தமிழ்த் தாய் கோயில்

தமிழ்த்தாய் கோயில் என்பது சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ளது. உலகிலேயே தமிழ்த்தாய்க்கு கோயில் இங்கு மட்டும் தான் உள்ளது.

திறப்புதொகு

இங்குள்ள கம்பன் மணிமண்டபத்தில் முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களால் இராட்சஸ ஆண்டு சித்திரைத் திங்கள் 10-ஆம் நாள்23.04.1975அன்று அடிக்கல் நாட்டப்பட்டு ஸ்ரீமுக ஆண்டு சித்திரைத் திங்கள் 3ஆம் நாளன்று திறந்து வைக்கப்பட்டது.

அமைப்புதொகு

இக் கோயில் கம்பன் மணிமண்டபத்தில் பசுமையான மரங்களுக்கு நடுவில் தலை நிமிர்ந்து நிற்கிறது. அக்கோயிலின் நடுநாயகமாக தமிழ்த்தாய் கம்பீரமாக வீற்றிருக்கிறாள்.இடப்புறத்தில் மனித உணர்வுகளை வெளிப்படுத்த மொழிக்கு வரித்தாயும், வலப்புறம் உணர்வுகளை ஓங்காரமாக எடுத்துக் கூற ஒலித்தாயும், தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியரும், அகத்தியரும் தமிழ் அன்னைக்கு பாதுகாவலராக நிற்கிறார்கள்.தமிழ்த் தாய்க்கு அருகில் வாழ்வியல் நெளிமுறைகளை வகுத்த கம்பர்,இளங்கோ, வள்ளுவருக்கு இடம் தந்துள்ளாள் தமிழ் அன்னை.விண்ணைமுட்டும் விமானத்தோடும் இலக்கண இலக்கிய பரிவாரத்தோடும் தமிழ் அன்னை இயற்கையில் இளைப்பாறுகிறாள்.

விழாதொகு

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் அன்று தமிழ்த்தாய் கலைக்கூடம் சார்பில் தலைவர் அறிவுடைநம்பி அவர்களால் கோயில் திறக்கப்பெற்று தமிழ் அன்னை, திருவள்ளுவர், வரித்தாய், ஒலித்தாய்க்கு மாலை அணிவிக்கப்பெற்று பின்னர் போட்டிகள் நடத்தப்பெற்று சிறப்பு செய்யப்படுகிறது.[1] பங்குனி மாதத்தில் நடைபெறும் கம்பன் விழாவை ஒட்டி மூன்று நாட்கள் மட்டுமே கோயில் திறக்கப்பெற்றிருக்கும் மற்ற நாட்களில் கோயில் திறக்கப்படாது.

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்த்_தாய்_கோயில்&oldid=3078134" இருந்து மீள்விக்கப்பட்டது