தனலட்சுமி வங்கி
தனலட்சுமி வங்கி லிமிடெட் (முபச: 532180 , தேபச: DHANBANK ) இந்தியாவில் செயல்பட்டுவரும் மிகப்பழமையான தனியார்த் துறை வங்கியாகும். இது இந்தியாவின் கேரள மாநிலத்தின். திரிச்சூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது.
வகை | பொது நிறுவனம் தனியார்த் துறை (முபச: 532180 ) |
---|---|
நிறுவுகை | 1927 |
தலைமையகம் | தன்லட்சுமி வங்கி லிமிடெட், தன்லட்சுமி வளாகம், Naickanal திரிச்சூர், கேரளா, இந்தியா |
முதன்மை நபர்கள் | GN Bajpai, G Sreeram |
தொழில்துறை | வங்கித் தொழில் நிதிச் சேவைகள்s காப்பீடு |
உற்பத்திகள் | முதலீட்டு வங்கி வணிக வங்கி நுகர்வோர் வங்கி தனிநபர் வங்கி அடமானக் கடன்கள் கடன் அட்டைகள் |
இணையத்தளம் | Dhanbank.com |
வரலாறு
தொகுதனலட்சுமி வங்கி லிமிடெட் இந்திய ரூபாய் 11,000 மூலதனம் மற்றும் 7 ஊழியர்களுடன் கேரளாவின் திரிச்சூரில் 1927 நவம்பர் 14 அன்று தொடங்கப்பட்டது. 1977ஆவது ஆண்டில் இது பட்டியலிடப்பட்ட வணிக வங்கியாக மாற்றம் பெற்றது. தற்போது 280 கிளைகள் மற்றும் 396 தானியங்கி பணவழங்கி எனப்படும் தாவருவிகளுடன், இந்தியாவின் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத், தில்லி, மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், சண்டிகர், கோவா, மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது.
பெயர் மாற்றம்
தொகுதனலட்சுமி வங்கி, 2010 ஆகஸ்டு 10 முதல் தனது பெயரை தன்லட்சுமி வங்கி என மாற்றிக் கொண்டது.[1]