தமிழ்நாடு சட்டமன்ற மேலவைத் தொகுதிகள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

தமிழ்நாடு சட்டமன்ற மேலவை தமிழ்நாடு சட்டமன்றம் ஈரங்க அவையாக இருந்த காலகட்டத்தில் அதன் மேலவையாக இருந்தது. மாநிலச் சட்ட மேலவை வகையைச் சேர்ந்த இவ்வையின் உறுப்பினர்கள் நேரடி மற்றும் மறைமுகத் தேர்தல்கள் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் ஒரு சில உறுப்பினர்கள் தமிழ்நாட்டு ஆளுனரால் நியமிக்கப்பட்டனர். 1986ம் ஆண்டு கலைக்கப்பட்ட இந்த அவை, 2010ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டத்தின் மூலம் மீண்டும் அமைக்கப்பட்டது. ஆனால் 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஜெ. ஜெயலலிதா தமிழக முதல்வரான பின்னர், இம்மீட்டுருவாக்கம் கைவிடப்பட்டது.[1] மேலவை ஒரு நிரந்தர அமைப்பு; கலைக்கப்படக் கூடியதல்ல. ஆறாண்டுகள் பதவிக் காலம் கொண்ட இதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை பதவி ஓய்வு பெறுகின்றனர். இவ்வையின் உறுப்பினர் எண்ணிக்கை குறைந்தபட்சம் 40, அதிகபட்சம் 78.[2][3][4] 2010-11 காலகட்டத்தில் மேலவையை மீட்டுருவாக்க முயற்சிகள் நடைபெற்ற போது அதற்காக உருவாக்கப்பட்ட தொகுதிகள் இக்கட்டுரையில் தரப்பட்டுள்ளன.

உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் முறைகள்

தொகு

உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட முறைகள் கீழிலுள்ள பட்டியலில் தரப்பட்டுள்ளன.[5][6]

விகிதம் தேர்ந்தெடுக்கும் முறை
1/6 கலை, அறிவியல், இலக்கியம், கூட்டுறவு, சமூக சேவை போன்ற துறைகளில் தலைசிறந்த பணியாற்றியவர்கள்; அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில் ஆளுநரால் நியமிக்கப்படுவர்
1/3 சட்டமன்ற கீழவையின் உறுப்பினர்களால் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்
1/3 மாநகராட்சிகள், நகராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளால் தேர்ந்தெடுக்கப்படுவர்
1/12 இளங்கலைப் பட்டம் பெற்ற பட்டதாரிகளால் தேர்ந்தெடுக்கப்படுவர்.
1/12 பள்ளி, கல்லூரி ஆசிரியர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்

தொகுதிகள் பட்டியல்

தொகு

மேலவைக்கான தொகுதிகள் செப்டம்பர் 2010ம் ஆண்டு பட்டியலிடப்பட்டன:[7]

உள்ளாட்சி அமைப்புத் தொகுதிகள்

தொகு
எண் தொகுதி பகுதி உறுப்பினர்கள்
1 சென்னை உள்ளாட்சி அமைப்புகள் சென்னை மாவட்டம் 2
2 திருவள்ளூர் உள்ளாட்சி அமைப்புகள் . திருவள்ளூர் மாவட்டம் 1
3 காஞ்சிபுரம் உள்ளாட்சி அமைப்புகள் காஞ்சிபுரம் மாவட்டம் 1
4 வேலூர்உள்ளாட்சி அமைப்புகள் வேலூர் மாவட்டம் 1
5 திருவண்ணாமலை உள்ளாட்சி அமைப்புகள் திருவண்ணாமலை மாவட்டம் 1
6 விழுப்புரம் உள்ளாட்சி அமைப்புகள் விழுப்புரம் மாவட்டம் 1
7 கடலூர்-அரியலூர் உள்ளாட்சி அமைப்புகள் கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்கள் 1
8 தர்மபுரிஉள்ளாட்சி அமைப்புகள் தர்மபுரி மாவட்டம் 1
9 கிருஷ்ணகிரி உள்ளாட்சி அமைப்புகள் கிருஷ்ணகிரி மாவட்டம் 1
10 சேலம் உள்ளாட்சி அமைப்புகள் சேலம் மாவட்டம் 1
11 நாமக்கல்-கரூர்உள்ளாட்சி அமைப்புகள் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்கள் 1
12 கொயமுத்தூர்-நீலகிரி உள்ளாட்சி அமைப்புகள் கொயமுத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்கள் 1
13 ஈரோடு உள்ளாட்சி அமைப்புகள் ஈரோடு மாவட்டம் 1
14 திருப்பூர் உள்ளாட்சி அமைப்புகள் திருப்பூர் மாவட்டம் 1
15 திண்டுக்கல்-தேனி உள்ளாட்சி அமைப்புகள் திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்கள் 1
16 மதுரை உள்ளாட்சி அமைப்புகள் மதுரை மாவட்டம் 1
17 திருச்சிராப்பள்ளி–பெரம்பலூர் உள்ளாட்சி அமைப்புகள் திருச்சிராப்பள்ளி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் 1
18 நாகப்பட்டினம்- திருவாரூர் உள்ளாட்சி அமைப்புகள் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்கள் 1
19 தஞ்சாவூர் உள்ளாட்சி அமைப்புகள் தஞ்சாவூர் மாவட்டம் 1
20 புதுக்கோட்டை உள்ளாட்சி அமைப்புகள் புதுக்கோட்டை மாவட்டம் 1
21 சிவகங்கை-ராமநாதபுரம் உள்ளாட்சி அமைப்புகள் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் 1
22 விருதுநகர் உள்ளாட்சி அமைப்புகள் விருதுநகர் மாவட்டம் 1
23 தூத்துக்குடி உள்ளாட்சி அமைப்புகள் தூத்துக்குடி மாவட்டம் 1
24 திருநெல்வேலி உள்ளாட்சி அமைப்புகள் திருநெல்வேலி மாவட்டம் 1
25 கன்னியாகுமரி உள்ளாட்சி அமைப்புகள் கன்னியாகுமரி மாவட்டம் 1

