டைக்ளோஃபீனாக்

(டைக்ளோஃபினாக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

டைக்ளோஃபினாக் (diclofenac) என்பது அழற்சிக்கு எதிரான இயக்க ஊக்கிகள் இல்லாத மருந்துகளுள் ஒன்றாகும்.

டைக்ளோஃபீனாக்
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
2-(2-(2,6-dichlorophenylamino)phenyl)acetic acid
மருத்துவத் தரவு
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை C(AU) C (1st. and 2nd. trimenon), D (third trimenon)
சட்டத் தகுதிநிலை P (UK) Rx-only most preparations/countries. Limited OTC some countries. இந்தியத் துணைக்கண்டத்தில் கால்நடைகளுக்கான பயன்பாடு தடை செய்யப்பட்டு உள்ளது.
வழிகள் .வாய் வழி, தசையுள், மலக்குடலுள், மற்றும் தளப்பரப்பில்
மருந்தியக்கத் தரவு
புரத இணைப்பு 99%
வளர்சிதைமாற்றம் கல்லீரலில்
அரைவாழ்வுக்காலம் 1.2-2 hr (35% of the drug enters enterohepatic recirculation)
கழிவகற்றல் 99% பித்த நீர் வழி, 1% சிறுநீரில்
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 15307-86-5
ATC குறியீடு D11AX18 M01AB05, M02AA15, S01BC03
பப்கெம் CID 3033
DrugBank APRD00527
ChemSpider 2925 Y
UNII 144O8QL0L1 Y
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் D07816 Y
ChEMBL CHEMBL139 Y
வேதியியல் தரவு
வாய்பாடு C14

H11Br{{{Br}}}Cl2N O2 

மூலக்கூற்று நிறை 296.148 g/mol
SMILES eMolecules & PubChem
  • InChI=1S/C14H11Cl2NO2/c15-10-5-3-6-11(16)14(10)17-12-7-2-1-4-9(12)8-13(18)19/h1-7,17H,8H2,(H,18,19) Y
    Key:DCOPUUMXTXDBNB-UHFFFAOYSA-N Y

இதன் வேதிப்பெயர் 2-(2,6-டைகுளோரோ அனிலினோ) ஃபினைல் அசிட்டிக் அமிலம் என்பதாகும்.

செயல்படும் விதம் தொகு

இது நமது உடலில் காய்ச்சல், வலி, அழற்சி வினை ஆகியவற்றை உண்டாக்கும் பொருட்களுள் ஒன்றான புராஸ்டாகிளான்டினை உற்பத்தி செய்ய உதவும் நொதியான வளைய ஆக்சிசனேஸ் ஐத் தடுக்கிறது. எனவே தான் இது காய்ச்சல், பல விதமான வலி மற்றும் அழற்சி நோய்களில் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் மாதவிலக்கின் போது ஏற்படும் வலியிலும் இது பயன்படுத்தப்படுகிறது.[1][2]

பக்க விளைவுகள் தொகு

இரைப்பைப் புண் தொகு

மனித இரைப்பையை அமிலத்தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் கோழைப்படலத்திற்கு புரோஸ்டாகிளான்டின் மிகவும் அவசியம். டைக்ளோஃபினாக் புரோஸ்டாகிளான்டினைக் குறைக்கிறது என்பது மேலே சொல்லப்பட்டது. எனவே வலிநீக்கி மருந்துகளை எடுத்துக் கொண்டால் கோழைப்படலம் பாதிக்கப்பட்டு ஹைட்ரோ குளோரிக் அமிலம் இரைப்பையைத் தாக்கி இரைப்பைப் புண் உண்டாகும்.

