டொனால்ட் குனுத்

டோனால்ட் எர்வின் குனுத் (Donald Ervin Knuth[1] kə-NOOTH) (பிறப்பு சனவரி 10, 1938) ஓர் கணினியியலாளர் மற்றும் இசுடான்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி நிரலாக்க பெருமைமிகு பேராசியர்.[2]

டோனால்ட் எர்வின் குனுத்
டோனால்ட் குனுத் அக்டோபர் 25,2005 நிகழ்வொன்றில்
பிறப்புசனவரி 10, 1938 (1938-01-10) (அகவை 87)
மில்வாக்கி, விசுகான்சின், ஐக்கிய அமெரிக்கா
வாழிடம்அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறைகணிதம்
கணினியியல்
பணியிடங்கள்இசுடான்ஃபர்ட் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்கேசு வெசுடர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகம்
கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம்
ஆய்வு நெறியாளர்மார்சல் ஹால் ஜூர்.
முனைவர் பட்ட 
மாணவர்கள்
லியோனிதாசு ஜெ. குய்பசு
இசுகாட் கிம்
வாகன் பிராட்
ராபர்ட் செட்ஜ்விக்
ஜெஃப்ரி விட்டர்
ஆந்த்ரே பிரோடர்
பெர்னர்ட் மார்சல் மோன்ட்-ரேனாட்
அறியப்படுவது கணினி நிரலாக்கக் கலை (The Art of Computer Programming)
டெக்சு(TeX), மெடாஃபான்ட்
குனுத்–மோரிசு–பிராட் படிமுறைத்தீர்வு
குனுத்–பென்டிக்சு நிறைவாக்க படிமுறைத்தீர்வு
எம்எம்ஐஎக்சு
விருதுகள்டூரிங் விருது (1974)
யான் வோன் நியூமன் பதக்கம் (1995)
ஆர்வி பரிசு (1995)
கியோட்டோ பரிசு (1996)

கணினி நிரலாக்கக் கலை என்ற பல பாகங்களைக் கொண்ட வித்தாகக் கருதப்படும் நூலை எழுதிய குனுத்,[3] படிமுறைத் தீர்வுகளின் வளர்ச்சிக்கு பங்காற்றி கணிதவியல் நுட்பங்களை முறைப்படுத்தியமைக்காகவும் படிமுறைத்தீர்வுகளின் கணிதச்சிக்கல்களை பகுப்பாய்வு செய்தமையாலும் படிமுறைத்தீர்வுகளின் பகுப்பாய்வுகளின் "தந்தை" என்று அறியப்படுகிறார். இதன் தொடர்பாக இவர் பெரும் ஓ குறியீடு என கணிதவியல், கணினிவியலில் குறிப்பிடப்படும் செயல்பாடுகளின் மட்டுப்படுத்தலை பிரபலப்படுத்தினார்.

மேலும் பல கணினி அறிவியல்த் துறைகளுக்கு அடிப்படை பங்காற்றியுள்ள குனுத் கணினியில் அச்சுக் கோர்ப்பு நிரலி டெக்சை (TeX) உருவாக்கியவர்.தொடர்புள்ள மெடாஃபான்ட் வரையறைமொழி மற்றும் வெளிப்படுத்து அமைப்பையும் கம்ப்யூடர் மாடர்ன் என்ற எழுத்துரு தொகுதியையும் உருவாக்கினார்.

குனுத் ஒரு எழுத்தாளராகவும் அறிஞராகவும் [4] வெப்,சிவெப் எனப் பெயரிடப்பட்ட கணினி நிரலி அமைப்புக்களை உருவாக்கினார். இவை இயந்திர ஏரணத்தை ஒட்டியல்லாது, சாதரண மாந்தரின் ஏரணத்தை ஒட்டி எழுதப்பட்ட அறிவாளர் நிரலாக்கத்திற்கு வழிவகுத்து ஊக்குவித்தன. மேலும் கருதுகோள் கணினிகளான MIX/MMIX வடிவமைப்புகளுக்கான கட்டளைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார்.

கல்விசார் மற்றும் அறிவியல் குமுகத்தின் சார்பாளராக குனுத் மென்பொருள் காப்புரிமைகள் வழங்குவதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.[5] தமது எதிர்ப்பை நேரடியாகவே அமெரிக்க, ஐரோப்பிய காப்புரிமை அலுவகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.[6]

