டெர்பியம்(III) நைட்ரேட்டு

வேதிச் சேர்மம்

டெர்பியம்(III) நைட்ரேட்டு (Terbium(III) nitrate) என்பது Tb(NO3)3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1] டெர்பியம் தனிமமும் நைட்ரிக் அமிலமும் சேர்ந்து இவ்வுப்பு உருவாகிறது. டெர்பியம்(III) நைட்ரேட்டு அறுநீரேற்று ( [Tb(NO3)3(H2O)4]·2H2O) முச்சரிவச்சு படிகக் கட்டமைப்பில் நிறமற்ற படிகங்களாக உருவாகிறது. பச்சை நிற உமிழ்வுகள் கொண்ட பொருட்கள் தயாரிப்பில் டெர்பியம்(III) நைட்ரேட்டு பயன்படுகிறது.[2]

டெர்பியம்(III) நைட்ரேட்டு

டெர்பியம் நைட்ரேட்டு நீரேற்று வடிவம் (இடது) மற்றும் 254 நானோமீட்டர் புறவூதா ஒளியில் ஒளி உமிழ்வு (வலது)
பெயர்கள்
வேறு பெயர்கள்
டெர்பியம் நைட்ரேட்டு
இனங்காட்டிகள்
10043-27-3
(நீரிலி) Y
57584-27-7
(ஐந்து நீரேற்று) Y
13451-19-9 Y
InChI
  • InChI=1S/3NO3.Tb/c3*2-1(3)4;/q3*-1;+3
    Key: YJVUGDIORBKPLC-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24853
202879
  • [N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[Tb+3]
UNII GVA407Y0IC
பண்புகள்
Tb(NO3)3
வாய்ப்பாட்டு எடை 344.946
தோற்றம் நிறமற்ற படிகங்கள் (அறுநீரேற்று)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

டெர்பியம்(III,IV) ஆக்சைடை நீர்த்த நைட்ரிக் அமிலம் மற்றும் ஐதரசன் பெராக்சைடு சேர்ந்த கரைசலில் கரைத்தால் டெர்பியம்(III) நைட்ரேட்டு உருவாகும்.[3]

டெர்பியம்(III) நைட்ரேட்டை நைட்ரிக் அமிலத்துடன் சேர்த்து வினைபுரியச் செய்து படிகமாக்கி 45~55% கந்தக அமிலம் சேர்த்து உலர்த்துவதன் மூலம் அறுநீரேற்றைப் பெறலாம்.[4]

பண்புகள்

தொகு

அம்மோனியம் பைகார்பனேட்டுடன் டெர்பியம்(III) நைட்ரேட்டு சேர்த்து வினையில் ஈடுபடுத்தினால் Tb2(CO3)3 உருவாகும்.[5] மேலும், மெத்தில் ஐசோசயனைடுடன் அதிக அளவிலான நைட்ரேட்டு அயனிகளுடன் சேர்ந்து Tb(NO3)2−5 சேர்மம் உருவாகிறது.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Moret, Emmanuel; Bünzli, Jean-Claude G.; Schenk, Kurt J. (1990). "Structural and luminescence study of europium and terbium nitrate hexahydrates". Inorganica Chimica Acta 178 (1): 83–88. doi:10.1016/S0020-1693(00)88138-4. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1693. https://archive.org/details/sim_inorganica-chimica-acta_1990-12-03_178_1/page/n91. 
  2. Xia, Tifeng; Song, Tao; Zhang, Gege; Cui, Yuanjing; Yang, Yu; Wang, Zhiyu; Qian, Guodong (2016). "A Terbium Metal-Organic Framework for Highly Selective and Sensitive Luminescence Sensing of Hg2+Ions in Aqueous Solution". Chemistry - A European Journal 22 (51): 18429–18434. doi:10.1002/chem.201603531. பன்னாட்டுத் தர தொடர் எண்:0947-6539. பப்மெட்:27747951. 
  3. Hou, Zhiyao; Wang, Lili; Lian, Hongzhou; Chai, Ruitao; Zhang, Cuimiao; Cheng, Ziyong; Lin, Jun (2009). "Preparation and luminescence properties of Ce3+ and/or Tb3+ doped LaPO4 nanofibers and microbelts by electrospinning". Journal of Solid State Chemistry 182 (4): 698–708. doi:10.1016/j.jssc.2008.12.021. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-4596. Bibcode: 2009JSSCh.182..698H. 
  4. 高胜利, 刘翊纶, 杨祖培. 稀土硝酸盐的制法、性质及结构 பரணிடப்பட்டது 2019-07-08 at the வந்தவழி இயந்திரம். 稀土, 1990 (4): 23-28.
  5. Foger, K.; Hoang, M.; Turney, T. W. (1992). "Formation and thermal decomposition of rare-earth carbonates". Journal of Materials Science 27 (1): 77–82. doi:10.1007/BF02403646. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-2461. Bibcode: 1992JMatS..27...77F. https://archive.org/details/sim_journal-of-materials-science_1992-01-01_27_1/page/n82. 
  6. Bünzli, Jean-Claude G.; Vuckovic, Milan M. (1983). "Spectroscopic properties of anhydrous and aqueous solutions of terbium perchlorate and nitrate: Coordination numbers of the Tb(III) ion". Inorganica Chimica Acta 73: 53–61. doi:10.1016/S0020-1693(00)90826-0. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1693. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெர்பியம்(III)_நைட்ரேட்டு&oldid=4174465" இலிருந்து மீள்விக்கப்பட்டது