டெட்ராக்சிடேன்

வேதிச் சேர்மம்

டெட்ராக்சிடேன் (Tetraoxidane) என்பது H2O4 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1][2][3] ஐதரசனும் ஆக்சிசனும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. நிலைப்புத்தன்மை அற்ற ஐதரசனின் பல்லாக்சைடுகளில் இதுவும் ஒன்றாகும்..[4]

டெட்ராக்சிடேன்
Tetraoxidane
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டெட்ராக்சிடேன்
வேறு பெயர்கள்
ஐதராக்சி பெராக்சைடு, ஈரைதரசன் டெட்ராக்சைடு, டைபெராக்சைடு, பிசு பெராக்சைடு
இனங்காட்டிகள்
29683-94-1
ChemSpider 4417295
InChI
  • InChI=1S/H2O4/c1-3-4-2/h1-2H
    Key: RSPISYXLHRIGJD-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 5250043
  • OOOO
பண்புகள்
H2O4
வாய்ப்பாட்டு எடை 66.01 g·mol−1
அடர்த்தி 1.8±0.1 கி/செ.மீ3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

ஐதரோபெராக்சில் இயங்குறுப்புகள் (HO2) தாழ்வெப்பநிலையில் வேதி வினைபுரிவதால் டெட்ராக்சிடேன் உருவாகிறது:[5][6]

2HO2 --> H2O4

இயற்பியல் பண்புகள்

தொகு

பாலி ஆக்சிடேன்களில் இது நான்காவது உறுப்பினர் ஆகும். நீர் (மோனோ ஆக்சிடேன்), ஐதரசன் பெராக்சைடு (டை ஆக்சிடேன்) மற்றும் டிரை ஆக்சிடேன் என்பவை முதல் மூன்று ஆக்சிடேன்களாகும். இம்மூன்று ஆக்சிடேன்களைக் காட்டிலும் டெட்ராக்சிடேன் நிலைப்புத்தன்மை குறைந்த சேர்மமாகும். டெட்ராக்சிடேன் என்ற சொல் பெற்றோர் சேர்மத்திற்கு அப்பால் R2O4 என்ற பொது வாய்ப்பாடுகளின் பல மகள் சேர்மங்கள் வரை நீண்டுள்ளது. இங்குள்ள R என்பது ஐதரசன், ஆலசன் அணுக்கள் அல்லது பல்வேறு கனிம மற்றும் கரிம ஒற்றை இணைதிற இயங்குறுப்புகளாக இருக்கலாம். இரண்டு R இயங்குறுப்புகள் ஓர் ஈரிணைதிற சேர்மத்தால் மாற்றப்படலாம். எனவே பல்லினவளைய டெட்ராக்சிடேன்களும் அறியப்படுகின்றன.[7]

அயனியாக்கம்

தொகு

டெட்ராக்சிடேன் நீர்மநிலையில் இருந்தால் தன்னிச்சையாகவே அயனியாக்கம் அடைகிறது:

H2O4 ---> H+ + HO4-
2H2O4 ---> H3O4+ + HO4-

மேற்கோள்கள்

தொகு
  1. Mckay, Daniel J.; Wright, James S. (1 February 1998). "How Long Can You Make an Oxygen Chain?" (in en). Journal of the American Chemical Society 120 (5): 1003–1013. doi:10.1021/ja971534b. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. https://pubs.acs.org/doi/pdf/10.1021/ja971534b. பார்த்த நாள்: 16 May 2023. 
  2. "hydroxyperoxide". ChemScr. பார்க்கப்பட்ட நாள் 15 May 2023.
  3. The Chemistry of Peroxides, Volume 3 (in ஆங்கிலம்). John Wiley & Sons. 20 April 2015. p. 198. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-118-41271-8. பார்க்கப்பட்ட நாள் 15 May 2023.
  4. "Selected ATcT [1, 2] enthalpy of formation based on version 1.122 of the Thermochemical Network [3]". atct.anl.gov. பார்க்கப்பட்ட நாள் 15 May 2023.
  5. Levanov, Alexander V.; Sakharov, Dmitri V.; Dashkova, Anna V.; Antipenko, Ewald E.; Lunin, Valeri V. (2011). "Synthesis of Hydrogen Polyoxides H2O4 and H2O3 and Their Characterization by Raman Spectroscopy". European Journal of Inorganic Chemistry 2011 (33): 5144–5150. doi:10.1002/ejic.201100767. 
  6. Möller, Detlev (19 February 2019). Fundamentals and Processes (in ஆங்கிலம்). Walter de Gruyter GmbH & Co KG. p. 276. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-056126-5. பார்க்கப்பட்ட நாள் 15 May 2023.
  7. Curutchet, Antton; Colinet, Pauline; Michel, Carine; Steinmann, Stephan N.; Le Bahers, Tangui (2020). "Two-sites are better than one: revisiting the OER mechanism on CoOOH by DFT with electrode polarization". Physical Chemistry Chemical Physics 22 (13): 7031–7038. doi:10.1039/D0CP00281J. பப்மெட்:32195492. Bibcode: 2020PCCP...22.7031C. https://hal.science/hal-02519600v1/file/CoOOH-Main-PCCP-2.pdf. பார்த்த நாள்: 15 May 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெட்ராக்சிடேன்&oldid=4053437" இலிருந்து மீள்விக்கப்பட்டது