தந்தைவழி உரிமைகள் மற்றும் கருக்கலைப்பு
தந்தைவழி உரிமைகள் மற்றும் கருக்கலைப்பு (Paternal rights and abortion) பிரச்சினை கருக்கலைப்பு விவாதம் மற்றும் தந்தையர் உரிமை இயக்கம் ஆகிய இரண்டின் நீட்சியாகும். கருக்கலைப்பு என்பது கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு மற்றும் வழக்குக்கு ஒரு காரணியாக மாறி வருகிறது.
வரலாறு
தொகுரோமானிய சட்டம் தூண்டப்பட்ட கருக்கலைப்புகளை அனுமதித்தது ஆனால் உயிரியல் தந்தையை கருத்தில் கொண்டு அதை ஒழுங்குபடுத்தியது. பேரரசர் செப்டிமியசு செவெரஸ் கிபி 211 இல் தனது கணவரின் அனுமதியின்றி கருக்கலைப்பு செய்த ஒரு பெண் தனது கணவரின் குழந்தையை இழந்ததற்காக நாடுகடத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தார். [1] [2]
கிமு 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அலெக்சாந்திரியா, எகிப்து, சோபட்டர் என்ற கிரேக்க எழுத்தாளர் , வழக்கறிஞர் லிசியாஸை மேற்கோள் காட்டினார், அவர் ஏதென்ஸில் நடந்த ஒரு விசாரணையை குறிப்பிட்டார், அதில் ஆன்டிஜீன் என்ற நபர் தனது மனைவி கருக்கலைப்பு செய்ததால் தனது மகனை இழந்ததாக குற்றம் சாட்டினார். [1]
சட்டத்தில் ஆண்கள் மற்றும் கருக்கலைப்பு
தொகுஒரு ஆண் தனது தனிப்பட்ட நலனை முன்னெடுத்துச் செல்ல சட்டப்பூர்வ உரிமை உள்ளது, அது கருக்கலைப்பு, தந்தையர் அல்லது தத்தெடுப்பு என இருந்தாலும், நாட்டிற்கு நாடு இது வேறுபடுகிறது.
2011 இல், இந்தோனேசியா, மலாவி, சிரியா, ஐக்கிய அரபு அமீரகம், எக்குவடோரியல் கினியா, குவைத், மாலத்தீவு, மொராக்கோ, தென்கொரியா, சவுதி அரேபியா, யப்பான், தைவான் மற்றும் துருக்கி ஆகியவற்றுக்கு முதலில் கருக்கலைப்புக்கு பெண்ணின் கணவருக்கு அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்று சட்டங்கள் இருந்தன . [3] இருப்பினும், சில நாடுகளில், தாய்வழி ஆரோக்கியத்தில் உண்மையான அக்கறை இருந்தால் இந்த நிபந்தனை புறக்கணிக்கப்படலாம் அல்லது மீறப்படலாம். [4]
ரோ வி வேட், சில மாநிலங்களில் உள்ள அமெரிக்காவில் கருக்கலைப்பிற்கு திருமண சடங்கு ஒப்புதல் தேவைப்படும் சட்டங்களை இயற்ற முயற்சித்துள்ளனர். இந்த சட்டங்கள் அனைத்தும் அரசியலமைப்பிற்கு முரணானவை ஆகும்.
