தபஸ்ஸம் அக்லக்

தபஸ்ஸம் அக்லக் (Tabassum Akhlaq) (பிறப்பு 19 மே 1964) (தபஸ்ஸம் அஃப்ரிடி என்றும் தபஸ்ஸம் அக்லக் மாலிகாபாடி என்றும் அழைக்கப்படும் இவர் பாக்கித்தானைச் சேர்ந்த ஒரு கவிஞரும், எழுத்தாளரும், கட்டுரையாளரும், நிகழ்ச்சி அமைப்பாளரும் ஆவார். இவர் ஜோசு மாலிகாபாடியின் பேத்தியுமாவார்.[1] ஜோசு நினைவு குழுவின் நிறுவனர் தலைவராகவும் இருக்கிறார். [2]

தபஸ்ஸம் அக்லக்
பிறப்புதபஸ்ஸம் அஃப்ரிடி
19 மே 1964 (1964-05-19) (அகவை 60)
கராச்சி, சிந்து மாகாணம், பாக்கித்தான்
தொழில்கவிஞர்
தேசியம்பாகிஸ்தானியர்
குடியுரிமைபாக்கித்தான்
கல்வி நிலையம்எஃப் -7 / 2, எஃப்.ஜி கல்லூரி, இஸ்லாமாபாத், பாக்கித்தான்
வகைகசல்; புதுக்கவிதை
துணைவர்அக்லக் அகமது மாலிக்
பிள்ளைகள்சிக்கந்தர் அலி
சுந்தர் அக்லக்
பத்- இ சாகர்
சனோபர் அக்லக்
குடும்பத்தினர்ஜோசு மாலிகாபாடி (தாத்தா)

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

இவர், சஜ்ஜாத் ஐதர் கரோஷ் மற்றும் அன்வர் பேகம் ஆகியோருக்கு 1964 மே 19 அன்று பாக்கித்தானின் கராச்சியில் பிறந்தார். இவரது தந்தை புரட்சிகர உருது கவிஞரான ஜோசு மாலிகாபாடியின் ஒரே மகனாவார். இவரது தாயார் ஜூனாகத் சுதேச மாநிலத்தின் நவாபின் முன்னாள் அமைச்சரின் மகளாவார். இவரது தாத்தா அப்போதைய பாக்கித்தானின் குடிய்ரசுத் தலைவரான அயூப்கானால் தடை செய்யப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்ட பின்னர், [3] [4] இவரது தந்தையின் வணிகம் தடை செய்யப்பட்டு அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

இவரது குழந்தை பருவம் பெரும்பாலும் வறுமையிலேயே கழித்தன. இந்தக் காலகட்டத்தில், இவரது தந்தை உளப் பிறழ்ச்சிக்கு ஆளானார். மேலும் இவரது தாயார் மனப்பித்துக்கு ஆளான போது தனது சகோதரர்களை கவனித்துக் கொள்ள வேண்டியிருந்தது. பின்னர், கராச்சியில் உள்ள பாக்கித்தான் மாதிரி பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியை முடித்தார்.

1973 ஆம் ஆண்டில், ஜோசு மாலிகாபாடியுடன் வசிக்க இவரது குடும்பத்தினர் இஸ்லாமாபாத்துக்குச் சென்றனர். அங்கு, இடைநிலைக் கல்விக்காக இஸ்லாமாபாத்தின் எஃப் -7 / 2, எஃப்.ஜி கல்லூரியில் சேர்ந்தார். அங்கு இவரது தாத்தா ஜோசு மாலிகாபாடியின் கவிதைகளால் இவர் ஈர்க்கப்பட்டார். இவர் 12 வயதிலேயே புதுக்கவிதைகளை எழுதத் தொடங்கினார். அந்த நேரத்தில், இவரது வீட்டில் இலக்கியக் கூட்டங்கள் தவறாமல் நடத்தப்பட்டன. இந்த கூட்டத்தில் இவர் தவறாமல் கலந்துகொண்டார். இந்தத் தாக்கங்களின் விளைவாக, மெதுவாக தனது சொந்த எழுத்து நடையை வளர்த்து, படிப்படியாக ஒரு முதிர்ந்த கவிஞராக வளர்ந்தார். இவர் தனது கல்லூரியில் பல்வேறு கவிதை மற்றும் உரைநடை போட்டிகளில் கலந்து கொண்டார். இவர் தனது பட்டப்படிப்பை ( உருது மற்றும் வரலாற்றில் இளங்கலை) 1982 இல் இஸ்லாமாபாத்தின் எஃப் -7 / 2, எஃப்.ஜி கல்லூரியில் முடித்தார்.

