தமிழர் இடையே பௌத்தம்

தமிழர் இடையே பௌத்தம், வரலாற்றுக் காலத்திலிருந்து தமிழகம் மற்றும் யாழ்ப்பாணக் குடாவில் நிலவி வந்தது.

தமிழகத்தின் காஞ்சியில் பிறந்ததாக கருதப்படும் சான் பௌத்தத்தின் நிறுவனர் போதி தர்மர்.

இந்தியா தொகு

தமிழ்நாடு தொகு

பழங்கால தமிழ் பௌத்த நூலான மணிமேகலையைக் காவிரி பூம்பட்டினத்தைத் தளமாகக் கொண்டு சீத்தலைச் சாத்தனார் இயற்றினார்.[1][2]

இன்றைய பல்லவனேசுவரத்தில் கண்டெடுக்கப்பட்ட அக்கால நகர இடிபாடுகளில் நான்காம், ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த மடாலயம், புத்தர் சிலை, புத்தபீடம் (புத்தர் பாதம்) ஆகியவற்றின் எச்சங்கள் கிடைத்தன. [3]

நாகப்பட்டினம் நகரில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பர்மிய வரலாற்று எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இங்கு அசோகரால் கட்டப்பட்ட புத்த விகாரை இருந்ததற்கான ஆதாரமாக இது விளங்குகிறது.

நாகப்பட்டினம் நான்காம், ஐந்தாம் நூற்றாண்டு காலத்தில் பௌத்த மையமாக இருந்தது. அக்கால கட்டத்தில் அங்கு தாது கோபுரம் இருந்தது. ஆனால் பின் வந்த காலத்தில் இங்கிருந்து அது மறைந்துவிட்டது. ஆனால் மீண்டும் ஒன்பதாம் நூற்றாண்டில் தழைத்தது. (எச்.பி.ராய், தி வின்டஸ் ஆப் சேஞ்ச், தில்லி 1994, பக்கம். 142) 11 ஆம் நூற்றாண்டில், முதலாம் ராஜராஜ சோழனின் உதவியுடன் சூடாமணி விகாரையை சாவக மன்னனான ஸ்ரீவிஜய சூளாமணிவர்மன் புதுப்பித்துக் கட்டினார்.[4] குலோத்துங்க சோழனின் "அணிமங்கலம் செப்பேட்டில்" புத்தத் துறவியான “காசிப தேரர்” நாகநாட்டு புத்தத் துறவிகளின் உதவியுடன் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பௌத்தக் கோயிலை புதுப்பித்ததாகக் கூறப்பட்டுள்ளது. இந்த "நாகர் அன்னம் விகாரை" பிற்காலத்தில் நாகனவிகாரை என அழைக்கப்பட்டது. இங்கு பௌத்தம் 15 ஆம் நூற்றாண்டுவரை தழைத்தோங்கி இருந்தது, விகாரையின் கட்டடங்கள் 18 ஆம் நூற்றாண்டுவரை இருந்தன.

காஞ்சிபுரம் தென் இந்தியாவின் பழைய நகரங்களில் ஒன்று ஆகும். இந்நகரத்தில் தமிழ், சமஸ்கிருதம், பாளி ஆகிய மொழிகள் கற்பிக்கப்பட்டன. இந்நகரத்திற்கு யுவான் சுவாங் வந்ததாக கருப்படுகிறது. இவர் இந்த நகரத்திற்கு ஏழாம் நூற்றாண்டில் வந்தார். மேலும் இந்த நகரம் ஆறு மைல் சுற்றளவு கொண்டதாக இருந்தது என்றும், இந்த மக்கள் வீரத்துக்கும் பக்திக்கும் பெயர் பெற்றவர்களாக இருந்தனர் என்றும், மேலும் நீதியை விரும்புபவர்களாகவும், பிறருக்கு மரியாதை தருபவர்களாகவும், கற்றல் மிக்கவர்களாகவும் இருந்தனர் என குறிப்பிட்டுள்ளார். கௌதம புத்தர் இந்த இடத்துக்கு வந்துள்ளார் எனவும் கூறியுள்ளார். இந்நகரம் பல்லவர்களின் ஆட்சிக் காலமான நான்காம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டுவரை தலைநகராக புகழ்வாய்ந்ததாக இருந்தது. மேலும் பிரபலமான பல கோயில்கள் இவர்களின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டன. தமிழ் மரபில் பிறந்தவரும் சென் புத்தமதத்தின் நிறுவனருமான போதி தருமன் இங்கு பிறந்தவர்,[5][6][note 1] புகழ்வாய்ந்த சமஸ்கிருத எழுத்தாளரும் தாசகுமார சரித்திரம் என்ற நூலை எழுதியவருமான தண்டின் இவ்வூரைச் சேர்ந்தவர். இன்னொரு சமஸ்கிருத புலவரான பாரவி ஆகிய இருவரும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். இவர் பல்லவ மன்னன் சிம்மவிஷ்ணுவின் கீழ் கிராட்டார்ஜுன்யா நூலை எழுதினார். மேலும் புகழ்வாய்ந்த பௌத்த அறிஞர்களான திக்நாகர், புத்தகோசர், தம்மபாலர் ஆகியோர் இங்கு வாழ்ந்தவர்களாவர்.

பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் ஒரு பெரிய கல்வியாளராகவும், இசைக்கலைஞராகவும் இருந்தார். இவர் ஒரு அறிஞராகவும் மற்றும் சமஸ்கிருத நகைச்சுவை நாடக ஆசிரியராகவும் இருந்தார்.

இலங்கை தொகு

யாழ்ப்பாண தீபகற்பம் தொகு

 
யாழ்ப்பாண நாக விகாரை
 
யாழ்ப்பாணத்தின் கந்தரோடையில் 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பௌத்த ஸ்தூபி,[5]
 
நயினாதீவு,நாகபூசனி அம்மன் கோயில் அருகில் உள்ள பழங்கால தமிழ் பௌத்த கோயில்,[6]

சில வரலாற்று ஆவணங்களில் யாழ்ப்பாண தீபகற்பம் நாக தீவு/ நாக நாடு என குறிப்பிடப்படுகிறது. இங்கு வாழ்ந்த மக்களுக்கும் புத்தருக்கும் இடையேயிருந்த தொடர்புகள் குறித்த பல மரபுக்கதைகள் உள்ளன.[7] இந்த தமிழ் பௌத்தக் கோயில், சக்தி பீடமான நாயினாதீவு நாகபூசனி அம்மன் கோயிலுக்கு மிக அண்மையில் உள்ளது.[8][9] நாகா என்ற சொல் சில துவக்கக்கால குறிப்புகளில் நாயா என நாகனிகாவில் குறிப்பிடுவதுபோல குறிப்பிடப்பட்டுள்ளது. இது கி.மு. 150 ஆம் நூற்றாண்டு கல்வெட்டில் காணப்படுகிறது.

குண்டூர் மாவட்டம் அமராவதிக்குரிய திராவிட சிற்ப மரபுகளுடன் அமைந்த வல்லிபுரம் புத்தர் சிலையானது வல்லிபுரத்தில் ஒரு இந்துக் கோயிலின் கீழே அகழ்வில் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் காணப்படும் எழுத்துக்கள் தமிழ்- பிராகிருத மொழியில், சாதவாகன மரபின் ஆட்சிகாலத்திய ஆந்திரக் கல்வெட்டுக்களில் காணப்படும் எழுத்துக்களோடு ஒத்தவையாக அமைந்துள்ளன.சாதவாகன மரபின் 17 வது மன்னனான ஹல்லா (ஆட்சியில் 20-24 ) இத்தீவின் இளவரசியை மணந்தான்.[5][10] பீட்டர் ஸ்லாக் எழுத்தின்படி, "வல்லிபுரம் ஒரு தொல்லியல் சிறப்புவாய்ந்த இடமாகும். இது முதல் நூற்றாண்டில் ஒரு சிறந்த வணிகத்தலமாக இருந்துள்ளது. […] வல்லிபுரம் சிலையின் கல்லை ஆராயும்போது இதன் காலம் கி.பி 3-4 நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். அக்காலத்திலத்தில் அமராவதியில் கிடைத்த புத்தர் சிலையின் மாதிரியைக் கொண்டு உருவாக்கப்பட்டது."[11] இங்கே கிடைத்த புத்தர் சிலையை 1906 இல் அப்போதைய பிரித்தானிய ஆளுநர் ஹென்றி பிளேக் தாய்லாந்து மன்னருக்கு வழங்கினா்.

நாகப்பட்டினம் போன்று வல்லிபுரமும் அக்காலத்தில் கடற் பயணிகளும் வணிகர்களும் தங்கி செல்லக்கூடிய இடமாக இருந்தது. புத்த மற்றும் இந்து மதத்தினருக்கு புனித தலமாகவும் இருந்தது. நாகப்பட்டினம், வல்லிபுரம் ஆகிய இரண்டு இடங்களும் சீனா, சாயாம், கம்போடியா, சம்பா (வியட்நாம்) மற்றும் ஜாவா ஆகிய நாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்தன.