சட்ட வழக்குகள்
தொகுசீனாவில் கருக்கலைப்பு செய்த ஒரு பெண்ணின் கணவர், குழந்தை பிறப்பு மற்றும் கருத்தடை முடிவுகளின் அடிப்படையில் பாலியல் சமத்துவத்தை வழங்குவதற்கான சட்டத்தின் கீழ் 2002 இல் அவருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். ஒரு குழந்தை பெற்றுக் கொள்ளலாமா என்பதைத் தீர்மானிப்பதில் ஒரு பெண்ணுக்கு தன் கனவனுக்கு மேல் முன்னுரிமை இல்லை என்று சட்டம் கூறியது. [5]
மேற்கத்திய உலகில் பல சட்ட வழக்குகள் எழுந்துள்ளன, அதில் ஆண்கள் பாலியல் ரீதியாக சுறுசுறுப்பாக இருந்த பெண்களை கருக்கலைப்பு செய்வதைத் தடுக்க முயன்றனர், இவை அனைத்தும் தோல்வியடைந்தன:
1978 : ஐக்கிய இராச்சியத்தின் லிவர்பூலைச் சேர்ந்த வில்லியம் பாதன் , தன்னை விட்டுப் பிரிந்து சென்ற மனைவி கருக்கலைப்பு செய்வதனை தடுக்க நினைத்து வழக்குத் தொடர்ந்தார். நீதிபதி அவரது மனைவிக்கு ஆதரவாக தீர்ப்பளித்தார். பின்னர், வில்லியம் பாதன் மனித உரிமைகள் ஐரோப்பிய நீதிமன்றத்தில் மேல் விசாரணைக்கு கோரிக்கை விடுத்தார். [6] [7] [8]
1987: யுனைடெட் கிங்டமின் ராபர்ட் கார்வர், 1987 சி எ சி வழக்கில் கருக்கலைப்பைத் தடுக்க முயன்றார். ஆனால் நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது. பின்னர் அவரது மனைவி குழந்தையைப் பெற்றெடுத்து தனது கணவரான கார்வேரிடம் ஒப்படைத்தார். [6] [7] [8] [9]
1989 : கியூபெக்கின் ஜீன்-கை ட்ரெம்ப்ளே, 1989 கனேடிய வழக்கு ட்ரெம்ப்ளே வி- யில் தூண்டப்பட்ட கருக்கலைப்பு செய்வதைத் தடுக்கும் முயற்சியாக அவரது காதலிக்கு எதிராக வழக்கைத் தாக்கல் செய்தார் . கனடாவின் உச்ச நீதிமன்றம் இறுதியில் மனித உரிமைகள் மற்றும் சுதந்திரங்களின் கியூபெக் சாசனத்தின் கீழ் ஒரு முதிர் கருவுக்கு வாழ்வதற்கான உரிமை இல்லை என கண்டறியப்பட்டதால், ஒரு மனிதனின் "சாத்தியமான சந்ததியை" பாதுகாக்கும் உரிமைக்கு எந்த முன்னுதாரணமும் இல்லை என்று தீர்ப்பளித்தது.
2001: இங்கிலாந்தின் கோவென்ட்ரியின் இசுடீபன் ஹோன், தனது முன்னாள் காதலி கிளாரி ஹான்செல் கருக்கலைப்பு செய்வதைத் தடுக்க முயன்றார். ஆனால் அவருக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டது. [10]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 John M. Riddle (1992). Contraception and Abortion from the Ancient World to the Renaissance. Cambridge, MA: Harvard University Press.
- ↑ "Timeline 3rd Century." (2003). The Ultimate Science Fiction Web Guide. Retrieved June 9, 2006.
- ↑ https://www.reproductiverights.org/sites/crr.civicactions.net/files/documents/AbortionMap_2011.pdf
- ↑ Rahman, Anika; Katzive, Laura; Henshaw, Stanley K. (1998). "A Global Review of Laws on Induced Abortion, 1985–1997". International Family Planning Perspectives 24 (2): 56–64. doi:10.2307/2991926. பப்மெட்:14627052. http://www.guttmacher.org/pubs/journals/2405698.html.
- ↑ Maximova, Vickie. "Chinese man sues wife over abortion." (March 20, 2002). BBC News. Retrieved May 26, 2006.
- ↑ 6.0 6.1 Nolan, David. "Should men have rights in abortion? பரணிடப்பட்டது 2009-04-11 at the வந்தவழி இயந்திரம்." (March 21, 2001). Pro-Choice Forum. Retrieved May 26, 2006.
- ↑ 7.0 7.1 "Woman in Hone case has abortion." (March 30, 2001). British Pregnancy Advisory Services: Press Release. Retrieved May 29, 2006.
- ↑ 8.0 8.1 Thorpe, Mathew Alexander. (2000). Consent for Caesarean Section: Part 1 development of the law பரணிடப்பட்டது 2006-06-21 at the வந்தவழி இயந்திரம். Catholic Medical Quarterly. Retrieved May 29, 2006.
- ↑ Brahams D (March 1987). "An action by putative father and unborn fetus to prevent termination". Lancet 1 (8532): 576–7. doi:10.1016/S0140-6736(87)90226-1. பப்மெட்:2881128.
- ↑ "Abortion for court fight woman." (March 26, 2001). BBC News. Retrieved May 26, 2006.
புற இணைப்புகள்
தொகு- Men and Abortion: pre-abortion counseling tailored toward men.