தயிர் சட்னி

தயிர் சட்னி (Dahi chutney) என்பது தயிரானது புதினா மற்றும் வெங்காயத்தின் சட்னியில் கலக்கப்படுகிறது, [1] இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்து வந்தது. இது தென்னிந்தியாவில் பிரபலமானது மற்றும் பிரபலமான ஹைதராபாத் பிரியாணிக்கு மிர்ச்சி கா சலனுடன் ஒரு துணை உணவாகும் .

தயிர் சட்னி
Dahi chutney
தயிர் சட்னி (வலது) மிளகாய் சட்னி (இடது)
மாற்றுப் பெயர்கள்காக்டி தயி சட்னி, பச்சடி (ராய்தா), மொசரு பாஜி கருநாடகம்
பரிமாறப்படும் வெப்பநிலைதுணை உணவு பிரியாணியுடன்
தொடங்கிய இடம்இந்தியத் துணைக்கண்டம்
பகுதிஇந்தியத் துணைக்கண்டம்
தொடர்புடைய சமையல் வகைகள்இந்திய உணவுமுறை, வங்காளதேசம், பாக்கித்தான்
முக்கிய சேர்பொருட்கள்தயிர், மிளகாய், புதினா, வெங்காயம்s

தேவையான பொருட்கள் தொகு

பாரம்பரியமாகத் தயிர், வெங்காயம், தக்காளி, புதினா இலைகள், கொத்தமல்லி, மிளகாய்த்தூள் மற்றும் சுவைக்க உப்புச் சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது.

செய்முறை தொகு

தயிர் சட்னி தயாரிக்கப் பல வழி முறைகள் உள்ளன. புதினா, கொத்தமல்லி மற்றும் ஒரு மிளகாய்த்தூள் வெட்டப்பட்டு தயிரில் கலக்கப்படுகிறது, பின்னர் ஒரு நிமிடம் ஒரு கலக்கியியக் கொண்டு நன்கு கலக்கப்படுகிறது.[2] மற்றொரு வழி, புதிய தயிர் கிண்ணத்தில் துண்டுகளாக்கப்பட்ட வெங்காயத்தை உப்பு மற்றும் கொத்தமல்லியுடன் கலந்து அப்படியே பரிமாறவும்.

பெருகு பச்சடி தொகு

பெருகு பச்சடி என்பது தயிர் சட்னியின் தென்னிந்தியப் பிராந்திய வகையாகும். பெருகு என்பது தெலுங்கில் தயிரினைக் குறிக்கும். இது தக்காளி, வெள்ளரிகள், பூசனி, மாங்காய், பாகற்காய் போன்ற காய்கறிகளைக் பச்சையாகவோ அல்லது சமைத்ததாகவோ தயாரிக்கப்படும் தயிர் சார்ந்த உணவு ஆகும்.[3]

பெருகு பச்சடி ஆந்திராவின் கடலோரப் பகுதிகளில் பிரபலமானது. வட இந்தியாவில், இது ரைதா என்று அழைக்கப்படும்.[4]

பிற வகைகள்

  • தக்காளி தயிர் பச்சடி
  • புடலை தயிர் பச்சடி
  • தேங்காய் தயிர் பச்சடி
  • வெண்டைக்காய் தயிர் பச்சடி

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Mint Yogurt Chutney Recipe". recipe2cook.com. பார்க்கப்பட்ட நாள் 16 May 2012.
  2. "Dahi Pudina Chutney Recipe". www.foodflavor.in. 20 August 2016. பார்க்கப்பட்ட நாள் 20 August 2016.
  3. Tomato Perugu Pachadi. Tomato Yogurt Chutney
  4. Perugu Pachadi Recipe | Easy Perugu Pachadi Recipe | Recipe for Perugu Pachadi | Vegrecipes – regional cuisine – south indian – perugu pachadi

மேலும் படிக்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தயிர்_சட்னி&oldid=3763522" இலிருந்து மீள்விக்கப்பட்டது