சொந்த வாழ்க்கை

தொகு

இவர் ஏப்ரல் 29, 1984 அன்று தொழில்முனைவோரான அக்லக் அகமது மாலிக் என்பவரை மணந்தார். திருமணத்திற்குப் பிறகு இராவல்பிண்டிக்கு இடம் பெயர்ந்த இவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.

கவிஞர்

தொகு

இவர், உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகளில் தீவிர கவிஞராகவும், பேச்சாளராகவும் கட்டுரையாளராகவும் இருக்கிறார். [5] [6] [7] [8] [9] [10] காதல், மதம், தனிமை மற்றும் அமைதி ஆகியவை இவரது கவிதைகளின் முக்கிய கருப்பொருள்கள் ஆகும். இவரது நான்கு கவிதை புத்தகங்கள் அச்சிடுதல், வெளியிடுதல், சரிபார்த்தல் அல்லது இசையமைத்தல் ஆகியவற்றின் கட்டத்தில் உள்ளன. ஜோசு மாலிகாபாடியின் சுயசரிதையை வெளியிடுவதிலும் அவரது கட்டுரைகளின் தொகுப்பிலும் இவர் பணியாற்றி வருகிறார். [11]

மேற்கோள்கள்

தொகு
  1. "Josh's death anniversary observed - Newspaper - DAWN.COM". Archives.dawn.com. 2002-02-23. பார்க்கப்பட்ட நாள் 2015-12-17.
  2. Khan, Aaqib (2011-02-24). "Paying tribute: To the 'hazrat' of rebellion - The Express Tribune". Tribune.com.pk. பார்க்கப்பட்ட நாள் 2015-12-17.
  3. Mughal, Aamir (2010-09-20). "Chagatai Khan: Mawdudi, Bhutto, Tikka Khan, Benazir Bhutto & Soul Searching". Chagataikhan.blogspot.com. பார்க்கப்பட்ட நாள் 2015-12-17.
  4. "Listen real history of Pakistan from Dr. Mubarak - General Politics and Current Issues". ShiaChat.com. பார்க்கப்பட்ட நாள் 2015-12-17.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. [1]
  6. "PAL holds Naatia Mushaira". Pakobserver.net. 2013-01-28. Archived from the original on 2015-12-22. பார்க்கப்பட்ட நாள் 2015-12-17.
  7. "PAL holds Mushaira". Pakobserver.net. 2013-01-23. Archived from the original on 2015-12-22. பார்க்கப்பட்ட நாள் 2015-12-17.
  8. kaleem kakar. "'National Mushaira': A poetic salute to tolerance - The Express Tribune". Tribune.com.pk. பார்க்கப்பட்ட நாள் 2015-12-17.
  9. "The-News-International-Latest-News-Breaking-Pakistan-News". Thenews.com.pk. 2015-12-12. Archived from the original on 2014-08-19. பார்க்கப்பட்ட நாள் 2015-12-17.
  10. "The-News-International-Latest-News-Breaking-Pakistan-News". Thenews.com.pk. 2015-12-12. Archived from the original on 2014-08-19. பார்க்கப்பட்ட நாள் 2015-12-17.
  11. [2]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தபஸ்ஸம்_அக்லக்&oldid=3729516" இலிருந்து மீள்விக்கப்பட்டது