பட்டதாரிகள் தொகுதிகள்

தொகு
எண் தொகுதி பகுதி உறுப்பினர்கள்
1 சென்னை பட்டதாரிகள் சென்னை, திருவள்ளூர்மற்றும் காஞ்சிபுரம்மாவட்டங்கள் 1
2 தமிழ்நாடு வடக்கு பட்டதாரிகள் வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரிமற்றும் திருவண்ணாமலைமாவட்டங்கள் 1
3 தமிழ்நாடு வட மத்தியபட்டதாரிகள் விழுப்புரம், சேலம், நாமக்கல்மற்றும் கடலூர் மாவட்டங்கள் 1
4 தமிழ்நாடு மேற்குபட்டதாரிகள் ஈரோடு, நீலகிரி, கொயமுத்தூர், கரூர்மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் 1
5 தமிழ்நாடு கிழக்கு மத்தியபட்டதாரிகள் திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர்மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்கள் 1
6 தமிழ்நாடு தென் மத்தியபட்டதாரிகள் திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் 1
7 தமிழ்நாடு தெற்குபட்டதாரிகள் தேனி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலிமற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் 1

ஆசிரியர்கள் தொகுதிகள்

தொகு
எண் தொகுதி பகுதி உறுப்பினர்கள்
1 சென்னை ஆசிரியர்கள் சென்னை, திருவள்ளூர்மற்றும் காஞ்சிபுரம்மாவட்டங்கள் 1
2 தமிழ்நாடு வடக்கு ஆசிரியர்கள் வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரிமற்றும் திருவண்ணாமலைமாவட்டங்கள் 1
3 தமிழ்நாடு வட மத்தியஆசிரியர்கள் விழுப்புரம், சேலம், நாமக்கல்மற்றும் கடலூர் மாவட்டங்கள் 1
4 தமிழ்நாடு மேற்குஆசிரியர்கள் ஈரோடு, நீலகிரி, கொயமுத்தூர், கரூர்மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் 1
5 தமிழ்நாடு கிழக்கு மத்தியஆசிரியர்கள் திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர்மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்கள் 1
6 தமிழ்நாடு தென் மத்தியஆசிரியர்கள் திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் 1
7 தமிழ்நாடு தெற்குஆசிரியர்கள் தேனி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலிமற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் 1

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Legislative Council will not be revived: Jayalalithaa". Archived from the original on 2011-05-27. பார்க்கப்பட்ட நாள் 2011-06-07.
  2. "Assembly votes for Legislative Council". The Hindu. 12 April 2010. Archived from the original on 14 ஏப்ரல் 2010. பார்க்கப்பட்ட நாள் 13 April 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Parliament nod for Council Bill". The Hindu. 6 May 2010 இம் மூலத்தில் இருந்து 9 மே 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100509111118/http://beta.thehindu.com/news/states/tamil-nadu/article423517.ece. பார்த்த நாள்: 7 May 2010. 
  4. Ramakrishnan, T (8 April 2010). "Legislative Council had chequered history". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 8 April 2010.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. Sharma, B. K. (2007). Introduction to the Constitution of India. PHI Learning Pvt. Ltd. pp. 207–218. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-203-3246-6, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-203-3246-1.
  6. "‘Announcement on electoral rolls for Legislative Council soon'". தி இந்து. 26 September 2010. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article796453.ece. பார்த்த நாள்: 28 October 2010. 
  7. "Delimitation of Council தொகுதிகள் (தமிழ்நாடு), Order 2010" (PDF). Archived from the original (PDF) on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2011-01-10.