கந்தரோடை தலத்தில் அருகருகே அமைந்திருந்த பல தாதுகோபங்கள் தமிழ் பிக்குகள் வாழும் மடங்களாயிருந்தன என்பது, யாழ்ப்பாண தமிழர்கள் மற்றும் பழந்தமிழக மக்களிடையே முதல் சில நூற்றாண்டுகளில் இந்து மதம் எழுச்சிபெறும் காலத்திற்கு முன்புவரை மகாயான பௌத்தம் புகழ்வாய்ந்ததாக செல்வாக்கு செலுத்தி வந்ததற்கு சான்றாக அமைகிறது.[5]

திரிகோணமலை தொகு

திரியாய் பகுதியைத் தாலமியின் இரண்டாம் நூற்றாண்டு வரைபடம் தலகாரி (Thalakari) என குறிப்பிடுகிறது. கிருத்துவத்துக்கு முந்தையகால -பெளத்த தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் இப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன. இவை கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக கருதப்படுகிறது. திரியாய் கிராமம் இடைக்காலத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உருவான ஒரு முதன்மை கிராமமாகும். இத் தளத்தில் தமிழ் பௌத்தம் செழித்திருந்த காலத்தில் வழிபாடு செய்யப்பட்ட மகாயான புத்த வழிபாட்டுத் தலங்களின் இடிபாடுகள் உள்ளன. முதலாம் பரமேஸ்வரவர்மன் ஆட்சி செய்த, 7-8 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் புகழ்பெற்றிருந்த பல்லவ கிரந்த கல்வெட்டுகள் திரியாய் கிராமத்தில் பதிவு செய்யப்பட்டன. இந்தக் கல்வெட்டுகளில் தமிழ்நாட்டு வணிகர்கள் மற்றும் மாலுமிகள் திருகோணமலைக்கு வந்தது குறிப்பிடப்பட்டுள்ளது.[12] மேலும் இங்குள்ள பெளத்த தெய்வமான அவலோகிடிஸ்வரா மற்றும் அவரது துணைவியார் தாரா ஆகியோருக்கான கோயில் தமிழ்நாட்டிலிருந்து வந்த வணிகர்களால் அளிக்கப்பட்டது என்பதும் இதில் குறிக்கப்பட்டுள்ளது இங்கு கிடைத்த துவாரபாலகர் சிற்பங்கள் பல்லவ கலைப் பள்ளியில் பயின்றவர்களின் படைப்புகளாக உள்ளன.

சோழர்கள் தமிழர்கள் மத்தியில் சைவம், வைணவம், பௌத்தம் ஆகிய பல மதங்களை ஆதரித்தனர். அவர்கள் "பெரும்பள்ளி" எனப்படும் புத்தக் கோயில்களைக் கட்டினர். பெரியகுளத்தில் புகழ்வாய்ந்த இராஜராஜபெரும்பள்ளியை முதலாம் இராஜராஜ சோழன் கட்டினார். சோழர்கள் சைவத்திற்கு முதன்மையளித்து திருகோணமலையின் திருக்கோணேச்சரம் சிவன் கோவில் உட்பட்ட பல கோயில்களைப் பாதுகாக்க தங்களது பங்களிப்பாக திருகோணமலை மாவட்டத்திற்கு வளர்ச்சி பணம் அனுப்பினர் என்பது கல்வெட்டுகளிலிருந்து அறியப்படுகிறது.[13]

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Rao Bahadur Krishnaswāmi Aiyangar, Maṇimekhalai in its Historical Setting, London, 1928.
  2. Hisselle Dhammaratana,Buddhism in South India, Buddhist Publication Society, Kandy, 1964.
  3. Marine archaeological explorations of Tranquebar-Poompuhar region on Tamil Nadu coast., Rao, S.R..
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2007-02-08. பார்க்கப்பட்ட நாள் 2016-10-05.
  5. 5.0 5.1 5.2 Schalk, Peter (2002).
  6. http://www.buddhanet.net/sacred-island/nagadipa.html
  7. Malalasekera, G.P. (2003).
  8. Laura Smid (2003).
  9. Chelvadurai Manogaran (1987).
  10. Ponnampalam Ragupathy. (1987).
  11. Schalk, Peter.
  12. Meera Abraham (1988).
  13. Peter Schalk, Ālvāppillai Vēluppillai.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழர்_இடையே_பௌத்தம்&oldid=3557281" இலிருந்து மீள்விக்கப்பட்டது