "எரப்ஷன்" பாடலைப் பாடுவர்.

டிரீம் தியேட்டரின் மிகப்பெரிய பார்வையாளர் கூட்டம் 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி சிலியில் உள்ள சாண்டியாகோவில் கூடிய 20,000 பேர்களைக் கொண்ட ரசிகர் கூட்டமே ஆகும்.[35] பிரேசில் (இங்கே அவர்கள் 1997 மற்றும் 1998 ஆண்டுகளில் வருகை புரிந்திருக்கின்றனர்) தவிர்த்து தென் அமெரிக்க நாடுகளுக்கான முதல் சுற்றுப்பயணத்தின்போது இந்நிகழ்வு ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சி போர்ட்னேயின் இஸாஜிம் ரெகார்ட்ஸ் மூலம் டிவிடியில் வெளியிடப்பட்டது.

ஸ்கோர் மற்றும் கேயாஸ் இன் மோஷன் டிவிடிக்களில் உள்ள உயிர்ச்சித்திரம் இந்தப் பாடலின் சில பாகங்களோடு தொடர்புகொண்டிருந்ததானது. இந்த இசைக்குழுவினர் சித்திரப்பட கதாபாத்திரங்களாக நிகழ்ச்சியை நடத்துகின்றனர் என்பதைக் காட்டியது. ஸ்கோர் டிவிடியில், ஆக்டாவேரியம் பாடலின்போது இந்த இசைக்குழு எண்கோண வடிவத்தில் நிகழ்ச்சியை நடத்துவதுபோல் காணப்பட்டது. உயிர்ச்சித்திரம் தொடர்ந்தபடியிருக்க ஜோர்டான் ரூட்ஸ் அடுத்தபடியாக சாண்டா கிளாஸாக மாற ஜான் பெட்ரூசி தீயைப் பிடிப்பவரானார்.[36] கேயாஸ் இன் மோஷன் டிவிடியைச் சேர்ந்த "தி டார்க் எடர்னல் நைட்டில்" இந்த இசைக்குழு கிடார்களிலிருந்து தீப்பந்தங்களால் சுட்டும், டிரம் குச்சிகளை எறிந்தும் கத்தியும் ஒரு அசுரனுக்கு எதிராக போராடியது.[37]

2008 ஆம் ஆண்டில் டிரீம் தியேட்டர் ஓபத், பெட்வீன் தி பரிட் அண்ட் மீ மற்றும் 3 ஆகியவற்றோடு "பிராக்ரஸிவ் நேஷன் '08" சுற்றுப்பயணத்தைத் தொடங்கியது. இந்த சுற்றுப்பயணம் மைக் போட்ர்னேயின் மூளையில் உதித்ததாகும், அவர் இதை "நான் இப்போதுவரை பல வருடங்களாகவே இதுபோன்ற ஒரு சுற்றுப்பயணத்தை நடத்த காத்துக்கொண்டிருந்தேன் என்று கூறினார். எல்லாத் திருவிழாக்களும் சுற்றுப்பயணங்களும் அமெரிக்காவின் வழியாகவே செல்வதால் மிகவும் முன்னேறிய, ஹார்ட் ராக் மற்றும் மெடல் இசையின் மிகவும் இசை சார்ந்த பகுதியில் கவனம் செலுத்தும் வகையிலான ஒன்றைச் செய்ய வேண்டும் என்று எங்களுடைய மேலாளர் மற்றும் முகவரிடம் பத்து வருடங்களுக்கும் மேலாக பேசியிருக்கிறேன். இது பேச்சை நிறுத்திவிட்டு நடையைக்கட்ட வேண்டிய நேரம் என்று நான் தீர்மானித்திருக்கிறேன்" என்று மேலும் கூறினார்.[38]

2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி டிரீம் தியேட்டர் தங்களுடைய பிராக்ரஸிவ் நேஷன் 2009 சுற்றுப்பயணத்தில் கலந்துகொள்பவர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்தச் சுற்றுப்பயணம் உண்மையில் ஸ்வீடிஷ் இசைக்குழுக்களான பியர்ட்ஃபிஷ் மற்றும் பெய்ன் ஆஃப் சால்வேஷன், அத்துடன் ஸப்பா பிளேஸ் ஸப்பா ஆகிய இசைக்குழுக்கள் இடம்பெறும் வகையில் திட்டமிடப்பட்டது. 2009 ஆம் ஆண்டு ஜுன் 22 ஆம் தேதி மைக் போர்ட்னே பதிவு முத்திரை பிரச்சினைகள் காரணமாக பிராக்ரஸிவ் நேஷன் 2009 வட அமெரிக்க சுற்றுப்பயணத்தில் பெய்ன் ஆஃப் சால்வேஷன் மற்றும் பியர்ட்ஃபிஷ் ஆகியவை கலந்துகொள்ளாது என்று அறிவித்தார். அதே அறிவிப்பில், இந்த சுற்றுப்பயணத்தில் பெய்ன் ஆஃப் சால்வேஷன் மற்றும் பியர்ஃபிஷ்ஷிற்கு மாற்றாக ஸ்கேல் ஆப் சம்மிட் மற்றும் பிகெல்ஃப் ஆகியவை இடம்பெறும் என்று குறிப்பிடப்பட்டது.[39] இந்த மாற்றம் பிகெல்ஃபை பிராக்ரஸிவ் நேஷன் 2009 சுற்றுப்பயணத்தில் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய இரண்டிலும் இடம்பெறச்செய்தது. இந்த சுற்றுப்பயணத்தில் வட அமெரிக்கப் பயணம் 2009 ஆம் ஆண்டு ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் முழுவதும் நடந்தது. 2009 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி டிரீம் தியேட்டர் முதல் முறையாக ஓபத், பிகெல்ஃப் மற்றும் அன்எக்ஸ்பக்ட் ஆகியோரோடு ஐரோப்பாவிற்கான பிராக்ரஸிவ் நேஷன் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்தச் சுற்றுப்பயணம் 2009 ஆம் ஆண்டின் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்கள் முழுவதும் நடைபெற்றது.[40] 2010 ஆம் ஆண்டு சூன் மாதம் தொடங்கும் அயர்ன் மெய்டனுக்காக சுற்றுப்பயணத்தில் டிரீம் தியேட்டர் தொடக்க இசைக்குழுவாக இருக்கும்.

