தகிபரா ஆலுடும்

தகிபரா ஆலுடும் (Dahibara Aludam) (ஒடியா: ଦହିବରାଆଳୁଦମ;) ஒடிசா மாநிலத்தின் கட்டக் பகுதியில் இருந்து உருவான ஒரு சிற்றுண்டி ஆகும்.[1] இந்தியா முழுவதும் பிரபலமாக உள்ள ஒரு வகை சிற்றுண்டி ஆகும்.

தகிபரா ஆலுடும்
தகிபரா ஆலுடும்
வகைசிற்றுண்டி
தொடங்கிய இடம்இந்திய துணைக்கண்டம்
பகுதிகட்டக், ஒடிசா
முக்கிய சேர்பொருட்கள்வடை, தயிர், உருளைக் கிழங்கு மற்றும் பட்டாணி

வடைகளை லேசான தயிர் மற்றும் தண்ணீரில் ஊறவைத்து, கடுகு மற்றும் கறிவேப்பிலையுடன் காய்ச்சி பின்னர் அதனுடன் உருளைக்கிழங்கு கறி மற்றும் பட்டாணி கறி சேர்த்து தகிபரா ஆலுடும் தயாரிக்கப்படுகிறது.[2]

வரலாறு

தொகு

இவ்வுணவு முதன்முதலில் பழைய கட்டாக் பகுதியில் பராபதி கோட்டை அருகே விற்கும் விற்பனையாளர்களால் தயாரிக்கப்பட்டு விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதை தவிர ஒடிசா மாநிலம் முழுவதிலும் பரவலாகப் பரவியிருக்கும் உணவு ஆகும். இந்த உணவு இப்போது இந்திய நாடு முழுவதும் பிரபலமாக உள்ளது. 2020 ஆம் ஆண்டில் புது டெல்லி மாநிலத்தில் நடைபெற்ற தேசிய உணவு திருவிழாவிலும் இவ்வுணவு ஒரு விருதைப் பெற்றது.[3]

தயாரிப்பு

தொகு

கழுவிய உளுத்தம் பருப்பை ஒரே இரவில் சாதாரண நீரில் ஊறவைத்து, வடை மாவாக அரைத்து, சூடான எண்ணெயில் ஆழமாக வறுக்கவும். ஆழமாக வறுத்த வடைகள் முதலில் தண்ணீரில் போடப்பட்டு, பின்னர் மீண்டும் 3-5 மணிநேரம் ஊறவைத்து லேசான தயிருக்கு மாற்றப்படும்.பின்னர் வடைகள் காரமான உருளைக்கிழங்கு கறி மற்றும் பட்டாணி கறி ஆகியவற்றுடன் சேர்க்கப்படுகின்றன. பின்னர் நறுக்கப்பட்ட வெங்காயம், வெள்ளரிக்காய், இந்திய தின்பண்டங்களின் தூவிகள் உணவை அலங்கரிக்க சேர்க்கப்படுகின்றன.

தகிபரா ஆலுடும் நாள்

தொகு

ஒடிசா நாட்டில் ஒவ்வொரு ஆண்டின் மார்ச் 1 ஆம் தேதி தகிபரா ஆலுடும் டிபோசு என்று கொண்டாடப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Cttack- Land of Aloo Dum Dahi Bara". Delhifoodwalks.com, 18 April 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-04-18.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Odia Dahibara Aludam ghugni recipe". indrani-wii-teach.com, 28 June 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-06-18.
  3. "Cuttack Dahibara Aloo Dum wins nat'l award". the pioneer, 19 January 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-01-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தகிபரா_ஆலுடும்&oldid=3729482" இலிருந்து மீள்விக்கப்பட்டது