டோல் பூர்ணிமா

டோலா பூர்ணிமா, டோலா ஜாத்ரா, டூல் உத்சவ் அல்லது டீல் என்றும் பிரபலமாக அறியப்படும் இந்த இந்துப் பண்டிகை விரஜபூமி, வங்காளதேசம் மற்றும் இந்திய மாநிலமான ஒடிசா, அசாம், திரிபுரா மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவற்றின் முக்கியமான ஹோலி பண்டிகையாகும்.[1] இந்த திருவிழா ராதை மற்றும் கிருட்டிணரின் தெய்வீக ஜோடிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது பொதுவாகப் பௌர்ணமி இரவு அல்லது பால்குன் மாதத்தின் பதினைந்தாம் நாளில் முக்கியமாகக் கோபால சமூகத்தால் கொண்டாடப்படுகிறது.[2]

டோல் பூர்ணிமா
இந்து கடவுள் கிருஷ்ணன் மற்றும் இராதைக்கு அர்ப்பணிக்கப்பட்ட திருவிழா
பிற பெயர்(கள்)டாலா ஜாத்ரா
கடைபிடிப்போர்இந்துக்கள், வங்காளதேசம், இந்தியா (ஒடிசா, மேற்கு வங்காளம், அசாம்)
வகைமத, பண்பாட்டு, வசந்தகால விழா
கொண்டாட்டங்கள்வண்ணப்பொடிகளை தூவுதல் (ஹோலி), ஆட்டம், வாழ்த்துப் பரிமாற்றம்
நாள்Phalguna Purnima
2023 இல் நாள்07 மார்ச்
நிகழ்வுஆண்டுதோறும்
தொடர்புடையனஹோலி

முக்கியத்துவம்

தொகு

புஷ்டிமார்க்

தொகு

வல்லபாச்சாரியாரின் புஷ்டிமார்க் பாரம்பரியத்தில், டோலோத்சவம் அதிக உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. ராதா கிருட்டிணரின் விக்கிரகங்கள் இந்தோலா என்று அழைக்கப்படும் சிறப்பு ஊஞ்சலில் வைக்கப்பட்டு பக்தர்கள் பலவிதமான வண்ணங்களுடன் விளையாடுகிறார்கள். ஹோரி-டோலில் உள்ள ஈர்ப்பின் முக்கிய மையம் சிறீநாதன் கோயில் ஆகும். இது இந்த பாரம்பரியத்தின் முக்கிய வழிபாட்டுத் தலமாகக் கருதப்படுகிறது.

இராதா வல்லப சம்பிராதயம்

தொகு

ராதா வல்லப சம்பிரதாயத்திலும், அரிதாசி சம்பிரதாயத்திலும் இந்த விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் போது இராதா கிருஷ்ணரின் சிலைகள் வழிபாடு செய்யப்பட்டு, வண்ணங்கள் மற்றும் மலர்களால் விழாவைத் தொடங்குகின்றன.

கௌடிய வைஷ்ணவம்

தொகு

கௌடிய வைணவத்தில், ராதை மற்றும் கிருட்டிணரின் ஒருங்கிணைந்த அவதாரமாகப் போற்றப்படும் சைதன்யர் மகாபிரபு பிறந்த நாள் என்பதால், இந்த விழா மேலும் முக்கியத்துவம் வாய்ந்தது. இவர் ஒரு சிறந்த துறவி மற்றும் தத்துவஞானி ஆவார். சைத்தன்யர் இந்தியாவில் பக்தி இயக்கத்தை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இவர் கௌடிய வைணவ மரபை நிறுவியவரும் ஆவார்.

கொண்டாட்டம்

தொகு

டோல் பூர்ணிமா புனித நாளில், கிருஷ்ணர் மற்றும் அவரது அன்புக்குரிய ராதையின் மூர்த்திகள், வண்ணப் பொடிகளால் அலங்கரிக்கப்பட்டு, பூசப்பட்டுள்ளனர். விரஜபூமி, வங்காளம், ஒடிசா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில், இராதா கிருஷ்ணரின் மூர்த்திகள் பூக்கள், இலை, வண்ண ஆடைகள் மற்றும் காகிதங்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறார்கள்.[3] ஊர்வலம் இசை, சங்குகள் முழங்க, எக்காளக் கொம்புகள் மற்றும் 'ஜெய்' (வெற்றி) மற்றும் 'ஹோரி போலா' என்ற முழக்கங்களுடன் முன்னோக்கிச் செல்கிறது.

அசாம் பிராந்தியத்தில், 16ஆம் நூற்றாண்டின் அசாமியக் கவிஞர் மாதவ்தேவின் "பாகு கேலே கொருணமோய்" போன்ற பாடல்களைப் பாடுவதன் மூலம் திருவிழா குறிக்கப்படுகிறது, குறிப்பாக பார்பெட்டா சத்ராவில். 15ஆம் நூற்றாண்டின் துறவியும், கலைஞரும், சமூக சீர்திருத்தவாதியுமான சிறீமந்தா சங்கர்தேவ் அசாமின் நகோனில் உள்ள போர்டோவாவில் டோல் கொண்டாடினார்.[4] பாரம்பரியமாகப் பூக்களால் செய்யப்பட்ட வண்ணங்களுடன் விளையாடுவதும் இத்திருவிழாவில் ஒரு நிகழ்வாகும்.

மேலும் பார்க்கவும்

தொகு

நூல் பட்டியல்

தொகு
  • வர்மா, வனிஷ் (2002).இந்தியாவின் விரதங்கள் மற்றும் பண்டிகைகள் . புது தில்லி: டயமண்ட் பாக்கெட் புக்ஸ்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Borpetar Mormadhor Deul". 
  2. "www.gopabandhuacademy.gov.in" (PDF).
  3. "Holi (Phalguna-purnima or Dol-purnima)". Archived from the original on 2013-03-21. பார்க்கப்பட்ட நாள் 2023-03-11.
  4. Huzuri, Dhaneswar. "Doul Utsow Aru Iyar Tatporzyo". Vikaspedia. Archived from the original on 2018-04-05. பார்க்கப்பட்ட நாள் 22 May 2021.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டோல்_பூர்ணிமா&oldid=3676596" இலிருந்து மீள்விக்கப்பட்டது