சட்டவிரோதமாக வெளியிடும் கலாச்சாரம் தொகு

டிரீம் தியேட்டரின் ரசிகர்கள் தங்களுடைய நேரடி நிகழ்ச்சிகளின் பதிப்புகளால் கவர்ந்திழுக்கப்பட்டதை அடுத்து மைக் போர்ட்னே அதிகாரப்பூர்வ சட்டவிரோத வெளியீட்டு தொடர்களைத் தொடங்கினார். டிரீம் தியேட்டர் சட்டவிரோதமாக தொடர்களை வெளியிடும் இசைக்குழுக்களுள் ஒன்றாக மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வந்தது. நியூயார்க்கில் நடந்த முதல் இசை நிகழ்ச்சிகளிலிருந்தே டிரீம் தியேட்டர் பங்கேற்ற எல்லா நிகழ்ச்சிகளையும் ரசிகர்கள் பதிவுசெய்திருக்கின்றனர் (அவ்வப்போது ஒரே நிகழ்ச்சிக்கு மூன்று அல்லது நான்கு பதிப்புகள் வெளிவந்ததுண்டு) என்பதுடன் சில மிகவும் விரிவான தொழில்முறைப் பதிவுகளும் வெளியிடப்பட்டன.

இருப்பினும், இந்த இசைக்குழுவில் இருந்த எல்லா உறுப்பினர்களும் டிரீம் தியேட்டரின் சட்டவிரோத வெளியீட்டிற்கு மன்னிப்பு கேட்கவில்லை. போர்ட்னேதான் மிகவும் முன்னோடியான சட்டவிரோத வெளியீட்டு உறுப்பினர் என்பதுடன், தன்னுடைய இளம் பருவத்தில் சட்டவிரோத வெளியீடுகளை சேகரிப்பதில் மிகவும் முனைப்போடு செயல்பட்டிருக்கிறார், அத்துடன் தன்னுடைய வீட்டின் நிலவறையில் டிரீம் தியேட்டரின் சொந்த தனிப்பட்ட ஆவணங்களையும் பராமரித்து வருகிறார். பெட்ரூசியும் லேப்ரியும் தங்களுடைய நிகழ்ச்சிகளை மக்கள் பதிவுசெய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். பெட்ரூச்சி சட்டவிரோத வெளியீட்டாளர்களுடன் பிரச்சினையில் ஈடுபட்டார், ஏனென்றால் பார்வையாளர்கள் மேடையில் இருக்கும் இசைக்கலைஞர்களிடத்தில்தான் கவனம் செலுத்த வேண்டுமே தவிர தாங்கள் பதிவு செய்யும் சாதனத்தின் ஒலியமைப்பை சரிசெய்துகொண்டிருக்கக்கூடாது என்று அவர் விரும்பினார். மற்றொரு பக்கம் சட்டவிரோத வெளியீடுகள் உரிமையையும் கட்டுப்பாட்டையும் இசைக்குழுவிடமிருந்தே நீக்கிவிட்டு பொதுமக்களின் கைகளில் வழங்கிவிடுகிறது என்று லேப்ரி வாதிட்டார். சட்டவிரோத வெளியீட்டிற்கு எதிராக மியுங் மிதமான எதிர்ப்பை மட்டுமே வெளிப்படுத்தினார், ஆனால் சில நேர்காணல்களில் தான் இதனுடன் பெரும் பிரச்சினை எதையும் கொண்டிருக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

டிரீம் தியேட்டர் சில அதிகாரப்பூர்வமான சட்டவிரோத வெளியீடுகள், முன்னோட்டங்கள் மற்றும் பிற அரிதான காட்சிகளை போர்ட்னே தலைமை வகித்த இஸ்டெய்ம் ரெகார்ட்ஸ் மூலமாகவும் வெளியிட்டிருக்கிறது.[41] இசைத்தொகுப்பு, முன்னோட்டம் மற்றும் நேரடி நிகழ்ச்சிகளுக்கு முன்பாக இந்த இசைக்குழு ஒதுக்கியவற்றை அவர்கள் வெளியிட்டனர். இந்த இசைத்தொகுப்புகள் தி டார்க் சைட் ஆஃப் தி மூன் , மேட் இன் ஜப்பான் , மாஸ்டர் ஆஃப் பப்பட்ஸ் , மற்றும் நம்பர் ஆஃப் தி பீஸ்ட் ஆகியவற்றை உள்ளிட்டிருந்தது.