இளமை வாழ்வு

தொகு

குனுத் விஸ்கொன்சின் மாநிலத்தின் மில்வாக்கியில் பிறந்தார். இவரது தந்தை சிறியதொரு அச்சுக்கூடத்தை நடத்தி வந்ததுடன் மில்வாக்கி லூத்தரன் உயர்நிலைப்பள்ளியில் கணக்குப் பதிவியலை கற்பித்து வந்தார். அதே பள்ளியில் சேர்ந்த குனுத் அங்கு பல சாதனை விருதுகளைப் பெற்றார். மரபற்ற வழிகளில் சிந்தித்த குனுத் தமது எட்டாவது வகுப்பில் சொற்போட்டியில் நடுவர்களின் எதிர்பார்ப்பிற்கும் மேலாக சாதனை நிகழ்த்திக் காட்டினார். இதனால் அவருக்கு தொலைக்காட்சிப் பெட்டி பரிசு கிடைத்ததுடன் அவரது வகுப்பில் இருந்த அனைவருக்கும் இனிப்புப் பண்டமும் கிடைத்தது.[7]

கல்வி

தொகு

குனுத் தற்போதைய கேசு வெசுட்டேர்ன் ரிசர்வு பல்கலைக்கழகத்தின் அங்கமாக உள்ள கேசு தொழிற்நுட்பக் கழகத்தில் இசைக்குப் பதிலாக இயற்பியல் கிடைக்க வெகுவாக கட்டப்பட்டார். தீட்டா சீ குமுகத்தின் பீட்டா நு அங்கத்தின் உறுப்பினராகச் சேர்ந்தார். அங்கு இயற்பியல் படிக்கும்போது, அவருக்கு பெருங்கணினிகளில் ஒன்றான ஐபிஎம் 650 அறிமுகமாயிற்று. அதன் பயனாளர் கையேட்டை படித்த குனுத்திற்கு அதன் பொறி மற்றும் மொழிமாற்றி நிரல்களை மாற்றி எழுத விரும்பினார்.[8] 1958இல் தனது பள்ளியின் கூடைப்பந்து அணி வெற்றிக்கோப்பையை தட்டிச்செல்ல ஒவ்வொரு விளையாட்டாளருக்கும் ஒரு மதிப்பு கொடுத்து நிரல் ஒன்றை எழுதினார். அக்காலத்தில் இது ஓர் புதுமைமிக்க முயற்சியாக இருந்ததால் புகழ்பெற்ற நியூசுவீக்கு]] இதழில் வந்தது;வால்ட்டர் குரோங்கைட்டின் சிபிஎஸ் மாலைச் செய்திகளிலும் இடம் பெற்றது.[8] மற்றவர்களுடன் இணைந்து குனுத் நிறுவிய பொறியியல் மற்றும் அறிவியல் ரிவ்யூ, 1959இல் சிறந்த தொழிற்நுட்ப இதழுக்கான தேசிய விருது பெற்றது.[9] பின்னதாக அவர் இயற்பியலில் இருந்து கணிதத்திற்கு மாறினார்; 1960இல் இளங்கலைப் பட்டம் பெற்றார். அவரது சிறப்பான கல்வியறிவைப் போற்றும் வகையில் கல்விக்கழகத்தின் சிறப்புப் பரிந்துரைப்படி இளங்கலைப் பட்டத்துடன் முதுகலைப் பட்டமும் அளிக்கப்பட்டது.[8]

1963இல் கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தில் கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.[10] அங்கு துணைநிலை பேராசிரியராகப் பணி புரியலானார். அக்காலத்தில்தான் அவரது புகழ்பெற்ற நூலான த ஆர்ட் ஆஃப் கம்ப்யூட்டர் புரொக்கிராமிங்கை எழுதத் தொடங்கினார். துவக்கத்தில் ஒரே நூலாக திட்டமிடப்பட்ட இந்த நூல் இறுதியில் ஏழு தொகுப்புக்களைக் கொண்ட நூலாக வெளி வந்தது. பின்னர் தேசிய பாதுகாப்பு முகமைக்காக பிரின்சுடன் பல்கலைக்கழக வளாகத்தில் பணியாற்றி உள்ளார். அவரது அரசியல் நம்பிக்கைகளுக்கும் வளாகத்தில் நிலவிய அரசியல் சூழலுக்கும் பொருந்தாமையால் இறுதியில் இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் கல்வித்துறையில் இணைந்தார்.

எழுத்தாக்கங்கள்

தொகு

கணினி நிரலாக்கக் கலை

தொகு

கணினி அறிவியல் தனது தளிர்நடை காலத்தில் இருந்தமையால் அப்போதிருந்த பல கணினி பதிப்புகள் உயர்ந்த தரத்தில் இல்லாதிருந்தன. இதனால் வெறுப்படைந்த குனுத் மிக நேரானச் சொற்களில் அதனை விவரிக்க கணினி நிரலாக்கக் கலை (TAOCP) என்ற நூலை எழுதத் தீர்மானித்தார்.1976இல் தமது மூன்றாவது தொகுப்பை வெளியிடும்போது மின்னியல் அச்சுக்கோர்வைக் கருவிகளின் தரம் குறித்து ஏமாற்றமடைந்த குனுத் தமது பணியுடன் புதிய கருவிகளாக டெக்சு மற்றும் மெடாபான்ட் ஆகியவற்றை உருவாக்கி மேம்படுத்தினார்.