சிறுநீரகச் செயலிழப்பு தொகு

சில மனிதர்களில் டைக்ளோஃபினாக் உடனடிச் சிறுநீரகச் செயலிழப்பை உண்டாக்க வல்லது.[3]

சூழலியல் பேரழிவு தொகு

2008 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி, இந்தியத் துணைக்கண்டக் பிணந்தின்னிக் கழுகுகள் எண்ணிக்கையில் 99.9% அழிந்திருந்தது தெரிய வந்தது. இதற்குக் காரணம் டைக்ளோஃபினாக் ஏற்படுத்திய சிறுநீரகச் செயலிழப்பே என்று கண்டறியப்பட்டது. கால்நடைகளில் அளவில்லாமல் டைக்ளோஃபீனாக் பயன்படுத்தியதே இதற்குக் காரணம் ஆகும்.[4]

இலட்சக்கணக்கிலான கழுகுகள் மடிந்ததால் குளம்புடைய கால்நடைப் பிணங்களைத் தின்னும் துப்புரவாளர்கள் சூழல் மண்டலத்தில் இல்லாத நிலை ஏற்பட்டது. காட்டு நாய்களும் காட்டு எலிகளும் கால்நடைப் பிணங்களைத் தின்ன ஆரம்பித்தன. இவற்றின் செரிமான மண்டலத்தால் கழுகைப் போல கால்நடைப் பிணத்தில் உள்ள தொற்றுநோய்க் கிருமி‌களைக் கொல்ல முடியவில்லை. காட்டு நாய்களிடமிருந்து தெரு நாய்களுக்கும் இக் கிருமிகள் குறிப்பாக வெறிநாய்க்கடி நோய்க்கிருமி பரவியது.[5] இதனால் வெறிநாய்க்கடி நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமானது.[6] காட்டுநாய்கள் பெருகியதால் அவற்றை உண்டு வாழும் சிறுத்தை இனமும் பெருகியது. அவை ஊருக்குள் வருவதும் அதிகரித்தது. சில நேரங்களில் சிறுத்தைகள் மனிதக் குழந்தைகளைத் தாக்கிய நிகழ்வுகளும் ஏற்பட்டது.[7]

சரத்துஸ்திர சமூகத்தினர் கழுகுகள் அழிவால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மனிதப் பிணங்களை அமைதியின் கோபுரம் என்ற உயர்ந்த கோபுரங்களில் இட்டு கழுகுகளுக்கு இரையாக அளிக்கும் பழக்கமுடைய அவர்கள் மாற்று வழிமுறையைக் கடைப்பிடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். [5]

மேற்கோள்கள் தொகு

  1. "Diclofenac Epolamine". The American Society of Health-System Pharmacists. பார்க்கப்பட்ட நாள் 3 April 2011.
  2. "RUFENAL", Birzeit Pharmaceutical Company, BPC.ps, web: [1] பரணிடப்பட்டது 2011-05-26 at the வந்தவழி இயந்திரம்.
  3. Brater DC (2002). "Renal effects of cyclooxygyenase-2-selective inhibitors". J Pain Symptom Manage 23 (4 Suppl): S15–20; discussion S21–3. doi:10.1016/S0885-3924(02)00370-6. பப்மெட்:11992745. 
  4. "Vet drug 'killing Asian vultures'", BBC News, 28 January 2004, webpage: BBC583.
  5. 5.0 5.1 Swan G, Naidoo V, Cuthbert R, Green RE, Pain DJ, Swarup D, Prakash V, Taggart M, Bekker L, Das D, Diekmann J, Diekmann M, Killian E, Meharg A, Patra RC, Saini M, Wolter K (2006). "Removing the threat of diclofenac to critically endangered Asian vultures". PLoS Biol 4 (3): e66. doi:10.1371/journal.pbio.0040066. பப்மெட்:16435886. 
  6. Rabies follows disruption in food cycle
  7. Nature Shock, UK Channel 5 television, Tuesday 7 Sept 2010,8 to 9 pm,
"https://ta.wikipedia.org/w/index.php?title=டைக்ளோஃபீனாக்&oldid=3214760" இலிருந்து மீள்விக்கப்பட்டது