மறுபடைப்பு பாடல்கள் தொகு

டிரீம் தியேட்டர் அவர்களுடைய இசை வாழ்க்கையில் பிற கலைஞர்களுடைய படைப்புகளை மறுபடைப்பு செய்தமைக்காக பிரபலமானவர்களாக இருக்கின்றனர். அவர்கள் இதனை சிக்ஸ் டிகிரிஸ் ஆஃப் இன்னர் டர்புலன்ஸ் என்ற சுற்றுப்பயணத்தின்போது புதிய மட்டத்திற்கு எடுத்துச் சென்றனர். பார்சிலோனா, சிகாகோ மற்றும் நியூயார்க் நகரம் ஆகியவற்றில் நடந்த மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றிலும் அவர்கள் மெட்டாலிக்காவின் மாஸ்டர் ஆஃப் பப்பட்ஸ் இசைத்தொகுப்பை டிரீம் தியேட்டரின் முழு தொகுப்பிற்கு அடுத்தபடியாக சேர்த்துக்கொண்டிருந்தனர். இது ரசிகர்களுக்கு ஆச்சரியமளிக்கும் விதத்தில் அமைந்தது என்பதுடன், இரண்டாவது இரவில் இது "கூடுதல் சிறப்பம்சமாக" அமைந்தது. இந்தப் பாரம்பரியம் மைக் போர்ட்னேயின் விருப்பமான இசைக்குழுக்களுள் ஒன்றான ஃபிஷ்ஷில் காணப்படுகிறது, இவர்கள்தான் 1994 ஆம் ஆண்டு ஒவ்வொரு ஹாலோவீன் தொடக்கத்தின்போதும் மற்ற கலைஞர்களின் இசை உடைகளை முழு இசைத்தொகுப்பிலும் அணிந்தனர். டிரீம் தியேட்டரின் உருவாக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் தூண்டுதலாக அமைந்த இசைக்குழுக்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தொடரின் முதலாவது "இசைத்தொகுப்பு மறுபடைப்பை" போர்ட்னே திட்டமிட்டார். இந்த மறுபடைப்புகள் இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பல ரசிகர்களையும் பிரித்தது, அவர்களில் சிலர் தாங்கள் டிரீம் தியேட்டரின் அசல் இசையைக் கேட்கத்தான் நிகழ்ச்சிகளுக்கு செல்கிறோமே தவிர மற்ற கலைஞர்களின் மறுபடைப்பைப் கேட்பதற்காக அல்ல என்று தெரிவித்தனர். இருப்பினும் இது ஒரு கூடுதல் சிறப்பம்சத்தையே டிரீம் தியேட்ருக்கு அளிப்பதாக மற்றவர்கள் கருத்து தெரிவித்தனர்.

சுற்றுப்பயணத்தின் அடுத்த கட்டமாக அவர்கள் அயர்ன் மெய்டனின் தி நம்பர் ஆஃப் தி பீஸ்ட் பாடலை சேர்த்துக்கொண்டனர், அங்கேயும் அவர்கள் மாஸ்டர் ஆஃப் பப்பட்ஸிற்கு இதேபோன்ற எதிர்வினையையே எதி்ர்கொண்டனர். இருப்பினும் இந்தச் சுற்றுப்பயண வழி ஒரே நகரத்தில் இரண்டு அடுத்தடுத்த நிகழ்ச்சிகளைக் கொண்டிருப்பதால் அந்த மறுபடைப்பு அந்த இரவில் பாடப்படும் என்பது முன்பே தெரிந்திருந்தது. 2005 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி டிரீம் தியேட்டர் பின்க் ஃபிளாய்டின் தி டார்க் சைட் ஆஃப் தி மூன் பாடலை மறுபடைப்பாக அளித்தது. டிரீம் தியேட்டரின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் ஆம்ஸ்டர்டாம், லண்டன், புயனஸ் அயர்ஸ், சா பாலோ மற்றும் டோக்கியோ (முறையே அக்டோபர் 11, அக்டோபர் 25, டிசம்பர் 4, டிசம்பர் 11 மற்றும் சனவரி 13 ஆகிய தேதிகளில்) ஆகியவற்றில் இரண்டாவது இரவின் இரண்டாவது தொகுப்பு என்றும், ஒஸாகாவில் சனவரி 15 ஆம் தேதி இரண்டாவது தொகுப்பில் காவிய இசைத்தொகுப்பு உள்ளிடப்பட்டிருக்கும் என்று தெரிவித்தது. தி டார்க் சைட் ஆஃப் தி மூன் லண்டனில் அக்டோபர் 25 ஆம் தேதி மீண்டும் இசைக்கப்பட்டது. இருப்பினும், புயனஸ் அயர்ஸ் (டிசம்பர் 4 ஆம் தேதி) மற்றும் சா பாலோ (டிசம்பர் 11 ஆம் தேதி) ஆகியவற்றில் வாசிக்கப்பட்ட காவிய இசைத்தொகுப்பு டிரீம் தியேட்டரின் மெட்ரோபோலிஸ் பார்ட்: சீன்ஸ் பிரம் ஏ மெமரி என்ற சொந்த இசைத்தொகுப்பு ஆகும். இது அவர்களுடைய மெட்ரோபோலிஸ் 2000 சுற்றுப்பயணத்தில் அர்ஜெண்டினா மற்றும் பிரேசிலுக்கு செல்லாமல் இருப்பதற்கான தி்ட்டங்களுள் ஒன்றாகும். 2006 ஆம் ஆண்டு சனவரி 13 ஆம் தேதி (டோக்கியோ) மற்றும் 15 ஆம் தேதி (ஒஸாக) ஆகியவற்றில் டிரீம் தியேட்டர் டீப் பர்பிளின் நேரடி இசைத்தொகுப்பான மேட் இன் ஜப்பானை உள்ளிட்டிருந்தது. போர்ட்னே தான் இன்னும் ஒரு மறுபடைப்பு நிகழ்ச்சிக்காகத் திட்டமிட்டிருப்பதாக குறிப்பிட்டார். ஆனால் அது எப்போது என்பதைத் தெரிவிக்கவோ அல்லது அது எந்த இசைத்தொகுப்பு என்பதையோ குறிப்பிட மறுத்துவிட்டார்.[42]

2005 ஆம் ஆண்டு ஜிகாண்டூரின்போது டிரீம் தியேட்டர் பேண்டிராவின் "செமட்ரி கேட்ஸ்" மறுபடைப்பை "டைம்பேக்" டேரல் லான்ஸ் அபாட் என்பவருக்கான அஞ்சலியாக அறிவித்தது. கூடுதல் சிறப்பம்சங்களாக அவர்கள் ஃபியர் ஃபேக்டரியின் பர்டன் சி. பெல் மற்றும் சிம்பனி எக்ஸின் ரஸல் ஆலன் ஆகியோரை சிறப்பு பாடகர்களாகவும், மெகாடேத்தின் டேவ் முஸ்டேன் தனிப்பாடலை பாடுவதற்கும் சேர்த்துக்கொண்டிருந்தனர்.