2013ஆம் ஆண்டு நிலவரப்படி மூன்று தொகுப்புக்களும் நான்காவதின் முதல் அங்கமும் வெளியாகி உள்ளன. three volumes and part one of volume four of his series have been published.[11]

மற்ற ஆக்கங்கள்

தொகு

1974இல் சர்ரியல் எண்கள்,[12] என்ற கணித புதினத்தை எழுதினார். இது ஜான் கோன்வேயின் எண் அமைப்புகளுக்கான மாற்று அமைப்பை உருவாக்கிய கணக் கோட்பாட்டை அடிபற்றியது. பொருளை நேரடியாகத் தராது கணிதத்தின் வளர்ச்சியை விவரிக்கும் நூலாக இது உள்ளது. இது மாணவர்கள் புதுமையான ஆக்கபூர்வ ஆராய்ச்சியில் ஈடுபட ஊக்குவிக்கும் என குனுத் நம்பினார். அவ்வப்போது மொழிப் புதிர்களும் சில இதழ்களுக்கு வழங்கி வந்தார்.

சமயச் சார்பும் ஆக்கங்களும்

தொகு

கணினி அறிவியல் பற்றி மட்டும் அல்லாது லூதரினிய,[13] குனுத் 3:16 விவிலிய உரைகள் விளக்கம்,[14] என்ற நூலையும் எழுதி உள்ளார். விவிலியத்தின் மூன்றாவத அத்தியாயத்தின் 16ஆம் பாடல் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் கோட்டோவியத்துடன் விளக்கப்பட்டுள்ளன. இதனையொட்டி [15] எழுதினார்.

உடல்நலப் பாதிப்பு

தொகு

2006இல், குனுத்திற்கு முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. அவ்வாண்டு திசம்பரில் உறுப்புநீக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதன் பின்னர் முன்னெச்சரிக்கையாக கதிர்வீச்சு சிகிச்சை மேற்கொண்டு தற்போது முழுமையாக குணமடைந்துள்ளதாக தமது ஒளித வாழ்க்கைவரலாற்றில் கூறியுள்ளார்.[16]

மேற்கோள்கள்

தொகு
  1. Knuth, Don. "Knuth: Frequently Asked Questions". Don Knuth's home page. இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம். Retrieved 2010-11-02. How do you pronounce your last name? Ka-NOOTH.
  2. Donald Knuth's Homepage at Stanford.
  3. The Art of Computer Programming (Stanford University).
  4. Knuth, Donald Ervin, Curriculum vitæ, Stanford University.
  5. "Professor Donald Knuth's Thinking Against Software Patents" (பி.டி.எவ்), Notices (article), The American Mathematical Society, 2002 {{citation}}: Unknown parameter |month= ignored (|date= suggested) (help).
  6. Knuth, Donald Ervin, Against software patents (PDF) (Letters), archived from the original (பி.டி.எவ்) on 2015-09-24, retrieved 2013-07-18 to the patent offices in the USA and Europe.
  7. Shasha, Dennis Elliott; Lazere, Cathy A (1998). Out of their minds: the lives and discoveries of 15 great computer scientists. Springer. p. 90. ISBN 978-0-387-98269-4.
  8. 8.0 8.1 8.2 Koshy, Thomas (2004). Discrete mathematics with applications. Academic Press. p. 244. ISBN 978-0-12-421180-3. Retrieved 30 July 2011.
  9. "History of Beta Nu Chapter", The Tachi, CWRU, archived from the original on 2012-06-10, retrieved 2013-07-18.
  10. Knuth, Donald Ervin (1963), Finite Semifields and Projective Planes (பி.டி.எவ்) (Ph.D. dissertation), Caltech.
  11. Knuth, Donald Ervin. "The Art of Computer Programming (TAOCP)". Retrieved 2012-05-20.
  12. Knuth 1974.
  13. Platoni 2006.
  14. Knuth, Donald Ervin (1991). 3:16 : Bible texts illuminated. Madison, WI: A-R Eds. ISBN 978-0-89579-252-5.
  15. 3:16 திட்டம் குறித்து பேச அழைக்கப்பட்டார்; அதற்காக மற்றொரு நூல், Knuth, Donald Ervin (2001), Things a Computer Scientist Rarely Talks About, Stanford, கலிபோர்னியா, US, ISBN 1575863278{{citation}}: CS1 maint: location missing publisher (link)
  16. "Donald Knuth: 85 – Coping with cancer". Web of Stories. 2006. Retrieved May 2, 2012.

வெளியிணைப்புகள்

தொகு

நேர்முகங்களும் விரிவுரைகளும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டொனால்ட்_குனுத்&oldid=4123550" இலிருந்து மீள்விக்கப்பட்டது