ததியா
ததியா (Datia), மத்திய இந்தியாவில் உள்ள மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் வடக்கில், புந்தேல்கண்ட் பிரதேசத்தில் உள்ள ததியா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது குவாலியருக்கு 78 கிலோ மீட்டர் தொலைவிலும்; போபால் நகரத்திற்கு வடக்கே 344 கிலோ மீட்டர் தொலைவிலும்; ஜான்சியிலிருந்து 31 கிலோ மீட்டர் தொலைவிலும்; ஓர்ச்சாவிலிருந்து 52 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. ததியா நகரம் உத்திரப் பிரதேசம் மாநில எல்லையை ஓட்டி உள்ளது. இந்நகரத்தில் ராஜ்கர் கோட்டை உள்ளது.
ததியா | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 25°40′N 78°28′E / 25.67°N 78.47°E | |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
மாவட்டம் | ததியா |
ஏற்றம் | 420 m (1,380 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,00,284 |
• அடர்த்தி | 292/km2 (760/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 475661 |
தொலைபேசி குறியீடு எண் | 917522 |
ஐஎசுஓ 3166 குறியீடு | MP-IN |
வாகனப் பதிவு | MP-32 |
இணையதளம் | http://datia.nic.in |
பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் 1947 வரை, புந்தேல் இராசபுத்திரர்கள் ஆண்ட ததியா இராச்சியத்தின் தலைநகராக ததியா நகரம் விளங்கியது. ததியா உணவு தானியங்கள் மற்றும் பருத்தி உற்பத்தி மற்றும் சந்தை மையம் ஆகும். இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 302 மீட்டர் உயரத்தில் உள்ளது.
கோயில்கள்
தொகுசக்தி பீடங்களில் ஒன்றான ததியா நகரத்திலிருந்து 9 மைல் தொலைவில் சோனகிரி மலையில் பகளாமுகி மற்றும் தூமாவதி பெண் தெய்வங்களுக்கு கோயில்கள் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 36 வார்டுகளும், 19,254 வீடுகளும் கொண்ட ததியா நகரத்தின் மக்கள் தொகை 1,00,284 ஆகும். அதில் ஆண்கள் 52,772 மற்றும் பெண்கள் 47,512 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 900 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12381 (12.35%) ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 80.56% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 87.13%, இசுலாமியர் 11.62%, பௌத்தர்கள் 0.60% கிறித்தவர்கள் 0.29% மற்றும் பிறர் 0.35% ஆகவுள்ளனர்.[1]
தட்ப வெப்பம்
தொகுதட்பவெப்ப நிலைத் தகவல், ததியா (1981–2010, extremes 1970–2011) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 33.6 (92.5) |
38.2 (100.8) |
42.4 (108.3) |
45.8 (114.4) |
47.8 (118) |
48.5 (119.3) |
44.7 (112.5) |
40.5 (104.9) |
40.2 (104.4) |
41.4 (106.5) |
37.2 (99) |
34.0 (93.2) |
48.5 (119.3) |
உயர் சராசரி °C (°F) | 23.2 (73.8) |
26.8 (80.2) |
33.4 (92.1) |
39.3 (102.7) |
42.6 (108.7) |
40.9 (105.6) |
34.9 (94.8) |
33.1 (91.6) |
33.4 (92.1) |
34.0 (93.2) |
30.3 (86.5) |
25.5 (77.9) |
33.1 (91.6) |
தாழ் சராசரி °C (°F) | 7.6 (45.7) |
10.1 (50.2) |
15.5 (59.9) |
21.2 (70.2) |
26.9 (80.4) |
28.4 (83.1) |
26.2 (79.2) |
25.1 (77.2) |
23.5 (74.3) |
17.5 (63.5) |
11.7 (53.1) |
7.9 (46.2) |
18.5 (65.3) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 1.7 (35.1) |
0.0 (32) |
5.5 (41.9) |
10.8 (51.4) |
18.6 (65.5) |
19.0 (66.2) |
19.4 (66.9) |
20.5 (68.9) |
15.0 (59) |
8.8 (47.8) |
5.4 (41.7) |
0.4 (32.7) |
0.0 (32) |
மழைப்பொழிவுmm (inches) | 8.3 (0.327) |
10.9 (0.429) |
5.9 (0.232) |
3.0 (0.118) |
10.4 (0.409) |
78.1 (3.075) |
232.1 (9.138) |
246.9 (9.72) |
153.2 (6.031) |
15.7 (0.618) |
6.1 (0.24) |
2.6 (0.102) |
773.3 (30.445) |
% ஈரப்பதம் | 58 | 49 | 39 | 32 | 30 | 44 | 70 | 75 | 71 | 55 | 50 | 54 | 52 |
சராசரி மழை நாட்கள் | 0.7 | 0.8 | 0.6 | 0.5 | 1.1 | 4.1 | 11.7 | 11.8 | 6.4 | 1.4 | 0.4 | 0.4 | 39.9 |
ஆதாரம்: India Meteorological Department[2][3] |
மேற்கோள்கள்
தொகு- ↑ Datia Population Census 2011
- ↑ "Station: Datia Climatological Table 1981–2010" (PDF). Climatological Normals 1981–2010. India Meteorological Department. January 2015. pp. 229–230. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 29 December 2020.
- ↑ "Extremes of Temperature & Rainfall for Indian Stations (Up to 2012)" (PDF). India Meteorological Department. December 2016. p. M117. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 29 December 2020.
வெளி இணைப்புகள்
தொகு- 'Shri Rawatpura Sarkar Shanti International Public School, Datia பரணிடப்பட்டது 2022-09-23 at the வந்தவழி இயந்திரம்
- Government website on Datia district
- Genealogy of the ruling chiefs of Datia