2006 ஆம் ஆண்டு மார்ச்சில் டிரீம் தியேட்டர் ஒரு அரிதான ரஷ் பாடலான "ஜேகப்ஸ் லேடாரை" டொராண்டோவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பாடினர். ஒரு சில நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின்னர் நியூ ஜெர்ஸி, ஆஸ்பரி பார்க்கில் நிகழ்ச்சி நடப்பதற்கு ஒரு நாள் முன்பாக "ரஷ் பாடப்போவதில்லை என ஜான் பெட்ரூசி கூறினார்.

மேலும், டிரீம் தியேட்டர் பின்வருபவைகளை தங்களுடைய இபி எ சேன்ஞ் ஆஃப் சீசன்ஸ் நேரடி மறுபடைப்பு பாடல்கள் சிலவற்றில் சேர்த்துக்கொண்டிருந்தது அவையாவன எல்டன் ஜான், டீப் பர்பிள், லெட் சாப்பளின், குயின், பின்க் ஃபிளாய்டின், ஜெனிஸிஸ், ஜர்னல், கன்சாஸ், மற்றும் டிக்ஸி டிரெக்ஸ் ஆகும்.

2008 ஆம் ஆண்டில் அவர்கள் மெய்டன் ஹெவன் என்று தலைப்பிடப்பட்ட கெராங் பத்திரிக்கையின் தொகுப்பிற்காக அயர்ன் மெய்டனின் "டு டேம் எ லேண்ட்டின்" பதிப்பை பதிவுசெய்தனர்[43]. இந்தப் பாடல் பின்னாளில் பிளாக் கிளவுட்ஸ் அண்ட் சில்வர் லைனிங்ஸின் சிறப்புப் பதிப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்டது.

டிரீம் தியேட்டர் பிளாக் கிளவுட்ஸ் & சில்வர் லைனிங் என்ற தங்களுடைய 2009 ஆம் ஆண்டு இசைத்தொகுப்பிற்காக பல்வேறு மறுபடைப்பு பாடல்களையும் பதிவுசெய்தனர். இந்தப் பாடல்கள் இந்த இசைத்தொகுப்பின் சிறப்புப் பதிப்புகளில் உள்ள கூடுதல் வட்டாக வெளிவந்தன.

டிரீம் தியேட்டர் பாரம்பரிய யூதப் பாடலான "ஹவா நஜிலாவை" 2009 ஆம் ஆண்டு ஜுன் 16 ஆம் தேதி இஸ்ரேலில் உள்ள டெல் அவிவில் நடைபெற்ற விற்பனை நிகழ்ச்சியான "மெட்ரோபோலிஸ் பார்ட் 1: தி மிராக்கிள் அன்ட் தி சிலீப்பர் " இன்போது பாடினர். [44]

2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி நடைபெற்ற டொரைண்டோ நிகழ்ச்சியின்போது உண்மையில் ரஷ்ஷின் மூவிங் பிக்சர்ஸ் இசைத்தொகுப்பாக வெளியான "தி கேமரா ஐ" என்ற ரஷ் பாடலைப் பாடினர்.

இசை சரிதம் தொகு

 • வென் டிரீம் அன்ட் டே யுனைட் (1989)
 • இமேஜஸ் அன்ட் வேர்ட்ஸ் (1992)
 • அவேக் (1994)
 • எ சேன்ஜ் ஆப் சீசன்ஸ் (1995)
 • ஃபாலிங் இன்டூ இன்ஃப்பினிட்டி (1997)
 • Metropolis Pt. 2: Scenes from a Memory (1999)
 • சிக்ஸ் டிகிரி ஆப் இன்னர் டர்புலென்ஸ் (2002)
 • டிரெய்ன் ஆப் தாட் (2003)
 • ஆக்டாவேரியம் (2005)
 • சிஸ்டமேடிக் கேயாஸ் (2007)
 • பிளாக் கிளௌட்ஸ் & சில்வர் லைனிங்ஸ் (2009)

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இசைத்தொகுப்புகளுக்கும் மேலாக டிரீம் தியேட்டரின் உறுப்பினர்கள் கடந்தகாலத்திலும் தற்போதும் நூற்றுக்கணக்கான சட்டத்திற்கு புறம்பான, அதிகாரப்பூர்வமானதும் அதிகாரப்பூர்வமற்றதுமாக கூடுதல் இசைத்தொகுப்புகளுக்கு பிற கலைஞர்கள் மற்றும் சிறப்பு பங்கேற்பாளர்களுடன் இணைந்து பங்களித்திருக்கின்றனர்.[45]

இசைக்குழு உறுப்பினர்கள் தொகு

தற்போதைய உறுப்பினர்கள்
 • ஜேம்ஸ் லேப்ரி - முன்னணிப் பாடகர், வாத்தியக் கலைஞர், கீபோர்ட் இசைக் கலைஞர் (1991 ஆம் ஆண்டு முதல்-தற்போது வரை)
 • ஜான் மியூங் - அடித்தொனி பாடகர், சேப்மேன் ஸ்டிக் (1985 ஆம் ஆண்டு முதல்-தற்போது வரை)
 • ஜான் பெட்ரூசி - கித்தார் இசைக் கலைஞர், பின்னணிப் பாடகர் (1985 ஆம் ஆண்டு முதல்-தற்போது வரை)
 • மைக் போர்ட்னாய் - டிரம்ஸ் இசைக் கலைஞர், வாத்தியக் கலைஞர், பின்னணிப் பாடகர் (1985 ஆம் ஆண்டு முதல்-தற்போது வரை)
 • ஜோர்டன் ரட்டெஸ் - கீபோர்ட் இசைக் கலைஞர்,

