தசரத மௌரியர்

தசரதர் (Dasharatha), (ஆட்சிக் காலம்:கி.மு. 232–224) அசோகருக்குப் பின் வந்த மௌரியப் பேரரசின் நான்காவது பேரரசர் ஆவார்.[1] அசோகரின் பேரனான இவரது ஆட்சிக் காலம் கி.மு. 232 முதல் 224 முடியவாகும்.[2] கி.மு. 224 ஆம் ஆண்டில் தசரதன் மறைவுக்கு பின்னர் சம்பிரதி பட்டத்திற்கு வந்தார்.

தசரதர்
நான்காவது மௌரியப் பேரரசர்
ஆட்சிக்காலம்கி.மு. 232 - 224
முன்னையவர்அசோகர்
பின்னையவர்சம்பிரதி
இறப்புகி.மு. 224
அரசமரபுமௌரியர்
மதம்பௌத்தம்

ஆட்சி

தொகு
 
கி.மு. 265ல் மௌரியப் பேரரசின் வரைபடம் (இளஞ்சிவப்பு நிறத்தில்)

அசோகரின் மறைவிற்குப் பின்னர் மௌரியப் பேரரசை தசரதர் ஆண்டார்.[3] வரலாற்று குறிப்புகள் பேரரசர் தசரதன், பாடலிபுத்திரத்தை தலைநகராகக் கொண்டு வடக்கு மற்றும் கிழக்கு மௌரியப் பேரரசையும், வருங்கால பேரரசரான சம்பிரதி உஜ்ஜைன் நகரத்தில் இருந்து கொண்டு மேற்கு மற்றும் தெற்கு மௌரியப் பேரரசை கட்டுப்படுத்தியதாகவும் கூறுகின்றன.[4] வாயு புராணம் மற்றும் பிரம்மாண்ட புராணங்களில் பந்துபாலிதா, இந்திரபாலிதா மற்றும் தசோனா போன்ற பெயர்களைக் குறிப்பிடுகிறது. இவர்கள் தசரதர் ஆண்ட மௌரியப் பேரரசின் மாகாணங்களின் ஆளுநர்களாக இருக்கலாம் என வரலாற்றாசியர்கள் கருதுகிறார்கள்.[5]

அசோகரின் மறைவிற்குப் பின்பு நீண்டகாலமாக மௌரியப் பேரரசில் அரசியல் நிலைத்தன்மை இல்லாது போயிற்று.[5] தசரத மௌரியரின் சித்தாப்பாக்களில் ஒருவரான சலௌகர் வடமேற்கு மௌரியப் பேரரசின் காசுமீர நாட்டை தன்னாட்சியுடன் ஆண்டார். மௌரியப் பேரரசின் தென் பகுதிகளை, சாதவாகனர்கள் கைப்பற்றினர். கிழக்குப் பகுதிகளை, கலிங்கத்தின் மகாமேகவாகன் வம்சத்தினர் கைப்பற்றி ஆண்டனர். மகதப் பேரரசின் சில பகுதிகளைத் தவிர, பேரரசின் தொலைதூரங்களில் உள்ள மௌரியப் பகுதிகளை தசரதனால் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.[6][6]

வாழ்க்கை

தொகு

பௌத்த சமயத்தை பின்பற்றிய தசரத மௌரியர், தற்கால பிகார் மாநிலத்தின் சகானாபாத் மாவட்டத்தில், முக்தம்பூர் மலைப்பகுதியில் அமைந்துள்ள பராபர் குகைகளை ஆசிவக முனிவர்களுக்காக அர்பணித்தார்.[7] இந்து புராணங்களின் படி, தசரதனுக்குப் பின்னர் சம்பிரதி என்பவரும், பௌத்தம் மற்றும் சமண சாத்திரங்களின் படி, குணாளன் என்பவரும் மௌரியப் பேரரசராக பட்டத்திற்கு வந்தனர் எனக் கூறுகிறது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Asoka Maurya and His Successors". Biblio. பார்க்கப்பட்ட நாள் 1 December 2023.
  2. Asha Vishnu (1993). Material Life of Northern India: Based on an Archaeological Study, 3rd Century B.C. to 1st Century B.C. Mittal Publications. p. 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8170994107.
  3. Buddha Prakash (1962). Studies in Indian history and civilization. Shiva Lal Agarwala. p. 148-154.
  4. Rama Shankar Tripathi (1942). History Of Ancient India. Motilal Banarsidass Publishers. p. 179.
  5. 5.0 5.1 5.2 Sailendra Nath Sen (1999). Ancient Indian History And Civilization. New Age International. p. 152-154. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8-122-41198-0.
  6. 6.0 6.1 Vincent A. Smith (1999). The Early History of India. Atlantic Publishers. p. 193-207. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8-171-56618-1.
  7. Thapar, Romila (2001). Ashoka and the Decline of the Mauryas. New Delhi: Oxford University Press. p. 183. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-564445-X.
தசரத மௌரியர்
முன்னர் மௌரியப் பேரரசர் பின்னர்
சம்பிரதி
"https://ta.wikipedia.org/w/index.php?title=தசரத_மௌரியர்&oldid=3909957" இலிருந்து மீள்விக்கப்பட்டது