டொராண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா
இந்தக் கட்டுரை கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா?
இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும். |
டொராண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா | |
---|---|
இடம் | டொராண்டோ, கனடா |
நிறுவப்பட்டது | 2020 |
மொழி | பன்னாட்டு |
இணையத் தளம் |
டொராண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா
தொகுடொராண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா (ஆங்கிலம்: Toronto Tamil International Film Festival) என்பது கனடாவின் டொராண்டோ நகரில் ஆண்டு தோறும் நடைபெறும் ஒரு பன்னாட்டுத் திரைப்பட விழாவாகும்.
இது இந்தியத் துணைக் கண்டத்திற்கு வெளியே நடைபெறும் தமிழ் திரைப்பட விழாக்களில் மிக முக்கியமான விழா. 2020 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட டொராண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா மிக குறுகிய ஆண்டில் உலக தமிழர் மத்தியில் மிகுந்த செல்வாக்கும் மதிப்பும் கொண்ட ஒரு திரைப்பட விழாவாகும். இவ்விழாவில் உலகளாவிய ரீதியில், ஆவணத் திரைப்படங்கள் உட்பட அனைத்து வகை திரைப்படங்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன. இவ்விழா ஆண்டுதோறும் செப்டெம்பர் மாதமளவில் நடைபெறுகிறது.
தமிழர்கள் அதிகமாக வாழும் கனடா வில் நடைபெறும் இவ் திரைப்பட விழா, உலக தமிழ் திரைப்படங்களுக்கும், கலைஞர்களுக்கும் மிகப்பெரும் அங்கீகாரமாக அமைகின்றது.
உலகெங்கும் பல்லாயிரம் தமிழ் திரைப்படங்கள், குறும்படங்கள் என்பன வெளிவருகின்ற போதிலும், அத்திரைப்படங்கள் உலகில் தமிழ் அல்லாத திரைப்பட விழாக்களிலேயே சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரத்தை வேண்டி நிற்கும் நிலையே இதுவரை காலமும் தமிழ் திரை கலைஞர்களுக்கும், திரைப்படங்களுக்கும் உள்ள நிலை. ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா தமிழர்களுக்கான ஒரு திரைப்பட விழாவை கனடிய மண்ணில் தொடக்கி வைத்து இந்த குறையை போக்கியுள்ளது.
விழாவின் சிறப்பம்சங்கள்
தொகுதற்கால உலகத் திரைப்படம், புதிய தமிழ் திரைப்படங்கள், முக்கிய திரைப்பட படைப்பாளிகளின் பின்னோக்கிய பார்வை, பாராட்டு மற்றும் அஞ்சலி நிகழுவுகள், தற்கால திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் போன்றவற்றை திரைப்பட விழாவின் போது திரையிடப்படுகின்றன. திரைப்பட சந்தை, கண்காட்சி மற்றும் சினிமா தொடர்பான முக்கியமான பிரச்சினைகள் குறித்த கருத்தரங்குகளும் விழாவின் போது திட்டமிடப்பட்டுள்ளன. திருவிழா இப்போது டொரோண்டோவில் உள்ள திரைப்பட அரங்குகளில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. விழாவானது அது பெற்றுள்ள மக்கள் ஆதரவு, வர்த்தக விளம்பர ஆதரவு மற்றும் கனடிய அரசின் ஆதரவினால் உலகில் நடக்கும் தமிழ் திரைப்பட விழாக்களிலேயே தவறவிடமுடியாத முக்கிய விழாவாக கருதப்படுகின்றது. [1]
2020 விருதுகள்
தொகுஜூரி விருதுகள்
தொகு- சிறந்த திரைப்படத்துக்கான ஜூரி விருது: ஒத்த செருப்பு அளவு 7 (இயக்குனர் / தயாரிப்பாளர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன்) [2]
- சிறந்த இயக்குனருக்கான ஜூரி விருது: ஒத்த செருப்பு அளவு 7 (இயக்குனர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன்) [3]
- சிறந்த பெண் இயக்குனருக்கான ஜூரி விருது: சில்லுக்கருப்பட்டி (இயக்குனர் ஹலிதா ஷமீம்) [4]
உசாத்துணை
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ https://tamil.filmibeat.com/awards/toronto-tamil-international-film-festival-held-in-canada-087114.html
- ↑ மூன்று விருதுகளை வென்ற ஒத்த செருப்பு இராதாகிருஷ்ணன்_பார்த்திபன்
- ↑ மூன்று விருதுகளை வென்ற ஒத்த செருப்பு சைஸ் 7. பார்த்திபன் நெகிழ்ச்சி
- ↑ டொராண்டோ பிலிம் பெஸ்டிவல் திருவிழாவில் இரண்டு விருதுகளை வென்ற சில்லு கருப்பட்டி
டொராண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா: சில்லு கருப்பட்டி ஒரு புதிய சர்வதேச அங்கீகாரத்தை வென்றது பரணிடப்பட்டது 2021-09-29 at the வந்தவழி இயந்திரம்
டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் கன்னி மாடம்