ஜோர்டான் ரூட்ஸ் - கீபோர்ட்ஸ், காண்டினம், லேப் ஸ்டீல் கிடார் (1999-தற்போதுவரை)

முன்னாள் உறுப்பினர்கள்
 • கிறிஸ் காலின்ஸ் - முன்னணிப் பாடகர் (1986 ஆம் ஆண்டு)
 • சார்லி டாமினிஸி - முன்னணிப் பாடகர் (1987 ஆம் ஆண்டு முதல்-1989 ஆம் ஆண்டு வரை)
 • கெவின் மூர் - கீபோர்ட் இசைக் கலைஞர் (1986 ஆம் ஆண்டு முதல்-1994 ஆம் ஆண்டு வரை)
 • டெரெக் ஷெரேனியன் - கீபோர்ட் இசைக் கலைஞர், பின்னணிப் பாடகர் (1994 ஆம் ஆண்டு முதல்-1998 ஆம் ஆண்டு வரை)

<timeline> ImageSize = width:700 height:270 PlotArea = left:100 bottom:60 top:0 right:50 Alignbars = justify DateFormat = mm/dd/yyyy காலகட்டம் = 01/01/1985 முதல் 01/24/2010 வரை

TimeAxis = orientation:horizontal format:yyyy

Colors =

id:Drums value:purple legend:டிரம்ஸ்
id:Guitars value:green legend:கிடார்கள்
id:Bass value:gray(0.40) legend:பேஸ்
id:Keyboards value:orange legend:கீபோர்டுகள்
id:Vocals value:blue legend:முன்னணிக் குரல்கள்
id:Lines value:black legend:பதிவக இசைத்தொகுப்புகள்

Legend = orientation:horizontal position:bottom

ScaleMajor = increment:2 start:1985

LineData =

at:04/06/1989 color:black layer:back
at:07/07/1992 color:black layer:back
at:10/04/1994 color:black layer:back
at:09/19/1995 color:black layer:back
at:09/23/1997 color:black layer:back
at:10/26/1999 color:black layer:back
at:01/29/2002 color:black layer:back
at:11/11/2003 color:black layer:back
at:06/07/2005 color:black layer:back
at:06/04/2007 color:black layer:back
at:06/23/2009 color:black layer:back

BarData =

bar:போர்ட்னே text:"மைக் போர்ட்னே"
bar:பெட்ருசி text:"ஜான் பெட்ருசி"
bar:மியுங் text:"ஜான் மியுங்"
bar:மூர் text:"கெவின் மூர்"
bar:ஷெரினியன் text:"டெரக் ஷெரினின்"
bar:ரூட்ஸ் text:"ஜோர்டன் ரூட்ஸ்"
bar:காலின்ஸ் text:"கிரிஸ் காலின்ஸ்"
bar:டாமினிசி text:"சார்லி டாமினிசி"
bar:லேப்ரி text:"ஜேம்ஸ் லேப்ரி"

PlotData=

width:10 textcolor:black align:left anchor:from shift:(10,-4)
bar:போர்ட்னே from:01/01/1985 till:end color:டிரம்ஸ்
bar:பெட்ரூசி from:01/01/1985 till:end color:கிடார்கள்
bar:மியுங் from:01/01/1985 till:end color:பேஸ்
bar:மூர் from:06/01/1985 till:06/01/1994 color:கீபோர்டுகள்
bar:ஷெரினியன் from:06/01/1994 till:01/01/1999 color:கீபோர்டுகள்
bar:ரூட்ஸ் from:01/01/1999 till:end color:கீபோர்டுகள்
bar:காலின்ஸ் from:06/01/1985 till:01/01/1986 color:வாய்ப்பாட்டு
bar:டோமினிசி from:11/01/1987 till:10/14/1989 color:வாய்ப்பாட்டு
bar:லேப்ரி from:01/01/1991 till:end color:வாய்ப்பாட்டு

<timeline>

விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் தொகு

ஆர்ஐஏஏ பொன் மற்றும் பிளாட்டினச் சான்றிதழ்கள்[46]
 1. இமேஜஸ் அன்ட் வேர்ட்ஸ் (பொன்னிறச் சான்றிதழ்) - 1995 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி வழங்கப்பட்டது
 2. மெட்ரோபோலிஸ் 2000: லைவ் சீன்ஸ் பிரம் நியூயார்க் (பொன்னிறச் சான்றிதழ்) - 2002 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி வழங்கப்பட்டது
 3. லைவ் அட் படோகன் (டிவிடி) (பிளாட்டினம் சான்றிதழ்) - 2005 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி வழங்கப்பட்டது
 4. லைவ் இன் டோக்யோ/பைவ் இயர்ஸ் இன் எ லைவ டைம் (பிளாட்டினம் சான்றிதழ்) - 2006 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி வழங்கப்பட்டது
 5. ஸ்கோர் (டிவிடி) (பிளாட்டினம் சான்றிதழ்) - 2006 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி வழங்கப்பட்டது
கீபோர்ட் பத்திரிகை

பின்வரும் கீபோர்ட் பத்திரிகையின் விருதுகளை ஜோர்டன் ரட்டெஸ் வென்றுள்ளார்:

 1. சிறந்த புதிய திறமையாளர் விருது (1994 ஆம் ஆண்டு) [47]
 2. பர்ன் பத்திரிகையின் 2007 ஆம் ஆண்டின் சிறந்த கீபோர்ட் வாசிக்கும் இசைக் கலைஞர்
மாடர்ன் டிரம்மர்

கீழ்காணும் மாடர்ன் டிரம்மர் பத்திரிகையி்ன் விருதுகளை மைக் போர்ட்னாய் வென்றுள்ளார்:

