தபீர்புரா ( Dabeerpura ) என்பது இந்தியாவின் தெலுங்கானாவிலுள்ள ஐதராபாத்தின் பழைய நகரப் பகுதியிலுள்ள பழமையான சுற்றுப்புறங்களில் ஒன்று. [1] இதை யாகுத்புரா, சஞ்சல்குடா, புராணி அவேலி, நூர்கன் பஜார், மற்றும் ஆசாம்புரா ஆகியவை சூழ்ந்துள்ளன. "தர்வாசா" என்று அழைக்கப்படும் அசல் பதின்மூன்று நுழைவாயில்களில் தபீர்பூராவும் ஒன்றாகும். 1990இல் கட்டப்பட்ட இந்த புறநகரில் தொடர்வண்டி பாதையில் பெரிய மேம்பாலம் ஒன்று உள்ளது.

தபீர்புரா
வருவாய் கிராமம்
தபீர்புரா is located in தெலங்காணா
தபீர்புரா
தபீர்புரா
தெலங்காணாவில் தபீர்புராவின் அமைவிடம்
தபீர்புரா is located in இந்தியா
தபீர்புரா
தபீர்புரா
தபீர்புரா (இந்தியா)
ஆள்கூறுகள்: 17°21′58″N 78°28′34″E / 17.366°N 78.476°E / 17.366; 78.476
நாடு இந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்ஐதராபாத்து
மெற்றோஐதராபாத்து
அரசு
 • நிர்வாகம்பெருநகர ஐதராபாத்து மாநகராட்சி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
500 023
வாகனப் பதிவுடிஎஸ்
மக்களவைத் தொகுதிஐதராபாத்து
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதிசார்மினார்
திட்டமிடம் நிறுவனம்பெருநகர ஐதராபாத்து மாநகராட்சி

சொற்பிறப்பியல்

தொகு

தில்லியில் பிறந்த பிரபல உருதுக் கவிஞரும் எழுத்தாளருமான அப்துல் சமத் என்பவருக்கு 'தபீர்-உல்-முல்க்' என்ற தலைப்பு வழங்கப்பட்டதன் மூலம் தபீர்பூரா என்று பெயரிடப்பட்டது.

புள்ளிவிவரம்

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த கிராமத்தில் 1265 வீடுகளும், 1134 ஹெக்டேர் பரப்பளவில் 5398 மக்கள்தொகையும் உள்ளன. கிராமத்தில் ஆண்களின் எண்ணிக்கை 2714, பெண்களின் எண்ணிக்கை 2684 . பட்டியலின மக்களின் எண்ணிக்கை 1316, பட்டியலின பழங்குடியினரின் எண்ணிக்கை 75 ஆகும். கிராமத்தின் மக்கள் தொகை கணக்கெடுப்பு இருப்பிடக் குறியீடு 574095 ஆகும்.[2]

பொதுப் போக்குவரத்து

தொகு

தெலங்காணா மாநில போக்குவரத்து நிறுவனம் இயக்கும் பேருந்துகள் மூலம் தபீர்புரா நன்கு இணைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு பேருந்து முனையமும் அருகில் இருப்பதால், இது சார்மினார், நம்பள்ளி மற்றும் கோட்டியுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இது நிசாம் ஐதராபாத்தின் நுழைவாயில் ( இப்போது பழைய நகரம் ) பழைய நகரம்) என்று அழைக்கப்படுகிறது

தபீர்புராவில் ஐதரபாத் எம்.எம்.டி.எஸ் தொடர் வண்டி நிலையம் உள்ளது. இதனுடைய கால அட்டவணையை தென் மத்திய இரயில்வே இணையதளத்தில் காணலாம்.

அடையாளங்கள்

தொகு
  • தபீர்புரா தர்வாசா, நிசாமின் ஆட்சியின் போது கட்டப்பட்ட பதின்மூன்று அசல் நுழைவாயில்களில் ஒன்றான புராணி அவேலியின் நுழைவாயிலாக இருந்தது.
  • பிபி கா அலவா
  • கம்லிவாலே ஷா சஹாப் தர்கா, ஒரு முஸ்லிம் துறவியின் கல்லறை.
  • ஜபார் ஹோட்டல்
  • தபீர்புரா மேம்பாலம்

குறிப்புகள்

தொகு
  1. "Dabeerpura PS". Archived from the original on 5 April 2015. பார்க்கப்பட்ட நாள் 28 August 2015.
  2. "Office of the Registrar General & Census Commissioner, India - Village amenities of 2011".
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
தபீர்புரா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தபீர்புரா&oldid=3145390" இலிருந்து மீள்விக்கப்பட்டது