 1. 1994 ஆம் ஆண்டின் சிறந்த மற்றும் வளர்ந்து வரும் திறமையான இசைக் கலைஞர்
 2. (1995 ஆம் ஆண்டு முதல்-2006 ஆம் ஆண்டு வரையிலான) மிகச்சிறந்த டிரம்மர்
 3. சிறந்த இசைப்பதிவு செயல்பாடுகளுக்கான விருது (1995 ஆம் ஆண்டில் உருவான அவேக் இசைத்தொகுப்பு, 1996 ஆம் ஆண்டில் உருவான எ சேஞ் ஆப் சீசன்ஸ் இசைத்தொகுப்பு, 1998 ஆம் ஆண்டில் உருவான ஃபாலிங் இன்டூ இன்ஃப்பினிட்டி இசைத்தொகுப்பு, 2000 ஆம் ஆண்டில் உருவான மெட்ரோபோலிஸ், பிடி. 2: சீன்ஸ் பிரம் எ மெமரி இசைத்தொகுப்பு, 2002 ஆம் ஆண்டில் உருவான சிக்ஸ் டிகிரீஸ் ஆப் இன்னர் டர்பெலென்ஸ் இசைத்தொகுப்பு, மற்றும் 2007 ஆம் ஆண்டில் உருவான ஸ்கோர் இசைத்தொகுப்பு போன்றவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம்)
 4. (2000 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளின்) சிறந்த இசை வல்லுநர்
 5. (2000 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளின்) சிறந்த நிகழ்பட/டிவிடி ஒருங்கிணைப்பாளர்
 6. 2004 ஆம் ஆண்டின் புகழ்க்கூடத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டவர்கள் (2004)
கித்தார் வேர்ல்ட்

100 மிகச்சிறந்த கித்தார் இசைத்தொகுப்புப் பட்டியலில் Metropolis Pt. 2: Scenes from a Memory என்ற இசைத்தொகுப்பு 95 ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.[48]

டோட்டல் கித்தார்

2007 ஆம் ஆண்டின் சிறந்த கித்தார் இசைக் கலைஞர் விருதை ஜான் பெட்ரூசி வென்றார்.

மற்ற அங்கீகாரங்கள்
 • டிரீம் தியேட்டரின் சால்ட் லேக் சிட்டி இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆளுனர் ஜான் ஹன்ட்ஸ்மேன், ஜூனியர். 2007 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் தேதியை "டிரீம் தியேட்டர் தினமாக " அறிவித்தார்.
 • 2007 ஆம் ஆண்டு டிசம்பரில், எக்ஸ்பாக்ஸ் லைவின் ஆர்டிஸ்ட் ஆப் தி மன்த் விருதுக்கு டிரீம் தியேட்டர் தேர்வு செய்யப்பட்டது.
 • டிரீம் தியேட்டரின் "கான்ஸ்டன்ட் மோஷன்" என்ற நிகழ்படப் பாடல், ஹெட்பேங்கர்ஸ் ஃபால் 2007 போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
 • டிரீம் தியேட்டரின் "ஃபோர்ஷேக்கன்" என்ற நிகழ்படப் பாடல், ஹெட்பேங்கர்ஸ் ஃபால் 2008 போட்டியில் ஐந்தாம் இடத்தைப் பிடித்தது.
 • டிரீம் தியேட்டரின் படைப்பில் உருவான ஆக்டவேரியம் இசைத்தொகுப்பைச் சேர்ந்த "பேனிக் அட்டாக்" என்ற பாடல் ராக் பேன்ட் 2 என்ற நிகழ்பட விளையாட்டில் பயன்படுகிறது. "கான்ஸ்டன்ட் மோஷன்" என்ற பாடலை ராக் பேன்ட் நிகழ்பட விளையாட்டிலிருந்து பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள் செய்து தரப்பட்டன.
 • இமேஜஸ் அன்ட் வேர்ட்ஸ் இசைத்தொகுப்பைச் சேர்ந்த "புல் மி ஆன்டர்" என்ற பாடல் கித்தார் ஹீரோ: வேர்ல்ட் டூரில் சிறப்பிக்கப்பட்டிருந்தது.
 • 2008 (எக்ஸ்பாக்ஸ் 360) ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி மற்றும் 2008 (பிஎஸ்3) ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதியிலிருந்து, டிரீம் தியேட்டரின் "கான்ஸ்டன்ட் மோஷன்" என்ற பாடலை ராக் பேன்டிலிருந்து பதிவிறக்கம் செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. விற்பனையை ஊக்குவிக்கும் நோக்கத்தில் தொடக்கத்தில் அந்தப் பாடலை ராக் பேன்டிலிருந்து பதிவிறக்கம் செய்வதற்கு 0.99 அமெரிக்க டாலர் கட்டணமாக வசூலிக்கப்பட்டது, ஆனால் பின்னர் அந்தக் கட்டணம் 1.99 அமெரிக்க டாலராக உயர்த்தப்பட்டது.
 • எக்ஸ்பாக்ஸ் 360 நிகழ்பட விளையாட்டிற்காக டிரீம் தியேட்டர் இரண்டு புகழ்பெற்ற ஒலித்தடங்களை உருவாக்கியது. 2007 ஆம் ஆண்டு டிசம்பரில், டிரீம் தியேட்டர் ஹாலோ 3 என்ற நிகழ்பட விளையாட்டிற்காக புதிய ஒலித்தடத்தை உருவாக்கியது என்பதுடன், 2009 ஆம் ஆண்டு ஜூனில் கால் ஆப் டூயூட்டி: வேர்ல்ட் அட் வார் ஒலித்தடத்தை உருவாக்கியது.[சான்று தேவை]

குறிப்புகள் தொகு

 1. 1.0 1.1 1.2 1.3 பில்போர்ட் அட்டவணையில் டிரீம் தியேட்டர் படைப்புகளுக்கு அளிக்கப்பட்ட தரங்களைக் குறித்த விவரங்களை பில்போர்ட்.காம் இல் காணலாம்.
 2. "February 9, 2007". Nielsen Soundscan News. 2007. http://www.marketingtomenconference.com/marketingtomen/bb_article_display.jsp?vnu_content_id=1003544204. பார்த்த நாள்: 2007-02-11. 
 3. 3.0 3.1 3.2 3.3 3.4 ஸ்கோர் டிவிடியின் இரண்டாவது வட்டுக்களைப் பற்றிய விவரங்களை "தி ஸ்கோர் சோ ஃபார்" என்ற ஆவணத்தில் இருந்து பெற முடியும்.
 4. போர்ட்னாய், மைக் (2003). "தி மெஜெஸ்டி டெமோஸ் 1985-1986" [வட்டுக்களில் காணப்படும் குறிப்புகள்]. நியூயார்க்: ஓயிட்ஸ்ஜாம் இசைப்பதிவகம்.
 5. "The Dream Theater FAQ - Graphic Version". Gabbo.net. http://www.gabbo.net/dt/faq/. பார்த்த நாள்: 2009-01-02. 
 6. 6.0 6.1 போர்ட்னாய், மைக் (2004). "வென் டிரீம் அன்ட் டே யுனைட் டெமோஸ்" என்ற இசைத்தொகுப்பை தயாரிப்பதற்கு நாதன் எட்மண்ட்ஸ் என்பவர் உதவி செய்தார். 1987-1989 [வட்டுக்களில் காணப்படும் குறிப்புகள்]. நியூயார்க்: ஓயிட்ஸ்ஜாம் இசைப்பதிவகம்.
 7. 7.0 7.1 7.2 7.3 இசைச் சுற்றுப்பயணத்தைப் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள மைக்போர்ட்னாய்.காம் சுற்றுப்பயண வலைதளத்தைப் பார்க்கவும்.
 8. போர்ட்னாயின் இசைச் சுற்றுப்பயணம் விவரங்கள்: 1990 ஆம் ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி மேற்கொண்ட இசைச் சுற்றுப்பயணம்
 9. ஈஸ்ட்வெஸ்ட் இசைப் பதிவகத்தின் வெளியீடு.
 10. டிரீம் தியேட்டரின் ரசிகர் சங்கங்கள் வழியாக ஒன்பது கிறிஸ்துமஸ் வட்டுக்கள் வெளியிடப்பட்டன என்பதுடன், 2005 ஆம் ஆண்டில் வட்டுக்கள் வெளியிடுவது நிறுத்தப்பட்டன. டிரீம் தியேட்டர்.நெட் வலைதளத்தின் டிடிஐஎஃப்சியைப் பரணிடப்பட்டது 2009-01-02 at the வந்தவழி இயந்திரம் பார்க்கவும்.
 11. லேப்ரி, ஜேம்ஸ். (கோடைக்காலம் '97) இமேஜஸ் & வேர்ட்ஸ் எண். 14 , பக்கம். 5
 12. "ஃபாலிங் இன்டூ இன்ஃப்பினிட்டி டெமோஸ்". http://www.ytsejamrecords.com/ProductCart/pc/viewPrd.asp?idcategory=6&idproduct=26. 
 13. போர்ட்னாய், மைக் (1998). "லிக்யூட் டென்ஷன் எக்ஸ்பிரிமென்ட்" [வட்டுக்களில் காணப்படும் குறிப்புகள்]. நியூயார்க்: மேக்னா கார்டா இசைப்பதிவகம்.
 14. "Mike Portnoy FAQ". http://www.mikeportnoy.com/aboutmike/faq/answers/12.aspx#213. 
 15. சிக்ஸ் டிக்ரீஸ் ஆப் இன்னர் டர்பெலென்ஸ் என்ற இசைத்தொகுப்பு பில்போர்ட் இணையதள அட்டவணையில் முதல் இடத்தைப் பெற்றதாக டிரீம்தியேட்டர்.நெட் பரணிடப்பட்டது 2006-02-18 at the வந்தவழி இயந்திரம் செய்தி வெளியிட்டது.
 16. டிரெய்ன் ஆப் தாட் இசைத்தொகுப்பைச் சேர்ந்த "இன் கான்ஸ்டன்ட் மோஷன்" என்ற பாடலின் டிவிடியைக் குறித்த மைக் போர்ட்னாயின் (2007) பகுப்பாய்வு.
 17. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://digitalprosound.digitalmedianet.com/articles/viewarticle.jsp?id=45690. 
 18. "Lifting Shadows - The Authorised Story Of Dream Theater". Dreamtheaterbook.com. http://www.dreamtheaterbook.com/. பார்த்த நாள்: 2009-01-02. 
 19. "காட்ஸ் ஆப் மெட்டலின் அதிகாரப்பூர்வ வலைதளம்". http://www.godsofmetal.it/. 
 20. "டிரீம் தியேட்டர் புதிய இசைத்தொகுப்பை ஒளிப்பதிவு செய்யத் தொடங்குகிறது என்பதுடன், புதிய முத்திரையைத் தேடுகிறது பரணிடப்பட்டது 2009-01-16 at the வந்தவழி இயந்திரம்". பிளாப்பர்மௌத்.நெட் பரணிடப்பட்டது 2009-07-10 at the வந்தவழி இயந்திரம்
 21. "[1] பரணிடப்பட்டது 2009-04-10 at the வந்தவழி இயந்திரம்." [2] பரணிடப்பட்டது 2009-04-10 at the வந்தவழி இயந்திரம்
 22. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://www.mikeportnoy.com/forum/m2268614.aspx. 
 23. http://www.metalhammer.co.uk/news/dream-theater%e2%80%99s-mike-portnoy-pens-tribute-to-late-father/
 24. http://www.metalsetlists.com/showthread.php?t=11043
 25. டிரீம் தியேட்டர் உருவாக்கிய ஹோலி ஷிட் இசைத்தொகுப்பைச் சேர்ந்த தி கௌன்லெட் பாடல் பில்போர்ட் முதல் 200 அட்டவணையில் ஆறாம் இடத்தைப் பெற்றது
 26. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://www.mikeportnoy.com/forum/m2443312.aspx. 
 27. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://www.dreamtheater.net/tourdates.php#dtnzaustralia. 
 28. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://www.roadrunnerrecords.com/news/Dream-Theater-To-Tour-With-Iron-Maiden-This-Summer-21029.aspx. 
 29. மேரி, குயீன் ஆப் ஸ்காட்ஸ் பயன்படுத்திய முத்திரை டிரீம்தியேட்டர்.நெட் பரணிடப்பட்டது 2011-07-25 at the வந்தவழி இயந்திரம் இல் காணப்படுகிறது.
 30. மேரி, குயீன் ஆப் ஸ்காட்ஸ் பயன்படுத்தும் முத்திரையை விவரங்கள்
 31. டிக்ஸன், பிராட் இடி ஏஎல். "டிடி பயன்படுத்தும் 'முத்திரை' எது?".
 32. கேம்ப்பெல், கோர்ட்னே. "மைக் போர்ட்னாய் - டிரீம் தியேட்டர்". காதணி தேவப்படுகிறது .
 33. மெட்ரோபோலிஸ் 2000: சீன்ஸ் பிரம் நியூயார்க் டிவிடியைப் பார்க்கவும்
 34. ஹேன்சென், ஸ்காட் & போர்ட்னாய், மைக். "ரோஸ்லேன்ட் (டிவிடி) நிகழ்ச்சிக்குப் பிறகு, மைக் கலக்கத்தில் இருப்பதாக நான் கேள்விப்பட்டது உண்மையா? பரணிடப்பட்டது 2007-08-14 at the வந்தவழி இயந்திரம்என்ன நடந்தது? பரணிடப்பட்டது 2007-08-14 at the வந்தவழி இயந்திரம்". எம்பி எஃப்ஏகியூ பரணிடப்பட்டது 2015-04-19 at the வந்தவழி இயந்திரம் .
 35. வாய்சஸ் யூகே: டிரீம் தியேட்டர் ரசிகர் சங்கம் "டிரீம் தியேட்டர் செய்திகள்: வரலாறு காணாத கூட்டம்" பரணிடப்பட்டது 2016-02-05 at the வந்தவழி இயந்திரம்
 36. "ஆக்டவரியம் அசைபடம்". http://www.clevver.com/music/video/24600/dream-theater-octavarium-animation.html. 
 37. மிக்கா டிஸ்காவின் என்ஏடிஎஸ் அசைபடம்
 38. "Progressive Nation 2008 - Press Release". dreamtheater.net (Dream Theater). 2007-11-05 இம் மூலத்தில் இருந்து 2009-10-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091007002129/http://www.dreamtheater.net/news_dreamtheater.php#prognation. பார்த்த நாள்: 2008-05-11. 
 39. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://www.dreamtheater.net/news_dreamtheater.php#pnlineup. 
 40. http://www.dreamtheater.net/tourdates.php பரணிடப்பட்டது 2011-07-16 at the வந்தவழி இயந்திரம் Progressive Nation Tour Dates
 41. "YtseJam Records - The Official Dream Theater Bootlegs". Ytsejamrecords.com. http://www.ytsejamrecords.com. பார்த்த நாள்: 2009-01-02. 
 42. ஹேன்சென், ஸ்காட் & போர்ட்னாய், மைக். "மற்றொரு இசைக்குழுவின் மொத்த இசைத்தொகுப்பு தொடர்பான ஒலித்தடத்தில் அடங்கியுள்ள வேறுபாடுகள் என்ன? பரணிடப்பட்டது 2007-08-26 at the வந்தவழி இயந்திரம்இசைத்தொகுப்பைத் தொடங்குவதற்கான பணிகளை மேற்கொள்வது குறித்து மைக் என்ன நினைக்கிறார்? பரணிடப்பட்டது 2007-08-26 at the வந்தவழி இயந்திரம்". எம்பி எஃப்ஏகியூ பரணிடப்பட்டது 2015-04-19 at the வந்தவழி இயந்திரம் .
 43. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://www2.kerrang.com/2008/06/maiden_heaven_track_listing_re.html. 
 44. http://whiplash.net/materias/news_874/091017-dreamtheater.html
 45. http://www.dreamtheaterforums.org/discography/page4.html
 46. "riaa.com". http://www.riaa.com/goldandplatinumdata.php?resultpage=1&table=SEARCH_RESULTS&action=&title=&artist=dream%20theater&format=&debutLP=&category=&sex=&releaseDate=&requestNo=&type=&level=&label=&company=&certificationDate=&awardDescription=&catalogNo=&aSex=&rec_id=&charField=&gold=&platinum=&multiPlat=&level2=&certDate=&album=&id=&after=&before=&startMonth=1&endMonth=1&startYear=1958&endYear=2010&sort=Artist&perPage=25. 
 47. "ஜோர்டான் ரட்டெஸைப் பற்றிய குறிப்புகள்". http://www.jordanrudess.com/jr/index2.html. 
 48. http://rateyourmusic.com/list/Boggs1027/guitar_worlds_100_greatest_guitar_albums_of_all_time

குறிப்புதவிகள் தொகு

! ஜான் பெட்ரூசி மற்றும் மைக் போர்ட்னாய் உடனான சந்திப்பு". டிரீம் தியேட்டர் 29, பக்கம். 14–20.

புற இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Dream Theater
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிரீம்_தியேட்டர்&oldid=3642077" இருந்து மீள்விக்கப்பட்டது